Friday, December 6, 2013

சுட்ட பழம்!

சுட்ட பழம்!

வேகமாக காரை ஓட்டி வந்த அந்த ஆளைப் போலிஸ் மடக்கினார். அந்த ஆளுடன் அவரது மனைவியும் இருந்தார்.

போலிஸ் : "நீங்கள் 55 மைல் வேகத்தில் போக வேண்டிய இடத்தில் 75 மைல் வேகத்தில் கார் ஓட்டியிருக்கிறீர்கள்?"

அவர் : "இல்லை.. நான் 60 மைல் வேகத்தில்தான் ஓட்டினேன்."

மனைவி : "இல்லை ராம், நீங்கள் 80 மைல் வேகத்தில் ஓட்டி வந்தீர்கள்."

போலிஸ் : "காரின் பின்பக்கத்தில் விளக்கு எரியவில்லை. அதற்காக உங்களுக்கு அபராதம் விதிக்கப் போகிறேன்."

அவர் : "அப்படியா, எனக்குத் தெரியாதே, நான் கவனிக்கவே இல்லை."

மனைவி : "ராம்.. பின்னால் விளக்கு எரியவில்லை என்பது உங்களுக்குப் போன வாரமே தெரியுமே!"

போலிஸ் : "சீட் பெல்ட் போட்டுக் கொள்ளாதற்காக அபராதம் விதிக்கப் போகிறேன்."

அவர் : "நான் இப்போதான் நீங்க வரப்போ சீட் பெல்ட்டைக் கழட்டினேன்."

மனைவி : "ராம், நீங்க எப்போவுமே சீட் பெல்ட் போட்டுண்டதே இல்லையே!"

அவன் (மனைவியிடம், கோபமாக) : "வாயை மூடிக்கொண்டு சும்மா இரு.. உதை வாங்குவாய்."

போலிஸ் : "மேடம், உங்கள் கணவர் எப்போதுமே உங்களிடம் இப்படித்தான் பேசுவாரா?"

மனைவி : "இல்லை. குடித்திருக்கும்போது மட்டும்தான் இப்படிப் பேசுவார்."

ஆஹா செத்தாண்டா சேகரு..! :-)))))))))))

/////////////////////////////////////////////////////////////////////////

கும்கி படத்துல வர்ற எல்லாப் பாடல்களுக்கும் எக்ஸாம்க்கும் ஒரு பெரிய தொடர்பு இருக்கு உங்களுக்குத் தெரியுமா

படிக்கும் போது - ஒண்ணும் புரியல, சொல்லத் தெரியல

எக்ஸாம் ஹால்ல பக்கத்துல இருக்கற பய புள்ளைய பதிலுக்காக எதிர்பார்க்கும்போது - நீ எப்போ புள்ள சொல்லப் போறே

suppose தப்பித்தவறி அவ பதிலை சொல்லிட்டா - சொல்லிட்டாளே அவ ஆன்ஸரை

Professor தூக்கக் கலக்கத்துல correct பண்ணி 50% மேல வந்துட்டா அய்யய்யோ ஆனந்தமே

Grace மார்க் எல்லாம் போட்டும் கூட fail ஆனா - சொய் சொய்..

/////////////////////////////////////////////////////////////////////

ஒருத்தன் வழக்கம் போல நைட்
தூங்கப்போனான்,

'டிஷ்'னு ஒரு சத்தத்தோட
புகை மண்டலம்,

நல்லா தடியா மீசை வச்ச ஒருத்தர்
வந்து," நான் தான் எம தர்மன் இன்னில
இருந்து உனக்கு 10
வருஷத்துக்கு சாவே இல்ல என்ன
வேணா பண்ணிக்க போ"ன்னாரு.

இவனும் அத நம்பி டெஸ்ட்
பண்ணலாம்னு லாரி முன்னாடி நிக்க
ஆக்ஸிடெண்ட் ஆகி செத்து எம
லோகம் போய்
கோபமா நீதி கேட்டான்,

"எமதர்மா ? இப்படி மோசம்
பண்ணிட்டியே? ஏன் இப்படி செஞ்சே?"

எமன் : "ஸாரிப்பா மாசக்கடைசி டார்கெட் ரீச்
பண்ணனும்ல"

/////////////////////////////////////////////////////////////////////////////////

கடலில் விளையாடிக்கொண்டிருக்கும் தன் மகனை தாய் கண்டிக்கிறாள்..

"டேய்! உங்கிட்ட எத்தனை தடவ சொல்றது கடல்ல விளையாடக்கூடாதுன்னு"

"ஏம்மா?"

"கடல் அலை உன்னைக் கொண்டுப்போயிரும்"

"அப்பா மட்டும் விளையாடுறாரே"

"அவருக்கென்னடா...அவரு ஒரு கோடி ரூபாய்க்கு இன்சூரன்ஸ் பாலிசி வச்சிருக்கிறார்"

//////////////////////////////////////////////////////////////////////////////////////////////

பெத்த பொண்ணுக்கும், பரிட்சை பேப்பர்க்கும் ஒரு ஒற்றுமை இருக்கு அது என்ன தெரியுமா??

ரெண்டையுமே கட்டி கொடுக்கிறவரைக்கும் ஒரே டென்ஷன், தலைவலி தான்......

பெத்த பையனுக்கும், பரிட்சை பேப்பர்க்கும் உள்ள ஒற்றுமை என்ன தெரியுமா??

இரண்டையுமே திருத்தவே முடியாது....

//////////////////////////////////////////////////////////////////////////////////////////////

இரு சிறை கைதிகள் பேசிக்கொண்டபோது....

"என்ன பாஸ்...போன மாசம் தான ரிலீஸ் ஆனீங்க...அதுக்குள்ள திரும்ப உள்ள வந்துட்டீங்க?"

"அத ஏன் கேக்குறீங்க..இந்த நாட்டுல உண்மையச் சொல்லக் கூட விட மாட்டேங்குறாங்க..."

"ஏன் என்னாச்சு பாஸ்...?"

"புத்தகம் ஒண்ணு எழுதினேனு பிடிச்சிட்டு வந்துட்டாங்கப்பா...."

"புத்தகம் எழுதுனதுக்காக புடிச்சுட்டு வந்துட்டாங்களா..? அப்டி என்ன புத்தகம் எழுதினீங்க?

"அது ஒரு வழிகாட்டி புத்தகம்...."

"போலீஸ் புடிக்கற அளவுக்கு அப்டி என்ன வழிகாட்டி புத்தகம்...?"

"வார்டனை கைக்குள் போட்டுக்கொண்டு 'சிறைக்குள் சகல வசதிகளையும் பெறுவது எப்படி?'ங்கற தலைப்பிலே சிறைக்குள் நடக்கும் விஷயங்களை எழுதினேன்... இது ஒரு தப்பா....?"

மற்ற கைதியின் மைண்ட்வாய்ஸ்...

"உன்னல்லாம் தூக்குல போடனும்டா...."

////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

இதயம் பலகீனமானவர்கள், வயிற்றெரிச்சல் உள்ளவர்கள், அல்சர், பல்சர் என அவதிப்படுபவர்கள் உட்பட அனைவரும் இதைப் படிக்க வேண்டாம்...

கவிதை

அன்பே நீ சிக்கன் பிரியாணி,
நான் கேட்டா லெக்பீஸ் தருவியா நீ?!!

அன்பே நீ ஒரு கே.எப்.ஸி,
உன் மூஞ்சைக் காட்டு லெட் மீ ஸீ...

அன்பே நீதான் என் பீட்ஸா,
உன்னால நான் ஆயிட்டனே லூஸா!!

அன்பே நீ என்ன கோகோ கோலாவா??, அங்க போறது யாரு உன் அக்கா மாலாவா??

அன்பே ஆக மொத்தம் நீ ஒரு ஜங்க் ஃபுட்,
ஆக்கிடாத நம்ம லவ்வ வேஸ்ட்வுட்...

///////////////////////////////////////////////////////////////////////////////////////

ரஷ்ய ஜெயிலில் மூன்று தூக்குதண்டனைக் கைதிகள் இருந்தனர். இறக்குமுன் அவர்களி ன்கடைசி மூன்று ஆசைகள் என்ன என்று கேட்கப்பட்டது. முதல் கைதியின் ஆசை:நல்ல பெண்,நல்ல மது ,லெனின் சமாதிக்கு அருகில் புதைக்கப்பட வேண்டும். மூன்று ஆசைகளும் நிறைவேற்றப்பட்டன.

இரண்டாவது கைதியின் ஆசைகள் ;நல்ல பெண்,நல்ல உணவு,ஸ்டாலின் சமாதிக்கருகில் புதைக்கப்பட வேண்டும். அவனுடைய ஆசைகளும் நிறைவேற்றி வைக்கப்பட்டன.

மூன்றாவது கைதி தனது முதல் ஆசையாக மாம்பழம் கேட்டான்.அப்போது மாம்பழ சீசன் இல்லை.எனவே தூக்கு தண்டனை ஆறு மாதம் ஒத்தி வைக்கப்பட்டது. ஆறு மாதத்திற்குப்பின் மாம்பழம் வாங்கிக் கொடுத்து இரண்டாவது ஆசையைக் கேட்டனர்.செர்ரிப் பழம் என்று பதில் வந்தது.அப்போது செர்ரிப் பழ சீசன் இல்லை என்பதால் மறுபடியும்
தூக்கு தண்டனை ஆறு மாதம் தள்ளி வைக்கப்பட்டு, பின் செர்ரிப்பழம் வாங்கிக் கொடுக்கப்பட்டது. மூன்றாவது ஆசையாக அவன் சொன்னான்,''என் உடல் தற்போதைய அதிபரின் சமாதிக்கருகில் புதைக்கப்பட வேண்டும்.''அதிகாரிகள் அதிர்ந்துவிட்டனர்,''என்ன சொல்கிறாய்,நீ?அவர் உயிருடன் அல்லவா இருக்கிறார்! ''கைதி அமைதியாகச் சொன்னான்,''அவர் இறக்கும் வரை நான் காத்திருக்கிறேன்".

///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

பெண் : ஹலோ இது கஸ்டமர் கேர் தானே?? ?
கஸ்டமர் கேர்: ஆமாம் சொல்லுங்க மேடம்
பெண்: என் அஞ்சு வயசு பையன் சிம் கார்டு ஐ விழுங்கிட்டான்..
கஸ்டமர் கேர்: அப்படினா டாக்டர் கிட்ட கூட்டி கிட்டு போங்க மேடம்

பெண்: இல்லை சார் அதுல 95 பைசா பேலன்ஸ் இருந்துச்சி. அவன் பேசும்போது காசு போகுமா சார்
கஸ்டமர் கேர்: ?????

///////////////////////////////////////////////////////

அதோ போறானே அவன்தான் என் குடியைக் கெடுத்தவன்

அடப்பாவி, அப்படி என்ன செஞ்சான்?

பிராந்தியை கிளாஸ்ல ஊத்தி குடிக்கும் போது தட்டி விட்டுட்டான்…!

/////////////////////////////////////////////////////////////////////////////

"ஆனாலும் நம்ம தலைவர் இப்படி விதண்டாவாதமா பேசக் கூடாது!"

"அப்படி என்னதான் பேசினார்?"

"நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாடாளுமன்றத்தையே ஹைடெக்

மருத்துவமனையா மாத்துவோம்'னு பேசறாரே!"

////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

மாசக்கடைசி ஆனாலே யூத்துக்கு இப்படித்தான் .............................

1.ஏன் மச்சி ஓரு தடவை கூட 20 தேதிக்கப்பறம் நேரா ஸ்ட்ரெய்ட்டா 1ந்தேதி வராதா?

2.ஆமா நம்ம ரூம் பக்கத்துக்கு கோயில்ல அன்னதானம் உண்டா ..?

3.மாப்ள பஸ்ஸுல போனா 10 ரூவா, கம்முனு ரெண்டு கிங்ஸ் வாங்கிட்டு நடந்துரலாமா..?

4.மாஸ்டர்! ஒரு டீ, ஒன் பை டூ

5.சரக்குக்கு வாழைப்பழம் தான் மச்சி சரியான சைட்-டிஸ்..

6.மாப்ள இந்த சட்டைய பாத்து வச்சிக்க 10ந்தேதிக்கு மேல தூக்குறோம்..

7.பிரியாணி வேண்டாம் பாய்.....குஸ்கா மட்டும் போதும்

8.ஏம் மச்சி ATM50 ருபாய் வரும் ??

9.ச்சி இந்த மோதிரத்த அடகு வைக்கலாம்னு இருக்கேன்...(டேய் அது கவரிங்டா)

10.யாருக்கு போன் பண்ணாலும் யுவர் அக்கவுன்ட் பேலன்ஸ் ஈஸ் லோன்னு ஒரே பொம்பள திருப்பி திருப்பி சொல்லி கடுப்பேத்துறது..

11.இப்ப எடுத்து ஓட்டுடா பாப்போம்...என்கிறது எனது பைக்

12. மூணு கொய்யா 5 ருபா! மச்சி, எப்பவுமே ஃபரேக்ஃபாஸ்ட் ஃபுருட்ஸ் தான் சாப்டணும்னு டிவில டாக்டர் சொன்னாரு

13.கடனுதவி செய்த நண்பனிடம் "மச்சி,நா இத மறக்கவே மாட்டேன்டா

14.மச்சி தம் அடிச்சா நுரையீரலுக்கு ஆபத்தாம்டா! விட்ருவோமா?

15.மிஸ்டு கால் .

16.செல்ஃப் சேவிங்

17.காலி பீர் பாட்டில்களையெல்லாம் எடைக்கு போட்டு ஒரு பீர் தேத்தலாம்'ன்னு மாஸ்டர் பிளான் போடுறது

18.எவ்வளவு லிட்டர் பெட்ரோல் சார் போடணும்.? 30ரூக்கு போடுங்க போதும்

19."நல்லா வாழ்ந்த மனுஷன்.. இப்ப பாரு, ஒன்னுமே இல்லாம் நிக்குறான்" என்ற உள்மனதின் குரல் செவியை வந்தடையும் நாள்

20.ஆட்டோ'வா வேணாம் டார்லிங்!!.. உன்கூட பேசிகிட்டே நடந்து போற சுகமே தனி..

http://www.muthamilmantram.com/viewtopic.php?f=149&t=41672



--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

No comments: