--
*more articles click*
www.sahabudeen.com
ஹார்ட்டிஸ்க்கை நல்ல நிலையில் வைக்கலாமா!
நாம் பல நாட்களில் நேரம் மற்றும் உழைப்பைப் பயன்படுத்தி உருவாக்கும் பைல்கள் எல்லாம் கம்ப்யூட்டரில் ஹார்ட் டிஸ்க்கில் வைக்கப்படுகின்றன. ஹார்ட் டிஸ்க் எப்போது கிராஷ் ஆகி காலை வாரும் என்று யாரும் கணிக்க முடியாது. ஹார்ட் டிஸ்க் நல்ல கம்பெனி ஹார்ட் டிஸ்க் எனப் பலர் பேக் அப் எடுப்பதே கிடையாது. இவர்களின் ஹார்ட் டிஸ்க் கிராஷ் ஆனால் அதோ கதிதான். ஒரு சிலர் குறிப்பிட்ட கால அவகாசத்தில் பேக் அப் எடுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். என்னதான் பேக் அப் எடுக்கும் பழக்கம் இருந்தாலும் பலர் இதில் கோட்டை விட்டுவிடுகின்றனர். ஒரு நாள் பணி முடிக்கையில் தொடர்ந்து பேக் அப் எடுப்பது கட்டாயம் நாம் செய்ய வேண்டிய பணி ஆகும். இருப்பினும் இன்னொரு வழியிலும் இந்த பிரச்சினைக்குத் தீர்வு காணலாம். ஏன் ஹார்ட் டிஸ்க்கை சரியான முறையில் பராமரித்து வரக் கூடாது. அதற்கான சில வழிகளை இங்கு காணலாம்.
ஹார்ட் டிஸ்க் நம் கம்ப்யூட்டரில் மிக மிக முக்கியமான ஒரு சாதனம் என்பதனை நாம் யாரும் மறுக்க முடியாது. சரியாகக் கவனிக்கப்படாத ஒரு ஹார்ட் டிஸ்க் மூன்று ஆண்டுகள் வரைதான் வரும் என்று தெரிய வந்துள்ளது. ஒரு ஹார்ட் டிரைவ் எந்த முன் எச்சரிக்கையுமின்றி கெட்டுப் போகும் என்பது எல்லாரும் அறிந்த உண்மை. இதனால் தான் இதனை நல்ல நிலையில் வைத்திருக்க வேண்டும் என்பது அவசியமாகிறது.
ஸ்டெப் 1:
1. ஹார்ட் டிரைவில் உள்ள எர்ரர்களை கண்டறிய வேண்டும். இதற்கு Start >> My Computer சென்று சி டிரைவில் வலது கிளிக் செய்திட வேண்டும். கிடைக்கும் மெனுவில் பிராபர்ட்டீஸ் பிரிவில் கிளிக் செய்திடவும். இதில் பல டேப்கள் அடங்கிய விண்டோ கிடைக்கும்.
2. இந்த விண்டோவில் Tools என்னும்டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் Check Now என்ற பட்டனைத் தட்டவும்.
3. பின் இதில் கிடைக்கும் இரண்டு டிஸ்க் ஆப்ஷன்ஸ் இடத்திலும் செக் செய்திடவும். பின் ஸ்டார்ட் மெனுவில் கிளிக் செய்திடவும்.
4. ரீ ஸ்டார்ட் செய்வதற்கு டயலாக் வந்தால் யெஸ் கிளிக் செய்திடவும்.
5. இதன் பின் விண்டோஸ் ரீ ஸ்டார்ட் ஆகி டிஸ்க் முழுவதையும் டெஸ்ட் செய்து கரப்ட் ஆன பைல்களை ரிப்பேர் செய்திடும்.
ஸ்டெப் 2:
நம் பைல்கள் அனைத்தையும் பதிந்து வைத்திட விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்.டி.எப்.எஸ். (NTFS) அல்லது பேட் 32 (FAT 32) பைல் வடிவத்தினைப் பயன்படுத்துகிறது. என்.டி.எப்.எஸ். பயன்படுத்துவதில் ஒரு அனுகூலம் உள்ளது. சிஸ்டம் கிராஷ் ஆனால் பைல்களில் ஏற்படும் பிரச்சினையை சிஸ்டம் தானாகவே தீர்த்துக் கொள்கிறது. டிஸ்க்கில் உள்ள பேட் செக்டார் எனப்படும் பழுதடைந்த பகுதிகளைக் கண்டறிந்து தானாகவே பைல் மேலும் எழுதப்படாத வகையில் ஒதுக்கி வைக்கிறது. பழைய FAT32 பைல் சிஸ்டத்தில் இந்த வசதி இல்லை. உங்கள் கம்ப்யூட்டர் என்.டி.எப்.எஸ். வகையைப் பயன்படுத்துவதனை உறுதி செய்திட கீழ்க்காணும் செயல்பாட்டினை மேற்கொள்ளவும்.
1) Start > Run செல்லவும்.
2) ரன் விண்டோவில் cmd என டைப் செய்திடவும். பின் என்டர் தட்டவும்.
3) இப்போது டாஸ் ப்ராம்ப்ட் விண்டோ கிடைக்கும். இதில் convert j: /fs:nfs என டைப் செய்திடவும். இதில் J: என்பது நீங்கள் உங்கள் கட்டளைக்கு உள்ளாக்கும் டிரைவின் அடையாள எழுத்து.
ஸ்டெப் 3:
ஒரு ஹார்ட் டிஸ்க்கில் பைல்கள் பதியப்பட்டு பின் அழிக்கப்பட்டுப் பின் மீண்டும் பதியப்படுகையில் அங்கு பிராக்மென்டேஷன் என்னும் செயல்பாடு மேற்கொள்ளப்படுகிறது. பதியப்படும் பைல் வரிசையாகப் பதியப்படாமல் துண்டு துண்டாக ஆங்காங்கே பதியப்படுகிறது. இதைத்தான் பிராக்மென்டேஷன் (fragmentation) என அழைக்கிறார்கள். பைல்கள் இவ்வாறு துண்டு துண்டாக அமைக்கப்படுவதால் அந்த பைல்களைப் படித்துக் கொண்டு வருவதற்கு ஹார்ட் டிஸ்க் வழக்கமாக செயல்படுவதைக் காட்டிலும் அதிகமாகச் சுழன்று செயல்பட வேண்டியதுள்ளது. இதனால் கம்ப்யூட்டர் செயல்பாட்டில் தாமதம் ஏற்படுகிறது. ஹார்ட் டிஸ்க் பயன்தரும் காலம் குறைகிறது. இதனைச் சரி செய்திட டிபிராக்மென்டர் என்னும் வசதி விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் தரப்பட்டுள்ளது. இந்த டிஸ்க் டிபிராக்மெண்ட் பயன்பாட்டினைச் செயல்பாட்டிற்குக் கொண்டு வர கீழ்க்கண்டவாறு செயல்படவும்.
1. Start >> My Computer செல்லவும். சி டிரைவில் வலது கிளிக் செய்திட வேண்டும். கிடைக்கும் மெனுவில் பிராபர்ட்டீஸ் பிரிவில் கிளிக் செய்திடவும். இதில் பல டேப்கள் அடங்கிய விண்டோ கிடைக்கும்.
2. இந்த விண்டோவில் Tools என்னும்டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் Defragment Now என்ற பட்டனைத் தட்டவும்.
3. இனி டிரைவ் அனலைஸ் செய்யப்படும். இதன் பின்னர் Defragment என்பதில் தட்டவும்.
4. இந்த செயல்பாட்டினை மாதம் ஒரு முறையாவது உங்கள் ஹார்ட் டிரைவில் மேற்கொள்ள வேண்டும்.
மேலே குறிப்பிட்ட செயல்பாடுகளை குறிப்பிட்ட கால அவகாசத்தில் மேற்கொண்டால் ஹார்ட் டிஸ்க்கின் வாழ் நாள் கூடுதலாக இருக்கும்.
No comments:
Post a Comment