Wednesday, February 25, 2015

வாசனை வைத்தியம்:-

மலர்களில் பல வண்ணமுண்டு. இதில் சில மணமூட்டிகள். சில மயக்கமூட்டிகள் இதனை கண்டுணர்ந்தவர்கள் தான் நறுமண சிகிச்சையை உண்டாக்கினார்கள். வாசனை பூக்களிலிருந்து எடுக்கப்பட்ட திரவங்கள் எசன்ஷியல் ஆயில் என்றழைக்கப்பட்டது. இந்த எண்ணெய்களுக்கு அபூர்வமான மருத்துவ ஆற்றல் உண்டு. ஆயுர்வேதத்தில் எண்ணெய் குளியலுக்கும், மசாஜாற்கும் பயன்படும் எண்ணை போன்ற இந்த வாசனை எண்ணெயும் மருத்துவ குணம் உண்டு. இந்த எண்ணெய் பல விதமான பூக்களை பிழிந்து எடுக்கப்பட்ட சாறிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த எண்ணெயை ஆவியாக்கி புகை மூட்டுவதன் மூலம் அறையிலுள்ள கிருமிகளை விரட்டலாம். இந்த புகையை சுவாசிப்பதன் மூலம் புத்துணர்ச்சியை பெறலாம். நாம் அன்றாடம் குளிக்கும் போது தண்ணீரில் சில சொட்டுக்களை விட்டுக் கலந்து குளிக்க உடம்பு சுத்தமாவதுடன் இதில் கிடைக்கும் சுகமும் அலாதியானது. இந்த நறுமண எண்ணெயை தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து உடம்பில் பூசிக்கொண்டால் தோல் பளபளப்பாக இருக்கும்.
எசன்ஷியல் ஆயிலை வெதுவெதுப்பான நீரில் விட்டு கலந்து ஒத்தடம் கொடுத்தால் தசைவலி, மூட்டுவலி, தசை பிடிப்பு போன்றவை மறையும். இன்று பல பியூட்டிஷியன்கள் இந்த நறுமண எண்ணெயை பயன்படுத்தி தான் பலர் பளபளப்பாகின்றனர். அரோமா ஆயில், எசன்ஷியல் ஆயில், நறுமண எண்ணெய் என்று இதற்கு பல திருநாமம் உண்டு.
இந்த அரோமா ஆயிலை தினமும் காலில் தடவி வந்தால் சர்க்கரை நோயாளிகளுக்கு பாதத்தில் வரும் கேடுகள் வராமல் எச்சரிக்கையாக இருக்கலாம். இந்த அரோமா ஆயில் இன்று பல மருந்துக்கடைகளில் கிடைக்கின்றது. இந்தநறுமண ஆயிலானது முடிசம்மந்தமான பாதிப்புகளுக்கு மிக சிறந்த நிவாரணியாக இருக்கும். முடி கொட்டுதல், முடி உதிர்தல், இள நரை, பித்த நரை, பொடுகு பாதிப்பு, பேன் தொல்லை, தலை அரிப்பு போன்றவைக்கு இந்த ஆயிலை தொடர்ந்து தலைக்கு பயன்படுத்தி வந்தால் சிறந்த நிவாரணம் பெறலாம்.
மல்லிகை, ரோஜா, லாவண்டர் போன்ற பூக்கள் சந்தனம் போன்ற மரக்கட்டைகள், எலுமிச்சை, ஆரஞ்சு, இஞ்சி போன்றவற்றின் சாற்றை வடித்து அரோமா தெரபியில் பயன்படுத்துகிறார்கள். இவை ஒவ்வொன்றுக்கும் ஒரு மருத்துவ குணம் உண்டு. இயற்கை பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் இந்த எசன்ஷியல் ஆயிலை பயன்படுத்தி, அரோமா தெரபியில் தலைவலி, உடல்வலி, அலர்ஜி முதல் தோல் பிராப்ளம் வரை பல பிரச்சனைகளைத் தீர்க்க முடியும்.
லாவண்டர்தான் மனதுக்கும், உடலுக்கும் நிம்மதி தரச் சிறந்தது. மல்லிகைப் பூ மனதை மயக்குவதோடு, நிம்மதியும் சந்தோஷமும் தரும். சந்தன வாசனையை நுகர்ந்தால் மனம் துடைத்து விட்டது போன்ற நிறைவும், சந்தோஷமும் உணர்வோம். எலுமிச்சை புத்துணர்ச்சி தருவதோடு, வைட்டமின் சி இருப்பதால் உடலுக்கும் நல்லது. ஆரஞ்சு தோல் சாறு உடலைப் பாதுகாப்பாக்குவதோடு, மலச்சிக்கலையும் தவிர்க்கும். இப்படி ஒவ்வொன்றுக்கும் ஒரு பலன் உண்டு. இந்த எண்ணெய்கள் பொதுவாக எல்லாக் கடைகளிலும் கிடைக்கின்றன. நமக்குப் பிடித்த அல்லது தேவையான எண்ணெய்யை வாங்கி, நாமே அரோமா தெரபி செய்யலாம்.
எல்லா எண்ணெயும் எளிதில் ஆவியாகக்கூடியது. ஓவ்வொன்றும் ஓவ்வொரு சூழ்நிலையை உருவாக்கவல்லது. தேவையான ஆயிலைத் தேர்ந்தெடுங்கள். வாயகன்ற பாத்திரத்தில் இளஞ் சூடான நீர் நிரப்பி, அதில் நான்கைந்து துளி வாசனை எண்ணெய் ஊற்றுங்கள். நன்றாக கலக்கி விடுங்கள். பாத்திரத்தை முகத்தின் அருகே கொண்டுபோய், மூச்சை உள்ளிழுத்து வாசனையை நுகருங்கள் அல்லது இந்த பாத்திரத்தில் காலை வைத்திருங்கள். பூவின் மணமும் அதன் பலனும் உள்ளங்காலில் இருந்து உச்சந்தலை வரை பரவும் போது சுகமாக இருக்கும். நம் உடலின் நரம்பு முடிச்சுகள் அத்தனையும் உள்ளங்காலில் இருப்பதால், இது அதிகப்பலனைத் தரும்.
மனம் சோர்வாக இருப்பதாக தோன்றினால், பிடித்த வாசனை எண்ணெய் நிறைந்த பாட்டிலை மூக்கின் அருகே கொண்டு சென்று முகருங்கள். காது, மடல்களிலும், லேசாகத் தேய்த்துக் கொள்ளலாம். உணர்வு நரம்புகள் நிறைந்த காதில் தேய்ப்பதால், நல்ல பலன் கிடைக்கும்.
மசாஜ்
வாசனை எண்ணெயை ஆல்மண்ட் ஆயில், தேங்காய் எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய் போன்ற ஏதாவது ஒரு வெஜாடபில் ஆயிலுடன் கலந்து மசாஜ்செய்யலாம்.
சனி நீராடு என்பார்கள், உச்சந்தலையில் எண்ணெயை ஊற்றி அழுந்தத் தேய்த்து, ஊறவைத்துக் குளிப்பது நல்ல் பழக்கம். உடம்பில் உள்ள சூடு தணியும். மூக்கு நுனியில் உள்ளங்கையை வைத்து விரல் நுனி தலையில் படும் இடத்தில் எண்ணெய் தேய்க்க வேண்டும். அங்கிருந்து மூன்று விரல் இடைவெளி விட்டு, மறுபடி எண்ணெய் தேய்க்க வேண்டும். இப்படி பின்னந்தலை வரை தேய்த்தால் நல்ல் பலன் கிடைக்கும். வாசனை எண்ணையின் மணமும், குணமும் உடம்பின் சூடு டென்ஷனை போக்கி உற்சாகமும் தரும்.
புருவத்தின் மேலும் கீழும் நெற்றியிலும் நடுவிலிருந்து ஆரம்பித்து பக்கவாட்டில் மசாஜ்செய்யலாம். விரல்களை லேசாக அழுத்துவது முக்கியம். நேரம் கிடைத்தால், உடல் முழுவதும் மசாஜ்செய்வதும் நல்லது. முகத்தில் மசாஜ்செய்வதனால் மோவாய்யிலிருந்து மேல் நோக்கி பத்து முறை மசாஜ்செய்ய வேண்டும் நெற்றிப் பொட்டில் கடிகாரச் சுற்றுப்படி பத்து முறையும் எதிர்த்திசையில் பத்து முறையும் வட்டமாகத் தேய்க்கவேண்டும்.
கழுத்து முதுகுப் பகுதிகளில் மசாஜ்செய்யும் போது, உள்ளங்கையை அழுத்திச் செய்யலாம். விரல்களை மடக்கிக் கைகளை மூடி, தோள் பட்டை எழும்புகளை லேசாக அழுத்திப் பிடித்து மசாஜ்செய்யலாம். கால்களை துணி பிழிவது போல் உருட்டி பிசைந்து கொடுக்கலாம். உள்ளங்கால்களைப் பலரும் மறந்து விடுவோம், ஆனால் அவற்றை மசாஜ்செய்வது மிகவும் முக்கியம். பொதுவாக இதயத்தை நோக்கிய திசையில் மசாஜ்செய்வது தான் நல்லது. தோளுக்குமேல் மசாஜ்செய்யும் போது கீழுநோக்கியும் மசாஜ்செய்ய வேண்டும். விரல் நுனிகளைப் பிடித்து லேசாக அமுக்க வேண்டும்.
உடம்பின் ஒவ்வொரு பாகத்தையும் அதற்குரிய விதத்தில் மசாஜ்செய்த பின், கை-கால்களை உதறவேண்டும். உடலில் உள்ள முக்கியமான மையங்களில் முறையாக அழுத்தும் போது, உடல் டென்ஷன் ரிலிசாகிறது. ரத்த ஓட்டம் சீராகவும் உடல் வலி தீரவும் மசாஜ் கை கொடுக்கும் வாசனையின் நறுமணமும், குணமும், உடலுக்கும், மனதுக்கும் நல்ல மருந்தாகப் பயன்படுகின்றது.
வாசனை செய்திகள்
வாசனை என்றவுடன் நம் மூக்கின் ஞாபகத்திற்கு வருவது பூக்கள்தான். இது பூக்களுக்கு இயற்கை அள்ளித் தந்த பம்பர் பரிசு. சரி இந்த வித விதமான வாசனையை எப்படி உணர்திறன் மனிதன்? நமது உடம்புக்குள் நம்மை அறியாமல் நரம்புகளுக்கும் மூளைக்குமிடையே ஒரு தகவல் பறிமாற்றுப்பணி நடைபெறுகிறது. நமது மூக்குப்பகுதியில் இருக்கும் சட்கான்ஸ் விர்ஷ் என்கின்ற உணர்வு நரம்புகள் வழியாக வாசனையானது மூளையின் நியூட்ரான் செல்களை அடைந்து, வாசனையை உணர செய்கின்றன. நல்ல உணர்வுகளை தூண்டுபவைகளை வாசனை என்றும் அருவருப்பை தூண்டுபவைகளை நாற்றம் என்று குறிப்பிட்டாலும் புத்துணர்ச்சியை, உற்சாகத்தை ஏற்படுத்தும் சக்தி வாசனைக்கு உண்டு. இந்த சக்திக்கு வில்வாட் என்று பெயராகும். இயற்கையான வாசனை எல்லோருக்கும் ஒத்துக்கொள்ளும். ஆனால் செயற்கையான மணம் பலருக்கு அலர்ஜியை உண்டாக்கும். இதனால் சிலருக்கு தலை வலிக்கும். இதற்கு காரணம் செயற்கை மணத்தை யூரோபில்ட்ஸ் என்கின்ற ரசாயணம் கலந்து தயாரிப்பதுதான். இந்த ரசாயணம் தான் பலருக்கு அலர்ஜியை உண்டாக்கி விடுகின்றது. இவர்கள் செண்ட் வகைகளை தவிர்ப்பது நல்லது.
http://kulasaisulthan.wordpress.com

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

No comments: