பள்ளிச் சான்றிதழில்களில் பிறந்த தேதி தவறாக இருந்தால் மாற்றுவது எப்படி?
பள்ளிச் சான்றிதழில் பிறந்த தேதி தவறுதலாகக் குறிப்பிடப்படுவதால் அரசு வேலையில் சர்வீஸ் பாதிக்கப்படும். எனவே, இந்த மாதிரி தவறுகள் நேர்ந்தால் அதை உடனடியாக சரி செய்து வைத்துக்கொள்வது நல்லது.
பிறப்புச் சான்றிதழில் உள்ள தேதி சரியாக இருக்கும் பட்சத்தில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்ய வேண்டும். அதில் பிறப்புச் சான்றிதழில் ஒரு பிறந்த தேதியும், கல்விச் சான்றிதழ்களில் ஒரு தேதியும் குறிப்பிடப்பட்டுள்ளன. பிறப்புச் சான்றிதழின்படி மற்ற கல்விச் சான்றிதழ்களில் பிறந்த தேதியை மாற்றித்தர உத்தரவிட வேண்டும் என்று கேட்க வேண்டும்.
இதில் பிரதிவாதியாக பள்ளிக்கல்வித்துறை, ஆசிரியர் பயிற்சி நிறுவனம், கல்வியியல் கல்லூரி இயக்ககம் ஆகியோரை சேர்க்க வேண்டும். வழக்கை விசாரிக்கும் நீதிமன்றம் பிறந்த தேதியை பிறப்புச் சான்றிதழின்படி மாற்றித்தர கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவிடும். பின்னர், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் தங்களது பதிவேட்டில் வைத்திருக்கும் சான்றிதழ் நகல் ஒன்றில் பிறந்த தேதியை மாற்றம் செய்து தருவார்கள்.
மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தை அணுக பொருளாதாரம் தடையாக இருந்தால், மாவட்ட சட்ட உதவி மையத்தை அணுகி விண்ணப்பிக்கலாம். அவர்களிடம் தங்கள் சான்றிதழ்களில் பிறந்த தேதி மாறியிருக்கும் விவரத்தைக் கூறி, அதற்கான ஆதாரங்களைக் கொடுத்து, போதிய வசதி இல்லாத காரணத்தைக் கூறி, உங்களுக்கு வழக்கறிஞர் ஒருவரை ஏற்பாடு செய்துதரச் சொன்னால் தருவார்கள்.
இதுபோல் பிறந்ததேதி குறித்த மாற்றங்கள் உங்கள் கவனத்திற்கு வரும்போதே சரிசெய்துகொள்ள வேண்டும். ஏனெனில், பள்ளிக்கல்விச் சான்றிதழை வைத்தே பாஸ்போர்ட் உள்ளிட்ட பல இடங்களுக்கு வயது ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். அத்துடன் அரசு வேலைகளில் இந்தச் சான்றிதழின் ஆதாரங்களைத்தான் எடுத்துக் கொள்வார்கள்.
http://trb.muruganandam.in/2012/12/blog-post_6.html?utm_source=BP_rand
*more articles click*
www.sahabudeen.com
No comments:
Post a Comment