பென்டிரைவில் தகவல்களை எளிதாக சேமிக்க முடிவதோடு தேவை இல்லாத போது அதை அழித்து விட்டு வேறு தகவல்களை சேமித்துக்கொள்ளலாம் என்பதால் இன்றைய தொழில்நுட்ப உலகில் பென்டிரைவ் தவிர்க்க முடியாத அங்கமாக மாறிவிட்டது 1GB, 2GB என ஆரம்பித்து 1TB , 2TB என சேமிப்பகங்களின் கொள்ளளவு அதிகரித்து கொண்டே செல்கிறது சரி வாருங்கள் நாம் CD / DVD ஐ பென்டிரைவ் ஆக பயன்படுத்துவது எப்படி என்று அறிவோம் .
CD / DVD ஆனது Read only Memory எனப்படும் ROM வகையைச்சார்ந்தது அதில் நீரோ போன்ற மென்பொருட்கள் மூலம் ஒரு முறை தகவல்களை எழுதிவிட்டால் அதை அழிக்க முடியாது ஆனால் அதை எத்தனை முறை வேண்டுமானலும் படித்துக்கொள்ளலாம் . Read and Write எனப்படும் CD / DVD களும் கிடைக்கின்றன ஆனால் அவற்றின் விலை மிக அதிகம்
நாம் தற்போது மலிவு விலையில் கிடைக்கும் CD / DVD யை பொன்டிரைவ் போல பயன்படுத்த போகின்றோம் .
பென்டிரைவ்கும் CD / DVD க்கும் ஒரு வித்தியாசம் உண்டு பென்டிரைவ்வில் நாம் வெட்ட(Cut) , நகலெடுக்க (Coppy ) , ஒட்ட (Paste ) தகவல்களை அழிக்க முடியும் ஆனால் CD / DVD யிலிருந்து நகலெடுக்க மட்டுமே முடியும் நமது CD / DVD களிலும் பென்டிரைவ் போல வெட்ட,ஒட்ட,நகலெடுக்க தகவல்களை அழித்தல் போன்ற செயல்பாடுகளை செய்ய முடியும் அதில் தகவல்களை எழுத நீரோ போன்ற மென்பொருட்களும் தேவை இல்லை இந்த செயல்பாடுகளை செய்வதற்கு உங்களிடம் வின்டோஸ் 7 அல்லது வின்டோஸ் 8 ஆபரேட்டிங்சிஸ்டம் இருக்க வேண்டும் .
நீங்கள் புதிய CD / DVD யை உங்களது டிரைவில் போட்ட உடனே
பின்வரும் புதிய வின்டோ திறக்கும் இதில் Burn files to disc என்பதை தேர்வு செய்தால் பின்வரும் விண்டோ திறக்கும்
அதில் Like a USB Flash Drive என்பதை தேர்வு செய்தீர்கள் என்றால் உங்களது CD / DVD ஆனது Formatting ஆக தொடங்கும் சில வினாடிகளுக்குப்பிறகு பின்வரும் விண்டோ திறக்கும் அவ்வளவுதான் நன்பர்களே உங்களது CD / DVD ஆனது பென்டிரைவ் போல மாறிவிட்டிருக்கும் இனி உங்களாது CD / DVD யில் Cut ,Copy, Paste போன்ற செயல்களை செய்ய முடியும் அது மட்டுமில்லாமல் உங்களாது CD / DVD யில் இருக்கும் தகவல்களை அழித்துவிட்டு(delete) மீண்டும் புதிய தகவல்களை எழுதிக்கொள்ள முடியும் இந்த செயல்களை செய்யத்தானே அதிக செலவு செய்து பென்டிரைவ்களை வாங்குகின்றோம் மலிவு விலையில் கிடைக்கும் CD / DVD க்களிலே இந்த செயல்களை செய்து கொண்டால் பென்டிரைவ் வாங்கும் செலவு மிச்சந்தானே அதுமட்டுமில்லாமல் பென்டிரைவ் இல்லாத சிக்கலான சூழ்நிலைகளில் CD / DVD யை பென்டிரைவ் போல பயன்படுத்திக்கொள்ளலாம் பயன்படுத்தி பாருங்கள் நன்பர்களே . உங்களுக்கு பயன்பட்டால் சமூக வலைதளங்களில் பகிருங்கள்.
--
No comments:
Post a Comment