இருமல், ஜலதோஷமா இயற்கை மருந்து:-
இஞ்சி வேர்இயற்கை மருத்துவத்தில் சிறந்தது இஞ்சி. இதன் சாறு தொண்டை வலிக்கு சிறந்தது. இஞ்சியை இரண்டு அங்குலம் நன்கு சுத்தம் செய்து இஞ்சிக்கு தகுந்தாற் போல தண்ணீர்விட்டு கொதிக்க வைத்து இஞ்சித் துண்டுகளை அம்மியில் வைத்து விழுதாக அரைத்து கொதிக்கும் சுடுதண்ணீரில் போட்டு ஐந்து நிமிடங்கள் வரை கொதிக்க வைத்து பானம் தயாரித்து வடிகட்டி பருகலாம் சுவை சேர்க்க விரும்பினால் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து கொள்ளலாம். நோய்தொற்று இருப்பின் ஜலதோஷம் நீங்கும் வரை ஒரு நாட்களுக்கு மூன்று வேளை இந்த தேநீரை பருகினால் தொண்டை வலி எளிதில் குணமாகும்.
யூக்கலிப்டஸ் எசென்ஷல் ஆயில்
ஜலதோஷம் ஏற்பட்டால் மூக்கில் சளி வடிதல் பெரிய பிரச்சனையாக இருக்கும் இந்த பிரச்சனையை போக்க யூக்கலிப்டஸ் எசென்ஷல் ஆயில் பயன்படுத்தலாம்.. எப்படி பயன்படுத்தலாம் யூக்கலிப்டஸ் எசென்ஷல் ஆயிலை நன்கு கொதிக்கும் சூடான நீரில் ஐந்து முதல் ஆறு சொட்டுகள் சேர்த்து போர்வையால் ஆவி வெளியே போகாதவாறு மூடிக்கொண்டுஆவி பிடிக்க வேண்டும். இதை மூன்று வேளை செய்தால் தலையில் தேங்கி இருக்கும் தண்ணீர் ஆவி வழியாக வெளியாகிவிடும் சளி பிரச்சனை நீங்கிவிடும்..
எல்டர் ஃப்ளவர் தேநீர்
தேநீர் பருகியும் ஜலதோஷத்தை குணப்படுத்திவிடலாம். அதாவது எல்டர்ஃப்ளவரில் தயாரிக்கப்படும் தேநீர் ஜலதோஷத்தை குணப்படுத்தும் பண்புகளை கொண்டுள்ளது. எல்டர்ஃப்ளவரை மருத்துவ ஆய்வுக்கு உட்படுத்திய போது நேர்மறையான பண்புகளை கொண்டுள்ளது என தெரிவித்துள்ளனர். இதை சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கும் மருந்தாக பயன்படுத்தலாம். எல்டர்ஃப்ளவர் பூக்களை காய வைத்து சூடு நீரில் கொதிக்க வைத்து ஒரு கப் பூக்களை போட்டு தேயிலை சேர்த்து கொதி வந்ததும் இறக்கி பருகலாம் விருமம்பினால் சர்க்கரை சேர்த்துக்கொள்ளலாம்..
உடல் நலத்தை பாதுகாக்க வீட்டிலே இருக்குது பல மருந்துகள் அதனை தகுந்தவாறு பயன்படுத்தி நோய்களை போக்கலாம். பணத்தையும் சேகரிக்கலாம். இயற்கை மருத்துவத்தை விட சிறந்தது வேறெதுவும் இல்லை..
குலசை.ஆ.சாமி
--
No comments:
Post a Comment