Sunday, November 29, 2015

பிரணாயாமம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

பிரணாயாமம் என்பது யோகாவின் ஒரு பகுதியாகும். இது பெரும்பாலும் மூச்சுப்பயிற்சி சம்பந்தப்பட்டவை. பிரணாயாமம் என்பது 'பிராண' மற்றும் 'அயாமா' என்ற வார்த்தைகளின் கூட்டாகும். 'பிராண' என்றால் அதிமுக்கிய ஆற்றல் திறன் என்று பொருளாகும். 
அதே போல் 'அயாமா' என்றால் கட்டுப்பாடு என்று பொருளாகும். வேறு எந்த செயல்முறையும் தர முடியாத பல உடல்நல பயன்களை பிரணாயாமம் உங்களுக்கு தருகிறது. பிராணயாமாவால் கிடைக்கும் எண்ணிலடங்கா பயன்களில் உடல் மற்றும் மன ரீதியான பயன்கள் என இரண்டுமே அடங்கும். 
பிரணாயாமம் செய்யும் போது சில முக்கியமான விஷயங்களை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். பிரணாயாமம் செய்வதால் கிடைக்கும் அனைத்து பயன்களையும் அடைய வேண்டுமானால் அதனை விடிய காலை, சூரிய உதயத்தின் போது செய்திட வேண்டும். 

அதே போல் அதனை செய்யும் போது சரியான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். பிரணாயாமம் செய்ய முயற்சிப்பதற்கு முன், ஒரு தேர்ந்தெடுத்த யோகா ஆசிரியரிடம் பயிற்சி பெற பரிந்துரைக்கப்படுகிறது. பிரணாயாமம் செய்வதால் கிடைக்கும் முக்கியமான உடல்நல பயன்களில் இதுவும் ஒன்றாகும். 
பிரணாயாமம் என்பது சிறந்த மூச்சுப்பயிற்சியாகும். அதனால் உங்கள் நுரையீரலும் சிறப்பான முறையில் செயல்படும். சுவாசக் கோளாறுகள் அல்லது ஆஸ்துமா உள்ளவர்களுக்கு இது பெரிதும் உதவியாக இருக்கும். பிரணாயாமம் செய்வதால் கிடைக்கும் உடல்நல பயன்கள், உங்கள் உடலுக்குள் இருக்கும் அங்கங்களின் ஒழுங்காக செயல்பாட்டோடு மட்டும் நிற்பதில்லை. 
உங்கள் உடல் எடையை குறைப்பதற்கும் உதவுகிறது என்பதையும் தெரிந்துக் கொள்ளுங்கள். பிரணாயாமம் பயிற்சியை தினமும் தொடர்ச்சியாக செய்து வந்தால் நீங்களே வித்தியாசத்தை உணர்வீர்கள். உடலில் தேங்கியிருக்கும் அனைத்து நச்சுப் பொருட்களை நீக்க சிறந்த வழியாக விளங்குகிறது பிரணாயாமம் பயிற்சி. 

உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்க யோகாவில் பல வழிகள் உள்ளது. அவைகளில் புகழ்பெற்ற வழிகளில் ஒன்றாக விளங்குகிறது பிரணாயாமம். உங்கள் வாழ்க்கையில் எரிச்சலடைய வைக்கும் பிரச்சனைகளில் ஒன்றான மூக்கடைப்பை ஒரு முறையாவது சந்தித்திருப்பீர்கள். பிரணாயாமம் செய்வதால் கிடைக்கும் பயன்களில் தெளிவான சுவாச குழாய்களும் ஒன்று என்பதை மறந்து விடாதீர்கள்.

பிரணாயாமம் என்பது ஒரு வெறும் மூச்சுப்பயிற்சி மட்டுமே என்று பலரும் நினைத்துக் கொண்டிருப்பது தவறாகும். இயல்பான சுவாசத்திலிருந்து அது வேறுபடுகிறது என்பதோடு வேறுபடுத்தப்படுகிறது ஒழுங்குபடுத்தப்படுகிறது. 

ஓடுதல்,குதித்தல், தாண்டுதல், நீந்துதல், பளு தூக்குதல், அதிக நிறை உள்ளவற்றை நகர்த்துதல் நீண்ட நேரம் களைப்படையாமல் பணிபுரிதல் போன்றவற்றை எந்தவிதப் பயிற்சியும் இல்லாத சாதாரண ஒரு மனிதனை விட யோகப்பயிற்சி பெற்ற ஒருவரின் மேற்கண்டசெயல்பாடுகளை மிகச்சுலபமாகவும் விரைவாகவும் அதிசயத்தக்க வகையில் செய்யக்கூடியதாகவும் இருக்கும்.
 

இயல்பான மூச்சை பிரணாயாமத்தின் மூலம் வகைப்படுத்தப்படும்போது மனிதனின் உடல் ஆற்றல் மற்றும் உள்ள ஆற்றல் பல மடங்கு பெருகுகிறது. எனவே பிரணாயாமம் என்பது ஆற்றல்களைப் பெருக்கும் ஒரு வித்தையும் ஆகும்.
 

இந்த வித்தையினை மூச்சுக்கலை , சரகலை, வாசிக்கலை , என பல பெயர்களை கொண்டதாகும். பிரணாயாமம் என்பதற்கு அடக்குதல் என்பது ஒரு பொதுப்பெயர்,பொதுச்சொல் ஆகும். மூச்சினால் பிராணன் இயக்கப்படுகிறது. பிராணனை அடக்கும்போது மனம் அடங்குகிறது.

அதனால் வாழ்வு சிறக்கிறது. மனதை , புலன்களைக் கட்டுப்படுத்த பிரணாயாமம் முக்கியமாகிறது.
 பசி, தாகம், மூச்சு, உடல் இயக்கம் இந்த நான்கும் பிராணனால் நடத்தபடுபவையே. பிராணன் குறையும் போது இந்த நான்கு செயல்களாலும் உடல் துன்பம், உள்ளத்துன்பம், ஏற்படுகிறது. உணவில், நீரில், காற்றில், பிராணன் உலவுகிறது. 

மூச்சு உள் இழுத்தல், உள்நிறுத்துதல், வெளி விடுதல், இந்த மூன்று வகையிலும் உள் நிறுத்துதல் என்பது பிரணாயாம நெறிகளில் தலைமைச் செயல் என கருதப்படுகிறது.

பலன்கள்-

சகிப்புத்தன்மை (பொறுமை) , சமாளித்தல், சுற்றுப்புற துன்பங்களை சகித்தல், உடல் வேதனை (வலி) தாங்குதல் , வாழ்க்கைப்போரட்டங்களை தாங்கி நிற்றல். கவலை, கலக்கம், இவைகள் அனைத்திலும் பாதிப்பின்றி வெற்றியடைய மனபலம் பெற, மனமடங்க, பிராணனை அடக்குவதன் மூலம் இப்பலன்கள் கிடைக்கிறது.



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

No comments: