உபயோகமுள்ள வீட்டுக்குறிப்புகள் நம் அன்றாட வாழ்க்கையில் நிறைய சமயங்களில் பலன் கொடுக்கின்றன. அவற்றில் சிலவற்றை கீழே தொகுத்து எழுதியிருக்கின்றேன். யாருக்கேனும் தக்க சமயத்தில் இவை கை கொடுத்தால் மகிழ்வாக இருக்கும்!
* மழையில் நனைந்து ஷூக்கள் ரொம்பவும் ஈரமாக இருக்கின்றனவா? அவற்றினுள் கொஞ்சம் நியூஸ் பேப்பரை அடைத்து வைத்து விடுங்கள். பேப்பர் எல்லா ஈரத் தையும் இழுத்துக் கொண்டு விடும்.
* சட்டைக் காலர்களிலும், கை மடிப்பு களிலும் உள்ள அழுக்குகள் எப்படித் துவைத்தாலும் போக மறுக்கிறதா? முதல் நாள் இரவே அவற்றின்மேல் கொஞ்சம் டால்கம் பவுடரைத் தடவி வைத்துவிட்டு, மறுநாள் காலை வழக்கம்போலத் துவைத்து விடுங்கள். அழுக்கு இருந்த இடம் தெரியாமல் போய் விடும்.
* சட்டைகளிலோ, பெட்ஷீட்டுகளிலோ ஒட்டிக்கொண்டு வர மறுக்கும் சூயிங்கத்தின் மேல் ஐஸ் கட்டியால் தேய்த்தால் சுலபமாக வந்து விடும்.
* உங்கள் வீட்டு ஃப்ரிசரினுள் அடிக்கடி நிறைய ஐஸ் கட்டிகள் சேர்ந்து விடுகின்றனவா? அதனுள்ளே கொஞ்சம் உப்பைத் தூவி வைத்து விடுங்கள். ஐஸ் உறையாது.
* கதவிடுக்குகள் கிறீச் ஒலி எழுப்பி இம்சிக்கின்றனவா? அந்த இடங்களில் பென்சிலால் தேய்த்து விடுங்கள். பென்சி லில் உள்ள கிராஃபைட் சத்தத்தைக் குறைக்க உதவும்.
* அடிப்பிடித்துக் கறை படிந்த பாத் திரங்களினுள் குளிர்ந்த தண்ணீரை நிரப்பி, அத்துடன் கொஞ்சம் பிளீச்சிங் பவுடரையும் போட்டு இரவு முழுக்க அப்படியே வைத்து விடுங்கள். மறுநாள் காலை சோப்பு போட் டுக் கழுவினால் பாத்திரங்கள் பளிச்சென மாறும்.
* தேங்காயை அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து விட்டு உடைத்தால் அதன் நாரை சுலபமாக நீக்க முடியும். தேங்காயும் சரி பாதியாக உடையும்.
* துணிகளில் மருதாணிக் கறை கள் பட்டுவிட்டால், அந்த இடத்தை வெது வெதுப்பான பாலில் ஊற வைத்துப் பிறகு சோப்பு போட்டுத் துவைத்தால் கறை நீங்கும்.
* கொஞ்சம் அம்மோனியா அல்லது வினிகர் கலந்த குளிர்ந்த தண்ணீரில் கண்ணாடிப் பாத்திரங்களைக் கழுவினால் அவை புதிது போல பளபளக்கும்.
* முட்டையின் வெள்ளைக் கருவை அடித்து வைத்து, அத்துடன் கொஞ்சம் உப்பையும், சில துளிகள் எலுமிச்சம் பழச் சாற்றையும் கலந்து வைத்துவிட்டால் நீண்ட நேரத்திற்கு அப்படியே இருக்கும்.
* காய்கறிகளை சமைக்கும்போது அவற்றில் பச்சை நிறம் போகாமலிருக்க, அவற்றை நறுக்கியதும் உப்பு கலந்த வெந்நீ ரில் சிறிது நேரம் போட்டு வைத்துவிட்டுப் பிறகு ஐந்து அல்லது பத்து நிமிடங்களுக்கு வேக விட்டு எடுக்கவும்.
* துணிகளை தேய்க்கும்போது சில துளிகள் யுடிகோலனை விட்டுத் தேய்த்தால், சென்ட் போட வேண்டிய அவசியமில்லா மல், நல்ல மணமுடனிருக்கும்.
* மெழுகுவர்த்தி ஸ்டான்டினுள் மெழுகுவர்த்தியை ஏற்றி வைப்பதற்கு முன்பாக கொஞ்சம் எண்ணெய் தடவி வைத்து விடுங்கள். மெழுகு எரிந்து முடிந்ததும் அதை நீக்குவது சுலபமாக இருக்கும்.
* வாஷ பேசின் அடைத்துக் கொண்டிருக்கிறதா? ஒரு கைப்பிடியளவு சோடா பை கார்பனேட்டும், ஒரு கப் வினிகரையும் ஊற்றி, அதன்மேல் தண்ணீரையும் ஊற்றி விடவும். அடைப்பு நீங்கி வாஷ பேசின் சுத்தமாகும்.
* கை விரல்களில் ஏதேனும் இரும்புத் துகளோ, கண்ணாடித்துகளோ புகுந்து கொண்டு விட்டதா? அந்த இடத்தில் முதலில் கொஞ்சம் ஃபெவிகாலைத் தடவுங்கள். அது காய்ந்ததும் உரித்தெடுங்கள். அத்துடன் சேர்ந்து விரலினுள் மாட்டிக் கொண்ட துகளும் வந்து விடும்.
1. தினசரி ஒரு வெங்காயத்தை பச்சையாக உண்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். இருமல், சளி நீங்கும்.
2. சுண்டைக்காயில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இந்தக்காய் ஆஸ்துமா, ஜீரம் முதலியவற்றை நீக்கும்.
3. கர்ப்பிணிப் பெண்கள் தினமும் ஒரு முறை கேழ்வரகில் செய்த உணவுப்பொருளை சாப்பிட வேண்டும். இதில் இரும்புச்சத்து, கால்சியம் உள்ளது.
4. வேப்பம்பூவை ரசம் வைத்துச் சாப்பிட்டால் உடம்பில் உள்ள கிருமிகள் அழியும். பித்தம் குறையும்.
5. தினமும் முருங்கைக் கீரையைச் சாப்பிட்டால் நீரழிவு நோய் கட்டுப்படும். கண் பார்வை தெளிவு பெறும்.
6. அதிக இருமல் ஏற்படும் போது ஒரு ஸ்பூன் தேன் சாப்பிட்டால் இருமல் குறையும்.
7. சாதாரண வாய்வுப் பிடிப்பிற்கு சுக்கையும், பனை வெல்லத்தையும் கலந்து சாப்பிட்டால் போதும்.
8. அடிக்கடி காபி, டீ ஆகியவற்றை அளவுக்கு அதிகமாக குடிப்பதும், அடிக்கடி பட்டனி கிடப்பதும், சிகரெட், மது குடிப்பதாலும் குடற்புண் விரைவில் ஏற்படும்.
9. கூடுமான வரையில் தாளிப்பு இல்லாமல் உணவு உண்பதே நல்லது.
10. மைதா மாவினால் செய்த உணவுகளைக் குறைத்தாலும் அல்லது நீக்கினாலும் உடல் பருமன் குறையும்.
11. நாம் நம் உடம்பிற்கு ஒரே சோப்பையே எப்போதும் பயன்படுத்த வேண்டும். சோப்பை அடிக்கடி மாற்றுவதால் சரும வியாதிகள் ஏற்படும்.
12. நெய்க்காக வெண்ணையைக் காய்ச்சும் போது அரை ஸ்பூன் வெந்தையத்தைப் போட்டு இறக்கினால் நெய் மணமாக இருக்கும்.
13. மணத்தக்காளிக் கீரையை பருப்புடன் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் ஆசனக்கடுப்பு, மூல நோய் குணமாகும்.
14. கறிவேப்பிலை, இஞ்சி, சீரகம் மூன்றையும் சிறிதளவு எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்துக் குடித்தால் அஜீரணம் சரியாகிவிடும்.
15. முள்ளங்கி கீரையில் வைட்டமின் சத்து உள்ளது. இக்கீரை தொற்று நோய்களை விரட்டி அடிக்கும்.
16. உடல் எடை குறைந்தவர்கள் வாழைப்பழம் தினமும் இரவில் உண்டு வந்தால் எடை கூடும்.
17. எலுமிச்சை, ஆரஞ்சு தோல்களை அலமாரியில் வைத்தால் சிறிய பூச்சிகள் நெருங்காது.
18. குளிக்கும் சோப்பைத் தலைக்கு தேய்கக் கூடாது. முடி கொட்டி, விரைவில் நரைத்து விடும்.
19. இட்லிக்கு மாவு அரைக்கும் போது உளுந்துக்குப்பதில் சோயா மொச்சையை பயன்படுத்தினால் அதிக சத்தான இட்லி கிடைக்கிறது.
20. டிவி, குளிர்சாதனப்பெட்டி, ட்யூப் லைட் இவற்றை உபயோகத்திற்குப்பின் அணைத்து விட்டு மீண்டும் உடனே போடக்கூடாது. ரெஃப்ரிஜிரேட்டரில் கம்ப்ரெஸ்ஸரும், டிவியில் பிக்சர் ட்யூபும் ட்யூப் லைட்டில் பாலண்டும் பழுதாகி விடும். நிறுத்திய பின் உள்ளே மாற்றங்கள் நிகழ்ந்து பூர்த்தியாக சில நிமிடங்கள் பிடிக்கும். சில நிமிடங்கள் விட்டு மறுபடியும் போடுவது நல்லது.
21. குளிர்சாதனப்பெட்டியைத் துடைக்கும்போது பச்சைக்கற்பூரம் கலந்த நீரினால் துடைத்தால் பூச்சிகள், சிறு வன்டுகள் உள்ளே நுழையாது.
22. கறுத்துப்போன வெள்ளி சாமான்களை தாம்பூல சுண்ணாம்பு கொண்டு தேய்த்தால் பளபளவென்று ஆகி விடும்.
23. சர்க்கரை வைத்திருக்கும் பாட்டிலில் சில ஏலக்காய்களைப் போட்டு வைத்தால் எறும்புகள் சீனியை மொய்க்காது.
24. சில வகை தண்ணீரில் துணிகள் துவைக்கும்போது துணிகள் பழுப்பாகி விடுகின்றன. இதற்கு அவற்றை சோப் பவுடரில் ஊறவைக்கும்போது 2 மேசைக்கரண்டி கல் உப்பும் சேர்த்து ஊறவைத்தால் துணிகள் பழுப்பு நிறம் நீங்கி பளிச்சென்றாகி விடும்.
25. மரச்சாமான்களை பாலீஷ் செய்வதற்கு, முதலில் அவற்றை வினீகர் கலந்த நீரால் கழுவி, துடைத்து காய வைத்து பிறகுதான் பாலீஷ் பூச வேண்டும்.
26. மூட்டைப்பூச்சி தொந்தரவிற்கு, கட்டிலின் நான்கு கால்களிலும் சூடம் அல்லது புரசம் பூவை வைத்து கட்டி வைக்க வேண்டும். தலையணை, மெத்தை இவற்றில் கற்பூரத்தைத் தூள் செய்து தூவலாம்.
27. தோல் பொருள்களின் நிறம் மங்காதிருக்க, அவற்றின் மீது லின்ஸிட் ஆயில் எனப்படும் ஆளி விதை எண்ணையைப் பூசி துடைக்க வேண்டும்.
28. ஈக்கள் அதிகம் உள்ள இடத்தில் தூவக்காலில் நெருப்பிட்டு கிராம்புத்தூளைத் தூவினால் ஈக்கள் பறந்து விடும்.
29. மெழுகுவர்த்தி அதிக வெளிச்ச்சம் தர, அதை ஒரு பாத்திரத்தில் நிற்க வைத்து அதன் அடியில் தண்ணீர் ஊற்றி எரிய விடவும். உப்பில் புதைத்து வைத்தும் எரிய விடலாம்.

*more articles click*
www.sahabudeen.com
No comments:
Post a Comment