உயிருக்குயிரான உயிரினும் மேலான சத்தியத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக நபித்தோழர் செளபான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் :
ஒரு நேரம் வரும் உலக நாடுகள் உங்களுக்கு (இஸ்லாத்திற்கு )எதிராக ஒன்று கூடுவார்கள்.
இன்னும் உங்களுக்கு எதிராக செயல்பட மற்றவர்களையும் அழைப்பு கொடுப்பார்கள் அந்த அழைப்பு எப்படி இருக்கும் என்றால் பசியோடுள்ளவன் உணவுத்தட்டின் பக்கம் மற்றவர்களை அழைப்புகொடுப்பது போன்றிருக்கும்.
ஒரு நபித்தோழர் கேட்டார்கள் அந்த நாளில் நாம் சிறுபான்மையினராக இருப்போமா?
இறைத்தூதர் அவர்கள் கூறினார்கள் : இல்லை நீங்கள் எண்ணிக்கையில் மிகுந்து இருப்பீர்கள் ஆனால்,வெள்ளத்தின் நூரையைப்போன்று இருப்பீர்கள்
இறைவன் உங்களைப்பற்றிய பயத்தை உங்கள் எதிரிகளின் மனதிலிருந்து எடுத்துவிடுவான்.
உங்களின் உள்ளத்தில் வஹன் வந்து விடும்.
ஸஹாபாக்கள் கேட்டார்கள் : " யா ரஸுலுல்லாஹ் வஹன் என்றால் என்ன?
நபி (ஸல்) கூறினார்கள்: " உலக ஆசையும், மரணத்தைப்பற்றிய பயமும் தான். ( அபூதாவூத்)
காலத்தின் கட்டாயம் அவசியம் கருதி நபிகளாரின் அற்புதமான , அழமான வார்த்தைகளை இங்கு பதிவு செய்கிறோம்.
நபியவர்கள் மறுமையைக்குறித்தும், மறுமைக்கான தயாரிப்புகள் குறித்து அதிகமாக பேசியிருக்கிறார்கள்.
ஏனெனில் ஒரு முஃமினின் நம்பிக்கையின் அடித்தளங்களில் ஒன்றாக விளங்குவது இந்த மறுமைநாள் குறித்த இஸ்லாமிய கோட்பாடுதான்.
ஒரு நாள் வரும் அந்த நாளையில் நம்மை படைத்த இறைவன் முன்னால் நிறுத்தப்படுவோம்.
நம் வாழ்வில் செலவிட்ட ஒவ்வொரு வினாடி குறித்தும் விசாரிக்கப்படுவோம்.
இன்னும் ஒரு முஸ்லிம் உடைய நிம்மதியான வாழ்விடம் மறுமை மட்டுமே.
நபியவர்களுடன் ஸஹாபாக்கள் இந்த இறைமார்க்கதை நிலைநாட்ட கடந்து வந்த பாதைகளில் ஏற்பட்ட காயங்களை ஆற்ற, நபியவர்கள் மறுமை என்ற மருந்தையே பயன்படுத்தினார்கள்.
நீங்கள் இங்கே இறைபாதையில் மேற்கொள்ளும் சிரமங்களுக்கும் உங்களுக்கு முழுமையான இன்னும் மகத்தான கூலி உண்டு. அதற்கு பகரமாக சுவனம் அடைவீர்கள் அது தான் நிரந்தரவாழ்வு.
மறுமைக்குறித்து பேசியதில் சற்றும் குறைவில்லாமல் மறுமைக்குறித்த அடையாளங்கள் குறித்தும் பேசியிருக்கிறார்கள்.
மறுமைக்கான அடையாளங்கள் குறித்த பதிவுகள் உண்மையில் இந்த உம்மத்தின் உணர்வுகளில் உரமேற்றவே
அவற்றை நம் முன்னே வைத்து நாம் என்ன செய்யவேண்டும்,
நாம் வாழ்வியல் எவ்வாறு நெறிப்படுத்தப்படவேண்டும்.
நம் வாழும் இக்காலம் நபியவர்களின் ஆளுமை நிறைந்த சொற்களை எவ்வாறு நிதர்ச்சனம் கண்டு கொண்டிருக்கிறது.
நாம் மேலே படித்த ஹதீஸும் மறுமைக்கான அடையாளங்களின் பட்டியலில் உள்ளதாகும்.
கியாமத்தின் அடையாளங்களில் ஒன்று தான் இஸ்லாமியர்களில் பக்கம் உலக நாடுகளின் முழுகவனமும் திரும்புவது.
அது திரும்புவதற்கு இஸ்லாம் என்ற ஒன்றை தவிர வேறு காரணங்கள் இருக்கமுடியாது.
என்ன ஒரு அற்புதமான வார்த்தைகளில் நபியவர்கள் இந்நிலையை வர்ணிக்கிறர்கள்.
இஸ்லாத்திற்காக எதிராக கிளம்பவேண்டும் என்ற எண்ணம் ஏற்படும்.
அதற்காக பெரும் முயற்ச்சிகள் தானும் எடுத்து அடுத்தவர்களையும் அழைப்பார்கள்.
அவர்கள் அழைக்கிற விதத்தை எம்பெருமானார் சுட்டும் முறை அலாதியானது.
பசியோடு காத்திருப்பவன் தட்டை நோக்கி அழைக்கப்படுவது போன்று.
என்ன பசி?
மனித (தின்னும்) பசி இது தனிமனிதனிலிருந்து ஆரம்பித்து சமூகம் (உலக நாடுகள்) வரை
இன்று உண்மை முஸ்லிம் என்பதாலே பல இடங்களில் தனி மனிதர்கள் ஏவுணை தாக்குதலுக்கு இரையாகிறார்கள்.
இது ஏவுகணையின் பசியன்று, அதை ஏய்த கைகளின் பசியன்றோ?
நபியவர்கள் காட்டிய உதாரணத்தின் இன்னொரு பகுதி.
கடும் பசியோடு இருப்பவன் தனக்கு முன்னால் சுவையான உணவுகள் வைக்கப்பட்டால் எப்படி அதை ஒரு வாய்ப்பாக கருதுவானோ.
அதுபோன்று ஒரு வாய்ப்பாக கருதி தாமும் வருவார்கள், இப்படி தனித்தனியாக சேர்ந்து ஒரு கூட்டமாக ஆகிவிடுவார்கள்
விருந்துக்கு தனித்தனியாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தாலும், எல்லோரும் அந்த கடைசி நேரத்தில் ஒன்றாக சேர்வது போன்று.
கடைசியில் அந்த முழு கூட்டமும் கெடுதிகளின் கூடாரமாக ஆகிவிடும்.
இங்கே இருந்த ஒரு உணர்வுமிக்க நபித்தோழர் கேட்டார் " நாம் குறைவாக இரும்போமா அன்று"
எத்துனை அழமான கேள்வி இது " இந்த காலத்து முஸ்லிம்கள் குறைவாக இருப்பார்களா? என்று கேட்கவில்லை
மாறாக, நாம் குறைவாக இருப்போமா?
( மறுமையில் இவர்களோடு இருக்கும் நஸீபை நம் ஒவ்வொருவருக்கும் இறைவன் தருவானாக)
அதற்கு நபியவர்கள் கூறினார்கள், மாறாக நீங்கள் அதிகமாக இருப்பீர்கள்.
அந்த அதிகத்திற்கு உதாரணமாகிறது வெள்ள நீரோடு சேர்ந்துவரும் நூரைக்கு ஒப்பாகும்.
அதற்கு முஹத்திஸ்கள் விளக்கம் கூறும் போது.
வெள்ளத்தை பார்க்கும் போது மிகப்பெரிய அளவில் வருவது போன்று இருக்கும்.
ஆனால் உண்மை நிலை அது தண்ணீரின் மீது வரும் அனைத்து அசுத்தங்களையும் தன்னுல் கொண்டது.
இன்னும் அது தன்னகத்தே எந்த சக்தியும் இல்லாதது.
அத்தோடு அது வீக்கமே தவிர வளர்ச்சி பெற்றதன்று.
ஆக, இந்த உவமையிலிருந்து அதிகம் இருப்பார்கள் ஆனால் சக்தியற்ற ஒரு சமூகமாக இருப்பார்கள்.
கடைசியாக கூறினார்கள் அவர்களைப்பற்றி அச்சத்தை இறைவன் அவர்களி எதிரிகளிடமிருந்து எடுத்துவிடுவான்.
அவர்களிடம் வஹன் வந்துவிடும்.
வஹன் என்ற அரபி வார்த்தைக்கு அர்த்தம் உறுதியற்ற தன்மை, இயலாமை.
இதே வார்த்தையை அல்குர்ஆனில் இறைவன் பயன்படுத்துகிறான்.
" இன்ன அவ்ஹனல் புயூத்தி ல பைத்தில் அன்கபூத்"
வீடுகளில் உறுதியற்ற தன்மை உள்ளது சிலந்தியில் வீடாகும்.
என்ற இறைவார்த்தையை வைத்துப்பார்க்கும் போது உறுதிதன்மையற்ற ஒரு சமூகம் உருவாகும்.
உறுதியற்ற சமூகம் உருவாக இரு காரணங்களை இந்த ஹதீஸ் விளக்குகிறது.
- உலகப்பற்று
- மரணத்தை வெறுப்பது
முதல் செய்தியான உலகப்பற்று என்பது கொண்டு உலகமே வேண்டாம் என்ற துறவு நிலையை இங்கு குறிப்பிடவில்லை.
மாறாக, உலக பற்று உள்ளத்தில் அழத்தில் குடிகொண்டுவிடுவது.
எதன் காரணமாக மற்றவர்கள் இந்த உலகத்தை விரும்பிக்கொண்டிருந்தர்களோ அதே நிலை இன்று இஸ்லாமியர்களிடம் வந்துவிடுவது.
குர்ஆனில் உலகப்பற்றை தங்களின் உள்ளத்தில் ஏற்றியவர்களைப்பற்றி இறைவன் இவ்வாறு கூறுகிறான்
أحدهم لو يعمر ألف سنة يود
அவர்களில் ஒரு ஆயிரம் ஆண்டு இவ்வுலகில் வாழவேண்டும் என விரும்புவார்.
இது தான் இந்த உலகில் சேர்த்துவைத்துள்ள நிரந்தரமற்ற பொருட்கள் மீது கொண்ட காதலின் விளையும்.
இது ஈமான் கொள்ளாதவர்கள் பற்றி இறைவன் எடுத்துறைக்கும் பாங்கு.
இது இஸ்லாமியர்களின் உள்ளங்களில் குடியேறிவிடும்.
பின் தங்கள் சேர்த்துவைத்த்தை இவ்வுலகில் அனுபவித்துக்கொண்டே இருக்கவேண்டும் என விரும்புவார்கள்
அப்படி விரும்பும்போது இயற்கையாகவே மரணத்தில் மீது வெறுப்பும், அதை பற்றி உண்டான அச்சமும் ஏற்பட்டுவிடும்.
இந்நிலை எவரிடம் ஏற்பட்டுவிட்டதோ இயற்கையாகவே எதிரிகளுக்கு அவர்கள் மீதுள்ள அச்சம் போய்விடும்.
பின் அவர்கள் பதர்கள் போன்றும், வெறும் நூரைகள் போன்றும் தென்படுவார்கள்.
வல்ல நாயன் இந்த நிலையைவிட்டும் நம்மையும், நம் சந்ததிகளையும் காப்பானாக.
ஸஹல் இப்னு சஃது என்ற நபித்தோழர் கூறுவதுபோன்று
" ஹன்தக் எனற போரின் போது நாங்கள் நபியோடு இருந்தோம். நபியவர்கள் குழிகளைத்தோண்டிக்கொண்டிருந்தார்கள் நாங்கள் அந்த மண்ணை சுத்தப்படுத்திக்கொண்டிருந்தோம்.
அப்பொழுது நபியவர்கள் எங்களை கடக்கும் போது இந்த வாசகத்தை சொல்லிக்கொண்டிருந்தார்கள்
اللهم لا عيش إلا عيش الآخره فاغفر للأنصار والمهاجره
அல்லாஹும்ம லா ஈச இல்லா ஈசல் ஆகிரா பஃபிரில் அன்சார வல் முஹாஜிரா"
யாஅல்லாஹ் வாழ்வு என்பது மறுமையின் வாழ்வு மட்டுமே அன்சாரிகளையும், முஹாஜிர்களையும் மன்னிப்பாயாக.
நபித்தோழர் ஸஹல் சொல்கிறார் அது போன்று நானும் சொல்ல ஆரம்பித்துவிட்டேன்.
நாமும் நபி சொன்ன அந்த வார்த்தையை ஒரு முறை சொல்வோமாக.
இதை சொல்வது கொண்டாவது இறைவன் இம்மனோநிலை பெற தவ்பீக் செய்வானாக.
- ஹஸனீ
www.sahabudeen.com
No comments:
Post a Comment