திருமறையில் குறிப்பிட்டிருக்கும் நபிமார்கள்
அஸ்ஸலாமு அழைக்கும் நண்பர்களே
இன்றையதினம் அல்லாஹ் அவன் அருளிய திருகுரானில் அறிவிக்கப்பட்ட நபிமார்களின் பெயர்களை அறிவோம்
அல்லாஹ் இவ்வுலகில் ஒருலட்சத்திற்கு மேற்பட்ட நமிமார்களை அனுப்பினான் அவர்களில் அல்லாஹ் தன் அருள்மறையில் அவனது வார்த்தையில் அவன் கூறிய 25 நபிமார்கள் பற்றி இன்ஷா அல்லாஹ் இந்த பதிவின் மூலம் அறிவோம்
1.நபிமார்களின் தலைவரான ஹல்ரத் முஹம்மது சல்லல்லாஹு அலைஹி வசல்லம் இவ்வுலகில் ரகுமத்தில் ஆலமீன் என அல்லாஹுவால் பாராட்டப்பட்ட நபி அல்லாஹுவின் ஹபீபுல்லாஹ் என்ற பெயர்பெற்ற நமது மா நபி அவர்களின் பெயர் திருகுரானில் நான்கு இடத்தில் அல்லாஹ் குரிபிடுகிறான் . இவ்வுலகம் முழுவதுக்கும் ஏகத்துவத்தை எடுத்துரைக்க அனுப்பப்பட்ட நமது எம் பெருமானார் சல்லலாஹு அலைஹி வசல்லம் அவர்கள் மட்டுமேஎன்பது இந்த உம்மத்திற்கு கிடைத்த மிகபெரும் கிருபை ..
2. நபி இசா இப்ன் மர்யம் அலைஹி வசல்லம் அல்லாஹுவால் ருஹுல்லாஹ் என்று பெயர்பெற்ற நபி .கிறிஸ்துவர்களால் இவரை கடவுளாக பாவிகின்றார்கள் ஜீசஸ் என்ற பெயர் வைத்து .அவர்களது தாயார் மர்யம் அலைஹி வசல்லம் அவர்களை பெண்களுக்கான முன்மாதிரியான 4 பெண்களின் மர்யம் அலைஹி வசல்லம் அவர்களும் ஒருவர் பிறந்த குழந்தையிலயே அல்லாஹ் இசா அலைஹி வசல்லம் அவர்களை பேச வைத்து தன் தாயின் கண்ணியத்தை காத்தான். இவர்களின் பெயரை அல்லாஹ் 29 இடங்களில் அல்லாஹ் குருபிடுகிறான். இவர் பனு இஸ்ரேலகூட்டதிர்காக அனுப்பட்ட நபிநார்களில் ஒருவர் .
3. நபி யஹ்யா அலைஹி வசல்லம் அவர்கள் நபி சக்கரியா அலைஹி வசல்லம் அவர்களின் புதன்வனாக அல்லாஹ் அருளியவர்கள் பற்றி அல்லாஹு 9 இடங்களில் அல்லா குரிபிடுகிறான் அவரை பற்றி அல்லாஹ் தன் குரானின் மார்க்க சட்ட ஜானத்தை அறிளினோம் என்று கூறுகிறான் ..இவரது தந்தை சக்கரியா அலைஹி வசல்லம் அவர்கள் பனு இஸ்ரேலர்களுக்காக அனுபபட்டதால் இவரும் யூதர்களுக்காக அனுப்ப பட்டவர்களாக கருதுகிறேன் அனைத்தையும் அல்லாஹு வே மிக்க அறிந்தவன் …
4. நபி சக்கரியா அலைஹி வசல்லம் அவர்கள் மரியம் அலைகிவசல்லாம் அவர்களை பாதுகாவலராக இருந்தார்கள் இவர்களுக்கு வயது முதிர்ந்த நிலையில் அல்லாஹ் இவரின் துஆவை ஏற்று இவருக்கு யஹ்யா அலைஹி வசல்லம் அவர்களை அருளினான் இவர்களை பற்றி அல்லாஹ் தனது குரானில் ஏழு இடங்களில் குரிபிடுகிறான் இவர்கள் பனு இஸ்ரேல கூட்டதிர்காக அனுப்பட்ட நபிநார்களில் ஒருவர், மேலும் இவர் அல்லாஹுவின் பாதையில் கொள்ளப்பட்ட நபிமார்களில் ஒருவர்.
5.நபி எசா அலைஹி வஸல்லம் அவர்களை அல்லாஹ் தனது திருமறையில் இரண்டு இடங்களில் இவரது பெயரை குரிபிடுகிறான் இவரை பற்றி அதிக அளவு குரானில் குரிபிடாதளால் இவர் எந்த கூட்டத்துக்கு அனுப்ப பட்ட நபி என்று விளங்க வில்லை .. எனினும் அல்லாஹுவே அனைத்தும் அறிந்தவன்
6.நபி இலியாஸ் அலைஹி வசல்லம் அவர்கள் நபி சுலைமான் அலைஹி வசல்லம் அவர்களுக்கு பிறகு இஸ்ரேலினர் ஷைத்தானின் சூழ்ச்சிக்கு ஆட்பட்டவர்களாக மாறினார்கள் அப்பொழுது அல்லாஹ் இலியாஸ் அலைஹி வசல்லம் அவர்களை அருளினான் அவர்களை பற்றி அல்லாஹ் அவனது திரு மறையின் இலியாஸ் அலைஹி வசல்லம் அவர்களை பற்றி இரண்டு இடங்களில் குரிபிடுகிறான்.
7. நபி யூனுஸ் அலைஹி வசல்லம் . அவர்கள் தனது சமூகத்தாரின் அதாபை வரவழைக்க அல்லாஹ்விடம் கூறி அவர் அப்பட்டனத்தை விட்டு வெளியேறினார் அப்பொழுது அல்லாஹுவின் அதாபை கண்டு அம்மக்கள் பாவமன்னிப்பு கோரி அல்லாஹ் அவர்களை மன்னித்தான் மேலும் நபி யூனுஸ் அவர்களை மீன் வயிற்றில் சிறுது காலம் தங்க வைத்தான் அவர் அப்பொழுது அற்புதமான துஆ வைகொண்டு அல்லாஹுவிடம் மன்றாடியதன் காரணமாக அல்லாஹ் அம்மீன் வயிற்றிலிருந்து வெளியேற்றினான் அந்த துஆ " லாயிலாஹ இல்லாஹ் அந்த சுபுகானக்க இன்னி குந்தும் மினள்ளாலிமீன் " என்ற அற்புதமான துஆ வை அல்லாஹ் நமக்கும் யூனுஸ் அலைஹி வசல்லம் அவர்களின் மூலமாக தனது திருமறையில் அருளியிருக்கிறான் . அல்லாஹ் இவரின் பெயரை நான்கு இடத்தில குரிபிடுகிறான்.
8. நபி துள் கிப்ல் அலைஹி வசல்லாம் அவர்கள் இவர்களை பற்றி அல்லாஹ் தனது திருமறையில் இவர்களை நல்லடியார்களாக மறுமைக்காக வழ்ந்தவர்கலாக சித்தரித்து காட்டி இருக்கிறான் மேலும் இவர்களை பற்றி அல்லாஹ் தனது திருமறையில் இரண்டு இடங்களில் குரிபிடுகிறான் ..இவரையும் அல்லாஹ் பொறுமையாளர்களில் ஒருவராக கூறுகிறான்.
9. நபி அய்யூப் அலைஹி வசல்லம் அவர்களை பற்றி அல்லாஹ் குறிப்பிடும்போது அல்லாஹ் பொறுமையாளராக அவர்களை குரிபிடுகிறான் அவர்கள் பல சோதனைகளுக்கு உட்பட்டு அவர்களை அல்லாஹ் சோதித்தான். அவை அனைத்திலும் அவர்கள் பொறுமையுடன் இருந்ததாக அல்லாஹ் குரிபிடுகிறான் மேலும் அவர்களை பற்றி அல்லாஹ் தனது திருமறையில் அல்லாஹ் நான்கு இடங்களில் குரிபிடுகிறான் .
10. நபி சுலைமான் இப்னு தாவூத் அலைஹி வசல்லம் அல்லாஹ் இவரை ரஹ்மத் பொருந்திய அரசனாக இவருக்கு ஜின்களை கைவசபடுத்தி கொடுத்திருந்தான் மேலும் பறவைகளின் பாசையையும் அவர்களுக்கு விளங்க கொடுத்திருந்தான் இவ்வுலகில் செல்வத்தில் பரக்கத் பொருந்திய நபியாக வாழ்ந்த வந்தார் . நபி சுலைமான் அலைஹி வசல்லம் அவர்களை பற்றி அல்லாஹ் 17 இடங்களில் அல்லாஹ் தனது திருமறையில் குரிபிடுகிறான் .இவுலகில் அல்லாஹ் தனது திருமறையில் சுலைமான்அலைஹி வசல்லாம் அவர்களை பல இடங்களில் நன்றி செலுத்தும் அடியானாக குரிபிடுகிறான் மேலும் ஒரு அழகாண சம்பவம் அல்லாஹ் குரிபிடுகிறான் ஒரு எறும்பு தனது கூட்டத்தாரிடம் எல்லோரும் உங்களது புற்றுக்குள் நுழைந்துகொல்லுங்கள் சுலைமான் அலைஹி வசல்லம் அவர்களும் அவரின் படையும் வந்துகொண்டிருகிறது அவர்கள் உங்களை பற்றி உணராமல் அவர்கள் உங்களை திண்ணமாக மிதித்து விட வேண்டாம் என்று கூறியது அப்பொழுதுஅதனுடைய சொல்லால் அவர் சிரிதவராக எனது ரட்சகனே நீ என் மீது என் தாய் தந்தையர் மீதும் புரிந்த உன்னுடைய அருளுக்கு நன் நன்றி செலுத்துவதற்கும் என்னை நீ பொருந்த்திக்கொல்வாயாக அத்தகைய நற்செயலை நன் செய்ய அருள் புரிவாயாக இன்னும் உன் கிருபையை கொண்டு நல அடியார்கள் கூடத்தில் என்னை பிரவேசிக்க செய்வாயாக என்று அவர் கூறினார் என்று அல்லாஹ் தனது திருமறையில் குரிபிடுகிறான் ..
11. நபி தாவூத் அலைஹி வசல்லம் அவர்கள் சுலைமான் அலைகிவசல்லாம் அவர்களது தந்தை இவர்களையும் அல்லாஹ் அரசனாகவே வைத்திருந்தான் இவருக்கு அல்லாஹ் இரும்பை வைத்து போர்கவசம் செய்யும் ஞானத்தை கொடுத்திருந்தான் மேலும் தாவூத் அலைஹி வசல்லம் அவர்களுக்கு சபூர் என்ற வேதத்தையும் அருளினான் நபிமார்களிலே சிறந்த குரல் வளம் உடையவர்கள் நபி தாவூத் அலைஹி வசல்லம் அவர்கள் மட்டுமே மேலும் அவர் ஓத ஆரம்பித்தால் மலைகளும் பறவைகளும் சேர்ந்து அவருடன் திக்க்ர் செய்கிறது என்று அல்லாஹ் கூறுகிறான். மேலும் அல்லா தனது குரானில் அவரைப்பற்றி கூறும்பொழுது அவர் ஒரு பலசாலி என்று அறிமுக படுத்துகிறான் . தாவூத் அலைஹி வசல்லம் அவர்களுக்கும் பறவையை வசபடுத்தி கொடுத்திருந்தான் மேலும் ஒரு அழகாண சம்பவம் அல்லா குரானில் குரிபிடுகிறான் "இன்னும் திட்டமாக தாவூதுக்கு நாம் பேரருளை கொடுத்தோம் மலைகளே அவருடன் சேர்ந்து நீங்களும் துதிபாடுங்கள் என்று மேலும் பறவைகளையும் அன்றியும் அவருக்கு இரும்பையும் மிருதுவாக்கினோம் ." மேலும் தாவூத் அலைஹி வசல்லம் அவர்களை பற்றி அல்லாஹ் 16 இடங்களில் குரிபிடுகிறான் இவர் இஸ்ரேலியருக்கு அருளப்பட்ட நபிகளில் ஒருவர் .
12. நபி மூசா இப்ன் இம்ரான் அலைஹி வசல்லம் அவர்கள் . இவர்களை பற்றி அல்லாஹ் அதிகமாக திருகுரானில் குரிபிடுகிறான் இவருடைய சமுதாயத்தில்தான் பிரௌனின்(firoun) ஆட்சி நடந்துகொண்டிருந்தது அல்லாஹ் இவருக்கு அருளிய அற்புதங்கள் ஏராளம் இவரின் வரலாறு மிக பெரிய வரலாறு அதலால் முழுவதும் அறிய இன்ஷா அல்லாஹ் பிறகு ஒவ்வொரு நபியின் வரலாற்றின் பொழுது இவரை பற்றி முழுவதும் அறிவோம் இவரின் அற்புதங்களில் ஒன்று அல்லாஹ்வின் அனுமதியோடு தன கைதடியை வைத்து கடலில் அடித்து கடலை இரண்டாக பிளந்து தனது தோழர்களுடன் சென்ற அந்த சம்பவம்தான் , இவரின் பெயரை அல்லாஹ் குரானில் 136 இடங்களில் குரிபிடுகிறான் இவர் பானு இச்ரேலர்களுக்கு அனுப்பட்ட நபிகளில் ஒருவர் . இவருக்கு கலீமுல்லாஹ் "அல்லாஹுடன் உரையாடியவர் " என்ற பெயர் உண்டு இவருக்கு அல்லாஹ் தௌராத் என்ற இறை வேதத்தை வழங்கி இருக்கிறான்
13. நபி ஹாரூன் இப்ன் இம்ரான் அலைஹி வசல்லம் அவர்கள் . இவர்கள் நபி மூசா அலைஹி வசல்லம் அவர்களின் சஹோதரன் . இவரும் இஸ்ரவேலர்களுக்கு அனுப்ப பட்ட நபிகளில் ஒருவர் இவருடைய வரலாறு முசா அலைகிவசல்லாம் அவர்களின் வரலாறுகளில் இணைந்ததாகவே அல்லாஹுவின் திருமறையில் காண படுகிறது மேலும் அல்லாஹுவே மிக்க அறிந்தவன் இவரை பற்றி அல்லாஹ் தனது திரு குரானில் 20 இடங்களில் இவரின் பெயரை குரிபிடுகிறான் .
14. நபி சுஹைப் அலைஹி வசல்லம் அவர்கள் அல்லாஹ் இவரை பற்றி தனது திருமறையில் மத்யம் என்ற நகர வாசிகளுக்கு நபியாக அனுப்பபட்டிருந்தார் அல்லாஹ் இவரின் முலமாக உலக மக்களுக்கு ஒரு படிப்பினையை கொடுத்திருக்கிறான் அந்த வசனம் " எனது சமூகத்தாரே அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள் அவனைத்தவிர வேறு நாயன் இல்லை உங்கள் இரட்சகனிடமிருந்து தெளிவான அத்தாட்சிகள் வந்திருகிறது எனவே அளவை புர்த்தியாக அளந்து எடையை சரியாக நிருங்கள். மனிதர்களுடைய பொருட்களில் யாதொன்றையும் குறைத்தும் விடாதீர்கள் மேலும் உலகில் அது சீர்திருத்தம் அடைந்த பின்னர் குழப்பம் செய்யாதீர் நீங்கள் விசுவாசிகலாயின் இதுதான் உங்களுக்கு நன்மையாக இருக்கும் என்று கூறினார் " இந்த வசனம் இன்றையதினம் நாம் அனைவரும் கடைபிடிகிறோமா அல்லாஹ் பாதுகாப்பானாக. உங்களை நீங்களே கேட்டு கொள்ளுங்கள் அல்லாஹு ரப்புல் ஆலமீன் இவரை பற்றி தன் அருள் மறையில் 11 இடங்களில் குரிபிடுகிறான் ..
15. நபி யூசுப் பின் யாகூப் அலைஹி வசல்லம் அல்லாஹு தனது திருமறையில் ஒரு சுராவையே யூசுப் அலைஹி வசல்லம் அவர்களின் பெயரால் மேலும் அல்லாஹ் கூறுகிறான் " (நபியே ) இக்குரானை நாம் அறிவித்ததின் மூலம் மிக்க அழகான வரலாற்றை நாம் கூறுகிறோம் " என்று கூறி நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களின் வரலாற்றை கூறுகிறான் என்றால் இதனை பற்றி அறியாமல் இருக்கும் நாம் எவ்வளவு மடையர்களாக இருகிறோம் என்று எண்ணி பாருங்கள் . மா நபி சள்ளலாஹு அலைஹி வசல்லம் அவர்கள் கூரியிருகிரார்கள் அல்லாஹ் இவ்வுலகில் நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களை போல் அழகாக இந்த பூமியில் யாரும் படைக்க வில்லை இனியும் கியாமத் நாள் வரை யாரும் படைக்க போவதில்லை என்று . இந்த நபி மொழி ஒரு மார்க்க அறிஞர் கூறியதில் இருந்து எழுதுகிறேன் இதனை பற்றி முழு விவரம் எனக்கு தெரிய வில்லை தவறாக இருந்தால் அல்லாஹ்விற்காக என்னை மன்னித்துகொள்ளவும் . அல்லாஹுவே அனைத்தையும் அறிந்தவன் அல்லாஹ் அவருக்கு கனவுகளை விளக்கும் ஆற்றலை அளித்தான் இன்னும் அல்லாஹ் யூசுப் அலைஹி வசல்லம் அவர்களின் மூலம் நமக்கு ஒரு அற்புதமானபடிபினையை கொடுத்திருக்கிறான் அவை " மேலும் அவர் எவருடைய வீட்டில் இருந்தாரோ அவள் அவர் மீது காதல் கொண்டு தன் விருபதிற்கு இணங்குமாறு எல்லா கதவுகளையும் மூடிக்கொண்டு அவரை வாரும் என்றழைத்தால் அல்லாஹ் (இத் தீய செயலிலிருந்து ) அல்லாஹ் காத்தருள் வானாக நிச்சயமாக என் எஜமானர் என் தங்குமிடத்தை அழகாகி வைத்திருக்கிறார் நிச்சயமாக (இத்தகைய நன்மை செய்வோருக்கு துரோகம் செய்யும் ) அநியாயக்காரர்கள் வெற்றிபெற மாட்டார்கள் " என்று கூறினார் , இந்த வசனம் நம் அனைவருக்கும் பொருந்தும் இந்த நிலையில் நீங்கள் ஆட்பட்டால் உங்கள் நிலைமை என்ன என்று நீங்களே சிந்தித்து பாருங்கள் . மேலும் இவருடைய வரலாறு மிக அளஹானது இன்ஷா அல்லாஹ் வரலாறுகளை முழுமையாக பார்க்கும் பொழுது அறிந்துகொல்வோம் அல்லாஹ் இவருடைய பெயரை 27 இடங்களில் தனது திரு மறையில் குரிபிடுகிறான்
16 . நபி யாகூப் இப்ன் இஸ்ஹாக் அலைஹி வசல்லம் அவர்கள் இஸ்ஹாக் அலைஹி வசல்லம் அவர்களின் புதல்வராவார் . இவரின் புதவராக நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களை அருளினான் யாகூப் அலைஹி வசல்லம் இவரின் சமுதாயத்தில் இருந்துதான் இஸ்ரேலர்கள் தோன்றினார்கள் என்பது வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள் இவரின் இன்னொரு பெயர் இஸ்ராயில் என்று குரான் வசனங்கள் சாட்சி கூறுகிறது அவர்கள் எந்நிலையிலும் பொறுமையாளராக இருந்தார்கள் என்று அல்லாஹ் கூருகிறான் அதற்காக அல்லாஹ் ஒரு வசனம் தனது இளைய மகன் யூசுபை தனது மூத்த பத்து சஹோதரர்கள் அவரை அழைத்து சென்று ஒரு கிணற்றில் இறக்கி அவரது சட்டையை கழற்றி ஆட்டின் ரேத்ததை தடவி அவர்களிடம் கொடுத்தார்கள் யூசுபை ஓநாய் கடித்துவிட்டது என்று அவர் அந்த சட்டையை பார்த்துவிட்டு எந்த இடத்திலும் கிளியாததால் அவர் தன் மகன்களிடம் உங்கள் மனம் ஒரு தீய காரியத்தை அழகாக காண்பித்து விட்டது ஆகவே பொறுமையுடன் இருப்பதுதான் எனக்கு நன்று மேலும் வணக்கத்துக்கு உரியவன் அல்லாஹுவே நான் அவனிடமே உதவி தேடுகிறேன் என்று கூறினார் மேலும் அல்லாஹ் தனது குரானில் இவரின் பெயரை 16 இடங்களில் குரிபிடுகிறான் .
17.நபி இஸ்ஹாக் இப்ன் இப்ராஹீம் அலைஹி வசல்லம் இவர் இப்ராஹீம் அலைஹி வசல்லம் அவர்களின் புதல்வர்களில் ஒருவர் அல்லாஹ் இவருடைய பிறப்பில் ஓர் அத்தாட்சியை வைத்தான் இவரது தாய் சாரா அம்மையார் வயது முதிர்ந்த நிலையில் அல்லாஹ் மலக்குகள் மூலம் அல்லாஹ் நற் செய்தி குருபிடுகிறான் இஸ்ஹாக் அலைவசல்லாம் அவர்களை பற்றியும் அவர்களுக்கு பின்னல் யாகூப் அலைஹி வசல்லம் அவர்களை பற்றியும் குரிபிடுகிறான் அதற்கு நம் தாய் சாரா அம்மையார் " என்னுடைய கேடே (நான் மாதவிடாய் நின்று ) கிழவியாகவும் என் கணவர் வயதானவராகவும் இருக்க நான் பிள்ளை பெறுவேனா என்று இது ஆச்சரியமான விசியம் என்று கூறினார்கள் அதற்கு நபி இப்ராகிம் அலைஹி வசல்லம் அவர்கள் அல்லாஹுவின் கட்டளையை பற்றி ஆச்சிரியம் அடைகிறாயா என்று .. மேலும் இவ்வசனத்தின் மூளும் அல்லாஹ் நமக்கு படிப்பினை கொடுத்துள்ளான் குழந்தை செல்வங்கள் கொடுப்பது அல்லாஹுவின் அருள் என்று அவன் எந்த சமயத்திலும் கொடுப்பான் . என்று நாம் இஸ்ஹாக் அலைஹி வசல்லம் அவர்களின் மூலமாக நான் விளங்கவேண்டிய படிப்பினை .இவரின் பெயரை அல்லாஹ் தனது திருமறையில் 17 முறை குரிபிடுகிறான்.
18. நபி இஸ்மாயில் இப்ன் இப்ராஹிம் அலைஹி வசல்லம் அவர்கள் இவரையும் இவரது தந்தையையும் அறியாத எந்த முஸ்லிமும் இருக்க இயலாது ஏன் என்றால் நாம் கொண்டாடும் இரு பெருநாள்களின் ஒன்று இவரும் இவருடைய தந்தை நபி இப்ராஹீம் அலைஹி வசல்லம் அவர்களும் அவர்களது குடும்பம் சேர்ந்து செய்த த்யாகம் அனைவரும் அறிந்ததே . இந்த இஸ்மாயில் அலைஹி வசல்லம் அவர்களுக்கு பின்னால் அவர்களது வாரிசில் வந்த நபி நமது கண்மணி நாயகம் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் மட்டுமே என்பது குறிபிடதக்கது. இதனால்தான் மாநபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் கூறுவார்கள் அறுத்து பலியிட இருந்த இறு தந்தையின் மகனாக இருக்கிறேன் என்று . இதன் அர்த்தம் ஒருவர் இஸ்மாயில் அலைஹி வசல்லம் இன்னும் ஒருவர் முஹம்மது சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களின் தந்தை அப்துல்லாஹ் . இப்படி பல சிறப்புகளுக்கு உள்ள இந்த இஸ்மாயில் அலைஹி வசல்லம் அவர்களின் பெயரை அல்லாஹ் 12 இடங்களில் குரிபிடுகிறான் .
19. நபி இபுறாஹீம் அலைஹி வசல்லம் அவர்கள் இவர்களை பற்றி அறியாத மக்களே இல்லை என்று கூறலாம் ஏன் என்றால் இவரை பற்றி அல்லாஹ் அவனது எல்லா திருமறையிலும் குரிபிட்டிருகிறான் அல்லாஹ்வால் கலீலுல்லாஹ் " அல்லாஹுவுடைய நண்பன் என்ற பெயரை பெற்ற உத்தம நபியாக திகழ்ந்த நமது தந்தை . இவரின் தியாகங்கள் எண்ணற்ற ஆதலால்தான் கிறிஸ்துவர்களும் யூதர்களும் தர்கித்துகொண்டிருகிரார்கள் இப்ராகிம் கிறிஸ்தவர்கள் என்றும் யூதர்கள் அவர் ஒரு யூதர் என்றும் ஆனால் அல்லாஹ் அவரைப்பற்றி குரானில் அறிமுகம் செய்கிறான் இப்ராஹிம் அலைஹி வசல்லம் அவர் ஒரு யூதரோ அல்லது கிறிஸ்துவரோ அல்ல அவர் ஒரு உன்மையான முஸ்லிமாக வாழ்ந்த இறை நேசர் . இவரின் பண்புகள் ஏராளம் இவரின் த்யாகங்கள் ஏராளம் இவருடைய வரலாறும் நிறைய படிபினையுள்ளதாக அல்லாஹ் நமக்கு அருளி இருக்கிறான் இவரின் பெயரை அல்லாஹ் 69 இடங்களில் குரிபிடுகிறான் .
20. நபி ழுத் அலைஹி வசல்லம் அவர்களை பற்றி அல்லாஹ் அவர்களது சமுதாயத்தினர் செய்த அட்டுழியங்களை குறிப்பிட்டு நமக்கு படிப்பினை செய்தவனாக இருக்கிறான் . அவரது சமுதாயத்தார் செய்த தவறு இன்றளவிலும் நடந்துகொண்டிருகிறது என்பதுதான் வருத்தத்துக்கு உரிய விசியம் அன்று அவர்கள் செய்த தவறு ஓரினச்சேர்க்கை செய்துகொண்டிருந்தார்கள் நாம் இன்றளவில் அரசாங்க அனுமதியோடு அரங்கேரிகொண்டிருக்கு மானக்கேடான விசியங்களில் இதுவும் ஒன்று . அல்லாஹ் அவர்களை ழுத் அலைஹி வசல்லம் அவர்களின் மூலம் எச்சரித்தும் அவர்கள் அதனை கேளாமல் அதனை விட்டு விலகாமல் இருந்தார்கள் எனவே அல்லாஹ் அந்த சமூஹதை கல் மலையின் மூலம் அளித்தான் என்பதை மறந்து நாம் வாழ்ந்து கொண்டிரிகிரோம் என்பதுதான் மேலும் வருதத்திர்க்கு உரிய விசியமாக நான் கருதுகிறேன் . அஹவே அல்லாஹுவின் பக்கம் ஒன்றினைங்கள் மானக்கேடான விஷயம் உங்களை விட்டு விரைந்தோடும் அல்லாஹ் ழுத் அலைஹி வசல்லம் அவர்களின் பெயரை 27 இடங்களில் குரிபிடுகிறான் .
21. நபி சாலிஹ் அலைஹி வசல்லம் அவர்கள் இவர்கள் ஷாம் தேசத்தில் பிறந்தார்கள் இவர் தமூத் என்ற கூடத்திற்காக அனுப்பப்பட்ட நபி .. இவரது சமூகத்தாருக்கு அல்லாஹ் ஒரு சோதனை கொடுத்தான் அவை அல்லாஹ் ஒரு பெண் ஒட்டகத்தை இப்பூமியில் இறக்கினான் இதனை யாரும் வேட்டையாடவோ கொள்ளவோ கூடாது என்று கட்டளை இட்டதாக சாலிஹ் அலைஹி வசல்லம் அவர்கள் தனது சமூகத்தாருக்கு எச்சரித்தார் அனால் அவர்கள் கர்வம் கொண்டு அந்தஒட்டகத்தை கொன்றுவிட்டார்கள் மேலும் அவர்கள் சாலிஹ் அலைஹி வசல்லம் அவர்களிடம் நீங்கள் கூறிய வேதனை எப்பொழுது வரும் என்று ஏளனமாக கேட்டார்கள் அல்லாஹ் அவர்களை ஒரே ஒரு இடிமுழக்கத்தை வைத் அழித்தான் அவர்களது வீட்டிலேயே அவர்கள் குப்பிற விழுந்து இறந்தார்கள் . மேலும் அல்லாஹ் சாலிஹ் அலைஹி வசல்லம் அவர்களின் பெயரை 9 இடங்களில் குரிபிடுகிறான் .
22. நபி ஹுது அலைஹி வசல்லம் அவர்கள் இவர்கள் ஆது கூட்டத்திற்காக அனுப்பப்பட்ட நபி இவ்வுலகில் அல்லாஹ் ஆது கூட்டத்தை விட பலசாலியாக எந்த ஒரு கூடத்தையும் படைக்கவில்லை. அவர்களிடம் ஹுது அலைஹி வசல்லம் அவர்கள் ஏகத்துவத்தை எடுத்துரைக்கும் பொழுது அவர்கள் அதனை நிராகரித்தனர் . அவர்களிடம் நபி ஹுது அலைஹி வசல்லம் கூறிய ஒரு வசனத்தை நாம் அனைவரும் அறிய வேண்டும் என்று அல்லாஹ் தனது திருமறையிலும் குரிபிடுகிறான் அது "இவ்வுலகில் படைத்து இருக்கும் அணைத்து ஜீவராசிகளின் முன் நெற்றி ரோமத்தை அவன் (அல்லாஹ்) பிடித்து வைதிரிகிறான் ,," இந்த வசனம் அல்லாஹ் நமக்கு அருளிய நோக்கம் என்பதை நான் விழங்குவது நம் எதிரிகள் நம்மை கொள்ள சூழ்ச்சி செய்கிறார்கள் என்று பலவாரியாக நமது மக்கள் பிரசாரம் செய்கிறார்கள் அதனை தவறாக நான் கூறவில்லை ஆனால் நாம் அல்லாஹுவை மறந்து அந்த போராட்டங்களும் விழிப்புணர்ச்சியும் தேவையில்லாதது என்று நான் கருதுகிறேன் அல்லாஹுவின் எதிரியையும் அவன்தான் படைதான் அவன் " குன் " ஆஹுக என்று கூறினால் ஆஹிவிடும் என்பது நாம் அனைவரும் அறிந்ததுதான் ஆனாலும் பள்ளிகள் காலியாகவே காட்சியளித்துகொண்டிருகிறது அல்லாஹுவின் கட்டளையை ஏற்று நடக்காமல் அவனின் உதவி எவ்வாறு வந்து அடையும் என்பதை சிந்தித்து பாருங்கள் நண்பர்களே .. அல்லாஹ் இந்த பிரம்மாண்ட கூட்டத்தை காற்றால் அளித்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள் அல்லாஹ் நபி ஹுது அலைஹி வசல்லம் அவர்களின் பெயரை ஏழு இடங்களில் குரிபிடுகிறான்.
23. நபி நூஹ் அலைஹி வசல்லம் அவர்கள் தனது சமூகத்தாருக்கு 950 ஆண்டுகள் ஏகத்துவத்தை எடுத்துரைத்தும் அவர்கள் விழங்கிகொள்ள வில்லை அவர்கள் நபி நூஹ் அலைஹி வசல்லம் அவர்களை பொய்யாக்கினார்கள் அவர்கள் நிராகரித்த நிலையிலேயே இருந்தார்கள் அவர்களை அல்லாஹ் தனது படையை இறக்கினான் அம்மக்களை வெல்ல பெருக்கின் மூலம் (சுனாமி ) மூலம் அவர்களை அழித்தான் நூஹ் அலைஹி வசல்லம் அவரளையும் அவரை ஏற்றுகொண்ட மக்களையும் அல்லாஹ் ஒரு கப்பலின் மூலம் காப்பற்றினான் . மேலும் அல்லாஹ் நூஹ் அலைஹி வசல்லம் அவர்களின் பெயரை அல்லாஹ் தனது திரு மறையில் 43 இடங்களில் குரிபிடுகிறான் .
24. நபி இத்ரீஸ் அலைஹி வசல்லம் அவர்கள் இவர்களை பற்றி அல்லாஹ் கூறுகிறான் நபி நூஹ் அலைஹி வசல்லம் அவர்களுடன் நல்லடியாராக கப்பலில் ஏறி வந்தவர்களில் சந்ததியினரில் இருந்தும் மேலும் இப்ராஹீம் அலைஹி வசல்லம் அவர்களின் மகன் இஸ்ராயில் (யாகூப்)அலைஹி வசல்லம் அவர்களின் சந்ததியினளிரிந்தும் அல்லாஹ் நல்வழி படுத்திய அவர்களின் சந்ததியினர் மூலமாக இத்ரிஸ் அலைஹி வசல்லம் அவர்களை அருளினால் என்று அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான் அல்லாஹ் இந்த வசனத்தை நமக்கு நிறைய படிப்பினையாக அருளி இருக்கிறான் நாம் ஒரு முஸ்லிமாக இருக்கும் ஒரு தாயின் வயிற்றில் பிறக்க வைத்த அல்லாஹ் நமக்கு நலவை நாட விரும்புகிறான் என்பதுவே நமக்கு புரியானால் நாம் உழாவுகின்றோம் என்பது நாம் அனைவரும் சிந்திக்க வேண்டிய விசியமாக நான் கருதுகிறேன் . மேலும் நபி இத்ரீஸ் அலைஹி வசல்லம் அவர்களை பொறுமையாளராக அல்லாஹ் அறிமுக படுத்துகிறான் மேலும் இத்ரீஸ் அலைஹி வசல்லம் அவர்களின் பெயரை அல்லாஹ் இரண்டு இடங்களில் குரிபிடுகிறான் .
25. இறுதியாக நமது தந்தை நபி ஆதம் அலைஹி வசல்லம் அவர்கள் இவர்களின் வரலாறு பலமாதிரியாக சித்தரிக்க பட்டிருகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம் . மேலும் அல்லாஹ் படைத்த முதல் மனிதனாக அல்லாஹ்ஆதம் அலைஹி வசல்லம் அவர்களை படைதான் அல்லாஹ் இவரை சொர்க்கத்தில் வைத்து படைத்தது அவர்களை அங்கயே சோதித்தான் ஷைத்தான் அவர்களை சிறிது மழுங்க வைத்தால் அல்லாஹ் அவர்களை இவ்வுலகில் இறக்கினான் . மேலும் இவர்களின் வரலாற்றை இன்ஷா அல்லாஹ் வரலாற்று பதிப்பில் காண்போம் இன்ஷா அல்லாஹ் மேலும் அல்லாஹ் நமது ஆதி தந்தை ஆதம் அலைஹி வசல்லம் அவர்களின் பெயரை 25 இடங்களில் குரிபிடுகிறான் .
அல்ஹம்துளில்லாகிர் ரஹ்மானிர் ரஹீம்
மாஷா அல்லாஹ் நண்பர்களே நபிமார்களின் பெயர்களையும் அவர்களது சிறு குறிப்புகளையும் உங்கள் கண்களுக்கு விருந்தாக பதிந்திருக்கிறேன் என்று நான் எண்ணுகிறேன் மாஷா அல்லாஹ் உங்களின் ஆதரவுடன் மேலும் மேலும் இன்ஷா அல்லாஹ் இப்பணியை தொடர அல்லாஹு விடம் துஆ செய்யுங்கள்… உங்கள் நண்பர்களுக்கும் இந்த பதிவை பற்றி தெரியவையுங்கள் இன்ஷா அல்லாஹ் உங்களுக்கு அதற்கான கூலியை அல்லாஹ் நிறைவாக தருவான் .. யா அல்லாஹ் நாங்கள் எதை படிக்க முற்பட்டோமோ அதனை எங்களுக்கு விளங்க வைப்பாயாக அதன்படி எங்களை வாழ வைப்பாயாக ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன் …..
அஸ்ஸலாமு அழைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பாரகாத்துகு
--
No comments:
Post a Comment