நிலநடுக்கம் ஏற்பட்டால் குறைந்தபட்சம் எப்படி நாம் நடந்துக்கொள்ளவேண்டும்
புயல், சூறாவளி போன்று இந்த நிலநடுக்கத்தை எடுத்துக்கொள்ள முடியாது இது எப்ப ஏற்படும் என்று படைத்த இறைவனுக்கு மட்டுமே தெரியும். சரி அப்படி ஏற்படும் பொது நாம் என்ன பாதுகாப்பு செய்யவேண்டும். இது வெறும் முயற்ச்சிதான் அன்றி முற்றிலுமான தீர்வு அல்ல. ஏன் என்றால் இறைவன் நாடிவிட்டால் நாம் என்ன செய்தாலும் அதை தடுக்க முடியாது.
கட்டிடத்தின் உள்ளே இருப்பவர்கள்:- (பெரிய கட்டிடங்களில் இருப்பவர்களுக்கு மட்டும்)
1. உடனே தரையில் உட்கார்ந்து கொள்ளவேண்டும்.
2. அங்குள்ள ஏதாவது ஒரு மேஜையின் கீழே ஒழிந்துக்கொள்ளவேண்டும், அல்லது கைகளால் தலை மற்றும் முகத்தினை மறைத்துக்கொள்ளவேண்டும்.
3. அங்குள்ள கண்ணாடிகள், ஜன்னல்கள், கதவுகள், சுவர்கள் மேலும் கீழே விழக்கூடிய பொருட்களில் இருந்து தள்ளி இருக்க வேண்டும்.
4. படுத்திற்க்கும்போது அப்படியே இருக்கவேண்டும், ஏதாவது தலையணை கொண்டு உங்கள் முகத்தை மூடிக்கொண்டு இருக்க வேண்டும் அதிர்வு நிர்க்கும் வரை.
5. உங்கள் அருகாமையில் இருக்கும் வெளியேறும் வழியாக வெளியேறவேண்டும்.
6. முடிந்தவரை அதிர்வு நிற்க்கும் வரை உள்ளேயே இருக்க வேண்டும்.
7. எக்காரணத்தைக் கொண்டும் லிஃப்ட் உபயோகிக்க கூடாது.
வெளியே உள்ளவர்கள்:-
1. கட்டிடடங்கள், மின் கம்பங்கள், மின் வோயர்களை விட்டு தள்ளி இருக்க வேண்டும்.
2. அதிர்வு முழுமையாக அடங்கும் வரை பொறுமையாக இருக்க வேண்டும்.
வாகனத்தில் பயணித்துக் கொண்டிருப்பவர்கள்:-
1. நிதானமாக வண்டியை பாதுக்காபான இடத்தில் நிறுத்த வேண்டும், வண்டிய விட்டு இறங்க கூடாது.
2. வண்டியை மரங்கள், கட்டிடடங்கள், மின் கம்பங்கள் போன்றவற்றில் இருந்து தள்ளி நிறுத்த வேண்டும்.
இடிபாடுகளுக்கிடையே சிக்கி இருப்பவர்கள்:-
1. உங்களுக்கு அத்தனை வலுவிருக்காது.
2. உங்கள் நிலையில் இருந்து நகர முயற்ச்சி செய்யாதீர்கள்.
3. தூசுகளை தட்டாதீர்கள்.
4. உங்கள் மூக்கு மற்றும் வாய்யை சேர்த்து எதேனும் துணியால் மறைத்துக்கொள்ளுங்கள்,
5. அருகில் உள்ள சுவர் அல்லது பைப் போன்றவற்றில் தட்டி ஒலி எழுப்புங்கள், யாராவது அருகில் இருந்தால் உங்களுக்கு உதவ கூடும்.
6. யாரையும் கத்திக்கூப்பிடாதீர்கள், விசில் அடித்து கூபிடலாம் முடிந்தால்.
ஆனால் இதை எல்லாம் மீறி நம்மை படைத்தவனிடம் கேட்கும் துவா மிக முக்கியம்.
http://flypno.blogspot.ae/2013/04/blog-post_17.html
--
*more articles click*
www.sahabudeen.com
No comments:
Post a Comment