Sunday, March 11, 2012

குழந்தைப் பிறந்தவுடன் என்ன செய்ய வேண்டும்?




குழந்தை பிறந்த 1/2 மணிக்குள் தாய்ப்பாலை தரவும்.

தாயுடன் குழந்தையை மிக நெருக்கமாக வைத்திருக்கவும்.

குழந்தைக்கு தேவையான உஷ்ணத்தை பாதுகாத்தல்.

அறையின் உஷ்ணத்தை குழந்தைக்கு தகுந்தபடி வைத்திருத்தல்.

குழந்தை பிறந்தவுடன் தடுப்பூசி போட ஆரம்பித்தல்.

குழந்தையை வியாதியஸ்தரும், மற்றவர்களும் அடிக்கடி தூக்காமல் பார்த்துக் கொள்ளவும்.

குழந்தைக்கு பசி எடுக்கும் போதெல்லாம் தாய்ப்பால் தரவும்.

தாய்ப்பாலை ஒரு பக்கம் முழுவதையும் கொடுக்க வேண்டும்.

பாலூட்டும் தாய்க்கு சத்துள்ள திட, திரவ உணவு அதிகம் தரவும்.

குழந்தை தாயின் மார்பை நன்றாக கவ்வி பால் குடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

குழந்தை பால்குடிக்கும் போது தாய் தூங்கக்கூடாது.

தாய்ப்பால் அதிகம் சுரக்க, தாய் பிரசவத்திற்கு முன்பே தாய்ப்பாலைத் தர முடிவு செய்ய வேண்டும்.

ஜீனித் தண்ணீர், குளுக்கோஸ், தேன் முதலியன தரக்கூடாது.

குழந்தைக்குப் புட்டிப்பாலை தவிர்க்கவும்.

அடிக்கடியும், பூரணமாயும் தாய்ப்பால் தருவதால் அதிகம் சுரக்கும்.

பச்சிளங்குழந்தை சில அபாய அறிகுறிகள்

குறைமாதத்தில் (37 வாரத்திற்கும் குறைவாக) குழந்தை பிறத்தல்.

குறைவான எடையுடன் குழந்தை பிறத்தல்.

பிறந்தவுடன் அழாமல், மூச்சுவிடாமல் இருத்தல்.

மிக வேகமாக மூச்சு விடுதல், மூச்சுத்திணறல்

மிக அதிகமாக தொடர்ந்து கத்திக் கொண்டு இருத்தல்.

சரியாக பால் குடிக்க முடியாமை, சுறுசுறுப்பில்லாமை.

பால் குடித்தபின் மூச்சுத்திணறல் - எதுக்களித்தல்

குழந்தையின் உடல் உஷ்ணம் மிகக் குறைதல்.

வலிப்பு (ஜன்னி) வருதல்.

ஆபத்தான பிறவிக் குறைபாடுகள்.

பிறந்த 24 மணி நேரத்திற்குள் மஞ்சள்காமாலை ஏற்படுதல்.

பிறந்த 24 மணிக்குள் மலம், 48 மணிக்குள் நீர் போகாமை.

வாந்தி & வயிற்றுப்போக்கு.

குழந்தையின் எப்பகுதியிலாவது ரத்தம் கசிதல்.

வயிறு வீக்கமாக இருத்தல்.

குறைமாத குழந்தைக்கு அதிக கவனம் தேவை

குழந்தையின் உஷ்ணம் குறைய வாய்ப்புகள் உண்டு கவனம் தேவை.

தேவைப்படின் வார்மர் (Warmer) இங்குபேட்டர் (Incubater) வைத்து பாதுகாக்க வேண்டும்.

பால் குடிக்க முடியாத நிலையில் - ஊசி மூலம் குளுக்கோஸ் செலுத்தவும்.

பால் குடிக்காத குழந்தைக்கு - தாய்ப்பாலை சங்கில் எடுத்து ஊட்ட வேண்டும்.

இக்குழந்தைகளை நோய்கிருமிகள் எளிதாக தாக்கும்.

இக்குழந்தைகளை குளிப்பாட்டுவதை தவிர்க்கவும்.

குழந்தை நலம் - சில அறிவுரைகள்

திருமணம் ஆகிய உடனே குழந்தை பிறப்பை தள்ளிப்போடவும்.

நெருங்கிய உறவில் திருமணம் செய்தல் கூடாது.

இளம் வயதிலேயே திருமணம் செய்தல் (பெண் -21) (ஆண் - 25) கூடாது.

தொற்று நீக்காமல் வேண்டாத கர்ப்பத்தை கலைத்தல் ஆபத்து.

கர்ப்ப காலத்தில் தேவையற்ற மருந்துகளை சாப்பிடுதல் கூடாது.

முதல் பிரசவத்தை வீட்டிலேயே வைத்து கொள்ளுதல் தவறு.

குழந்தை பிறந்தவுடன் குளிப்பாட்டுதல் கூடாது.

பிறந்தவுடன் குழந்தைக்கு - சக்கரைத் தண்ணீர், கழுதைப்பாலை தருதல் ஆபத்து.

தாயின் சீம்பாலை தராமல் இருப்பது தவறு.

கடையில் பால் வாங்கி பச்சிளங்குழந்தைகளுக்கு தருதல் ஆபத்து.

குழந்தைக்கு பாட்டிலில் பால் தருதல் ஆபத்து.

விளக்கெண்ணெய் தருதல் கிரேப்பாட்டில், போனிசம், பிறளி எண்ணெய் தரக்கூடாது.

குழந்தையின் தொப்புள் கொடியின் காயத்தில் சாம்பல், பொடி, பிற தடவுதல் கூடாது.

தாய் தூங்கிக்கொண்டே குழந்தைக்கு பால் கொடுத்தல் கூடாது.

குழந்தை இருக்கும் அறையில் தும்முதல் - இருமுதல் கூடாது.

குழந்தை இருக்கும் அறையில் புகை பிடித்தல் கூடாது.

ஏதாவது சுகவீனம் அடைந்தால் ஆரம்பத்திலேயே பாராமல் நேரம் தாழ்த்தல் தவறு.

காது, மூக்கு, கண் ஆகியவற்றில் எண்ணெய் விடுதல் ஆபத்தானது.

வலிப்பு வந்த குழந்தைக்கு சூடு போடவோ, வேப்பெண்ணெய் கொடுக்கவோ கூடாது.

வயிற்றுபோக்கு, பிற நோய் கண்ட குழந்தைக்கு வைத்தியம் செய்யாமல், கயிறு கட்டல், தொக்கம் எடுத்தல் - குடல் தட்டல் தவறு.

ஊட்டமான - முட்டை, பருப்பு ஜீரணிக்காது - மாந்தம் என்பது தவறு.

மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்து தரக்கூடாது.

மருந்துகளை குழந்தைக்கு எட்டுமிடத்தில் வைத்தல் தவறு.

பழைய மருந்து சீட்டிற்கு மருந்து வாங்குதல் கூடாது.

பழைய மருந்துகளை தரக்கூடாது.

மற்ற குழந்தைக்கு தந்த மருந்தினை இதற்கும் தருதல் தவறு.

வயிற்றுபோக்கின் போது திரவ உணவு நிறுத்துதல் தவறு.

அரை குறை வைத்தியம செய்தல் கூடாது.

ஒரு குழந்தையை மற்ற குழந்தையுடன் ஒப்பிடுதல் தவறு.

குழந்தைக்கு பல் முளைப்பதால் - வயிற்றுபோக்கு வரும் என்பது தவறு.

அம்மை நோய் கண்ட குழந்தைக்கு மருத்துவம் செய்யகூடாது என்பது தவறு.

காசநோய்-(Primary Complex) கண்ட குழந்தையின் மூலம் நோய் பரவும் என்பது தவறு.

குழந்தைக்கு காய்ச்சல் உள்ள போது உணவு தராமை தவறு.

வயிற்றுப்போக்குக்கு, சீர் அடித்தல் காரணம் என மந்திரித்தல் தவறு.

குடலில் உள்ள புழுக்கள் வெளியேற பேதி மருந்து தருதல் கூடாது.

மூச்சுத்திணறல் இருந்தால் - அதை ஆஸ்துமா என்பது தவறு.

தீ காயம் பட்ட பகுதிகளை தண்ணீரில் நனைப்பதை தடுத்தல் கூடாது.

வலிப்பின் போது சாவியை தந்தால் - நிற்கும் என்பது தவறு.

குழந்தை அழும்போது - ரப்பர் -நிப்பில் (Nipple) தருதல் ஆபத்து.


டாக்டர் கே.மணியன், எம்.பி.பி.எஸ், டி.சி.ஹெச்,
சிசு & குழந்தைகள் நல மருத்துவர், காட்டுமன்னார்கோயில்.

No comments: