தண்ணீர்... தண்ணீர்...! உபயோகமான தகவல்கள்
உயிரினங்கள் அனைத் தும் வாழ இன்றியமையாதது தண்ணீர். இதில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லை. ஜீவராசிகளின் உயிர் நாடியாய் உள்ள தண்ணீர் இப்போது பல்வேறு வகைகளில் மாசுபட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலை நீடித்தால் குடிநீருக்காக 3-வது உலகப்போர் ஏற்படும் என்று உலக நாடுகள் எச்சரிக்கை மணி அடித்துள்ளன.
எனவே நாம் நீராதாரங்களை காப்பதை முக்கிய கடமையாக கொண்டு செயல்பட வேண்டும். நீர் மாசுபட்டால் அனைத்து நோய்களும் சொல்லாமல் கொள்ளாமல் வந்து ஒட்டிக்கொள்ளும். உயிர் காக்கும் தண்ணீரின் அவசியத்தையும், அவற்றின் பயன்பாடுகளையும், தண்ணீரைப்பற்றிய அரிய தகவல்களையும் இங்கு காண்போம்.
இந்தியாவில் குடிநீர் தேவை.........
* இந்தியாவில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அந்த அளவுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. இந்தியாவில் 82 சதவீதம் விவசாயத்திற்கும், 10 சதவீதம் தொழிற்சாலைகளுக்கும், 8 சதவீதம் மக்கள் பயன்பாட்டிற்கும் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.
* அமெரிக்கா ஒரு நாளைக்கு 346000 மில்லியன் காலன் தண்ணீரை பயன்படுத்துகிறது.
* அமெரிக்கா தனது நாட்டில் உள்ள தண்ணீரில் 80 சதவீதத்தை விவசாயத்திற்கும், மீதியை மின் உற்பத்திக்கும் பயன்படுத்துகிறது.
* அமெரிக்க குடிமகன் ஒரு நாளைக்கு 80 முதல் 100 காலன் தண்ணீரை பயன்படுத்துகிறான்.
மனிதனும் தண்ணீரும்..........
* மனித உடலில் 70 சதவீதம் தண்ணீர் உள்ளது.
* பிறக்கும் குழந்தையின் எடையில் 80 சதவீதம் தண்ணீர்தான்.
* மனிதன் ஆரோக்கியமாக வாழ தினமும் 8 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
* தண்ணீர் அதிகம் குடிப்பதால் உடலில் உள்ள நச்சுக் கழிவுகள் தானாக வெளியேறும்.
உலகமும் தண்ணீரும்..........
* உலகத்தில் 70 முதல் 75 சதவீதம் பகுதியை தண்ணீர் சூழ்ந்துள்ளது. பூமிக்கு மேல் உள்ள நீராதாரங்களை விட நிலத்தடி நீரே சுத்தமானது. சுகாதாரமானது.
* ஆண்டாண்டு காலமானாலும் தண்ணீரின் அளவு மாறப்போவதில்லை. உலகம் தோன்றியது முதல் அதே அளவு தண்ணீர்தான் உள்ளது.
* உலகில் உள்ள மொத்த தண்ணீரின் அளவு 326 மில்லியன் கியூபிக் மைல்ஸ்.
குடிநீரின் அவசியம்..........
* ஒரு மனிதன் உணவு சாப்பிடாமல் ஒரு மாதம் வாழ முடியும். ஆனால் ஒரு வாரத்துக்கு மேல் தண்ணீர் குடிக்காமல் வாழ முடியாது.
* மனித உடல் சீராக இயங்க கண்டிப்பாக தண்ணீர் தேவை.
* தண்ணீர் மனிதன் உயிர்வாழ தேவையான சக்தியை அளிக்கிறது.
* சுத்தமான தண்ணீரை குடிப்பதன் மூலம் நோய் தடுப்பாற்றலை பெறலாம்.
* தண்ணீர் அதிகம் குடித்தால் தலைவலி வராது.
* ஆரோக்கியமான - அழகான தோற்றத்துக்கு தண்ணீர் அவசியம்.
* உணவு செரிக்கவும் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுப்பதும் தண்ணீரின் தலையாய பணி.
* உடலுக்கு தேவையான சத்துக்களை அந்தந்த பாகங்களுக்கு எடுத்துச் செல்ல தண்ணீர் அவசியம்.
பழங்கள்-காய்கறிகளில்..........
* உலகின் சராசரி மழை அளவு 850 மி.மீ.
* உலகின் தட்பவெப்ப நிலையை பேணிக் காப்பதில் தண்ணீரின் பங்கு அதிகம்.
* விலங்குகளின் ரத்தம், தாவரங்களின் திசுக்கள் ஆகியவற்றில் தண்ணீரின் அளவு அதிகம்.
* நீரின்றி அமையாது உலகு.
* தக்காளியில் 95 சதவீதமும், மாங்காயில் 65 சதவீதமும், தர்பூசணியில் 95 சதவீதமும், அன்னாசியில் 87 சதவீதமும் தண்ணீர் உள்ளது.
அதிர்ச்சி தகவல்கள்.........
* உலகில் 1.5 பில்லியன் மக்கள் சுத்தமான தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள்.
* தண்ணீர் தொடர்பான நோயால் ஆண்டுக்கு 4 மில்லியன் மக்கள் மரணத்தை தழுவுகிறார்கள்.
* அசுத்தமான தண்ணீரே காலராவுக்கு மூல காரணம். இதன் மூலம் 43 சதவீதம் பேர் மரணத்தை தழுவுகிறார்கள்.
* வளரும் நாடுகளில் நிகழும் மரணங்களில் 98 சதவீதம் தண்ணீரால் ஏற்படுகிறது.
* சுகாதாரமற்ற தண் ணீரை குடிப்பதால் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் காலராவால் மடிகிறார்கள்.
* ஆப்பிரிக்க வாழ் பெண்கள் ஒருநாளைக்கு 16 மணி நேரத்தை தண்ணீர் தேடி அலைவதிலேயே செலவழிக்கிறார்கள்
http://pettagum.blogspot.in/2012/06/blog-post_6.html
--
*more articles click*
www.sahabudeen.com
No comments:
Post a Comment