Sunday, May 15, 2016

கை மருத்துவம் !

சளி, இருமல் நீங்க: திப்பிலி, அக்கரா, சுக்கு, மிளகு, மஞ்சள்
செய்முறை: இந்த ஐந்து மருந்துகளையும் நன்றாக அரைத்து பொடியாக்கி ஒரு டப்பாவில் போட்டு வைத்து தினமும் காலை அல்லது இரவில் அரை டீஸ்பூன் எடுத்து அதை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் சளி, இருமல் குறையும். வென்னீரிலும் கலந்து சாப்பிடலாம்.

உடலில் புளிப்பு அதிகம் இருப்பின்:

இஞ்சி, வெற்றிலை, பூண்டு, மல்லி

செய்முறை: இதை நன்றாக அம்மியில் வைத்து அரைத்து வென்னீரில் அந்த சாறை பிழிந்து மாலை அருந்தினால் உடலில் உள்ள புளிப்பு குறையும்.

வாயு மருந்து:

பூண்டு, ஓமம், மஞ்சள், சுக்கு, கருஞ்சீரகம், வாவளங்காய்
செய்முறை:இதை சட்டியில் போட்டு அவித்து சாறை வடிகட்டி குடிக்கவும்.

பித்தம் அதிகம் இருப்பின்: இஞ்சி, சர்க்கரை, கொட்டை முந்திரி, ஏலக்காய் அரிசி, மல்லி,

செய்முறை: இதை அம்மியில் அரைத்து வைத்து சட்னியைப் போல் சாப்பிட்டால் பித்தம் குறையும். அல்லது அவித்தும் குடிக்கலாம்.

குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு நிற்க:

சுக்கு, பூண்டு, வாவளங்காய், பெருங்காயம், இந்துப்பூ, ஓமம்
செய்முறை: இந்த மருந்துகளை அம்மியில் அரைத்து துணியில் வைத்து வெந்நீ:ரில் பிழிந்து எடுத்து ஒரு சங்கு குழந்தைகளுக்கு கொடுக்க வயிற்றுப் போக்கு நிற்கும்.

விஷக்குடி மருந்து:

சுக்கு, மல்லி, திப்பிலி, வெற்றிலை, கருஞ்சீரகம், வேப்பிலை கொழுந்து,ஓமம், மல்லி.

செய்முறை: இதை ஒரு சட்டியில் போட்டு அவிக்கவும். பின்னர் அதை வடிகட்டி ஒரு துண்டு கருப்பட்டி போட்டு குடித்து வந்தால் விஷக்கிருமி அழியும்.

பல்வலி மருந்து:

பூச்சிப் பல் இருப்பவர்கள் கிராம்பை அவ்விடத்தில் தூளாக்கி வைத்தால் வலி நீங்கும்.

தலைவலி, தடுமல், தலைபாரம்:

தும்பை , ஓம இலை, மஞ்சள், செங்கல் சுட்டு போட வேண்டும்.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் வெந்நீர் வைத்து இந்த இலைகளை மஞ்சள் செங்கல் சுட்டுப் போட்டு அதனுடைய ஆவியைப் பிடித்தால் தலைபாரமi;, தடுமல், தலைவலி நீங்கும்.

பேதி குணமாக வழி:

 அவரை இலைச் சாறு, தயிறு

அவரை இலை சாறை தயிருடன் சாப்பிட்டால் பேதி குறையும்.

குமட்டல் வயிற்றுப் போக்கு நீங்க:

எலுமிச்சைப் பழம் சாறு, சீரகம்

எலுமிச்சைப் பழச் சாறில் சீரகம் ஊற வைத்து காயவைத்து சுவைத்து மென்று சாப்பிட வேண்டும்.

இரத்த வாந்தி நீங்க:

ஆடுதொடா இலை சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் சரியாகும்.

திக்குவாய் குணமாக:

வசம்பு பொடி, அருகம்புல் சாறு

இரண்டையும் கலந்து குடித்துவர திக்கிப் பேசுதல் சரியாகும்.

மூல நோய் குணமாக:

பப்பாளி பழம், மாம்பழம்,தேன்

பப்பாளி பழம், மாம்பழம் இரண்டையும் தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் குணமாகும்.

கைகால் வெடிப்பு நீங்க:

 கண்டங்கத்திரி இலை, தேங்காய் எ ண்ணெய்

கண்டங்கத்திரி இலையுடன் தேங்காய் எண்ணெய் ஊற்றி சாறு பிழிந்து தடவினால் வெடிப்பு நீங்கும்.
பல் உறுதியாக:

மாவிலையைப் பொடி செய்து பற்களை துலக்கி வர பல் உறுதி பெறும்.

சுளுக்கு நீங்க வழி

உப்பு, புளியை கரைத்து கொதிக்க வைத்து பின் இறக்கி ஆறியவுடன் பற்றுப் போட வீக்கம், ரத்தக் கட்டு குணமாகும்.

இரத்தத்திலுள்ள பித்தம் குறைய:

ஆரமா குச்சிகளைத் துண்டுகளாக்கி காய்ச்சி வடிகட்டி தேன் கலந்து குடிக்கலாம்.

இரத்தத்தை சுத்தப்படுத்த:

கரிசலாங்கண்ணி கீரையை நன்கு கழுவி சாப்பிட வேண்டும். கண்பார்வையும் கூர்மையாகும்.

மண்ணீரல் வீக்கத்தை குறைக்க:

கரிசலாங்கண்ணி கீரையை நன்கு கழுவி தினமும் ஒரு முறை சாப்பிட வேண்டும்.

கரிசலாங்கண்ணி கீரையை நன்கு கழுவி அரைத்து எந்த இடத்தில் தோல் வியாதி இருக்கிறதோ அந்த இடத்தில் தடவ வேண்டும்.

உடல் வலி, தலைமுடி உதிர்வதை தடுக்க:

கரிசாலை சாற்றுடன் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் கலந்து அடுப்பில் வைத்து
இளம் சூடாகவும் காய்ச்சி தைலமாக்க வேண்டும். அதன் பிறகு அதை தலையில் எல்லா இடங்களிலும் தடவ வேண்டும். அஅப்படி த டவினால் தலை முடி உதிர்வதையும், நரை ஏற்படுவதையும் தடுக்கும். உடலில் வலி ஏற்படும் இடத்தில் தடவினால் வலி நீங்கும்.

கண் நோய்களை குணமாக்க:

பொண்ணாங்கன்னி கீரையை தினமும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் முதுமையில் கண்ணாடி அணியத் தேவையிராது. கண் எரிச்சல், கண் மங்கல், கண் கட்டி, கண்ணில் நீர் வடிதல் போன்றவற்றையும் கண் சம்பந்தப்பட்ட நோய்களையும் குணமாக்கும்.

காய்ச்சல் நீங்க:

துளசி இலை 50, மிளகு 20 அல்லது முப்பது.
துளசி இலையையும் மிளகையும் நன்றாக அரைத்து பயிறு அளவு சிறுசிறு மாத்திரைதகளாக உருவாக்கிக் கொள்ள வேண்டும். இம்மாத்திரைகளை இம்மாத்திரைகளை காலை, மாலை இருவேளைகளிலும் சுடு தண்ணீருடன் உட்கொண்டால் காய்ச்சல் நீங்கும்.

சளி தொல்லை, சளி காய்ச்சல், மூச்சுத் திணறல் நீங்க:

சுக்கு ஐந்து கிராம், கண்டங்கத்திரி வேர் முப்பது கிராம், கொத்த மல்லி முப்பது கிராம், சீரகம் 2 கிராம், தண்ணீர் 2 லிட்டர்
தேவையான பொருட்கள் அனைத்தையும் இரண்டு லிட்டர் தண்ணீரில் போட்டு அரை லிட்டர் தண்ணீர் ஆகும்வரை காய்ச்சி எடுத்து கொள்ள வேண்டும். அதன் பிறகு காய்ச்சிய தண்ணீரை 4 முதல் 6 வேளைகள் குடித்தால் சளி தொல்லை நீங்கி விடும்.

காயப்புண் நீங்க:

அரிவான்மனைப் பூண்டு இலை 20 ஐ நன்றாக கசக்கி அதன் சாற்றை காயத்தில் இட்டால் புண் விரைவில் ஆறும்.

தீப்புண், தீக்காயம் நீங்க:

வேப்பம்பட்டையை இடித்து கசாயமாக்கி காய்ச்சி தடவ வேண்டும். வாழைப்பட்டை சாறு பிழிந்து காயத்தில் தடவ வேண்டும்.

தலைவலி நீங்க:

அரை லிட்டர் தண்ணீர், சங்குப் பூக் கொடி பச்சை வேர் நாற்பது கிராம்.
சங்குப்பூக்கொடி பச்சை வேரை நன்றாக நசுக்கி அரை லிட்டர் நீரில் போட்டு 300 மி.லி. வரை நன்றாக காய்ச்சிக் கொள்ளவும். காய்ச்சிய நீருக்கு காக்கணக் குடிநீர் என்று பெயர். காக்கணக் குடிநீரை இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறையாக ஆறு முறை சாப்பிட்டால் தலைவலி முழுமையாக நீங்கிவிடும்.
தொண்டைவலி நீங்க: சுண்ணாம்பு, விளக்கெண்ணெய் இரண்டையும் கலந்து சூடு செய்து மித சூட்டில் தொண்டையில் தடவிக் கொள்ளவும்.

பல்வலி நீங்க:

சுடுதண்ணீரில் உப்பைப் போட்டு வாiயு நன்றாகக் கொப்பளித்தாலும், சுக்குத் துண்டை வாயில் போட்டுக் கொண்டாலும் பல்வலி முழுமையாக நீங்கி விடும்.

வாய்புண், குடல் புண், வாயுத் தொல்லை நீங்க:

வெங்காயம், மிளகுதூள், உப்பு, தக்காளி, மணத்தக்காளி கீரை.

மணத்தக்காளி கீரைiயும், வெங்காயத்தையும் , தக்காளியையும் பொடீயாக நசுக்கி மிளகு தூளும் உப்பும் சேர்த்து கொதிக்க வைத்து சாறாக குடித்தால் வாய்ப்புண், குடல் புண், வாயுத் தொல்லை முழுமையாக நீங்கி விடும்.

சளி கோலை, காது மந்தம் நீங்க:

தூதுவளை பழத்தை நிழலில் உலர்த்தி அதன் பிறகு தேனில் ஊற வைத்து தினமும் சாப்பிட வேண்டும். அப்படி சாப்பிட்டால் சளி கோலை, காது மந்தம் நீங்கிவிடும்.

உடல் மெலிவு பெற:

பப்பளிக்காயை சமைத்து உண்ண வேண்டும்.

உடல் தொப்பை குறைய:

சுரைக்காயை வாரம் இருமுறை சாப்பிட வேண்டும்.

கால் ஆணி குணமாக:

வெள்ளை அரக்கு அரைத்து வைத்து ஆணிப் பகுதியில் கட்டி வரவும்.

குடல் புண் குணமாக:

 தினமும் ஒரு டம்பளர் திராட்சைப் பழச் சாறு குடித்து வர அல்சர் நீங்கும்.

மூலம்:

பப்பாளி பழம் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும். அதன்பிறகு வெந்தயம் சிறிதளவு சாப்பிட வேண்டும். இப்படி செய்தால் மூலம் குணமாகும்.

சர்க்கரை நோய் நீங்க:

பப்பாளி பழமும், கொய்யா பழமும், பாகற்காயும் தொடர்ந்து சாப்பிட்டால் சர்க்கரை நோயைக் குணப்படுத்தலாம்.

மஞ்சள் காமாலை:

திராட்சை பழம் சாப்பிட்டால் மஞ்சள் காமாலை குணமாகும்.

யானைகால் நோய் நீங்க:

வல்லாரை கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வரவும்.

நரம்புத் தளர்ச்சி நோய் நீங்க:

அத்திப் பழம் தினந்தோறும் ஐந்து சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி நீங்கி விடும்.

வயிற்று வலி, பித்த வெடிப்பு நீங்க:

மருதம் இலையை அரைத்து ஒரு ஸ்பூன் காலையில் சாப்பிட வேண்டும்.

காது அடைப்பு, காது கட்டி நீங்க:

தூதுவளை சாறு இரண்டு சொட்டு காதில் விட்டால் காது அடைப்பு, காது கட்டி நீங்கி விடும்.

வாயுத் தொல்லை நீங்க:

பாலில் வாய்விலங்கா சிறிதளவு சேர்த்து காய்ச்சி கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு வாயு தொல்லை ஏற்படாது.
இந்துப்பூ, பெருங்காயம் இரண்டையும் உரலில் உரசி தண்ணீர் சேர்த்து கொடுத்தால் வாயுத்தொல்லை நீங்கும்.
தூதுவளை, கண்டங்கத்திரி, பனங்கற்கண்டு, சிறுதும்பை
முதலில் தூதுவளை, கண்டங்கத்திரி, சிறுதும்பை மூன்றையும் உரலில் வைத்து இடித்து சாறு பிழிந்து, அந்த சாறுடன் பனங்கற்கண்டு சேர்த்து கொடுத்தால் சளித் தொல்லை நீங்கும்.

ஆஸ்துமா இருந்தால்:

வேப்பங் கொட்டை 3, திப்பிலி.

வேப்பங்கொட்டையிலுள்ள பருப்பை எடுத்து அதே அளவு திப்பிலியையும் சேர்த்து வறுத்து, இடித்து, தூளாக்கி வெந்நீரில் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு ஆஸ்துமா குணமாகும்.

மஞ்சள்காமாலையாக இருப்பின்:

வில்வ இலை, வெந்தயம், குளுக்கோஸ்., ஒரு டீ ஸ்பூன் வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து வேக வைத்து அந்த நீருடன் குளுக்கோஸ் சேர்த்து தொடர்ந்து குடித்து வந்தால் மஞ்சள் காமாலை சீக்கிரமாக குணமாகும். இதற்கு எவ்வித பத்தியமும் கிடையாது.

வாய்ப்புண்:

மாசாக்காயை ஷதினமும் இரண்டு தடைவ உரலில் உரசி அதை வாய்ப்புண் உள்ள இடத்தி;ல் தேய்த்து வந்தால வாய்புண் குணமாகும்.

தீப்புண்:

சுண்ணாம்பை நீரில் கரைத்து
  மேலே வரும் தெளிந்த நீரை எடுத்து சம அளவு தேங்காய் எண்ணெய் கலந்து தீ பட்ட இடத்தில் தேய்த்து வந்தால் தீப்புண்ணால் ஏற்பட்ட தழும்பு கூட வராது. சீக்கிரமாகத் தீப்புண் ஆறிவிடும்.

ஜலதோஷமாக இருப்பின்:

சுக்கு, மிளகு, வெற்றிலை, மஞ்சள் தூள், வெள்ளைப் பூண்டு, கருஞ்சீரகம், வேப்பங்கொழுந்து.
மேலே குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் சேர்த்து வேகவைத்து அதன் வற்றிய நீரை குடித்தால் அதிவிரைவில் குணம் கிடைக்கும். அம்மை போட்டிருப்பினும் 2, 4, 6, 8 தினங்களில் கொடுத்தால் குணமாகும்.

வாய்ப்புண்ணாக இருப்பின்:
மாசாக்காய், மாதுளம் பழத் தோல், சீரகம், அதிமதுரம், சீனாகரம்

இவற்றை நீரில் வேகவைத்து வடிகட்டி அந்த நீரை குடித்து வந்தால் குணமாகும்.
சளி தொல்லை:

காயம், திப்பிலி, மாசாக்காய், அதிமதுரம், சித்திரத்தை, வாய்விளங்காய், பால் கடாச்சி, மிளகு, பூண்டு, சீனாகரம், சுக்கு. இம்மருந்துக்குப்பெயர் உரை மருந்து.

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் உரலில் தேய்த்து சேர்த்து கொடுக்கவும். மாதம் ஒரு முறை கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு சளித் தொல்லை இராது.

குழந்தைகளுக்கு மார்பில் கட்டி இருப்பின் சமுத்திராபழத்தை உரலில் தேய்த்து அதை மார்பில் பூசிவ ந்தால் ஒரு வாரத்தில் கட்டி கரைந்து விடும்.

இரும்புச் சத்து குறைவாக இருப்பின் தினமும் கருப்பட்டி காப்பியை அருந்தி வந்தால் சீக்கிரத்தில் அளவு கூடும். குழந்தை உண்டாகி இருக்கிறவர்கள் 6, 7 மாதத்தில்இதைப் பருகி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பித்தவாயு குர்ணி:

காய்ந்த கொட்டை முந்திரி பழம், ஏலக்காய், கொத்தமல்லி விதை, இஞ்சி ஆகியவற்றை நீரில் அவித்து அந்த நீரை மூன்று நாட்களுக்குப் பருகி வந்தால் பித்த வாயு தீரும்.

நீரழிவு நோய் இருப்பவர்கள் நாவல் பழக் கொட்டையை காய வைத்து பொடி பண்ணி தினமும் சிறிதளவு எடுத்து நீரில் கலந்து பருகி வந்தால் விரைவில் குணமாகும். சுகர் ஆரம்பநிலையில் இதை கையாண்டால் குணம் கிடைக்கும்.

குழந்தைக்கு சீலம் போவதாக இருப்பின் மாதுளம்பழத்தின் பூவை எடுத்து அரைத்து ஆட்டுப் பாலில் கலந்து கொடுத்தால் சீக்கிரம் குணம் கிடைக்கும்.

வயிற்றுப் புண்:

பாசிப்பருப்பு ஒரு தேக்கரண்டி, அரிசி ஒரு தேக்கரண்டி, பூண்டு ஒரு பல், வெந்தயம் ஒரு தேக்கரண்டி, தேங்காய் பால்.

பாசிப்பருப்பு, அரிசி, பூண்டு, வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து வேகவைத்து நன்றாக கடைந்து தேங்காய்பால், உப்பு சேர்த்து மூன்று நாள் பருகி வந்தால் நல்ல குணம் கிடைக்கும்.
....
தலைசுற்றல் குணமாக:

சுக்கு, மிளகு, திப்பிலி, விலாமிச்சை வேர், சீரகம் ஆகியவை தலா ஐந்து கிராம் வீதம் பவுடராக்கி தினசரி காலை, மாலை அரைக் கரண்டி
  சாப்பிட்டு வந்தால் தலைசுற்றல் நிற்கும்.

இருமல் குணமாக:

அரச மரத்துப் பதட்டையை காய வைத்து வறுத்து கரியானவுடன் தூளாக்கி ஒரு டம்ளர் நீரில் ஒரு ரண்டி போட்டு கொதித்து வடிகட்டி சர்க்கரைப் பால் சேர்த்து குடிக்க இருமல் நிற்கும்.

ஜலதோஷம் குணமாக: ஜலதோசம் காய்ச்சல், தலைவலிக்கு பன
    ங்கிழங்கை அவித்து காயவைத்து இடித்து பொடியாக்கி பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் குணமாகும்.
வரட்டு; இருமல் குறைய: கருவேல மரக் கொழுந்தை கசக்கி சாறு எடுத்து வெந்நீரில் கலந்து சாப்பிட வறட்டு இருமல் குறையும்.

மூச்சுத் திணறல் குணமாக: முசுமுசுக்கை இலையை அரைத்து வெங்காயத்துடன் நெய்யை விட்டு வதக்கி பால் உணவில் சாப்பிட்டால் மூச்சுத் திணறல் நிற்கும்.

சளிகட்டு நீங்க: தூதுவளை, ஆடுதொடா சங்கன்இலை, சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்து கசாயம் செய்து சாப்பிட இறைப்பு சளிக்கட்டு நீங்கும்.

பிரயாணத்தின் போது வாந்தி நிற்க: தினசரி ஒரு நெல்லிக்காய் என தொடர்ந்து 41 நாட்கள் சாப்பிட்டால் வாந்தி வராது.

நெஞ்சு சளி நீங்க: தேங்காய் எண்ணெய்யில் கற்பூரம் சேர்த்து சுட வைத்து நெஞ்சில் தடவ நெஞ்சு சளி குணமாகும்.

தும்மல் நிற்க: தூதுவளை பொடியில் மிளகு பொடி கலந்து தேனில் அல்லது பாலில் சாப்பிட்டால் தும்மல் நிற்கும்.

காச நோய் குணமாக: செம்பருத்திப்பூவை எடுத்து சுத்தம் செய்து மைபோல் அரைத்து உருண்டையாக எடுத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர பூரண குணம் கிடைக்கும்.
சுவாசக் குழாய் அலர்ஜி நீங்க: குங்குமப்பூவுடன் தேன் கலந்து மூன்று நாட்கள் தினசரி இரண்டு வேளை உட்கொள்ள
  குணமாகும்.

மூச்சுத்திணறல் குணமாக: தேள் கொடுக்கு செடியின் காயை நசுக்கி துளசி இலையை சேர்த்து காஷயமாக்கி தினமும் ஒரு வேளை சாப்பிட்டால் மூச்சுத் திணறல் குணமாகும்.

வாந்தி நிற்க: வேப்பம்பூவை வறுத்து பொடிசெய்து பருப்பு ரசத்துடன் கலந்து சாப்பிட்டால் வாந்தி குணமாகும்.

ஒற்றைத் தலைவலி குணமாக: துளசி இலை, நல்வேளை இலை, அருகம்புல், வெற்றிலை போன்ற இலைகளை கைப்பிடி அளவு சேகரித்து கசக்கி பிழிந்து எந்தப் பக்கம் தலைவலிக்கிறதோ அதற்கு எதிர்ப்பக்கம் காதில் தொடர்ந்து மூன்று நாட்கள் விட ஒற்றை தலைவலி போய்விடும்.

மூக்கில் நீர் வடிதல்: ஒரு டம்ளர் அகத்தி இலை சாறு ஒரு டம்ளர் பசும்பால் சேர்த்து சிவக்க காய்ச்சி இறக்கி வடிகட்டி ஆறவைத்து வாரம் இருமுறை தலைக்கு தேய்த்து வர குணமாகும்.
மூக்கில் இரத்தம் வடிதல் நீங்க: மாதுளம் பழச் சாறு அருகம்புல் சாறு சமஅளவு 30 மி.லி. மூன்று வேளை சாப்பிட்டால் குணமாகும்.

கண் எரிச்சல் நீங்க: அதிமதுரம், கடுக்காய், திப்பிலி, மிளகு சேர்த்து வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் கண் எரிச்சல் நீங்கும்.

கண்புரை குணமாக: நீக்கிய கீழாநல்லி இலை வேரை மட்டும் நீக்கி தண்டை மட்டும் சாறு எடுத்து விளக்கெண்ணெயில் கலந்து கண்களில் விட்டுவர கண்புரை குணமாகும்.

மாலைக் கண் குணமாக: கருத்துளசியின் இலையை கழுவி கசக்கி சாறெடுத்து கண்ணுக்கு இரண்டு துளி வீதம் இரண்டு கண்களுக்கும் காலை, மாலை என ஒன்பது நாட்கள் விட்டு வந்தால் மாலைக் கண் நோய் குணமாகும்.

குரல் மாற்றத்தை சரி செய்ய: கடுக்காய் தோல் சிறு துண்டு எடுத்து வாயில் போட்டு அடக்கிக்கொள்ள வேண்டும். ஊறிய உமிழ் நீரை விழுங்கி விடவும்.

விக்கல் குணமாக: நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து தேன் கலந்து சாப்பிட்டால் விக்கல் குணமாகும்.
தொண்டைப் புண் ஆற: வேப்பம் பூவை கொதிநீரில் போட்டு அதன் ஆவியை தொண்டையில் படும்படி செய்தால் தொண்டை புண் ஆறும்.

தொண்டை கரகரப்பு குணமாக: சுக்கு, பால், மிளகு, திப்பிலி, ஏலரிசி வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு குணமாகும்.

வாய் நாற்றம் போக: சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆற வைத்து ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும். பல்லும் உறுதியாகும்.
தேங்காய் பாலுடன் தேன் கலந்து குடித்தால் வாய்ப்புண் குணமாகும்.
ஈறுகளில் இரத்தக் கசிவு குணமாக: இலந்தை மரத்தின் கொழுந்துகளை பறித்து நீரில் காய்ச்சி சிறிது உப்பு சேர்த்து அந்நீரை வாய் கொப்பளிக்க ஈறுகளில் இரத்தக் கசிவு குணமாகும்.

பல் ஆட்டம் நிற்க: வாழை மர பட்டையை கரியாக்கி பொடி செய்து பல் தேய்த்து வர பல் ஆட்டம் குணமாகும்.

குரல் இனிமை பெற: முற்றிய மாவிலை 4 ஐ 200 மி.லி; நீரில்போட்டு கொதிக்க வைத்துக் குடிக்க குரல் இனிமை பெறும்.

காது குடைச்சல் குணமாக: ஊமைத்தன் பூவை பிழிந்து சாறு எடுத்து இரு துளிகள் காதில் விட்டால் காது வலி குணமாகும்.
காது அடைப்பை நீக்க: தூதுவளை சாறு இரண்டு சொட்டு காதில் விட்டு வர காது அடைப்பு நீங்கும்.

காதில் சீழ் வடிதல் நீங்க: நாயுறுவி செடி இலை இடித்து சாறு எடுத்து 2 சொட்டு காதில் விட சீழ்வடிதல் குணமாகும்.

உடலில் உள்ள விஷம் இறங்க: வெற்றிலையும், மிளகும் சேர்த்து அரைத்து 2கிராம் உட்கொள்ள விஷங்கள் முறியும்.
உடல் பருமன் குறைக்க: பொன்னாவரை கீரையின் விதை அடிக்கடி சமைத்து சாப்பிட்டால் உடலில் அதிகளவு வியர்வை உண்டாகி அதன் மூலம் நீர் மலம், சிறுநீர் வழியாகவும், வயிற்றுக் கடுப்பு மூலமாகவும் வெளிப்படும். உடல் பருமன் குறையும்.

வயிற்றுப் பூச்சிகள் ஒழிய: பாகற்காயின் விதையை அரைத்து பாலுடன் கலந்து அருந்தி வர வயிற்றுப் பூச்சிகள், புழுக்கள் ஒழியும்.
சீதபேதி குணமாக: கசகசாவை வறுத்து தூள் செய்து நாட்டு சர்க்கரை சேர்த்து காலை, மாலை சாப்பிட்டால் சீதபேதி குணமாகும்.

பசி உண்டாக: சீரகத்தை பொன் வறுவலாக வறுத்து பொடி செய்து சூரணமாக பனை வெல்லத்துடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பசி உண்டாகும்.

ஞாபகசக்தி வளர: வல்லாரை 150 கிராம் வசம்பு 15 கிராம் பவுடராக்கி தேனில் கலந்து சாப்பிட்டால் ஞாபக சக்தி பெருகும்.
அலுப்பு தீர: மிளகை நெய்யில் வறுத்து தூளாக்கி வெல்லம், நெய் சேர்த்து லேகியம் போல் கிளறி 5 கிராம் அளவு சாப்பிட்டு வர அலுப்பு தீரும்.
நல்ல தூக்கம் வர: சீரகத்தை வறுத்து பொடி செய்து வாழைப்பழத்துடன் சாப்பிட்டால் நித்திரை வரும்.

குளிர் காய்ச்சல் நீங்க: நீலத் துளசிச் சாற்றை 2 தேக்கரண்டி அளவுக்கு வெந்நீரில் கலந்து 3 மணி நேரத்திற்கு ஒருமுறை அருந்தினால் குளிர் காய்ச்சல் குணமாகிவிடும்
http://pettagum.blogspot.in/2014/06/blog-post_1061.html

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

Friday, May 13, 2016

உங்கள் ANTIVIRUS சரியாக வேலை செய்கிறதா!!

வழிமுறை :
1.  start ஐ click செய்யுங்கள் .
2.பிறகு notepad ஐ open செய்யுங்கள்.
3.பிறகு கீழே உள்ள code களை notepad இல் paste அல்லது  type செய்யுங்கள்  
code.
X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*
4.பிறகு அந்த notepad file ஐ with the name fakevirus.exe என்ற பெயரில் save செய்யுங்கள் .
save செய்த file உடனடியாக delete ஆகினால் , உங்கள் antivirus நன்றாக வேலை செய்கிறது என்று அர்த்தம் . இந்த முறை அமெரிக்கன் university இனால் கொடுக்கப்பட்ட ஒரு முறை


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

Wednesday, May 11, 2016

காட்டன் டிரெஸ் டிப்ஸ்


புதிய காட்டன் புடவையை முதல் முறை துவைக்கும் முன்னர், ஒரு பக்கெட் தண்ணீரில் ஒரு கை கல் உப்பு சேர்த்து, அதில் புடவையை பதினைந்து நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். இதனால் புடவையில் சாயம் போவது, நிறம் மங்குவது போன்ற பிரச்னை இருக்காது.

காட்டன் புடவைகளை, ஒவ்வொரு முறையும் துவைத்த பின்னர், நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும் புங்கன்கொட்டைகளை, தண்ணீரில் ஊறவைத்து, இந்தத் தண்ணீரில் காட்டன் புடவைகளை முக்கி எடுத்தால் புடவை கண்டிஷனர் போட்டதுபோல், ஃபிரெஷ்ஷாக இருக்கும்.

காட்டன் புடவைகள் நிறம் மங்காமல் இருக்க, கட்டாயம் நிழலில்தான் உலர்த்த வேண்டும். உலர்ந்ததும் கையுடன் அயர்ன் பண்ணிவிட்டால், புடவையின் ஓரங்களின் ஏற்படக்கூடிய நிரந்தர சுருக்கத்தை தடுக்கலாம்.

கடைகளில் கிடைக்கும், திரவ நிலையில் இருக்கக் கூடிய புடவைக் கஞ்சியை, பக்கெட் நீரில் தேவையான அளவில் ஊற்றி, அதில் காட்டன் புடவையை முக்கி எடுத்து உலர்த்தினால், புடவை தொய்ந்து போகாமல், நன்கு முடமுடப்பாக இருக்கும்.

புடவைக் கஞ்சியை வீட்டிலேயே தயாரித்துக்கொள்ளலாம். ஒரு டீஸ்பூன் சோள மாவுக்கு, இரண்டு கப் தண்ணீர் எனும் விகிதத்தில், இரண்டையும் கலந்து ஒரு பாட்டிலில் ஊற்றி, ஃப்ரிட்ஜில் வைத்துக்கொண்டு தேவையானபோது உபயோகிக்கலாம்.
http://pettagum.blogspot.in/2014/07/blog-post_9684.html


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

Saturday, May 7, 2016

செல்போன், ஏ.டி.எம்., கிரெடிட் கார்டு, இன்டர்நெட்.... எங்கேயும் எப்போதும் உஷார் உஷார்..!

'மக்கள் கூடும் இடங்களில் குற்றங்கள் நடைபெற அதிக வாய்ப்பிருக்கிறது' என்றபடி காவல்துறையைக் குவித்தது... 'திருடர்கள் ஜாக்கிரதை' என்று புகைப்படங்களை ஒட்டியது... எல்லாம் அந்தக் காலம். வீட்டில் இருந்தபடியே லேப்டாப், செல்போன் இவற்றைக் கொண்டே உலகின் எந்த மூலையிலும் கொள்ளையடிக்க முடியும்... பற்பல குற்றங்களை அரங்கேற்ற முடியும் என்பது இந்தக் காலம். எல்லாம், 'டெக்னாலஜி பகவான்' கடைக்கண் பார்வையால் ஏற்பட்டிருக்கும் 'வளர்ச்சியே!'

'நீங்கள், ஒரு ஷாப்பிங் மால் அல்லது திருவிழா கூட்டத்தில் நிற்கும்போது, உங்களுக்குத் தெரியாமலேயே உங்களுடைய மொபைல், கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு ஆகியவற்றில் இருக்கும் தகவல்கள் மொத்தத்தையும் திருடி, அதை வைத்தே ஒட்டுமொத்தமாக நொடிகளில் உங்களை மொட்டையடிக்க முடியும்' என்று சொன்னால், அதிர்ச்சியாவீர்கள்தானே! ஆனால், இதுதான் உண்மை!
''ஆம்... இவன்தான் குற்றவாளி என்று அறிந்துகொள்ளக்கூட முடியாதபடி, நம் அருகிலோ, பக்கத்து வீட்டிலோ, பக்கத்து ஊரிலோ, வேறு நாட்டிலோ உலாவும் இந்த 'டெக் குற்றவாளிகள்', மிகவும் சிக்கலானவர்கள். இவர்களை நெருங்குவதுகூட பெரும்பாலும் கடினமே! ஆக, தொழில்நுட்ப வளர்ச்சி நம்முடைய வேலைகளை மட்டும் சுலபமாக்கவில்லை... திருடர்களின் வேலையையும்தான்! ஆக, மிகுந்த கவனத்துடனும், முன்னெச்சரிக்கையுடனும் இருப்பதே, அவர்களிடமிருந்து நம்மையும், நம் பணம் மற்றும் பொருட்களையும் தற்காத்துக்கொள்ள இருக்கும் ஒரே வழி'' என்கிறார், சென்னையைச் சேர்ந்த 'சைபர் செக்யூரிட்டி' அமைப்பின் நிறுவனர் ராமமூர்த்தி.

செல்போன், ஏ.டி.எம் கார்டு, கிரெடிட் கார்டு, இன்டர்நெட் போன்றவற்றில் நாம் கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் பற்றி விரிவாகவே பேசினார், ராமமூர்த்தி.

செல்போன் இணைப்பு...  மக்கள்தொகையைவிட அதிகம்!
''இந்தியாவின் மக்கள்தொகை இன்று 120 கோடிக்கு மேல். இந்த ஆண்டு இறுதிக்குள் செல்போன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 120 கோடியைவிட அதிகமாகக் கூடும் என்கிறது ஒரு தகவல். அந்தளவுக்கு இன்று அலைபேசி இணைப்புகள் மிகச்சுலபமாகக் கிடைக்கின்றன. ஆக, 110 ரூபாய் முதலீட்டில் ஒரு சிம் வாங்கிவிட்டால் போதும்... ஏன், இலவச சிம் கார்டுகளும்கூட வந்துவிட்டன. இவற்றைப் பயன்படுத்தி செய்யவேண்டிய குற்றப் பணிகளைச் செய்துவிட்டு, அந்த எண்ணைத் தூக்கி எறிந்துவிடலாம். சரியான தகவல்கள் பெறாமல் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு இணைப்புகளை வழங்கும் அலைபேசி நிறுவனங்களால், இத்தகைய குற்றவாளிகளைக் கண்டறிவது சாத்தியமில்லாமல் போகிறது. இதுவே சில வெளிநாடுகளில், குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை, வாடிக்கையாளர்கள் பற்றிய தகவல்களை உறுதிபடுத்திக்கொண்டே இருப்பார்கள்.

ஏமாற்று வேலைகள் பலவிதம்!
நம்மில் பலரும், 'நாங்க டுபாக்கூர்டெல் நெட்வொர்க்ல இருந்து பேசுறோம். உங்க அட்ரஸ், நேம் கன்ஃபர்ம் பண்ணணும்... ப்ளீஸ் சொல்லுங்க' என்கிற ரீதியில் வரும் அலைபேசி அழைப்புகளைக் கடந்திருப்போம். உண்மையில் அலைபேசி நிறுவனங்களிடம் நம்மைப் பற்றிய தகவல்கள் ஏற்கெனவே இருக்கும் என்பதால், அவர்கள் நம்மிடம் கேட்க மாட்டார்கள். நம்மைப் பற்றிய விவரங்களை அவர்களே சொல்லி, 'சரியா?' என்றுதான் கேட்பார்கள். எனவே, உங்களைப் பற்றிய தகவல்கள் சொல்லுங்கள் என்று அழைப்பு வந்தால், துண்டித்துவிடுங்கள். உங்கள் பெயர், முகவரியைப் பெற்று, மோசடி வேலையில் இறங்கக்கூடும்.

என்னென்ன குற்றங்கள்?
சரி, நம்முடைய அலைபேசி எண் மற்றும் நம்மைப் பற்றிய விவரங்களை வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும்?
ஒருவர் 10 ஆயிரம் தொலைபேசி எண்கள், சம்பந்தப்பட்டவர்களின் பெயர், முகவரி, வங்கிக் கணக்கு அனைத்து விவரங்களையும் பல குறுக்கு வழிகள் மூலமாகச் சேமித்து வைத்திருக்கிறார் என்றால், அவற்றை க்ரைம் மூளைகொண்ட ஒரு குழுவுக்கு விற்பனை செய்யலாம். அந்தக் குழு, பணக் கொள்ளையில் இருந்து குழந்தைகள் கடத்தல் வரை அந்த விவரங்களை வைத்தே திட்டங்களைத் தீட்டலாம். அல்லது, நம்முடைய பெயர் மற்றும் முகவரியில் ஒரு குற்றவாளி தனக்குத் தேவையான அலைபேசி எண் வாங்கவோ, வங்கிக் கணக்கு தொடங்கவோ முடியும்.
விளம்பர 'எஸ்.எம்.எஸ்'கள் அனுப்பும் ஏஜென்ஸிகளுக்கு, நம் பெயரும் அலைபேசி எண்களும் தரப்பட, அவர்களின் தொல்லை நம்மை துரத்திக்கொண்டே இருக்கும். 'வீட்டிலிருந்தே சம்பாதிக்கும் வேலை' என்று வரும் ஒரு விளம்பர 'எஸ்.எம்.எஸ்'ஸை நம்பி அவர்கள் செல்லும் முகவரிக்குச் செல்லும் நபர்களிடம் 'முன் பணமா 1,000 கட்டுங்க' என்று வசூலித்துக்கொண்டு, கம்பி நீட்டுவதில் தொடங்கி, நம் எண்ணுக்கு வரும் மோசடி 'எஸ்.எம்.எஸ்'கள் பல ரகம்.  

'பரிசு விழுந்திருக்கு!'
'உங்களுக்கு இலவசமாக 10 லட்ச ரூபாய்க்கு இன்ஷூரன்ஸ் கிடைத்திருக்கிறது', 'உங்கள் அலைபேசி எண் 2,500 டாலர் பரிசுத் தொகையைப் பெற்றுள்ளது', 'நான் நைஜீரிய நாட்டைச் சேர்ந்தவன். எங்கள் குடும்பத்தில் அனைவரும் ஒரு விபத்தில் இறந்துவிட்டார்கள். அதனால், 2.5 லட்சம் அமெரிக்க டாலர் (சுமார் ஒன்றரை கோடி ரூபாய்) மதிப்புள்ள எங்களது சொத்தை உடனடியாக வேறொருவர் வங்கிக் கணக்குக்கு மாற்ற வேண்டும். இல்லையென்றால், அது யாருக்கும் கிடைக்காமல் போய்விடும். அதனால் உடனடியாக உங்களது வங்கிக் கணக்குக்கு மாற்றுகிறேன். இந்தப் பணத்தை வைத்து, பொதுச்சேவையாற்றலாம். இதற்கான சேவைக் கட்டணமாக 500 டாலர் (30 ஆயிரம் ரூபாய்) மட்டும் நீங்கள் அனுப்பி வைத்தால் போதும். வருகிற மொத்தப் பணத்தில் பாதியை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்' என்றெல்லாம் ஆசையைத் தூண்டும் அழைப்புகளும், 'எஸ்.எம்.எஸ்'களும் இப்போது அதிகம் உலாவுகின்றன! இவற்றைஎல்லாம் புறக்கணியுங்கள். இல்லாவிட்டால், உங்கள் வங்கிக் கணக்கு எண் வரை கேட்டு வாங்கி, உங்களை மொட்டைஅடித்துவிடுவார்கள்.

தகவல் கொள்ளை!
நம் செல்போன்களில் உள்ள தகவல்களை நாம் அறியாமலேயே ஸ்கேன் செய்யும் வசதிகொண்ட 'ஸ்கேனர்'கள் இன்றைக்கு வந்துவிட்டன. 10 ஆயிரம் ரூபாய் விலையிலேயே இவை கிடைக்கின்றன. ஷாப்பிங் மால், திரையரங்கம், விழாக்கள் என மக்கள் கூடும் இடங்களில் சதிகாரர்கள் நம் அருகில் நின்று, அந்த ஸ்கேனர் மூலமாக நம் செல்போன்களில் உள்ள தகவல்களை ஸ்கேன் செய்துவிடுவார்கள். சிலர் அலைபேசியில் வங்கிக் கணக்கு எண், ஏ.டி.எம் பின் நம்பர் முதற்கொண்டு சேமித்து வைத்திருப்பார்கள். இவையெல்லாம் சதிகாரர்களுக்கு கிடைத்தால்... அவர்களுக்கு கொண்டாட்டம்தானே! செல்போனில் இருக்கும் தகவல்கள், புகைப்படங்களைத் திருடி எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்துவார்கள். வங்கிக் கணக்கு தகவல்களை வைத்து, பணத்தைக் கொள்ளையடிப்பார்கள். எனவே, ஷாப்பிங் செல்லும்போது எடுத்துச் செல்லும் ஏ.டி.எம். கார்டுக்குரிய வங்கிக் கணக்கில் தேவையான அளவு பணத்தை மட்டுமே வைத்திருப்பதுதான் பாதுகாப்பு.

எந்தவொரு சதிகாரருக்கும் நிச்சயம் உதவி செய்யக்கூடிய மறைமுக சதிகாரர்கள் இருப்பார்கள். அப்படித்தான் நம் பண விவரங்கள் முதல் ஏ.டி.எம் பின் நம்பர் வரை குற்றவாளிகளின் கைக்குக் கிடைக்க, நாம் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் பணியாளர்களே சமயங்களில் காரணமாகிறார்கள். ஒருவேளை அத்தகைய பணியாளரை வங்கி மேலதிகாரி கண்டுபிடித்துவிட்டாலும், அதிகபட்சமாக வேலையை விட்டு நீக்குவார்கள். ஏனென்றால், அவர் செய்த தவறு வெளியில் தெரிந்துவிட்டால், வங்கியின் பெயர் கெட்டுவிடும். வாடிக்கையாளர்கள் குறைந்துவிடுவார்கள் என்பதுதான். பணியாளரும் வேலை பறிபோனதை ஒரு பொருட்டாகக் கொள்ளாமல், தன் சதிவேலையை வேறொரு வங்கியில் சென்று தொடர்வார்.

இதற்கெல்லாம் என்னதான் முடிவு?!
இதுபோன்று தொழில்நுட்பக் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களில் 99.9 சதவிகிதம் பேர் புகார் கொடுப்பதில்லை. அப்படியே புகார் கொடுக்கச் செல்லும் 0.1 சதவிகிதம் பேரின் புகார்களை அவ்வளவு சீக்கிரத்தில் காவல் நிலையங்களும் ஏற்பதில்லை. அப்படியே ஏற்றாலும் பெரும்பாலும் நடவடிக்கைகள் இருப்பதில்லை. காரணம், டெக் குற்றங்களை கண்டறிவதற்கான போதிய வசதிகள் இல்லாமை. இதுவே குற்றவாளிகள் தொடர்ந்து குற்றங்கள் செய்ய தூண்டுகோலாக இருக்கிறது என்று சொல்லலாம்'' என்று தெள்ளத்தெளிவாக எடுத்து வைத்த ராமமூர்த்தி,
''இதுகுறித்தெல்லாம் எங்கள் அமைப்பு மூலமாக அரசாங்கத்திடம் பலமுறை வலியுறுத்தியிருக்கிறோம். இதுவரையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. அலைபேசி எண் முதல் வங்கிக் கணக்கு வரை ஒருவரின் விவரங்கள் திருடப்படுவதைத் தடுக்கும் 'டேட்டா பிரைவசி ஆக்ட்' என்பதை அமெரிக்கா போன்ற நாடுகள் நடைமுறைப்படுத்தியிருக்கின்றன. அதனால் அங்கே அவ்வளவாக இதுபோன்ற குற்றங்கள் நடப்பதில்லை. இதை நம் நாட்டிலும் நடைமுறைப்படுத்தினால், டெக் குற்றங்கள் குறைய வாய்ப்பிருக்கிறது. ஆனால், இந்த சட்டங்கள் எல்லாம் வருவதற்குள் நாம் கொள்ளை போகாமலிருப்பது... நம் கைகளில்தான் இருக்கிறது'' என்று அக்கறையுடன் சொன்னார்.
ஆம், நம் பாதுகாப்பு, நம் கைகளில் என்பதுதானே எக்காலத்திலும் உண்மை!

பாடம் சொல்லும் குறும்படம்!
தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி எப்படியெல்லாம் ஏமாற்று வேலைகளை செய்யலாம் என்பதை சொல்லக்கூடிய குறும்படம், 'நான்காவது குற்றத் தருணம்'. ராபி இயக்கியுள்ள இப்படம், 14 நிமிடங்கள் ஓடக்கூடியது. இதில் நண்பர்கள் இருவர் 'ஏ.டி.எம்'மில் இருந்து பணம் எடுத்து வெளியே வரும் நபரிடமிருந்து பறித்துக்கொண்டு ஓடுவதை தொழிலாக வைத்துள்ளனர். ஒரு கட்டத்தில், 'இதெல்லாம் நமக்குச் சரிப்பட்டு வராது. எங்கயாவது ரூமுக்குள்ளயே உட்கார்ந்துட்டு திருடுற மாதிரி ஐடியா இருந்தா சொல்லு' என்று ஒரு நண்பன் கேட்க, 'நான் ஒரு பொய்யான வெப்சைட் உருவாக்கியிருக்கேன். அதுல பல எம்.என்.சி கம்பெனிகளோட லோகோ டீடெய்ல்ஸ் எல்லாமே போட்டிருக்கேன். வேலை வேணும்னு இன்டர்நெட்ல தேடுறவங்க நம்ம பக்கத்துக்கு வர்ற மாதிரியும், ரிஜிஸ்டர் பண்றதுக்கு ஒருத்தருக்கு 200 ரூபாயும் நம்ம அக்கவுன்ட்ல கிரெடிட் ஆகுற மாதிரி புரோகிராம் பண்ணிருக்கேன்' என்கிறான் மற்றொரு நண்பன். தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி எப்படிஎல்லாம் கொள்ளையடிக்கலாம் என்பதை எச்சரிக்கும்விதமாகச் சொல்லியிருக்கும் இந்தப் படத்தைப் பார்க்க... https://www.youtube.com/watch?v=R1dhNZGtF34 என்ற லிங்கை டைப் செய்யுங்கள்.

லக்கி டிரா... உஷார்!
மெயில் அனுப்பும்போது பிசிசி (bcc) என்கிற வகையில் அனுப்பினால், ஒருவரின் ஐ.டி மற்றவருக்குத் தெரியாது. டூ (to) மற்றும் சிசி (cc) மூலமாக அனுப்பினால், அனைவருக்கும் மற்றவர்களின் மெயில் ஐ.டி தெரிந்துவிடும். அதை அவர்கள் தங்களின் நட்பு வட்டத்துக்கு ஃபார்வர்டு செய்யும்போது, முகம் தெரியாத பலரின் பார்வைக்கும் அனைவரின் 'ஐ.டி'யும் சென்று சேரும். இது தேவையற்ற பிரச்னைகளை உருவாக்க வாய்ப்பு உண்டு.
அலைபேசியில் உள்ள 'ப்ளூ டூத்' வசதியை தேவைப்படும்போது மட்டும் ஆன் செய்து, பின் மறக்காமல் 'ஆஃப்' செய்துவிட வேண்டும். மறந்தால், அனைத்து விவரங்களும் மற்றவர்களின் அலைபேசிகளுக்கு தானாகவே செல்லக்கூடும்.
டெபிட்/கிரெடிட் கார்டு ஆகியவற்றின் பின்பக்கத்தில், அவற்றின் பின் நம்பரை எழுதாதீர்கள். பெட்ரோல் பங்க், கடைகள் என்று எங்கு டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினாலும், கார்டை பணியாளரிடம் கொடுத்து, கையோடு திரும்பப் பெறுங்கள். ஏனெனில், டெபிட்/கிரெடிட் கார்டு தகவல்களைத் திருடும் ஸ்கேனர்கள் நிறைவே இருக்கின்றன.  
தியேட்டர், மால்கள், திருவிழாக்கள் என்று பல இடங்களிலும் நின்று கொண்டு, 'லக்கி டிரா... உங்கள் மொபைல் எண், இ-மெயில் ஐ.டி மட்டும் சொல்லுங்கள்' என்று கேட்டு சிலர் நின்று கொண்டிருப்பார்கள். அவர்கள் எல்லாம் பல்வேறு நிறுவனங்களின் சார்பில் இதைச் செய்து கொண்டிருப்பார்கள். என்றாலும், நீங்கள் அவர்களிடம் கொடுத்த தகவல்கள், அடுத்தவருக்குச் செல்லாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

வலைதளத்தை யார் வேண்டுமானாலும் உருவாக்கமுடியும் என்பது போலிகளுக்கு வசதியாக இருக்கிறது. 'வேலை வாங்கித் தருகிறோம்... கடன் தருகிறோம்... தொழில்கற்றுத் தருகிறோம்...' என்று எப்படி வேண்டுமானாலும் ஏமாற்று வேலைகளில் ஈடுபடமுடியும். உஷார்... உஷார்.
ஒரு வங்கி அல்லது ஏதாவது ஒரு நிறுவனத்தின் வலைதளம் போலவே போலியான வலைதளத்தை உருவாக்கி, நம்முடைய வங்கிக் கணக்கு உள்ளிட்ட விவரங்களை திருடும் 'ஃபிஷிங்' வேலைகளும் அதிகரித்துள்ளன. சம்பந்தப்பட்ட வலைதளத்துக்குள் நீங்கள் சென்றதுமே... முகவரி இருக்கும் பகுதியில் பூட்டு வடிவம் ஒன்று தோன்றுவதுடன், முகவரி மற்றும் அந்த பூட்டு இருக்கும் பகுதியின் பின்புலமானது பச்சை நிறத்துக்கு மாறியிருக்கும். இதை வைத்தே, ஒரிஜினல் என்று உறுதி செய்யலாம்.

டூப்ளிகேட் ஏ.டி.எம் மெஷின் அறிவீர்களா?!
இன்றைக்கு சந்துபொந்துகளில்கூட ஏ.டி.எம் மெஷின்கள் உள்ளன. அதில் சில, நாம் கேள்விப்படாத வங்கியின் பெயரில் இருக்கும். அவற்றில் டெபிட் கார்டு மூலம் பணம் எடுப்பது கூடாது. காரணம், ஒருவேளை அது மோசடி ஏ.டி.எம் ஆகவும் இருக்கக் கூடும். அதில் நம் டெபிட் கார்டை செருகினால், பணம் வரும், அல்லது மெஷினில் பணம் இல்லை என்கிற தகவல் வரும். ஆனால், அடுத்த 15 நிமிடங்களுக்குள், நம் கார்டை ஒருவித 'ஸ்கேனர்' மூலம் சதிகாரர்கள் ஸ்கேன் செய்து, டூப்ளிகேட் கார்டு உருவாக்கிவிடுவார்கள்.
நம் அக்கவுன்டில் உள்ள பணம் அத்தனையும் கொள்ளையடிக்கப்படும். ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு, காஷ்மீரில் நடந்த ஒரு பெரும் நிகழ்ச்சியின்போது, இத்தகைய ஏ.டி.எம் அமைக்கப்பட்டு, கொள்ளை நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது
http://pettagum.blogspot.in/2014/07/blog-post_4874.html

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

Thursday, May 5, 2016

ஓட்டுநர் உரிமம் பெற என்ன செய்ய வேண்டும்?

வாகன ஓட்டுநர் உரிமம் தொடர்பான சந்தேகங்களுக்கு பதில் அளிக்கிறார் நாமக்கல் வட்டார போக்குவரத்து அலுவலர் எஸ்.வேலுசாமி.
# வாகன ஓட்டுநர் உரிமம் பெற என்னென்ன சான்றுகள் தேவை?
இருப்பிடச் சான்றாக குடும்ப அட்டை, எல்.ஐ.சி. பாலிசி சான்று, வயதுச் சான்றாக பள்ளி மாற்றுச் சான்றிதழ் (டி.சி.) போன்ற அரசு வழங்கிய சான்றுகள், பாஸ்போர்ட் அளவில் 3 புகைப்படங்களுடன் பழகுநர் உரிமம் (எல்.எல்.ஆர்.) பெறுவதற்கு 'படிவம் 2'-ஐ பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
50 வயது பூர்த்தி அடைந்தவர்கள் மருத்துவச் சான்றிதழுடன் 'படிவம் 1'-ஐ பூர்த்தி செய்து வழங்க வேண்டும். மேலும், இரு சக்கர வாகன பழகுநர் உரிமம் பெற ரூ. 30-ம், அதனுடன் சேர்த்து நான்கு சக்கர வாகன பழகுநர் உரிமம் பெற ரூ. 60-ம் கட்டணமாக செலுத்த வேண்டும்.
# பழகுநர் உரிமம் பெற்று எத்தனை மாதங்களுக்குள் ஓட்டுநர் உரிமம் பெறலாம்?
பழகுநர் உரிமம் 6 மாதம் வரை செல்லுபடியாகும். பழகுநர் உரிமம் பெற்று, ஒரு மாதத்துக்கு பின்னரே ஓட்டுநர் உரிமம் பெற முடியும். ஒரு மாத கால இடைவெளி, வாகனங்களை நன்றாக ஓட்டிப் பழகுவதற்காக வழங்கப்படுகிறது. பழகுநர் உரிமம் பெறும்போது, வாகனத்தை ஓட்டிக் காட்டுவதோடு சாலை விதிகள் குறித்த கேள்விகளுக்கும் சரியான பதில் அளிக்க வேண்டும்.
# மாற்றுத் திறனாளிகள் ஓட்டுநர் உரிமம் பெறமுடியுமா?
மாற்றுத் திறனாளிகளின் உடல் சார்ந்த பிரச்சினைக்கு ஏற்ப அவர்கள் எளிதில் இயக்கும்படி வாகனம் வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும். நடக்க இயலாத மாற்றுத் திறனாளிகள் இரு சக்கர வாகனங்களை இயக்க கூடுதல் சக்கரங்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.
காது கேளாத, வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளிகள் பின்னால் வரும் வாகனங்களின் ஒலியைக் கேட்க இயலாது என்பதால் அவர்களது வாகனத்தின் டேஷ் போர்டு சிக்னல் காண்பிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும். அந்த வாகனம் சம்பந்தப்பட்ட மாற்றுத் திறனாளி பெயரில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் மாற்றுத் திறனாளிகள் வாகன ஓட்டுநர் உரிமம் பெறலாம்.
# ஓட்டுநர் உரிமத்தின் கால அளவு எத்தனை ஆண்டுகள்?
அது வயதை பொருத்தது. ஒருவர் 20 வயதில் ஓட்டுநர் உரிமம் பெற்றால் அவருக்கு 40 வயது வரை ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும். பின்னர், புதுப்பிக்க 20 ஆண்டு கால அளவு வழங்கப்படும். 39 வயதில் ஒருவர் ஓட்டுநர் உரிமம் பெற்றால் ஓர் ஆண்டு வரை- அதாவது 40 வயது வரை மட்டுமே உரிமம் வழங்கப்படும். 40 வயதுக்கு பின்பு ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒருமுறை ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்க வேண்டும். அதற்கு ரூ.250 கட்டணம்.
http://pettagum.blogspot.in/2014/07/blog-post_144.html


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

Tuesday, May 3, 2016

நன்மைகளை அழிக்கும் நெருப்பு!

பொறாமை' மனிதனை அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்லும் ஒரு கொடிய மன வியாதியாகும். இது நிம்மதியைக் கெடுத்துவிடும். அமைதியைக் குலைத்துவிடும். பொறாமையினால் சமூகம் பல அவலங்களை அனுபவித்து வருகிறது. எனவேதான் இஸ்லாம் பொறாமை குணத்தை வன்மையாகக் கண்டிக்கின்றது.

பொறாமைக்காரன் பிறரது இன்பத்தைக் கண்டு மனம் புழுங்குவான். பிறர் துன்பப்படும்போது இவன் இன்பமடைவான்.

""உங்களுக்கு ஏதேனும் நன்மை ஏற்பட்டால் அது அவர்களுக்கு துன்பத்தை உண்டாக்குகிறது. உங்களுக்கு தீமை ஏற்பட்டால் அதனால் அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்" (அல்குர்ஆன் 3:119-120) என இறைமறை பொறாமைக்காரர்கள் பற்றிக் குறிப்பிடுகின்றது.

இவ்வுலகில் இறைவன் ஒரு சிலருக்கு வழங்கியுள்ள செல்வம், கல்வி, அழகு, ஆற்றல் போன்றவற்றை தான் பெறவில்லையே என்ற தாழ்வு மனப்பான்மையினாலும், ஆற்றாமை உணர்வினாலும் உண்டாவதுதான் பொறாமை உணர்வாகும். சுருக்கமாகச் சொன்னால் ஒரு மனிதனுக்கு இறைவன் வழங்கிய அருட்கொடைகளைப் பார்த்து அது அவனிடம் இல்லாமல் போக வேண்டும் என்று நினைப்பதே பொறாமையாகும். இன்னும் பொறாமைக்காரன் தனக்குக் கிடைக்காதது வேறு எவருக்கும் கிடைக்கக்கூடாது எனும் கீழ்த்தரமான உணர்வுடன் செயல்படுவான்.

""கோபமும், பொறாமையும் மார்க்கத்தைப் பாழ்படுத்தும் நாசினிகள்" என்றனர் நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள்.

பொறாமையும், ஈமான் என்ற இறை நம்பிக்கையும் முற்றிலும் மாறுபட்ட இரு அம்சங்களாகும். பொறாமை, உள்ளத்தை ஆக்ரமிக்க ஆக்ரமிக்க ஈமான் என்ற இறை நம்பிக்கை அவன் உள்ளத்தை விட்டு விலகிக் கொண்டே இருக்கும். அதனால்தான் நபி (ஸல்) அவர்கள், ""ஒரு அடியானின் உள்ளத்தில் பொறாமையும், ஈமானும் ஒன்று சேராது" என்று குறிப்பிட்டார்கள்.
பொறாமைக்காரன் எப்போதும் எரிச்சலுடன் காணப்படுவான். அவன் உள்ளத்தில் இரக்க குணம் குறையும், பாசம் நீங்கும். எவர் எதைப் பேசினாலும் எரிந்து விழுவான். கோபத்தையும் மனக்கொதிப்பையும் அடக்க முடியாமல் வீட்டில் மனைவி, குழந்தைகளுடன் கூட கடுமையாக நடந்து கொள்வான்.

இதனால் தான் பொறாமைக்காரர்களைப் பார்த்து "" உங்கள் கோபத்தாலேயே நீங்கள் நாசமாகுங்கள்" என்று கூறுமாறு அல்லாஹ் குர்ஆனில் கூறுகின்றான்.
பிறர் மீது நாம் கொள்கின்ற பகைமையுணர்வு, கோபம், கர்வம், தலைக்கனம், போட்டி மனப்பான்மை மற்றும் மிதமிஞ்சிய சுயநலன் போன்றவையும், மனிதனின் உள்ளத்தில் பொறாமையைத் தோற்றுவிக்கின்றன. எனவேதான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ""கோபமும், குரோதமும், பொறாமையும் அழிந்து போகட்டும்" என்றார்.

பொறாமையால் சமூகத்தில் பாவங்கள் பரவுகின்றன. பொறாமைக்காரன் தனது எதிரியைப் பற்றிப் பொய் சொல்வான். அவனைப் பற்றி துருவித் துருவி ஆராய்வான். அவதூறுகளைப் பரப்புவான். புறம் பேசுவான். ஏன்? கொலைகூட செய்ய முயற்சிப்பான். இவ்வாறு பொறாமை ஒரு மனிதனிடம் எண்ணற்ற பாவங்களை உருவாக்குகின்றது. காலப்போக்கில் அவன் மிருகம் போன்றே நடக்க ஆரம்பித்துவிடுவான். எனவேதான் அல்லாஹ் தன் அருள்மறையில் ""பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும்போது ஏற்படும் தீங்கை விட்டும் பாதுகாப்பாயாக" (அல்குர்ஆன்:113:5) என தன்னிடம் பாதுகாவல் தேடுமாறு பணிக்கின்றான்.

மனிதனை பாவங்களின் உறைவிடமாக மிருகமாக மாற்றிவிடும் பொறாமை குணத்தை ஒழித்துவிட வேண்டும். ""பொறாமை குணம் நாம் செய்த நன்மைகளை எல்லாம் அழிக்கும் நெருப்பு போன்றது" என்றனர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். எனவே மனிதனின் அழிவுக்கு காரணமான, நமது நல்லறங்களை எல்லாம் நாசமாக்குகின்ற பொறாமை என்ற தீய குணத்திலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக்கொள்வோமாக! இறைவன் அதற்கு அருள்புரிவானாக!

http://pettagum.blogspot.in/2014/07/blog-post_4034.html

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

Sunday, May 1, 2016

அண்ட்ராய்டு குறியீடுகள்


என்ன பின்வருமாறு அண்ட்ராய்டு இயங்குதளமானது பொதுவாக இரகசிய குறியீடுகள் சில ஒரு தொகுப்பு ஆகும். இந்த அனைத்து தொலைபேசி எண்சுழற்றி வழியாக நுழைந்து வேண்டும் (காட்டப்பட்டுள்ளது போல் ஒரு காட்சியில் குத்துவேன்). மிகவும் மறைக்கப்பட்ட மெனுக்கள் உற்பத்தியாளர் குறிப்பிட்ட இருப்பதால், அங்கு அவர்கள் அனைத்து அண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் முழுவதும் வேலை கிடைக்கும் என்று எந்த உத்தரவாதமும் இல்லை, ஆனால் நீங்கள் உங்கள் சாம்சங், HTC, மோட்டோரோலா, சோனி மற்றும் பிற சாதனங்கள் இருப்பினும் அவர்களை வெளியே முயற்சி செய்யலாம். இந்த சில உங்கள் சாதனத்தின் கட்டமைப்பு தீவிர மாற்றங்கள் ஏற்படுத்தும், அதனால் நீங்கள் முழுமையாக புரியவில்லை என்று ஏதாவது கொண்டு விளையாட கூடாது என்று, எனினும், அறிவுறுத்தப்படுகிறார்கள் வேண்டும்.


1.   *#06# – IMEI number
2.   *#0*# – Enter the service menu on newer phones like Galaxy S III
3.   *#*#4636#*#* – Phone information, usage statistics and battery
4.   *#*#34971539#*#* – Detailed camera information
5.   *#*#273282*255*663282*#*#* – Immediate backup of all media files
6.   *#*#197328640#*#* – Enable test mode for service
7.   *#*#232339#*#* – Wireless LAN tests
8.   *#*#0842#*#* – Backlight/vibration test
9.   *#*#2664#*#* – Test the touchscreen
10.  *#*#1111#*#* – FTA software version (1234 in the same code will give PDA and firmware version)
11.  *#12580*369# – Software and hardware info
12.  *#9090# – Diagnostic configuration
13.  *#872564# – USB logging control
14.  *#9900# – System dump mode
15.  *#301279# – HSDPA/HSUPA Control Menu
16.  *#7465625# – View phone lock status
17.  *#*#7780#*#* – Reset the /data partition to factory state
18.  *2767*3855# – Format device to factory state (will delete everything on phone)
19.  ##7764726 – Hidden service menu for Motorola Droid

Update x1: More codes!
1.   *#*#7594#*#* – Enable direct powering down of device once this code is entered
2.   *#*#273283*255*663282*#*#* – Make a quick backup of all the media files on your Android device
3.   *#*#232338#*#* – Shows Wi-Fi MAC address
4.   *#*#1472365#*#* – Perform a quick GPS test
5.   *#*#1575#*#* – For a more advanced GPS test
6.   *#*#0283#*#* – Perform a packet loopback test
7.   *#*#0*#*#* – Run an LCD display test
8.   *#*#0289#*#* – Run Audio test
9.   *#*#2663#*#* – Show device's touch-screen version
10.  *#*#0588#*#* – Perform a proximity sensor test
11.  *#*#3264#*#* – Show RAM version
12.  *#*#232331#*#* – Run Bluetooth test
13.  *#*#232337#*# – Show device's Bluetooth address
14.  *#*#7262626#*#* – Perform a field test
15.  *#*#8255#*#* – Monitor Google Talk service
16.  *#*#4986*2650468#*#* – Show Phone, Hardware, PDA, RF Call Date firmware info
17.  *#*#1234#*#* – Show PDA and Phone firmware info
18.  *#*#2222#*#* – Show FTA Hardware version
19.  *#*#44336#*#* – Show Build time and change list number
20.  *#*#8351#*#* – Enable voice dialling log mode, dial *#*#8350#*#* to disable it
21.  ##778 (+call) – Show EPST menu
Codes specific to HTC devices only:
1.   *#*#3424#*#* – Run HTC function test program
2.   *#*#4636#*#* – Show HTC info menu
3.   ##8626337# – Run VOCODER
4.   ##33284# – Perform field test
5.   *#*#8255#*#* – Launch Google Talk service monitor
6.   ##3424# – Run diagnostic mode
7.   ##3282# – Show EPST menu
8.   ##786# – Reverse Logistics Support
குறிப்பு: அனைத்து குறியீடுகள் ஒரு தொலைபேசி துணைபுரிகிறது. உங்கள் சொந்த ஆபத்து இந்த குறியீடுகள் முயற்சி. 
மேலும் தகவல் வருகை கொள்ளுங்கள்.
http://ilawasamenporul.blogspot.in/2014/08/android-mobile-hidden-secret-codes.html

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com