Wednesday, July 11, 2012

உங்கள் உடல் எடை ஏழு நாட்களுக்குள் ஐந்து கிலோ எடை குறைய...


கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த அட்டவணை மிகப் பிரபலமான உணவு அட்டவணை. ஏழு நாட்களுக்கு இந்த அட்டவணையைப் பயன்படுத்தினால், உங்கள் எடையில் சராசரியாக ஐந்து கிலோ எடை குறையும். ஆனால் இரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி போல ஏதேனும் நீண்டநாள் பிரச்னை இருக்கிறவர்களுக்கு இது பயன்படுத்தத் தகுந்தது அல்ல. நல்ல ஆரோக்கியமான நிலையில் வெறும் உடல் எடை மட்டுமே பிரச்னையாக இருக்கிறவர்கள் ஒருமுறை உங்கள் மருத்துவரைச் சந்தித்து விவாதித்துவிட்டு, இந்த உணவு அட்டவணையை ஏழு நாட்களுக்குப் பயன்படுத்திப் பார்க்கலாம்.

முதல் நாள் : வெறும் பழங்கள். (வாழைப்பழம் தவிர). பழரசம் எதுவும் சாப்பிடவேண்டாம்.

இரண்டாம் நாள் :
 வெறும் காய்கறிகள். பழங்கள் இல்லை. இந்த இரண்டாவது நாளை ஒரு பெரிய வேகவைத்த உருளைக்கிழங்கு மற்றும் ஒரு ஸ்பூன் வெண்ணெயுடன் தொடங்கலாம்.

மூன்றாம் நாள் :
 அனைத்து பழங்கள் + அனைத்து காய்கறிகள் (வாழைப்பழம், உருளைக்கிழங்கு இரண்டைத் தவிர)

நான்காம் நாள் :
 எட்டு வாழைப்பழங்கள் + மூன்று கிளாஸ் பால் அந்த நாள் முழுக்க (சர்க்கரை சேர்க்காதது).

ஐந்தாம் நாள் :
 எட்டு உருளைக்கிழங்குகள் கொஞ்சம் சிக்கன் அல்லது மீன் அல்லது மூன்று முட்டை அல்லது பன்னீர். (காய்கறிகள் இல்லை)

ஆறாம் நாள் :
 அனைத்துக் காய்கறிகள் மற்றும் அனைத்துப் பழங்கள். (தக்காளி, உருளைக்கிழங்கு தவிர)

ஏழாம் நாள் :
 அனைத்துக் காய்கறிகள், பழங்கள் வாழைப்பழம் உட்பட சிக்கன், மீன் இல்லை. சிறிய கப்பில் ப்ரௌன் அரிசிச் சாதம்.

இந்த அட்டவணையைப் பயன் படுத்தும் முன் உங்கள் டாக்டரிடம் ஒருமுறை உங்கள் உடல்நிலை பற்றி விவாதித்துக் கொள்ளுங்கள். ஒருவாரம் சிரமப்பட்டு எடை குறைத்து விட்டு அடுத்த வாரம் சோமாலியாவில் சிக்கித் தவித்துத் தப்பித்ததைப் போல உங்கள் வீட்டு சமயலறையைச் சூறையாடாதீர்கள். எடையைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்பது ஒரு தொடர் நடவடிக்கை. அது உங்கள் ஆரோக்கியத்திற்கானது என்பதால் தொடர்ந்து பழகுங்கள்..

நார்மல் உடம்புடன் இருந்தாலும்... குண்டாவதற்குரிய அறிகுறிகம் உங்களுக்கு தெரிந்தால்... உடனடியாக உங்களுடைய உணவு முறையை மாற்றிக் கொள்ளுங்கள். உங்களுக்காகவே...

இதோ, அரிசி, உளுந்து, தானியம் சேர்த்த உணவுகளைக் குறைக்கணும். கண்டிப்பாக இறைச்சி வகைகளை சாப் பிடவே கூடாது. கொழுப்பு நிறைந்த இறைச்சி வகைகளை அதிகமாக சாப்பிட்டால் இருதயம் பாதிக்கும். பால் மற்றும் பால்வகை உணவுகம், முட்டை, ஐஸ்க்ரீம், கேக், சாக்லேட், தேங்காய் எண்ணை, குளிர்பானங்கம், பாக்கெட்டில் அடைத்த உணவுகம் ஆகியவற்றை முழுமையாக தவிர்க் கவும்.

அதேபோல், மைதா மாவில் தயாரிக்கப்பட்ட புரோட்டா, சப்பாத்தி, நாண் ஆகியவற்றை சாப்பிடக் கூடாது. ஒருவருக்கு தினமும் 1500 கலோரி தேவை. ஆனால் நாம் அனை வருமே தினமும் 3 ஆயிரம் கலோரி அளவுக்கு சாப்பிடுகிறோம்.

இதை தவிர்க்க... பயறு வகைகம், காய்கறி வகைகம், சோயா, முருங்கை இலை ஆகியவற்றை சாப்பிடுவது நல்லது. குறிப்பாக, காய்கறிகளை பச்சையாக சாப்பிடுவது மிகவும் நல்லது. மதிய உணவு சாப்பிடுவதற்கு முன், இரண்டு கேரட்டுகளை துண்டு களாக்கி சாப்பிடவும். அல்லது முட்டைக் கோஸ், வெம்ளரித் துண்டுகளை சாப்பிடலாம். இதனால் மதிய உணவின் அளவும் குறையும், உடம்புக்கும் சத்து கிடைக்கும்.

நாட்டுக் கோழி, காடை ஆகிய இறைச்சிகளை சாப்பிடலாம். இதில் கொழுப்பு குறைவு என்பதாலும், புரோட்டீன் அதிகம் என்பதாலும் உடலுக்கு நல்லது. சிறிய வகை மீன்களை சாப்பிடவும். ருசிக்காக பெரிய வகை மீன்களை சாப்பிட வேண்டாம்.

தினமும் ஒரு வேளையாவது கோதுமையில் தயாரிக்கப்பட்ட உணவை சாப்பிடுவது அவசியம். சர்க்கரை சேர்க்காமல் டீ சாப்பிடலாம். தாளிக்காத குழம்பை பயன்படுத்தலாம். ஏனென்றால்... கடுகு, எண்ணை போன்றவை தவிர்க்கப்படும். எக்காரணத்தைக் கொண் டும் இரவு சாப்பிடாமல் படுக்கக் கூடாது. தினமும் மதிய உணவை, 12.30 மணியிலிருந்து 1.30 மணிக்கும்ளும், இரவு உணவை 9 மணிக்கும்ளும் சாப்பிட வேண்டும்.

மதிய உணவிலிருந்து இரவு உணவுக்கு நீண்ட இடைவெளி வேண்டாம். தினமும் ஒரு மணி நேரம் நடந்தால் உடலுக்கும் நல்லது, கொழுப்பும் குறையும். இல்லாவிட்டால் தோட்ட வேலை, ஏரோபிக்ஸ், யோகா ஆகியவை சிறந்தது

1 comment:

sathish said...

this schedule is accepted for three times/day/week.and how many fruits can i eat?