கர்ப்பகாலம், கர்ப்பம்
ஒரு பெண்ணின் வாழ்க்கையில் கருத்தரித்த காலகட்டம்தான் மிக சந்தோஷமான காலம். உடலில் மாற்றங்கள் ஏற்படுவது உண்மைதான் என்றாலும், சிலர் அந்த மாற்றங்களைக் கண்டு திகைப்படைகிறார்கள். சிலர் பயப்படுகிறார்கள். சிலர் எதுவும் புரியாமல் விழிக்கிறார்கள். இன்னும் சிலருக்கு அந்த மாற்றங்கள் மேல் எரிச்சலோ, வெறுப்போ எழும். இவற்றைத் தவிர்க்க எவ்வாறான மாறுதல்கள் உடலில் ஏற்படுகின்றன என்று தெரிந்து கொள்வது நல்லதுதானே.முதல் மூன்று மாதம் : பதினான்கு வாரங்கள் வரை எந்த நேரத்திலும் (காலையில் மட்டுமல்ல) அடிக்கடி குமட்டல் மற்றும் வாந்தியின் உணர்வு ஏற்படலாம். இதற்கு உங்கள் மாறும் ஹார்மோன்களே காரணம்.
உங்கள் மார்பகத்தை தாய்ப்பால் கொடுக்கத் தயார் செய்வதற்காக நேரிடும் ஹோர்மேனஸ் மாறுதல்கள் காரணமாக மார்பகம் வீங்குகிறது. மிருதுவாகிறது.மூக்கினுளிருக்கும் லைனிங்கில் கூடுதலான அழுத்தம் இருப்பதால் மூக்கடைப்பு ஏற்படுகிறது. இது கர்ப்பப்பையினுள் உள்ள லைனிங் போலவே உள்ளது. கருத்தரிப்பினால் இரண்டிலும் அதிகமான இரத்த ஓட்டம் இருக்கிறது.அதிகமான சோர்வை அதிகபட்ச பெண்கள் உணருகிறார்கள். இதற்குக் காரணம் ஒரு குழந்தைக்கு வடிவம் கொடுக்க உங்கள் உடல் அதிக அளவு சக்தியை உபயோகிக்கிறது.அடிக்கடி சிறுநீர் கழிப்பிற்குக் காரணம் கர்ப்பப்பை வளர்ந்து, மூத்திரப்பையை அழுத்துவதுதான்.
மார்னிங் சிக்னெஸ் உள்ள பெண்கள் மாவு சத்துள்ள உணவுப் பண்டங்களுக்காக சில சமயம் ஏங்குகின்றனர். ஏனெனில் மாவுச் சத்து குமட்டலை அடக்க உதவுகிறது.கருத்தரித்த நிலையின் மாஸ்க் என்பது கன்னத்திலும் மூக்கிலும் ஆங்காங்கே காணப்படும். இந்த அனுபவம் எல்லோருக்கும் ஏற்படுவதில்லை. பிரசவத்திற்கு பிறகு இது மறைந்துவிடுகிறது. இதற்கு ஹார்மோன்களின் மாற்றங்கள் மற்றும் சூரிய ஒளியே காரணம்.
இரண்டாவது மூன்று மாதம் : முதல் மூன்று மாத கால அசௌகரியங்கள் மறைந்தவுடன் ஒரு மொத்த ஆரோக்கியமான உணர்வு திரும்புகிறது.
இடுப்பு தடிப்பாகிறது. அடிவயிறு ரவுண்டாகவும் உறுதியாகவும் ஆகிறது.
நெஞ்சில் எரிப்பு அதிகரிக்கிறது. இதற்குக் காரணம், கர்ப்பப் பை வளரும்போது, வயிற்றை அழுத்தி, உணவு செல்லும் குழாயைக் குருக்குகிறது. வயிற்றில் அமிலமும் அதிகமாக உற்பத்தியாகிறது.
கர்ப்பப் பை குடல்கள் மீது அழுத்துவதால், உணவின் போக்கு குறைகிறது. வைட்டமின் மற்றும் இரும்புச் சத்து அதிகமாக உட்கொள்வதால் மலச்சிக்கல் ஏற்படுகிறது.
மார்பகம் மற்றும் அடிவயிற்றின் மீது தழும்புகள் ஏற்படுகின்றன.
அரிப்பு, சருமம் ஸ்ட்ரெச் ஆவதால் ஏற்படுகிறது.
சாதாரண பிக்மெண்டின் மாறுதல்களின் ஒரு பங்காக முலைக்காம்பைச் சுற்றியுள்ள சருமம் கருமையாகிறது. தொப்புள் வரை அல்லது அதற்கு மேலேயும் ஒரு மெல்லிய கருமை ரேகை வருகிறது.
குழந்தையின் அசைவு யாரோ லேசாகக் குத்துவதைப் போலிருக்கும்.
உணவுக்காக ஏக்கம் இதில் எழும். நெஞ்செரிச்சலை அடக்க எலுமிச்சை வகைப் பழங்கள் நல்லது. முக்கியமாக உப்பைக் குறைப்பது முக்கியம்.
மூன்றாவது மூன்று மாதம் : உங்கள் முதுகுக்கு ஆதரவளிக்கும் தசைநார் மற்றும் தசைகள் மீது அதிகமாக அழுத்தமிருப்பதால் முதுகுவலி ஏற்படுகிறது.
நீங்கள் கீழே படுத்துக் கொள்வதால் காலில் இழுப்பு வருகிறது. உங்கள் உடலில் இரத்தத்தின் கொள்ளளவு அதிகரிக்கிறது. ஈர்ப்பு காரணமாக இரத்தம் கால்களுக்குச் செல்கிறது. ஆகையால், தசைகள் மீது அழுத்தம் ஏற்பட்டு, கால்களில் இழுப்பு வருகிறது.
மூச்சுத் திணறல் ஏற்படுவதற்கு காரணம், குழந்தை உதரவிதானம் மீது அழுத்துகிறது. சுவாசப் பை விரிந்து கொடுப்பதில்லை மற்றும் உங்களுக்கு வேண்டிய அளவு வாயு கிடைப்பதில்லை.
குழந்தையின் அசைவைக் காண முடிகிறது. இப்போது குழந்தையின் எடை கூடுகிறது மற்றும் அதன் உதையையும், விக்கலையும் கூட நீங்கள் உணர முடிகிறது.
உறங்குவதில் கடினமாக இருக்கும். இதற்கு காரணம் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய தேவை மற்றும் எடை அதிகரிப்பினால் ஏற்படும் அசௌகரியங்களாகும்.
இவற்றையெல்லாம் தெரிந்து வைத்துக்கொண்டவர்களுக்கு இந்த மாற்றங்கள் விரும்பத்தக்கவையாக இருக்கும். ஒரு ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க மனம் தயாராகிவிட்ட உணர்வு எழும். தாயாகப்போகும் நாளை எதிர்பார்த்துக்கொண்டு இருப்பீர்கள்
ஆரோக்கியமான கர்ப்பகாலம்
ஒரு பெண் தாய்மை அடையும் போது, அவள் தன்னை மட்டுமல்ல அந்தக்குடும்பத்தையே மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்துகிறாள். கருவுற்ற காலம் தொடக்கம் ஆரோக்கியமாக இருந்தால்தான், தாய்க்கு மட்டுமல்ல வளரும் குழந்தைக்கும் நல்ல ஆரம்பமாய் அமையும். பிரச்சைனைகள் இல்லாமல் கற்பகாலமும் பிரசவமும் அமையும் என்று யாராலுமே உறுதியளிக்க முடியாது. ஆனால் ஆரோக்கியமான வழிகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் இப்பிரச்சனைகளைத்தடுக்கலாம்.கற்பகலாம் ஆரோக்கியமாய் அமைய பத்து வழிகள்.
(இவை துண்டு பிரசுரத்தில் இருந்து சேர்க்கப்ட்ட தகவல்கள் )1. சமவீத உணவை உட்கொள்ளல்:பாண், தானிய வகைகள், பழவகைகள், காய்கறி வகைகள், இறைச்சி, மீன், முட்டை போன்றவற்றை உண்ண வேண்டும்.2. போலிக் அமிலம் மாத்திரைகள்:
நீங்கள் கற்பம் தரிக்க தீர்மானிக்கும் போதிலிருந்து கற்பம் தரித்து பன்னிரண்டாவது வாரம் வரை தினமும் 400 அப மாத்திரையைத் தவறாமல் உட்கொள்ள வேண்டும். முதுகெலும்பில் ஏற்படும் குறைபாட்டைத் தடுக்க போலிக்கமிலம் உதவுவதால் சுகாதார அமைப்புக்களில் இதைச் சிபார்சு செய்து வருகிறார்கள். கீரை வகைகள், புறோக்கோழி, தானியங்கள் சேர்க்கப்பட்ட பாண், தானியங்கள் மற்றும் மாமையிற் போன்ற உணவுகள் போலிக் அமிலம் நிறைந்தவையாகும்.3. தவிர்க்க வேண்டிய உணவுப்பொருட்கள்:
மென்மையான பதப்படுத்தப்படாத பாற்கட்டிகள்(ஸீஸ்), நன்றாக வேகவைக்கப்படாத இறைச்சி, அவிக்கப்படத முட்டை போன்றவற்றை தவிர்ப்பதன் மூலம் லிஸ்டீயா, சால்மனெல்லா போன்ற கிருமிகளால் பரவும் நோய்களைத் தடுக்கலாம். விற்றமின் ஏ மாத்திரைகள் மற்றும் ஈரல் போன்ற விற்றமின் ஏ நிறைந்த உணவுப்பொருட்களை தவிர்ப்பதன் மூலம் குழத்தைக்கு பிறப்பில் ஏற்படும் குநைபாடுகளைத் தடுக்கலாம்.
4. ஓய்வுக்காக நேரம் ஒதுக்குங்கள்:நீங்கள் கற்பம் தரிக்க தீர்மானிக்கும் போதிலிருந்து கற்பம் தரித்து பன்னிரண்டாவது வாரம் வரை தினமும் 400 அப மாத்திரையைத் தவறாமல் உட்கொள்ள வேண்டும். முதுகெலும்பில் ஏற்படும் குறைபாட்டைத் தடுக்க போலிக்கமிலம் உதவுவதால் சுகாதார அமைப்புக்களில் இதைச் சிபார்சு செய்து வருகிறார்கள். கீரை வகைகள், புறோக்கோழி, தானியங்கள் சேர்க்கப்பட்ட பாண், தானியங்கள் மற்றும் மாமையிற் போன்ற உணவுகள் போலிக் அமிலம் நிறைந்தவையாகும்.3. தவிர்க்க வேண்டிய உணவுப்பொருட்கள்:
மென்மையான பதப்படுத்தப்படாத பாற்கட்டிகள்(ஸீஸ்), நன்றாக வேகவைக்கப்படாத இறைச்சி, அவிக்கப்படத முட்டை போன்றவற்றை தவிர்ப்பதன் மூலம் லிஸ்டீயா, சால்மனெல்லா போன்ற கிருமிகளால் பரவும் நோய்களைத் தடுக்கலாம். விற்றமின் ஏ மாத்திரைகள் மற்றும் ஈரல் போன்ற விற்றமின் ஏ நிறைந்த உணவுப்பொருட்களை தவிர்ப்பதன் மூலம் குழத்தைக்கு பிறப்பில் ஏற்படும் குநைபாடுகளைத் தடுக்கலாம்.
சிறிது நேரமேனும் ஓய்வு எடுக்காமல் வேலை செய்யின் குறைமாதப்பிரசவமாக வாய்ப்பிருக்கிறது. ஆகவே கற்பிணிகள் ஓய்வு எடுப்பது அவசியமாகும். தியானம், யோகாசனம் போன்றவை உங்களுக்கும், உங்கள் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் மிகவும் சிறந்ததாகும். தினமும் எளிய உடற்பயிற்கிகளைச் செய்வதன் மூலம் உற்சாகமாக இருப்பதுடன் இலகுவில் பிரவசமாகவும் உதவும். (சிலருக்கு தவிர்க்க முடியாத சில காரணங்களால் உடற்பயிற்சியைத் தவிர்க்கும்படி மருத்துவர் ஆலோசனை கூறி இருப்பின் தவிர்க்கலாம்.)
5. தவிர்க்கவேண்டிய மருந்துகள்:
கற்பகாலத்தின் போது மருத்துவரின் ஆலோசனையின்றிக் கடைகளிலே வாங்கி மருந்துகள் ஏதும் உட்கொள்ளக் கூடாது. நீங்கள் நீண்டகால மருந்து உபயோகிப்பவராயின் கற்பம் தரித்துவிட்டதாகத் தெரிந்தவுடனேயே மருத்துவரின் ஆலோசனையைப் பொறுவது மிகவும் அவசியம். போதை மருந்துகளுக்கு அடிமையாய் இருப்பவராயின் உங்கள் குழந்தையையும் அம்மருந்துக்கு அடிமையாக்குவது மட்டுமல்ல அக்குழந்தையின் இறப்புக்கும் காரணமாகிவிடுவீர்கள். எனவே அப்பழக்கம் இருப்பவர்கள் நிறுத்தவேண்டும்.
6. மருத்துவரை உடனே அணுகவேண்டிய நிலைகள்:
உங்கள் உடல்நலனைப்பற்றி ஏதேனும் சந்தேகம் ஏற்படினும், யோனிமடல் வழியே குருதி அல்லது நீர் கசிதல், கை கால் முகம் வீக்கம், பார்வையில் ஏதேனும் மாற்றம் அல்லது அதிக ஒளி வீசுவது போன்ற உணர்வு, வயிற்றுவலி அல்லது தலைவலி முதலிய அறிகுறிகள் காணப்படின் உடனே மருத்துவரை அணுகவும்.
7. டோக்சோ பிளாஸ்மோசிஸ்
இது ஒரு ஒட்டுண்ணியால் ஏற்படும் நோய். இந்நோய் கற்பகாலங்களில் ஏற்படின் குழந்தைக்குப் பலவகை உடற்கோளாறுகளை ஏற்படுத்தும். இதைத் தவிர்க்க, தோட்ட வேலைகள் செய்யும்போது புனையின் எச்சம் கைகளில் படாமல் இருக்க கை உறைகளை அணியுங்கள். நன்றாக வேகவைக்கப்படாத இறைச்சியினை உண்ணாதீர்கள்.
8. பரிசோதனை நேரம்:
கற்பகாலத்தின்போது மருத்துவரும் தாதியும் சில பரிசோதனைகள் செய்வதற்காக உங்களை அழைப்பார்கள். இதற்காக ஒதுக்கப்பட்ட நேரத்தை தவிர்க்காதீர்கள். இப்பரிசோதைனைகள் செய்வதன் மூலம் உங்கள் உடலிலும் உங்கள் குழந்தைக்கு ஏற்படக்கூடிய பல பிர்சனைளக் முற்கூட்டியே கண்டறிந்து நிவர்த்ர்தி செய்ய வாய்ப்பிருக்கின்றது.
9. மது அருந்துவதைக் குறைக்க வேண்டும்:
அதிக அளவில் மது அருந்தினால் குழந்தையின் மூளை பாதிக்கப்படும். அதனால் ஒன்று அல்லது இரண்டு அலகளவே (யுனிட்) அனுமதிக்கப்பட்டுள்ளது. (ஒரு யுனிட் என்பது அரை பயின்ட் பீயர் அல்லது ஒரு திராட்சைரசக் கிண்ணம்(வயின்) அளவு என அளவிடப்படும்.
10. புகை பிடித்தலை தவிர்த்தல்:
எமது கலாசாரத்திற்கு அப்பாற்பட்டதாயினும் மேலைநாடுகளில் வாழ்ந்து வரும் நாம் இதனையும் கருத்தில் கொள்ள வேண்டும். கற்பம் தரிக்க வேண்டும் என தீர்மானிக்கும் போதே புகை பிடிப்பதை நிறுத்திவிடுவது நன்று. இல்லையேல் குறைப்பது மிகவும் அவசியம். புகைபிடித்தலினால் குழந்தைக்கு ஆபத்து மட்டுமன்றி குறைமாதப்பிரசவம் ஆகவும் வாய்ப்பிருக்கின்றது.
மேலும் சில துணுக்குகள்:
1. நீங்கள் எங்கு செல்வதானாலும் உங்கள் கைப்பைக்குள் கற்பகால கையேட்டை எடுத்து செல்ல மறவாதீர்கள். இது ஏதும் பிரச்சனைகள் வந்தால் எந்த ஒரு மருத்துவரும் உங்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும்.
2. முதல் மூன்று மாதங்கள் வரை அதிகாலையில் வாந்தி வருவது வளக்கமான ஒரு அறிகுறியாகும். வாட்டிய பாண், கிரக்கர் பிஸ்கட், உலர் தானிய வகைகள்(சீரியல்) போன்ற உணவுகளைக் காலையில் எழுந்ததும் முதல் வேலையாக உட்கொண்டால் வாந்தி குறையும். உணவுகளை சிறிய அளவில் அடிக்கடி உண்ணுவதாலும் பொரித்த உணவுப் பதார்த்தங்களை தவிர்ப்பதாலும் வாந்தியைக் கட்டுப்படுத்தலாம்.
3. நீங்கள் கற்பம் தரித்த நாள் முதல் உங்கள் குழந்தைக்கு ஒரு வயதாகும் வரை உங்களுக்கு மருத்துவச் செலவும் பல் வைத்தியச் செலவும் இலவசமாக அளிக்கப்படும் என்பதை ஞாபகத்தில் வைத்து அதைப் பயனபடுத்தலாம்.
4. சிறு வயதில் ருபெல்லா தடுப்புசி போடப்படாமல் இருப்பின் நீங்கள் கற்பமாக வேண்டும் என தீர்மானிக்கும் முன்னே உங்கள் மருத்துவரை அணு;கி தடுப்புசியைப் பெற்றுவிட்டு கற்பமாவது அவசியம்.
5. கற்பகாலத்தின் போது அம்மை நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவருடன் தொடர்பு ஏற்படின் உடனடியாக மருத்துவரை அணுகி உங்கள் உடலில் அந்த நோயை எதிர்க்க, எதிர்ப்பு சக்தி இருக்கிறதா? என்பதை இரத்தப் பரிசோதனை செய்து அறிய வேண்டும்.
ஆணின் பங்கு என்ன?ஒரு குழந்தையை உருவாக்க ஆணின் பங்கும் அவசியம் என்பது மறுக்க முடியாத உண்மை. இது முழுமை பெற ஆண்களும் பின்வருவனவற்றில் கவனம் செலுத்தவேண்டும்.
1. நல்ல ஆரோக்கியமான உணவு
2. புகைபிடிப்பதைத் தவிர்த்தல் – புகை பிடிப்பின் ஆரோக்கியமான அணுக்கள் உருவாகாது.
3. மது அருந்துவதில் அளவைக் குறைத்தல்
4. இறக்கமான உள்ளாடைகள், அதிக வெப்பமான நீரில் குளித்தல், சில மருந்து வகைகளைத் தவிர்த்தல் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.
ஆக்கம்:- டாக்டர் சியாமளா சுந்தரலிங்கம்
தமிழாக்கம்: டாக்கர் நிலானி நக்கீரன் – நன்றி:-வடலி சஞ்சிகை-UK
கர்ப்பத்தின் போது இரத்தப்போக்கு எதனால்..?
கருவுற்றிருக்கும் போது பயணங்களை, குறிப்பாக வெளியூர்ப் பயணங்களைப் பெண்கள் தவிர்த்துவிடுவது நல்லது. காரணம், இதுபோன்ற சமயங்களில் சில பெண்களுக்கு ரத்தப்போக்கு அதாவது Threatened Abortion எனும் நிலை உண்டாகலாம். அதுபற்றி இப்போது விளக்கமாகச் சொல்கிறேன்.கருவுற்றிருக்கும் ஆரம்ப மாதங்களில் சில பெண்களுக்கு ரத்தப்போக்கு ஏற்படுவதுண்டு. அதுபோலதான் ரஞ்சிதாவுக்கும் ஏற்பட்டது. சென்ற செப்டம்பர் 10_ம் தேதிதான் அவளுக்குக் கடைசியாகப் பீரியட்ஸ் வந்தது. அக்டோபர் 21_ம் தேதி என்னிடம் வந்தவளுக்கு யூரின் டெஸ்ட் செய்து பார்த்ததில் அவள் தாய்மை அடைந்திருந்தது உறுதியானது. அதைத் தொடர்ந்த சில நாட்களில் கர்ப்பமுற்றதற்கான தலைசுற்றல், வாந்தியெடுத்தல் போன்ற அத்தனை அறிகுறிகளும் அவளிடம் தென்பட, அந்தக் குடும்பம் சந்தோஷப்பட்டது.
அதுவும் ரஞ்சிதா _ சிவகுமார் தம்பதியருக்கு அது முதல்குழந்தை எனும்போது சந்தோஷத்துக்கு சொல்லவும் வேண்டுமா…எதிர்பாராதவிதமாக சில நாட்களில் (நவம்பர் 11) அவளுக்கு சிறுசிறு துளிகளாக ரத்தப்போக்கு ஏற்பட்டது. பின் ஓரிரு நாட்களில் அது நின்றுபோனது. மீண்டும் அடுத்தமாதம், அதாவது டிசம்பர் 9_ம் தேதியும் அவளுக்கு முன்பு போலவே ரத்தப்போக்கு ஏற்பட…. பதறிப்போனது குடும்பம். பதற்றத்தோடு என்னை அணுகியதும் ரஞ்சிதாவுக்கு ஸ்கேன் செய்து பார்த்தேன். கரு எந்த பாதிப்பும் இல்லாமல் நார்மலாக இருப்பது தெரியவந்தது.பீரியட்ஸ் சமயத்தில், கருவுற்ற சில பெண்களுக்கு இதுபோல ரத்தப்போக்கு ஏற்படும். இதற்குக் காரணமுண்டு. கரு உண்டாகி, வளரும்போது அது பெரும்பாலும் கருப்பையை இடைவெளியே இல்லாமல் அடைத்தபடி நின்றுவிடும். அப்படி உருவாகும் கரு,
கர்ப்பப்பையை முழுவதுமாக அடைத்துக் கொள்ளாமல் சிறு இடைவெளி விட்டு நிற்கும்போதுதான் இதுபோல ரத்தப்போக்கு ஏற்படுகிறது.பாதிப்பு ஏதும் உண்டா?
இதனால் பெரிய பாதிப்பு ஏதுமில்லை என்பதால் பயப்படத் தேவையில்லை. கருத்தரித்த ஒரு சில மாதங்களில் எல்லாம் சரியாகிவிடும். இந்த ரத்தப்போக்கின்போது பெரும்பாலும் வலி இருப்பதில்லை. என்றாலும் ரத்தப்போக்கு ஏற்படத் தொடங்கியதுமே மருத்துவரை அணுகுவதுதான் சிறந்தது. காரணம் அது அபார்ஷன்தான் என்பதையோ, சாதாரண ரத்தப்போக்குதான் என்பதையோ அவரால்தான் உறுதிபடச் சொல்லமுடியும். மருத்துவரின் அறிவுறுத்தலின் பேரில் ஒரு ஸ்கேன் செய்து பார்த்துவிட, தேவையற்ற பயங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்.
சில மருத்துவர்கள் இதுபோன்ற ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்த 'எண்ணெய் ஊசி' என்று பரவலாக அழைக்கப்படும் ஒருவித ஹார்மோன் ஊசி போட்டுவிடுவார்கள். இன்னும் சில சந்தர்ப்பங்களில் பேஷண்டோ அவருடைய சொந்தக்காரர்களோ கூட எண்ணெய் ஊசி போட்டுவிடச் சொல்லி எங்களிடம் கேட்பார்கள். இந்த ஊசி போடுவதால் எல்லாம் பெரிய பலன் இல்லை. உண்மையில் அபார்ஷன் ஆகப்போகிறதென்றால் அதை நம்மால் தடுத்து நிறுத்தமுடியாது. உருவான கருவில் சில சமயம் க்ரோமோசோம் (ஒருவருடைய தோற்றத்தையும் செயல்பாடுகளையும் நிர்ணயிக்கும் பொருள் இது!) குளறுபடிகள் உள்ளிட்ட சில பாதிப்புகள் ஏற்பட்டிருக்கலாம். அப்படிப்பட்ட கருவை மேற்கொண்டு வளரவிடாமல் இயற்கையே அழித்துவிடும் ஒரு வழிதான் அபார்ஷன். பாதிக்கப்பட்ட அதுபோன்ற கருவை மேலும் பொத்திப் பாதுகாக்காமல் வெளியே வரவிடுவதுதான் நல்லது.இதனால் பெரிய பாதிப்பு ஏதுமில்லை என்பதால் பயப்படத் தேவையில்லை. கருத்தரித்த ஒரு சில மாதங்களில் எல்லாம் சரியாகிவிடும். இந்த ரத்தப்போக்கின்போது பெரும்பாலும் வலி இருப்பதில்லை. என்றாலும் ரத்தப்போக்கு ஏற்படத் தொடங்கியதுமே மருத்துவரை அணுகுவதுதான் சிறந்தது. காரணம் அது அபார்ஷன்தான் என்பதையோ, சாதாரண ரத்தப்போக்குதான் என்பதையோ அவரால்தான் உறுதிபடச் சொல்லமுடியும். மருத்துவரின் அறிவுறுத்தலின் பேரில் ஒரு ஸ்கேன் செய்து பார்த்துவிட, தேவையற்ற பயங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்.
தாம்பத்திய உறவின்போது ரத்தப்போக்கு வந்தால்…
கருவுற்றிருக்கும் சமயத்தில் கணவருடன் உறவு வைத்துக் கொள்ளும்போது சில பெண்களுக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டு பயமுறுத்துவதுண்டு. இதுவும் அபார்ஷன்தானோ என்று நினைத்து பயந்துவிடாதீர்கள். கருவுற்றவுடன் கர்ப்பப்பையின் வாயில் பகுதி மிகவும் மிருதுவாகிவிடும். அந்தப் பகுதியில் அதிகப்படியான ரத்தம் தேங்கி நிற்கும். உறவு கொள்ளும்போது இந்தப் பகுதியில் உராய்வு ஏற்பட்டு அதனால் அந்த மிருதுப் பகுதியிலிருந்து ரத்தக் கசிவு ஏற்படலாம். இதனால்தான் இப்படி ஏற்படுகிறது என்பது புரியாமல் சிலர் அபார்ஷன் ஏற்பட்டுவிட்டதாகப் பதறிப்போவார்கள். இதையெல்லாம் தவிர்க்கத்தான் கருத்தரித்த ஆரம்ப நாட்களில், உறவு கொள்ள வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
ரத்தப்போக்கு ஏற்படுவதால் வேலையே செய்யாமல் பெண்கள் பெட் ரெஸ்டில் இருக்கவேண்டும் என்பதில்லை. பயணங்களைத் தவிர்த்துவிட்டு வழக்கம்போல வீட்டு வேலைகள் செய்யலாம். வேலைக்குப் போகும் பெண்கள் ஓரிரு நாட்கள் லீவு எடுத்துக் கொண்டு பிறகு புத்துணர்ச்சியுடன் மீண்டும் வேலைக்குச் செல்லலாம்.
மசக்கை வாந்தி ஏன்?
கருவுற்ற சில மாதங்களுக்குப் பெண்கள் சர்வகாலமும் வாந்தி எடுப்பது நாம் எல்லோரும் அறிந்ததே. இந்த மசக்கை வாந்தி எதனால் ஏற்படுகிறது என்பதை யாராலும் உறுதியாகச் சொல்லமுடியவில்லை. 'குழந்தைக்கு நிறைய முடி இருந்தால் வாந்தி அதிகமா வருமாம்!' என்ற பொதுவான நம்பிக்கைகளிலும் அறிவியல் உண்மைகள் இருப்பதாகத் தெரியவில்லை. இது சற்றே வருத்தி எடுக்கும் அறிகுறிதான் என்றாலும் கரு நன்றாக இருக்கிறது என்று சொல்லாமல் சொல்லும் நல்ல அறிகுறி இது. இந்த மசக்கை வாந்தி பிரச்னையை சில மாத்திரைகள் மூலம் கட்டுப்படுத்திவிடலாம்.
மசக்கைக்கு மாத்திரை சாப்பிடலாமா?
'மாத்திரையெல்லாம் போட்டால் குழந்தை கலைஞ்சிடும். கை, கால் விளங்காமல் பிறக்கும்' என்று சிலர் பயமுறுத்துவார்கள். இந்த பயத்துக்குக் காரணம் உண்டு. பல வருடங்களுக்கு முன் மசக்கை வாந்தியைக் கட்டுப்படுத்த Thalidomide எனும் மாத்திரையை வெளிநாட்டவர் கண்டுபிடித்து அதை விற்பனைக்கும் கொடுத்தார்கள்.
மாத்திரையும் கச்சிதமாக செயல்பட்டு வாந்தியைக் கட்டுக்குள் கொண்டுவந்தது. ஆனால், மாத்திரை சாப்பிட்ட பெண்களின் குழந்தைகள், கை கால் சரியான வளர்ச்சி பெறாமல் பிறப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அப்புறம் அந்த மாத்திரை மார்க்கெட்டில் காணமல் போனது வேறு விஷயம். அந்த சரித்திரத்தை மறக்காதவர்கள்தான் இன்றைக்கும் மசக்கை வாந்திக்கு மாத்திரை போடக்கூடாது என்கின்றனர்.
வாந்தியைக் கட்டுப்படுத்த இன்று கடைகளில் கிடைக்கும் மாத்திரைகள் முற்றிலும் பாதுகாப்பானவைதான். என்றாலும், எந்தவித மாத்திரையையுமே மருத்துவரின் அறிவுறுத்தலின் பேரில்தான் போட்டுக் கொள்ளவேண்டும்.
ஸ்கேன் ஏன் செய்யவேண்டும்?
'குழந்தை நல்லாதான் வளருதானு ஒரு ஸ்கேன் செய்து பாத்துட்டா போச்சு!' என்று, படிப்பறிவில்லாத பேஷண்டுகள்கூட சர்வசாதாரணமாக ஸ்கேனிங் பற்றிப் பேசுமளவுக்கு, இன்று மக்கள் மத்தியில் அத்தனை பிரபலமாகிவிட்டது ஸ்கேனிங் கருவி. அல்ட்ரா சவுண்ட் எனும் ஒலி அலைகளை உடலில் செலுத்தி குழந்தையின் வளர்ச்சியைக் கண்காணிக்க ஸ்கேனிங் உதவுகிறது. மனித காதுக்கு எட்டாத ஒலி அலைகளை உடலில் செலுத்தி, இந்தப் பரிசோதனை செய்யப்படுகிறது.
கருவுற்ற பெண்ணுக்கு யூரின் டெஸ்ட் செய்து பார்த்து கர்ப்பத்தை உறுதி செய்வது வழக்கம். இன்று யூரின் டெஸ்டோடு ஒரு ஸ்கேன் செய்தும் பார்த்துவிடுகிறோம். கர்ப்பப் பையில்தான் கரு வளர்கிறது என்பது நாம் எல்லோரும் அறிந்ததே. ஆனால் சில நேரங்களில் கரு தப்பிதமாக கருக்குழாயில் வளர்ந்துவிடுதுண்டு. இதுபோன்ற பிரச்னைக்குரிய கேஸ்களை ஆரம்பக்கட்டத்திலேயே கண்டுபிடிக்கவும் ஸ்கேனிங் பயன்படுகிறது. பாதிக்கப்பட்ட கரு அபார்ஷன் கட்டத்தைத் தாண்டி வளர்வதைக் தடுக்கவும் ஸ்கேனிங் பயன்படுகிறது.
சிலருக்கு பீரியட்ஸ் ரெகுலராக வராது. இப்படிப்பட்டவர்களுக்கு குழந்தை பிறக்கப்போகும் தேதியை (Due date) துல்லியமாகக் கணிப்பது சிரமமாகிவிடும். இவர்களுக்கு ஸ்கேனிங் செய்து குழந்தையின் அளவு பார்த்து குழந்தை பிறக்கப்போகும் தேதியைத் துல்லியமாகச் சொல்லிவிட முடியும். பிறக்கப்போவது இரட்டைக் குழந்தையாக இருந்தால் அதற்கும் நம்மைத் தயார்ப்படுத்திக்கொள்ள ஸ்கேனிங் உதவுகிறது.
ஒரு பெண் கருவுற்றிருப்பது உறுதியாகி 6_10 வாரங்களுக்குள் ஸ்கேன் செய்யலாம். பொதுவாகவே ஒருவருக்கு கர்ப்ப காலத்தின்போது வெவ்வேறு கட்டங்களில் மொத்தமாக மூன்று ஸ்கேன்கள் செய்து பார்த்தால் போதும். பிரச்னைக்குரிய கருவுக்கு டாக்டரின் அறிவுறுத்தலின் பேரில் ஸ்கேன் செய்து பார்க்கும் எண்ணிக்கை கூடவோ குறையவோ செய்யலாம்.
எப்போதெல்லாம் ஸ்கேன் செய்வது?
முதல் ஸ்கேனை 8_10 வாரத்துக்குள் செய்யலாம். அடுத்ததாக 20_22 வாரங்களுக்குள் செய்யலாம். இந்த சமயத்தில் ஸ்கேன் செய்யும்போது மூளை, இதயம், கிட்னி போன்ற குழந்தையின் முக்கிய உடல்பாகங்களின் வளர்ச்சி துல்லியமாகத் தெரியும். மூன்றாவது ஸ்கேனை எட்டாவது மாதத்தில், அதாவது 32_34வது வாரங்களுக்குள் செய்துவிடலாம்.
எத்தனை ஸ்கேன் செய்து பார்த்தும் சில குழந்தைகள் ஒரு காது மடங்கியோ, சில விரல்கள் இல்லாமலோ அவ்வப்போது பிறப்பதுண்டு. ஸ்கேன் செய்து பார்த்தும் இப்படியாகிவிட்டதே என்று சிலர் மருத்துவர்களிடம் வருந்துவது உண்டு. சிலர் கோர்ட் படியேறுவதும் உண்டு. உண்மையில் ஸ்கேனிங் மூலம் ஒரு குழந்தை 100% நார்மலாக வளர்கிறது என்று சொல்லிவிடமுடியாது. இதற்குப் பல காரணங்கள் உண்டு.
சில சமயங்களில் கருவுற்றிருக்கும் பெண் ரொம்ப குண்டாக இருப்பதுண்டு. அப்படிப்பட்ட பெண்ணின் உடலுக்குள் அல்ட்ரா சவுண்ட் அலைகள் சரியாக நுழையமுடியாமல் போக வாய்ப்புண்டு. அப்படியாகும்போது சில பகுதிகள் துல்லியமாகத் தெரியாமல் போகலாம். மேலும் ஸ்கேன் செய்யும்போது குழந்தை படுத்திருக்கும் நிலையைப் பொறுத்துதான் ரிசல்ட் கிடைக்கும். குழந்தையின் இடதுபுறம் முழுமையாகத் தெரியும் சமயங்களில் வலது புறத்திலுள்ள சில தகவல்கள் பதிவு ஆகாமல் போக வாய்ப்புண்டு. இப்படி ஸ்கேன் ரிசல்ட் துல்லியமாக இல்லாமல் போக பல காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
ஆணா, பெண்ணா தெரிஞ்சுக்க முடியுமா?
'யு.எஸ்ல எல்லாம் அஞ்சாம் மாசமானதுமே குழந்தை ஆணா, பெண்ணானு சொல்லிடறாங்க தெரியுமா? நீங்க ஏன் அப்படிச் சொல்ல மாட்டேங்கறீங்க?' என்று என்னுடைய சில பேஷண்டுகள் கேட்பதுண்டு. யு.எஸ். போன்ற வளர்ந்த நாடுகளில் குழந்தை ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி அதை சந்தோஷத்துடனேயே பெற்றுக் கொள்பவர்கள்தான் அதிகம். நம் நாட்டில் அப்படி ஒரு நிலைமை இல்லையே… ஆண் குழந்தையென்றால் பெற்றெடுப்பதில் ஆர்வமாக இருக்கும் சில பெற்றோர், பெண் குழந்தை என்றதும் அதை அழிக்கத் துடிக்கின்றனர். அப்படிப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்ததால்தான் அரசாங்கம் Sex Determination¬ò யை (குழந்தை ஆணா, பெண்ணா என்று கண்டறிதல்) தடைசெய்துள்ளது.
உண்மையில் சுமந்து கொண்டிருக்கும் அந்தக் கரு ஆணா, பெண்ணா என்று, அந்தப் பத்து மாதமும் பொறுத்திருந்து பார்ப்பதில்தான் த்ரில்லே இருக்கிறது. இது அனுபவசாலிகளுக்கு மட்டுமே புரிந்த விஷயம்…
நன்றி: Dr.ஜெயசிறீ – குமுதம்
--
No comments:
Post a Comment