"கட்டிலாலை எழும்பிக் காலைக் கீழே வைக்க முடியுதில்லை. அவ்வளவு வலி காலையிலை" என்றவரை நோக்கி "மற்ற வேளைகளிலை வலி வாறதில்லையோ" எனக் கேட்டேன்.
"கனநேரம் கதிரையிலை இருந்திட்டு எழும்பி நடக்கவும் கஸ்டம்தான்" என்றார் அப் பெண்மணி.
ஆம் நீண்ட நேரம் அசைக்காது இருந்துவிட்டு எழுந்து நடக்க ஆரம்பிக்கும்போது குதிக்காலில் வலியை ஏற்படுத்துகிறது இந் நோய். சில அடிகள் நடக்க வலி தானே குறைந்து விடும். ஆனால் கவனியாது விட்டால் காலம் செல்லச் செல்ல வலியானது நாள் முழுவதும் உங்களுக்குத் துன்பம் தரக் கூடும்.
இதனை பிளான்டர் பஷியடிஸ் (Planter fascitiis) என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். தமிழில் குதிவாதம் என்றே பலரும் குறிப்படுவார்கள்.
வாதம் என எம்மவர்கள் குறிபிட்ட போதும் பக்கவாதம் பாரிசவாதம் போன்ற ஆபத்தான நோயல்ல. சிலவேளைகளில் அப்பகுதி சிவந்து வீங்கி சூடாக இருக்கலாம். ஆனால் பெரும்பாலும் இவை எதுவுமே வெளிப்படையாகத் தெரிவதில்லை. வலி மட்டுமே ஒரே ஒரு அறிகுறியாக இருக்கும். பாதத்தின் அடிப்பகுதில் உள்ள சவ்வுகளில ஏற்படும்; அழற்சியாலேயே இந்நோய் ஏற்படுகிறது. இது மூட்டுகளில் ஏற்படும் நோய் அல்ல.
ஏன் வருகிறது
ஆனால் இத்தகைய சவ்வு அழற்சி தவிர்ந்த வேறு காரணங்களாலும் குதிக்காலில் வலி ஏற்பட வாய்ப்புண்டு.
பொதுவான நாம் நடக்கும்போது எமது பாதங்களை முழுமையாக ஊன்றி நடப்போம், ஆனால் பாதத்தில் ஆணிக் கூடு, தோற்தடிப்பு
(Callocity), புண்கள், மூட்டு வலிகள், போன்றவை இருந்தால் பாதங்களை சரியாக தரையில் பதியாமல் உட்பக்கமாகவோ வெளிப்புறமாகவோ சற்று சரிந்து நடப்பதாலும் அவ்வாறான வலி ஏற்படலாம்.
பாதத்தின் பிரதான எலும்பான கல்கேனியத்தில்; வழமைக்கு மாறான எலும்புத் துருதல் இருந்தாலும் அவ்வாறான வலி ஏற்பட வாய்ப்புண்டு.
கெண்டைக் காலின் பின்புறமாக இருக்கும் பிரதான சவ்வான அக்கிலிஸ் ரென்டனில் ஏற்படும் அழற்சியும் இவ்வாறான வலியை ஏற்படுத்தலாம்.
இவற்றைத் தவிர பாதத்தின் மூட்டுகளில் ஏற்படக் கூடிய காயங்கள், உருக் குலைவுகள், ரூமற்ரொயிட் வாதம் அல்லது வேறு ஏதாவது நாட்பட்ட நோய்கள் காரணமாகவும் அத்தகைய வலி ஏற்பட வாயப்புண்டு.
சவ்வுகளின் இறுக்கம் மட்டுமின்றி பாதப்பகுதியின் தளர்ச்சி,
உடற்பயிற்சிகளைத் தவறான முறைகளில் செய்வதும் காரணமாகலாம். பாதத்தின் இயற்கையான வளைவுப் பகுதிக்கு நீங்கள் கொடுக்கும் அதிகரித்த வேலைப் பளுவும் மற்றொரு காரணமாகும். மிக நீண்ட தூரம் ஓடுதல், அதி வேகமாக ஓடுதல், அடிக்கடி ஓடுதல் போன்ற பயிற்சிகள் சிலருக்கு வலியை ஏற்படுத்துவதுண்டு.
அளவுப் பொருத்தமற்ற காலணிகளும், அடிப் பகுதி தேய்நத காலணிகளும் குதியில் வலி ஏற்படுத்த வாய்ப்புண்டு.
சிகிச்சை
சிகிச்சைகள் பல வகைப்படலாம். வலி ஏற்படாமல் தடுப்பதற்கான ஆலோசனைகளுடன், தசை சவ்வுகளுக்கான பயிற்சி முறைகள், உட்கொள்ளும் மாத்திரைகள், ஊசி ஏற்றுதல் போன்றவற்றை உங்கள் மருத்துவர் சிபார்சு செய்யக் கூடும்.
காலையில் படுக்கையை விட்டு எழுந்து நடமாட ஆரம்பிக்க முன்னரே பயிற்சிகளை ஆரம்பியுங்கள். எழுந்தவுடன் உங்கள் பாதத்தை குறுக்குவாட்டாக அழுத்தித் தேய்த்து சில நிமிடங்களுக்கு மஸாஜ் செய்வது நல்ல பலனைக் கொடுக்கும்.

அதேபோல நீண்ட நேரம் ஓரிடத்தில் உட்கார்ந்து இருந்த பின் எழுந்து நடக்க நேர்ந்தால், நடக்க ஆரம்பிக்க முன்னர் மசாஸ் செய்யுங்கள்.
பகலில் பதமான சூட்டு வெந்நீரில் பாதங்களை சிறிது நேரம் வைத்திருப்பதும் வலியைத் தணிக்க உதவும். இது சுடுநீர் ஒத்தடம் கொடுப்பதை ஒத்தது. மாறாக ஐஸ் கலந்த தண்ணீரில் கால்களை வைப்பதும் உதவலாம்.
பாதங்களின் கீழ் ஒரு பந்தை வைத்து அதை முன் பின்னாக உருட்டுவதும் மற்றொரு பயிற்சியாகும்.

அடுத்தது தசைகளைப் பலப்படுத்தும் பயிற்சிகளை நீங்கள் செய்ய வேண்டும். இவை உங்கள் நோயைத் தணிப்பதில் நல்ல பலனைக் கொடுக்கும்.
கெண்டைத் தசைகளுக்கான பயிற்சிகள்.
முழங்காலுக்குக் கீழ் இருக்கும் கெண்டைக்கால் தசைகளுக்கான இழுவல் பயிற்சிகளும் குதிக்கால் வலியைத் தணிக்க உதவும். மேலே காட்டிய படங்களில் உள்ளபடி இரண்டு விதமாக செய்ய வேண்டும். சுவரை உங்கள் கைகளால் தள்ளுவது போன்றவையே இப் பயிற்சிகள்.

- முதலாவது படத்தில் காட்டியபடி உங்கள் இரு கைகளையும் முழங்கைப் பகுதியில் மடிக்காது நேராக வைத்துக் கொண்டு சுவரை இறுகத் தள்ளுங்கள். தள்ளும்போது முன்னிருக்கும் கால் சற்று மடிந்திருக்க பின்னே மடியாதிருக்கும் காலின் குதிப் பகுதியில் பாரம் பொறுக்குமாறு செய்யுங்கள். அடுத்த தடவை கால்களை மாற்றி மறுகாலில் பாரம் பொறுக்குமாறு பயிற்சியைச்; செய்யுங்கள்.
- இரண்டாவது படத்தில் காட்டிய அடுத்த பயிற்சியின்போது உங்கள் கைகள் முழங்கைப் பகுதியில் சற்று மடிந்திருக்க சுவரைத் தள்ளுங்கள். இது பாதத்தின் முற்பகுதியில் பாரம் தங்குமாறு செய்யும்.
உண்மையில் இவை உங்கள் தசைகளைப் பலமுறச் செய்து அதனால் எதிர்காலத்தில் வலிகள் தொடராது வேதனையைக் குறைக்க உதவும்.
பாதத்து தசைகளுக்கான பயிற்சிகள்
பாதத்தின் தசைநார்களுக்குக் கொடுக்கும் பயிற்சிகள் பல வகைப்படலாம். துவாயைச் சுருட்டல், மார்பிள் அல்லது நாணயங்களை கால் விரல்களால் பொறுக்கல், மற்றும் காற் பெருவிரல் தட்டல் பயிற்சிகள் போன்றவை சுலபமானவை. பயிற்சிகளின் பெயர்களைக் கேட்டவுடன் பயந்துவிடாதீர்கள். மிகவும் சுலபமானவை. தொடர்ந்து செய்ய நல்ல பலனையும் கொடுக்கும்.
துவாயைச் சுருட்டல் பயிற்சி - ஒரு துவாயை தரையில் விரியுங்கள். படத்தில் காட்டியபடி உங்கள் பாதத்தை அதன் ஒரு ஓரத்தில் வைத்தபடி அருகே ஒரு நாற்காலியில் உட்காருங்கள். துணியை உங்கள் கால்விரல் நுனிகளால் பற்றி உங்கள் பக்கமாக சுருட்டிச் சுருட்டி இழுங்கள். பல முறை இவ்வாறு செய்யுங்கள்.

மார்பிள் பொறுக்கல் பயிற்சி
இன்னுமொரு பயிற்சி கால் விரல்களால் மார்பிள்களை பொறுக்குவதாகும். சில மார்பிள்களை, நாணயங்களை அல்லது சோடா மூடிகளை நிலத்தில் போட்டு வையுங்கள். அருகில் உயரம் குறைந்த ஒரு கோப்பையை வையுங்கள்.
உங்கள் குதிக்கால் நிலத்தில் படும்படி உட்கார்ந்து கொண்டு மார்பிள்களை உங்கள் கால் விரல்களால் பொறுக்கி எடுத்து அருகில் ஏற்கனவே வைத்த கோப்பைக்கள் போடுங்கள். நாணயங்களை இவ்வாறு பொறுக்கிப் போடுவது இன்னும் நல்ல பயிற்சியாகும்.
கால்விரல் தட்டல்
கால்விரல் தட்டல் (Toe tab) இன்னுமொரு நல்ல பயிற்சியாகும். இது ஒரு நுணுக்கமான ஆனால் சிறந்த பயிற்சியாகும். உங்கள் பாதத்தின் குதிப் பகுதியை தரையில் திடமாக இருக்கும்படி வையுங்கள். காலின் முற்பகுதியை மட்டும் மேலே உயர்த்துங்கள். இப்பொழுது நான்கு விரல்கள் உயர்ந்தபடி நிற்க பெருவிரலால் மாத்திரம் தரையைத் தட்டுங்கள். இனி மறுபுறமாகச் செய்யுங்கள். அதாவது பெருவிரல் உயர்ந்து நிற்க மற்ற நான்கு விரல்களால் தரையைத் தட்டுங்கள்.

இவ்வாறு பலமுறை செய்ய வேண்டும். ஒரு தவணையில் பத்து முறையாவது செய்யுங்கள். படிப்படியாக ஒவ்வொரு தவணையிலும் ஐம்பது முறையாவது செய்யும்படி பயிற்சியை அதிகரியுங்கள்.
மருந்துகள் ஊசி
வலியையும் அழற்சியையும் தணிக்கும் வலிநிவாரண மாத்திரைகளும் உங்களுக்கு நிச்சயம் உதவும். வைத்தியரின் ஆலோசனையுடன் குறிப்பிட்ட காலத்திற்கு அத்தகைய மாத்திரைகள நீங்கள் உட்கொள்ள சுகம் தெரியும்.
சில வேளை ஹைட்ரோகோட்டிசோன் ஊசி மருந்தை வலி அதிகமுள்ள இடத்தில் உங்கள் வைத்தியர் போடவும் கூடும்.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
M.B.B.S(Cey), D.F.M(SL), F.C.G.P(SL)
குடும்ப வைத்திய நிபுணர்
http://hainallama.blogspot.in/2014/03/blog-post_10.htmlவலியையும் அழற்சியையும் தணிக்கும் வலிநிவாரண மாத்திரைகளும் உங்களுக்கு நிச்சயம் உதவும். வைத்தியரின் ஆலோசனையுடன் குறிப்பிட்ட காலத்திற்கு அத்தகைய மாத்திரைகள நீங்கள் உட்கொள்ள சுகம் தெரியும்.
சில வேளை ஹைட்ரோகோட்டிசோன் ஊசி மருந்தை வலி அதிகமுள்ள இடத்தில் உங்கள் வைத்தியர் போடவும் கூடும்.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
M.B.B.S(Cey), D.F.M(SL), F.C.G.P(SL)
குடும்ப வைத்திய நிபுணர்
--
No comments:
Post a Comment