Sunday, February 1, 2015

சிடி ஸ்கான் குழந்தைகளில் .

எதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதையிட்டு பல பெற்றோருக்கு புரிவதேயில்லை. சொன்னாலும் தங்கள் குழந்தைகளை விட மோசமாக அடம் பிடிப்பார்கள் .

குழந்தைகள் சின்ன விழுகை விழுந்துவிட்டால் போதும் எக்ஸ்ரே சிடி ஸ்கான் எடுங்கள் என நட்டுப் பிடிப்பார்கள். இவ்வாறு ஒவ்வொரு விடயத்திற்கும் தேவையற்ற பரிசோதனைகள் வேண்டும் என வேண்டுவோர் பலராகும்.

இவ்வாறான சிடி ஸ்கான் பரிசோதனைகள் அவசியமானவையா? ஆபத்தானவையா?

சிடி ஸ்கான் எடுப்பதன் காரணமாக குழந்தைகளுக்கு புற்றுநோய் வருவதற்கான சாத்தியம் அதிகம் ஒரு ஆய்வு கூறுகிறது. JAMA Pediatrics. என்ற மருத்துவ சஞ்சிகையில் வெளியான ஆய்வுத் தகவல் இது. இது முன்பு தெரியத தகவல் அல்ல. ஆனாலும் இப்பொழுது தரப்படும் தரவுகள் பயமுறுத்துக்கின்றன.

ஒவ்வொரு 10000 வயிற்றறை ஸ்கான்கள் எடுத்ததன் காரணத்தால் ஆண்குழந்தைகளில் 14 மும் பெண் குழந்தைகளில் 30 மும் கட்டிகள் வளரும் என ஆய்வுகளின் தரவின் அடிப்படையில் மதிப்பிடுகிறார்கள்.

5
வயதிற்கு குறைவான குழந்தைகளில் தலையை சிடி ஸ்கான் எடுப்பதால், குருதிப் புற்றுநோய் வருவதற்கான சாத்தியம்   10,100 பேருக்கு 1.9 என்ற அளவில் இருக்கிறதாம்.

அதேபோல நெஞ்சு, முள்ளந்தண்டு போன்றவற்றை ஸ்கான் பண்ணும் போதும் புற்று நோய் வருவதற்கான சாத்தியம் அதிகரிக்கிறதாம்.

குழந்தைகளில் சிடி ஸ்கான எடுப்பது 1996 முதல் 2005 காலப் பகுதியில் மூன்று மடங்காக அதிகரித்து 2006 - 2007 காலப்பகுதியில் ஏறுமுகம் காண்பது குறைந்து 2007ற்குப் பின் குறைந்து இருக்கிறதாம் என அமெரிக்கத் தரவுகள் சொல்கின்றன.

சற்றுக் குறைந்ததற்குக் காரணம் மருத்துவர்கள் அவசரமற்ற சி டி ஸ்கான் பரிசோதனைகளை குறைத்ததாக இருக்கலாம்.

இலங்கையில் இது பற்றிய தரவுகள் குறைவு.

எவ்வாறாயினும் குழந்தைகளுக்கு நோய் வரும்போது தேவையற்றுப் பதற வேண்டாம். "அவர் சொன்னார் இவர் சொன்னார்" என தேவையற்ற பரிசோதனைகளுக்கு மருத்துவர்களை நச்சரிக்க வேண்டாம்.

பரிசோதனைகள் செய்வதோ வேண்டாமோ என்பதை அவர்களது முற்று முழுமான முடிவிற்கு விட்டுவிடுங்கள்.

http://hainallama.blogspot.in/2013/06/blog-post_6092.html



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது
www.sahabudeen.com


No comments: