சில நேரங்களில் நம் கணினியில் ஏதாவது மென்பொருள் அல்லது விளையாட்டு நிறுவி விட்டு அடுத்த முறை கணினியை திறந்ததும் ஏதோ DLL கோப்பு Missing என்று செய்தி வரும். இது போன்ற பிழை செய்திகளுக்கு எளிய முறையில் தீர்வு காணலாம் இதைப் பற்றித் தான் இந்தப்பதிவு.
Dynamic-link library என்று சொல்லக்கூடிய DLL கோப்புகள் விண்டோஸ் இயங்குதளத்திற்கு மிக முக்கியமானது என்றே சொல்லலாம்.
இப்படி முக்கியமான DLL கோப்புகள் பல நேரங்களில் கணினி எதிர்பாராமல் Shutdown செய்வதாலும் புதிதாக நாம் நிறுவும் மென்பொருள் பழைய DLL கோப்பை மாற்றிவிடுவதனாலும் பிழைச் செய்தியை காட்டுகிறது. இது போன்ற பிரச்சினைக்காக நாம் விண்டோஸ் மறுபடியும் இண்ஸ்டால் செய்யத் தேவையில்லை. எந்த DLL கோப்பு இல்லை என்று செய்திவருகிறதோ அந்த டல் கோப்பை தரவிரக்க நமக்கு ஒரு தளம் உதவுகிறது.
இந்ததளத்திற்கு சென்று எந்த DLL கோப்பு இல்லை என்று செய்தி வருகிறதோ அந்த கோப்பின் பெயரை படம் 1-ல் இருப்பது போல் இருக்கும் கட்டத்திற்குள் கொடுத்து Search என்ற பொத்தானை அழுத்த வேண்டும் அடுத்து வரும் திரையில் நாம் தேடிய DLL கோப்பு இருக்கும். எந்த பயனாளர் கணக்கும் இல்லாமல் எளிதாக தரவிரக்கலாம். தரவிரக்கிய DLL கோப்பை நம் கணியில் எப்படி நிறுவ வேண்டும் என்றும் சொல்லிக்கொடுக்கின்றனர்.கணினி வைத்திருக்கும் நம் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
No comments:
Post a Comment