Tuesday, October 23, 2012

சமைக்க தெரியாத ஆண்கள் எளிதாக சமைக்க & அசத்த அற்புத வழிகள் (பெண்களும் முயற்சி செய்யலாம்)

சமைக்க தெரியாத ஆண்கள் எளிதாக சமைக்க & அசத்த அற்புத வழிகள் (பெண்களும் முயற்சி செய்யலாம்)

 

கணவரை அசத்தவிரும்பும் பெண்களும் (அப்படி ஒரு பெண் இருந்தால்) இதை பின்பற்றாலாம்.

 

இந்த காலத்தில் ஆண்களுக்கு எது தெரிதோ இல்லையோ கண்டிப்பாக  சமைக்க தெரிந்து இருக்க வேண்டும். இது பல சமயத்தில்  உபயோகமாக இருக்கும். கல்யாணம் ஆன மனைவி நல்லா சமைப்பா என்று மட்டும் கனவு காணாதீர்கள் இந்த காலப் பெண்கள் வாழ்க்கையில் நுழையாத ஒரு இடம் இருந்தால் அது கிச்சனாகதான் இருக்கும். இந்த காலப் பெண்களுக்கு இரண்டு மட்டும் நல்லா தெரியும் ஓன்று கணவர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று ஆர்டர் போடுவதும் இரண்டு உணவை எந்த  ஹோட்டலில் ஆர்டர் போடவேண்டுமென்றும் தெரியும்.

 

அதனால்தான் வருங்காலத்தில் ஆண்கள் கஷ்டப்படக் கூடாது என்று மிக எளிதாக எப்படி சமைக்கலாம் & அசத்தலாம் என்று இங்கு பார்ப்போம்.

 

முதலில் சாத வகைகள்

 

தண்ணியை கொதிக்க வைத்து அதில் அரிசியைப்போட்டு உப்பு  இல்லாமல் வடித்து கொட்டினால் அது வெறும் சாதம். அந்த சாதம் குழைந்து போனால்  அதில் மிளகு, இஞ்சி, மஞ்ச தூள் , மிளகாய் போட்டு ஒரு கலக்கு கலக்கி வைத்தால் அதுதாங்க வெண்பொங்கல் . ஆனால் இந்த மிளகு, இஞ்சி, மஞ்ச தூள் , மிளகாய்க்கு பதிலாக சர்க்கரைப்பாகு முந்திரிபருப்பு, நெய், உலர் திராட்சை போட்டு கிளறி இறக்கி வைத்தால் அதுதாங்க சர்க்கரைப் பொங்கலுங்க...

 

குழையாமல் வந்த வெள்ளை சாதத்தில் கொஞ்சம் புளியை கொதிக்க வைத்து அதில் கடலையும் காய்ந்த மிளகாயும் போட்டு கிளறினால் அதுதாங்க புளிசாதம்

 

புளிக்கு பதிலாக லெமன் ஜூஸ் ஊற்றி கிளறினால் அதுதாங்க லெமன் சாதம்.

 

குழையாமல் வந்த வெள்ளை சாதத்தில் சிக்கனை உப்பு உறைப்பு போட்டு வேகவைத்து கொஞ்சம் நெய் ஊற்றி ஒரு கிளறி கிளறிவைத்தால் அது சிக்கன் பிரியாணி சிக்கனுக்கு பதிலாக எந்த விலங்குகளை போட்டால் அந்த விலங்கு பிரியாணி என்று அழைக்கலாம்.

 

குழம்பு வகைகள் :

 

 துவரம் பருப்பு அல்லது பாசிப்பருப்பு போட்டு அதில் உங்களுக்கு பிடித்த காய்களை போட்டு சிறிது  மஞ்சள் போட்டு கொதிக்க வைத்து இறக்கி வைத்தால் அதுதாங்க சாம்பார்

 

மேலே சொன்ன முறையில் காய்கறியை மட்டும் போடாமல் நிறைய தண்ணிர் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கினால் அது பருப்பு ரசம். பருப்பை போடாமல் மிளகு சேர்த்து இறக்கினால் மிளகு ரசம், தக்காளி போட்டால் தக்காளி ரசம், லெமன் ஜுஸ் சேர்த்து லெமன் ரசம் அவ்வளவுதாங்க

 

புளிக்குழம்பு அல்லது வற்றல் குழம்பு

 

பருப்பு எதும் போடாமல் பூண்டு வெங்காயம் போட்டு  கொஞ்சம் புளி அதிகம் சேர்த்து  கொஞ்சம் கெட்டியாக வைத்தால் அதுதாங்க  புளிக்குழம்பு  அதில் கொஞ்சமாக சுண்டைக்காய்,அல்லது மிளகு தக்காளி போன்ற வத்தல் போட்டு கருக்கி கருப்பு நிறத்தில் வந்தால் அது வத்தல் குழம்பு.

 

அடுத்தாக நான் சொல்லித்தருவது பாயசம் காபி டீ போடும் முறை

 

தண்ணியையும் பாலையும் கொதிக்க வைத்து அதில் சுகர் சேர்த்து காபி பொடி போட்டால் காபி, டீ தூள் போட்டால் டீ. இந்த காபி டீ தூளுக்கு பதிலாக சுகர் சிறிது அதிகம் சேர்த்து அதில் சேமியா அல்லது துவரம் பருப்பு போட்டு இறக்கினால் அதுதாங்க பாயசம்

 

பாத்திங்களா மக்களே சமைப்பது எவ்வளவு எளிது ஆனால் இது பெரிய கம்பசூத்திரம் போல பொண்னுங்க அலட்டி பீலாவுடுறாங்களே அதுதாங்க தாங்க முடியல....... சரிவுடுங்க மக்கா நான் சொன்ன இந்த முறைகளை பயன்படுத்தி முதலில் உங்களுக்கு பிடிக்காதவர்களுக்கு அடிக்கடி சமைத்து  போட்டுபாருங்க அப்புறம் உங்களூக்கு பிடித்தவங்க வரும் போது அதுதானுங்க உங்க மனைவி வரும் போது அருமையாக சமைப்பீங்க

http://avargal-unmaigal.blogspot.in/2012/10/blog-post_21.html



--
*more articles click*
www.sahabudeen.com



No comments: