Saturday, December 15, 2012

பத்தே நிமிடத்தில் பல் வலி பறந்து போயிடுச்சு

பத்தே நிமிடத்தில் பல் வலி பறந்து போயிடுச்சு

 

சமீபத்தில் இயற்கை உணவு உலகம்(naturalfoodworld.com) தளத்தினை பார்வையிடும் போது கண்ணில் பட்ட ஒரு மருத்துவக் குறிப்பு இது. பல் வலி இருந்தால் இம் மருந்தினை உபயோகித்துப் பார்க்கலாமே! குணம் கிடைத்தால் மறவாமல் மேற்கூறிய தளத்துக்கு ஒரு பின்னூட்டம் அனுப்பி விடுங்கள்.

Engr.Sulthan

பத்தே நிமிடத்தில் பல் வலி பறந்து போயிடுச்சு!!குணமானவரின் சிறப்பு பேட்டி.

இரும்பை தங்கமாக்கலாம் , வானத்தில் மறையலாம் என்ற எந்த பெரியவிதமான சாதனைகளும் நம்மிடம் கிடையாது. மக்களுக்கு ஏற்படும் நோய்களை சித்தர்களின் வழியில் எளிதாக குணப்படுத்தலாம் வெறும் வாய்ப்பேச்சோடு நில்லாமல் ஆதாரப்பூர்வமாக பல உண்மைகளை உங்கள் முன் வைக்கிறோம்.
வெறும் மாயாஜால வேலைகளை செய்தவர்கள் அல்ல சித்தர்கள், மனித குலம் தழைக்க வேண்டிய பல அரிய மருத்துவ முறைகளை நமக்கு விட்டுச் சென்றிருக்கின்றனர், ஏதோ ஏட்டில் படித்தோம் நூலாசிரியரின் உரையை அப்படியே கொடுத்தோம் என்றில்லாமல் ஆய்வு செய்து வெளியீட வேண்டும்.

பல்வலி 10 நிமிடத்தில் நிவாரணம்

சில நாட்களுக்கு முன்னர் பல்வலிக்கு மருந்து கேட்டு தோழி ஒருவர் இமெயில் அனுப்பி இருந்தார் கூடவே தாம் பல சித்தமருந்துகளை பயன்படுத்திவிட்டேன் பலன் இல்லை உடனடியாக குணமாகும் படி மருந்து இருந்தால் சொல்லுங்கள் என்றார். அகத்தியரின் நூலில் இவரின் கேள்விக்கு பதில் இருக்கிறதா என்று பார்த்ததில் குருவின் அன்பால் மருந்து கிடைத்தது. உடனடியாக தோழிக்கு இமெயிலில் மருந்து பற்றி தெரியப்படுத்தினோம். அதிகாலை 3 மணிக்கு இமெயில் அனுப்பி இருந்தோம் சரியாக 6 மணிக்கு நமக்கு பதில் வந்தது. மருந்து பயன்படுத்திய 10 நிமிடத்தில் வலி நீங்கி உடனடி நிவாரணம் கிடைத்தது என்றார். அத்துடன் ஒரு அன்பான வேண்டுகோளையும் வைத்தார், தயவு செய்து பல்வலிக்கான மருந்தை இமெயில் அனுப்பி பெறக்கூடிய வண்ணம் வைக்க வேண்டாம், பல்வலி வந்தால் ஒருவர் உங்களுக்கு இமெயில் அனுப்பி அது கிடைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும் அதனால் தளத்தில் தெரியப்படுத்துங்கள் என்றார். இன்றும் பலரும் பல்வலியால் ( Pain Killer ) மாத்திரைகளை பயன்படுத்துவதை பார்த்திருப்போம். ஆங்கில மருந்தைவிட வேகமாக நிவாரணம் அளிக்க இயற்கை மருந்தைப் பற்றி சொல்கிறோம்.

எந்தப் பல்லில் வலி இருக்கிறதோ அந்தப்பகுதியில் வாயினுள் சர்க்கரை வைத்துவிட்டு, 18 மிளகை  நன்றாக அரைத்து (அல்லது பொடி செய்து) கால் டம்ளர் தண்ணீரில் விட்டு காய்ச்ச வேண்டும். காய்ச்சிய நீரை சிறிது நேரம் ஆற வைத்து விரல் சூடு தாங்கும் அளவிற்கு வந்ததும், வெளியே வலி இருக்கும் கன்னதின் பகுதியில் இந்த நீரால் நன்றாக தேய்க்க வேண்டும். சித்த மருந்தை சோதிப்பவர்கள் கூட இதை பயன்படுத்தி பார்த்து தாங்கள் அடைந்த பலனை மறக்காமல் தெரியப்படுத்துங்கள்.

சித்தர்களின் பல அரிய ஆராய்ச்சி விடயங்களை சோதித்து தெரிந்து கொள்ள இயற்கை மருத்துவர்கள் மற்றும் ஆங்கில மருத்துவர்கள் பணம் எதிர்பார்ப்பு இல்லாதவராக இருந்தால் தங்களைப்பற்றிய விபரங்களுடன் naturalf...@gmail.com என்ற இமெயில் முகவரியில் தொடர்பு கொண்டு சித்த ஆராய்ச்சியில் தங்களின் ஒத்துழைப்பை கொடுங்கள்.

தகவல்: இயற்கை உணவு உலகம்(naturalfoodworld.wordpress.com)

Engr.Sulthan

 


--
*more articles click*
www.sahabudeen.com



No comments: