1) ஒரு வாரமாகப் புதிதாக வந்திருக்கும் சினிமாக்குப் போகலாம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் மனைவியிடம் இன்னைக்குக் கண்டிப்பா நாம ஈவ்னிங் படம் பாக்க போறோம் என்று தலையில் அடிக்காத குறையாகச் சத்தியம் செய்து விட்டு ஆபிஸுக்கு வந்து இருக்கிற வேலையெல்லாம் இழுத்து போட்டு எவ்வளவு சீக்கிரமா செய்ய முடியுமோ அவ்வளவு சீக்கிரமா செய்து விட்டு, பிடுங்கிய ஆணியை எல்லாம் ஒரு ரிப்போட்டா போட்டுவிட்டு வீட்டுக்குப் போகலாம் என்று மெயிலை திறந்தால் கிளைண்ட் அனுப்பிய மெயில் ஒரு நான்கை ஒபன் பண்ணி பார்க்கமலே "பிளீஸ் டூ நீட் புள்" என்று புராஜெக்ட் மேனேஜர் அனுப்பி வைத்திருப்பார். அதுல ஹை பிரியாரிட்டி கிளிக் செய்யப் பட்டிருக்கும், அது மட்டும் அல்லாமல் ஆபிஸில் இருக்கும் மொத்த பெரிய புள்ளிகளும் சிசியில் வைக்கப்பட்டிருக்கும்.
2) மூணு மாசத்துக்கு முன்பே, என்னோட மனைவின் தங்கச்சிக்குக் கல்யாணம் இருக்கிறது, நான் கண்டிப்பா போகணும், ஒரு வாரமாவது லீவு வேண்டும் என்று நேரம் கிடைக்கும் போது எல்லாம் சொல்லி இருப்போம். அப்பயெல்லாம் மூணு மாசம் கழிச்சி தானே, ஒண்ணும் பிரச்சனையில்லை தாராளமா நீங்க போகலாம் என்று சொல்லிவிட்டு, ஊருக்கு போறதுக்கு ஒரு வாரம் இருக்கும் போது அடுத்த வாரம் நான் கிளைன்ட் மீட்டிங்கு அவுட் ஆப் கண்டிரி போறேன் நீங்க தான் புராஜெக்ட்டை பார்த்க்கணும் என்று சீரியஸா பேசுவாரு. நான் இல்லனா நீங்க தான் புராஜெக்டை பார்த்துகிறீங்கனு மேனேஜர் கிட்ட சொல்லியிருக்கிறேன் என்று கொக்கியை போடுவாரு.
3) எல்லா நாளும் ஒன்பது மணி ஆபிஸுக்கு, எட்டே மூக்காலுக்கே போய் லைட் போடுறதுல தொடங்கி, ஏசியை ஆன் செய்து ரூம் பிரஷ்னெர் அடிக்கிறது வரை நாமளா தான் இருப்போம். அப்பயெல்லாம் மேனேஜர் சீக்கிரம் வர மாட்டார், ஆனா ஒரு நாளு டிராபிக்ல வண்டி மாட்டி ஐந்து நிமிடம் லேட்டா வந்த அன்னைக்குத் தான் நம்மளை தவிர எல்லோரும் சிஸ்டம் முன்னாடி உக்கார்ந்து இருப்பார்கள், கிளாஸ் டோரை திறந்து உள்ளே பார்த்தால் மேனேஜர் கூடச் சீக்கிரம் வந்து இருப்பார். ஒரு நாளும் இல்லாமல் இன்றைக்கு முகத்துக்கு நேர் பார்த்துக் குட் மார்னிங் சொல்லுவார். அவர் சொல்லும் விதமே நீ இன்னைக்கு லேட்டா வந்திருக்க என்பதை உணர்த்தும்.
4) கம்பெனி நடத்தும் பார்மேசன் நாளில் மேனேஜர் உட்படப் பெரிய புள்ளிகள் அனைவரும் சொல்லிவைத்தார் போல், ஜப்பான்ல சான்சுகி கூப்டாக, அமெரிக்காவில் பில்கேட்ஸ் கூப்டாக, இவ்வளவு ஏன் இந்தியாவுல பா.சிதம்பரம் அவுங்களும் புராஜெக்ட் பண்ண கூப்பிட்டாக என்று கலர் கலரா சொன்னதை நம்பி மூணு மாசம் கழிச்சி போட போற இங்கிரிமென்ட் கனவு இப்பவே வர தொடங்கிவிடும். இங்கிரிமென்ட் கவர் கொடுக்கும் நாளில் மேனேஜர் ரூம்க்கு போனா, அந்தப் புராஜெக்ட்ல பணம் வர்ல, அந்தக் கிளைன்ட் ஏமாத்திட்டான், எக்னாமிக் கிரைசிஸ், புதுப் புராஜெக்ட் ஏதும் வரலனு கதற, கதற அழவைச்சிட்டுக் கையில் ஒரு குச்சி ஐஸு போல இங்கிரிமென்ட் கவரை தந்து விடுவார்.
5) புதுசா வர போற புராஜெக்ட்டுக்குத் தேவையான பைல்களை மெயிலிலும், டாக்குமென்ட்களைப் பிரிண்ட் போட்டும் பெரிய பெரிய கட்டா கொடுத்து வீட்ல இருந்து ரிபர் பண்ணுங்கனு சொல்லும் மேனேஜர், முடிச்சு கொடுத்த புராஜெக்ட்டுக்கு வர வேண்டிய இன்சன்டிவ் பற்றித் தவறா கூடப் பேச மாட்டார். நாம கேட்கலாம் என்று மேனேஜர் ரூம்க்கு போன ஏவனோ ஒரு புராஜெக்ட் மேனேஜர் பாதியில வுட்டுட்டு போன புராஜெக்ட்டுக்குப் பணம் வர்லனு மேனேஜிங் டைரக்டர் திட்டினார் என்று தலையில் கை வைப்பார்.
6) ஆறு மாசம் பண்ண வேண்டிய புராஜெக்டை, ஆர்வ கோளாரில் மூணு மாசத்துல முடிக்கலாம் என்று மைக்ரோசாப்ட் புராஜெக்ட்ல ஒவ்வொரு நாளும் முடிக்க வேண்டிய டார்கெட்டை பார் சார்ட் போட்டு கிளைண்டுக்கு பிளான் போட்டு கொடுத்துவிட்டு, நீங்க கொடுத்த பிளான் படி ஏன் புராஜெக்ட் முடிக்கவில்லை என்று கிளைன்ட் கேட்கும் போது மட்டும், அப்படியே நம்ம பக்கம் முகத்தைத் திருப்பிக் கேட்க வேண்டியது. நாமளும் வழக்கம் போலச் சர்வர் சரி இல்ல, கிளைன்ட கொடுத்த இன்புட் சரியில்லை, ஆன்சைட்ல இருந்து இன்பார்மேஷன் கரெட்ட வந்து சேரலனு ஒரு பக்க மெயில் டைப் பண்ணனும்.
7) தலை வலிக்குது என்று ஓர் அரை நாள் லீவு வாங்கலாம் என்று மேனேஜர் ரூம்க்குப் போனால், உக்கார வச்சு, நாம பண்ணிய புராஜெக்ட்டுக்குக் கிளைன்ட் கொடுத்திருக்கும் கமெண்டுகளை ஒவ்வொன்னா படிக்க ஆரம்பித்து விடுவார். இது போதாது என்று புராஜெக்ட்டுப் பிளானை வேறு ஓபன் செய்து வைத்துவிட்டு நாம் இன்னைக்கு இவ்வளவு டார்கெட் முடிச்சு இருக்கனும், ஆனா அதுல பாதிக் கூட முடிக்கவில்லை. எப்படி முடிக்கப் போகிறோம், புதுசா பிளான் ஏதும் வைச்சு இருக்கீங்கள?.. இப்படியே போய்ட்டு இருந்தா புராஜெக்ட்டை கிளைன்ட் கேன்சல் பண்ணிடுவான். நீங்க தான் ஏதாவது பண்ணனும் என்று கேப் விடாமல் பேசுவார். நமக்கு வந்த தலைவலி எப்பவோ ஓடி போயிருக்கும். அதுக்கு பதிலா பிபி ஏற துவங்கியிருக்கும்.
8) வெள்ளிக்கிழமை வந்தாலே முகத்தில் அவ்வளவு ஒரு சந்தோசமாக இருக்கும். இரண்டு நாளு லீவு இருக்கு நிம்மதியா தூங்கலாம், அவுட்டிங் போகலாம், சினிமா பார்க்கலாம் என்று நினைத்து கொண்டிருப்போம். அன்றைக்கு மதிய நேரத்திற்குப் பிறகு வேலை என்பது ஏதோ கடமைக்கு என்று தான் செய்து கொண்டிருப்போம். அப்பதான் கான்பிரன்ஸ் ரூம்க்கு எல்லோரும் வாங்க என்று மேனேஜரின் மெசேஸ் வரும். என்னவா இருக்கும் என்று உள்ள போனா முகத்தில் அப்படி ஒரு கடுமை இருக்கும். கிளைன்ட் கிட்ட இருந்து இப்ப தான் மெயில் வந்தது, நாம் கொடுத்த பிளான் படி டார்கெட்டை அச்சீவ் பண்ணலியாம், இப்படியே போனால் புராஜெக்ட் கான்டிராக்டை பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டி வரும் என்று கடுமையாக எச்சரித்து இருக்கிறான். அப்படி ஒண்ணு நடந்த நீங்களும், நானும் வீட்டுக்கு தான் போகணும் என்று பீதியை கிளப்புவார் மேனேஜர். அப்புறம் என்ன "எல்லா நாளும் எங்கள் வீட்டில் கார்த்திகை" என்று விஜயகாந்த் உடன் கைகோர்த்துப் பாடுவதைப் போல், நாங்களும் "வாரத்தில் ஏழு நாளும் எங்கள் ஆபிஸில் சிவராத்திரி" என்று மேனேஜருடன் கை கோர்க்க வேண்டும்.
9) ஊருக்கு போயிட்டு வரும் போது ஏடிம் கார்ட்ல இருக்கிற மொத்த காசையும் காலி செய்துவிட்டு, பார்சையும் காலியா வைத்துக் கொண்டு எப்படியும் நாளைக்கு மாதத்தின் முதல் தேதி, சம்பளம் கார்ட்ல கிரெடிட் ஆகிடும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தால், அப்ப தான் அட்மின் கிட்ட இருந்து மெசேஸ் வரும், எதிர்பாரத விதமா இன்னைக்குச் சம்பளம் பேங்க்ல போட முடியவில்லை, நாளைக்குத் தான் போடுவோம், மறுநாள் பேங்க் லீவு அதனால மண்டே தான் உங்களுக்குக் கிரெடிட் ஆகும் என்று. அப்புறம் என்ன வழக்கம் போலக் நல்ல குடும்பஸ்தனா பார்த்து தேட வேண்டியது தான். ஏன்னா அவன் தான் மாச கடைசி ஆனாலும், அக்கவுட்ல பணம் வைத்திருப்பான். அதுல என்ன "நல்ல குடும்பஸ்தன்" என்னைப் போலவும் எப்பவுமே அக்கவுண்டை காலியா வைத்திருக்கும் குடும்பஸ்தன் சில பேரு இருப்பாங்க தானே!!.
10) பொங்கலுக்கு ஊருக்கு போறதுக்கு மூணு மாசத்துக்கு முன்பே இரயில்ல டிக்கெட் புக் பண்ணி வைச்சுட்டு இருந்தா, பொங்கல் வர்றதுக்கு ஒரு வாரத்திற்கு முன்னாடி பொங்கலுக்கு நீங்க ஊருக்கு போக வேண்டாம்!! அது முடிஞ்ச பிறகு ஒரு வாரம் லீவு போட்டு போயிட்டு வாங்க, எல்லோரும் ஒரே டைம் லீவு போட்டா புராஜெக்ட்டை ரன் பண்ண முடியாது என்று தோளின் மீது தட்டுவார் மேனேஜர்.
http://nadodiyinparvaiyil.blogspot.com/2014/03/blog-post_27.html
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com
No comments:
Post a Comment