Saturday, September 29, 2012

அனுபவங்கள் பேசுகின்றன ! உபயோகமான தகவல்கள்


பவர் கட்... டி.வி. அவுட்!
டி.வி-யை ரிமோட்டில் மட்டும் ஆஃப் செய்துவிட்டு, மெயின் ஸ்விட்சை ஆஃப் செய்யாமல் விடுவது இங்கு பலருக்கும் உள்ள கெட்ட பழக்கம். சமீபத்தில் நானும் அப்படித்தான் ரிமோட்டில் ஆஃப் செய்துவிட்டு, கிச்சன் வேலைக்குச் சென்றுவிட்டேன். மறுபடியும் டி.வி-யை ஆன் செய்தபோது, அது பழுதாகியிருந்தது. காரணம் புரியாமல் எலெக்ட்ரீஷியனை அழைக்க, அவர் சொல்லித்தான் புரிந்தது நான் செய்த தவறு. ''பவர் கட்டான பிறகு, மீண்டும் பவர் சப்ளை வரும்போது, சில நேரங்களில் சப்ளை அதிகமாக வரும். அப்போது டி.வி. மெயின் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்படாமல் இருந்தால்... பழுதாக வாய்ப்புள்ளது. டி.வி. மட்டுமல்ல... கிரைண்டர், மிக்ஸி என்று எல்லா மின் சாதன பொருட்களுக்கும் இது பொருந்தும்'' என்றார்.
இப்போதெல்லாம், தேவையில்லாதபோது அனைத்து எலெக்ட்ரானிக் பொருட்களின் மெயின் ஸ்விட்ச்களையும் ஆஃப் செய்யப் பழகிக் கொண்டுவிட்டேன். குறிப்பாக, பவர் ஆஃப் ஆகும் சமயங்களில் கூடுதல் கவனத்தையும் சேர்த்துக் கொண்டுவிட்டேன்! இனி நீங்களும்தானே..?!
அடுப்பை ஊதி அணைக்காதீர்கள்!
என் தோழி சமையல் செய்து கொண்டிருந்தபோது, அவசரமாக மளிகைப் பொருள் ஒன்று தேவைப்பட்டிருக்கிறது. கேஸ் ஸ்டவ்வை 'சிம்’-ல் வைத்துவிட்டு, பக்கத்திலிருக்கும் கடைக்கு சென்றிருக்கிறாள். அதற்குள்ளாக அடுப்பில் தீய்வது போன்ற வாசனை வர, கிச்சனுக்குச் சென்று பார்த்த அவளுடைய பாட்டி, விளக்கை ஊதி அணைப்பதைப் போல கேஸ் ஸ்டவ்வை ஊதி அணைத்திருக்கிறார். சில நிமிடங்களில் வீடு திரும்பிய தோழி, 'குப்'பென கேஸ் வாடை வரவே... அலறியடித்து கிச்சனுக்குச் சென்று பார்த்திருக்கிறாள். அடுப்பு அணைந்திருக்க... அதிர்ச்சியாகி அதை அவசரமாக ஆஃப் செய்திருக்கிறாள். அப்போது எட்டிப் பார்த்த பாட்டி, 'நீ பாட்டுக்கு அடுப்பை அமத்தாமப் போயிட்ட... நான்தான்அணைச்சேன்என்றிருக்கிறார், விபரீதம் புரியாமல்.
வீட்டிலிருக்கும் வயதானவர்களுக்கும் கேஸ் ஸ்டவ் போன்ற நவீன சாதனங்களை எப்படி இயக்குவது எனக் கற்றுக் கொடுப்பது, இதுபோன்ற விபரீதங்களைத் தவிர்க்க உதவுமே..?! 
மொத்த சாப்பாடும் டேபிளுக்கு வரக்கூடாது!
கோயிலுக்குச் சென்று திரும்பும் வழியில், தோழிக்கு ஒரு 'ஹாய்சொல்லலாம் என அவள் வீட்டுக்குச் சென்றோம் நானும் என் கணவரும். எங்களைக் கண்டதும் சர்ப்ரைஸ் ஆனவள், ''உப்புமா செஞ்சுருக்கேன்... சாப்பிட்டுத்தான் போகணும்'' என்று வற்புறுத்தி, டைனிங் டேபிளில் தட்டுகளைப் பரத்தியவாறே தன் மகளிடம் உப்புமாவை எடுத்து வரச் சொன்னாள். எட்டாவது படிக்கும் அவள் பெண், உப்புமாவை சமைத்த பாத்திரத்துடன் அப்படியே எடுத்து வந்தாள். ''எப்பவுமே சமைச்ச உணவை, அதே பாத்திரத்தோட வெச்சு பரிமாறக்கூடாதும்மா. இன்னொரு பாத்திரத்தில் மாற்றி எடுத்து வந்துதான் பரிமாறணும். அதுதான் டேபிள் மேனர்ஸ். இன்னொரு பக்கம், சமைத்த பாத்திரத்தோட எடுத்துட்டு வந்தா... சாப்பிடறவங்க, 'மொத்த சாப்பாட்டையும் எடுத்துட்டு வந்துட்டாங்களே... நாம நிறையச் சாப்பிட்டுருவோமோ, வீட்டுக்காரங்களுக்கு மீதம் இருக்காதோ?’னு சங்கடத்தோடயே சாப்பிடுவாங்க...'' என்று ஆதரவாகக் கற்றுக்கொடுக்க, அவள் பெண்ணும் அதையெல்லாம் சரியெனக் கேட்டுக் கொண்டாள்.
பிள்ளைகளுக்கு எல்லாப் பழக்க வழக்கங்களையும் இப்படி விளக்கத்துடன் கற்றுக் கொடுப்பது... நல்ல விஷயம்தானே!
பெற்றோரே... யோசியுங்கள்!
அரசுப் பள்ளி ஒன்றின் ஆசிரியையாக இருக்கிறேன். பொதுவான மாணவர்களுக்கான அந்தப் பள்ளியில்... மாற்றுத்திறனாளிகள், மனநிலை பிறழ்ந்தவர்கள் (குறிப்பிட்ட சதவிகிதம்) என்கிற நிலையில் உள்ள சில குழந்தைகளும் உள்ளனர். தங்கள் பிள்ளைகளின் இயல்பு தெரிந்தும், அவர்களுக்கான சிறப்புப் பள்ளிகளில் சேர்க்காமல், இப்படி இயல்புப் பள்ளிகளிலேயே சேர்த்துள்ளனர் சம்பந்தப்பட்ட பெற்றோர். ''இதனால் உங்கள் குழந்தைகளுக்கு எந்தப் பயனும் விளையப் போவதில்லை. சிறப்புப் பள்ளிகளில்தான் அவர்களின் குறைபாட்டுக்கு ஏற்ப பயிற்சி அளிக்கப்படும்'' என்றாலும், கௌரவக் குறைச்சலாக நினைத்து, அதை ஏற்க மறுக்கின்றனர். இதே காரணத்துக்காக, மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு அரசு அறிவித்திருக்கும் உதவித் தொகையைப் பெறவும் பலரும் முன்வருவதில்லை.
தங்கள் காலத்துக்கு பிறகும் தங்கள் குழந்தைகளைத் தாங்கக்கூடிய சரியான கல்வியையும், அரசு உதவியையும் பெற்றோரே அவர்களுக்குக் கிடைக்காமல் செய்வது எவ்விதத்தில் நியாயம்?!

Thursday, September 27, 2012

ஆன்லைனில் ரெயில்வே டிக்கெட் புக் செய்யும் வழிமுறைகள்


நீண்ட நெடுந்தூரப் பயணத்திற்கு பெரும்பாலும் நம் இந்திய நாட்டில் நாம் ரயில் பயணங்களையே நம்பியிருக்கிறோம். ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்வது அவசியம். அப்போதுதான் இருக்கை வசதி கிடைக்கப்பெற்று பயணமும் இனிமையாக அமையும். அவ்வாறு பயணம் செய்ய ரயில் டிக்கெட் பதிவு செய்யும் முறைகளைக் காண்போம். இப்பதிவில் இணையம் மூலம் ரயில் டிக்கெட் பதிவு செய்வது எப்படி? மொபைல் மூலம் ரயில் டிக்கெட் பதிவு செய்யும் முறை, மற்றும் PNR நிலைமையைத் தெரிந்துகொள்ளும் முறை ஆகியவைகளைப் பற்றிப் பார்ப்போம்.


முதலில் ரயில் டிக்கெட்டை பதிவு செய்யும் முறைகளை பார்ப்போம்.

இணையத்தில் பதிவு செய்யும் முறை(Online ticket Booking)

இணையத்தில் ரயில் டிக்கெட் பதிவு செய்ய சில தளங்கள் நமக்கு உதவுகின்றன. அவற்றில் ரயில்வே இணையதளமான IRCTC ஆகும். IRCTC தளத்தின் மூலம் நிறைய பயணிகள் ஆன்லைன் மூலம் தங்களது பயணத்திற்கான டிக்கெட்டை முன் பதிவு செய்கின்றனர். இத்தளத்தில் அணுகுவோரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் தளம் எப்போதும் மெதுவாகவே இயங்கும். அல்லது சில சமயம் இயங்காமல் ஸ்தம்பித்துவிடும்.
 

இக்குறையைப் போக்க சில தனியார் இணையதளங்களும் உள்ளன. அவற்றில் முதன்மையானவையாக கருதப்படுவது
 ClearTrip தளம். இதில் எளிய முறையில் டிக்கெட் புக் செய்யும் முறையை அமைத்துக்கொடுத்திருக்கிறார்கள். மேலும் சில தளங்கள் இருக்கின்றன. அவை: .
1.Yatra.Com/Trains
2.
 MakeMyTrip.Com/Railways
3.
 http://www.railticketonline.com/SearchTrains.aspx
4. http://www.ezeego1.co.in/rails/index.php
5.
 Thomas Cook.Co.In/IndianRail
6.
 ERail.in தளத்தின் மூலம் மிக விரைவாக ரயில்களின் நேரம்(time), தொலைவு(Distance), கட்டணம்(), பயணிக்கும் ஸ்டேசன்கள், சீட் இருக்கிறதா (Seat Availablity) போன்றவற்றைப் பார்த்துக் கொள்ளலாம். உங்களின் PNR Status மிக விரைவாக அறிய முடியும். 

PNR நிலைமையை அறிந்துகொள்ள

முன் பதிவு செய்தபின் நமக்கு இருக்கை வசதியிருந்தால் உடனே தெரிந்துவிடும். பெரும்பாலும் இவ்வாறு உடனே இருக்கை வசதி கிடைக்காது. சில சமயங்களில் காத்திருப்போர் பட்டியலில் நம் பெயர் (waiting list)இருக்கும். அவ்வாறு காத்திருப்போர் பட்டியலில் இருக்கும்போது நமக்கு இடம் கிடைத்திருக்கிறதா என மீண்டும் தெரிந்துகொள்ள இணையத்தையே நாட வேண்டும். இதை PNR status என்று சொல்வார்கள்.

ஒவ்வொரு முறையும் PNR status ஐ அறிந்துகொள்ள இணையத்தையே நாட வேண்டும். இவ்வாறு இணையம் செல்லாமல் உங்களுடைய மொபைலிலேயே PNR status -SMS ஆக பெற முடியும். இத்தளத்தில் சென்று உங்களுடைய PNR நம்பரையும், தகவல் பெற விரும்பும் மொபைல் எண்ணையும் பதிவு செய்தால் போதுமானது.
 www.mypnrstatus.com
இனி பயண சீட்டில் ஏற்படும் மாற்றங்களை உடனுக்குடன் உங்கள் மொபைலுக்கே SMS ஆக தகவல் அனுப்பபடும்.

மொபைல் மூலமாகவும் இவ்வசதியைப் பெற முடியும். அதற்கு உங்கள் மொபைலில் MYPNR என தட்டச்சிட்டு ஒரு இடைவெளி விட்டு பிறகு உங்களுடைய பத்து இலக்க PNR எண்ணை டைப் செய்யவும். இந்த தகவலை 92200 92200 என்ற எண்ணிற்கு SMS அனுப்புங்கள்.

இனி நீங்கள் பயணசீட்டை பதிவு செய்துவிட்டு, ஒவ்வொரு முறையும் பயணசீட்டின் நிலவரத்தை தேடிச் செல்ல வேண்டிய அவசியமில்லை. பயணச்சீட்டின் நிலவரங்கள் உங்களைத் தேடி உங்கள் மொபைலுக்கே வந்து சேரும்.

மொபைல் மூலம் பதிவு செய்யும் முறை:
 

தற்போது மொபைல் மூலமும் ரயில் டிக்கெட்டை பதிவு செய்யலாம். ரயில் பயணம் செய்யும் பயணிகளுக்கு புதிய வசதியாக தற்போது மொபைலைப் பயன்படுத்தி டிக்கெட் பதிவு செய்யும் முறையும் சமீபத்தில் ரயில்வே அறிமுகம் செய்துள்ளது. இதற்கு உங்கள் மொபைலில் GPRS உடன் இணைய இணைப்பையும் நீங்கள் பெற்றிருக்க வேண்டும்.
 

உங்கள் மொபைலில் ரயில்வேயில் புதிய தளமான
 https://www.irctc.co.in/mobile தளத்திற்கு செல்லவும். தளத்தில் முதலில் பதிவு செய்துகொண்டு பிறகு தேவையான வழிமுறைகளைப் பின்பற்றவும். ஒவ்வொரு முறையும் டிக்கெட் பதிவு செய்யும்போது உங்களுடைய யூசர்நேம், பாஸ்வேர்ட் பயன்படுத்தி நீங்கள் உள்நுழைய (login) செய்துகொள்ள வேண்டும். 

கணினியில் E-Ticket பதிவு செய்வதைப் போன்றே மொபைலிலும் கிரடிட் கார்டு, டெபிட் கார்ட் பயன்படுத்தி மொபைலிலும் டிக்கெட்டை புக் செய்துகொள்ளலாம்.
 

தொழில்நுட்ப வசதிகள் பெருக பெருக பயனாளர்களுக்கு நேரமும், மன உளைச்சலும் குறைகிறது. தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(TNPSC) அறிமுகப்படுத்தியுள்ள Onetime REGISTERATION மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறையும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். நன்றி நண்பர்களே...!!!

Wednesday, September 26, 2012

சிகரட்டை சிம்பிள்ளாக நிறுத்த வழி இருக்கு! இத முதல்ல படிங்க!

சிகரட்டை சிம்பிள்ளாக நிறுத்த வழி இருக்கு! இத முதல்ல படிங்க!

எப்படிப்பா இந்த சிகரெட் ´குடிக்கும்´ பழக்கத்தை நிறுத்துவதுஉலகம் முழுவதும் இதே பிரச்சினைதான்!. எத்தனையோ உபாயங்களை பலரும் சொல்கிறார்கள், என்னென்னவோ பண்ணிப் பார்க்கச் சொல்கிறார்கள். ஆனால் புகை பிடிப்பதை அடியோடு நிறுத்த அல்லது வெகுவாக குறைக்க ஒரு ஈசியான வழி உள்ளது.

புகை பிடிக்கும் பழக்கம் எல்லோருக்கும் கூடப் பிறந்தது அல்ல, இடையில் வந்ததுதான். எனவே அதை நிறுத்துவது என்பது மலையை சாய்க்கும் காரியம் அல்ல, சற்றே மனது வைத்தால் போதும். மனக் கட்டுப்பாட்டை சற்றே உறுதியோடு கடைப்பிடித்தாலே போதும் இதை எளிதில் சமாளிக்கலாம்.

 

சரி மேட்டருக்கு வருவோம்சிகரெட் பிடிப்பதை நிறுத்த மிக மிக ஈசியான வழி ஒன்று உள்ளது. அதுகுறித்துத்தான் இந்த கட்டுரையே

முதலில் நீங்கள் புகை பிடிப்பதில் ´செயின்´ ஜெயபாலா அல்லது ´அக்கேஷனல்´ ஆரோக்கியசாமியா, இல்லை´மிடில்கிளாஸ்´ மாதவனாக இருக்கலாம். ஆனாலும் நீங்கள் எப்படியாப்பட்ட ´கிங்ஸாக´ இருந்தாலும் இந்த உபாயத்தைப் பயன்படுத்திப் பார்க்கலாம் நம்பிக்கையோடு.

 

- நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் பிடிப்பவராக இருந்தாலும் பரவாயில்லை, சிகரெட்டை நிறுத்த வேண்டும் என்று முதலில் மனதளவில் தீர்மானியுங்கள். முதலில் கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனாலும் கண்ணை மூடிக் கொண்டு முதலில் முடிவை எடுத்து விடுங்கள்.

 

- முடிவெடுத்து விட்டாயிற்றா, அதை எந்த நாளிலிருந்து அமல்படுத்துவது என்பதையும் தீர்மானியுங்கள். இப்போது முதலே நிறுத்துகிறேன் என்று சவடாலாக முடிவெடுக்க வேண்டாம். அது சாத்தியமில்லாதது. எனவே நாளையிலிருந்து அல்லது அடுத்த வாரத்திலிருந்து என்று ஒரு தேதி குறிப்பிடுங்கள்.

- முடிவு செய்த தேதிக்கு வந்துருச்சா, நீங்கள் தம் அடிக்கும் நேரம் வந்து விட்டதா.. உடனே கடைக்குப் போங்கள். ஒரு சிகரெட்டை வாங்குங்கள். ஆனால் பற்ற வைக்காதீர்கள். அதை வெறுமனே வாயில் வைத்துக் கொண்டு சிறிது நேரம் தம் அடிப்பது போல உணர மட்டும் செய்யுங்கள். ஒரு சிகரெட்டை நீங்கள் எப்படியெல்லாம் அனுபவித்து பிடிப்பீர்களோ, அந்த உணர்வு வருவது போல வாயில் வைத்து எடுங்கள். படு கஷ்டமாகத்தான் இருக்கும். இருந்தாலும் மனதைக் கட்டுப்படுத்துங்கள்.

 

- வாங்கிய சிகரெட்டை அப்படியே வைத்துக் கொண்டு இதே போல முதல் நாள் முழுவதும் செய்து பாருங்கள். சற்று கட்டுப்படுவது போலத் தோன்றும். ஆனால் பெரும் கஷ்டமாகவும் இருக்கும். இருந்தாலும் மனம் தளர்ந்து பற்ற வைத்து விடாதீர்கள்.

 

- அடுத்த நாள்தான் ´சத்திய சோதனை´யே ஆரம்பம்.2வது நாளில் நீங்கள் ஒரு சிகரெட்டை கூட வாங்கக் கூடாது. மாறாக கடைக்குப் போய் 50 காசு கொடுத்து கடலை மிட்டாயை வாங்குங்கள். சென்னைப் பக்கம் இதற்கு பர்பி என்று பெயர்,மதுரைப் பக்கம் போனால் கடலை மிட்டாய் என்பார்கள். இந்தக் கடலை மிட்டாய்தாங்க உங்களின் புகைப் பழக்கத்தை அடியோடு விரட்டப் போகும் அரு மருந்து. எனவே இதை சாதாரணமாக எடை போட்டு விடாதீர்கள்.

 

- 2வது நாள் முழுவதும் எப்போதெல்லாம் தம் அடிக்க வேண்டும் என்று உங்களுக்குத் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் ஒன்று அல்லது 2 கடலை மிட்டாய்களை வாங்கி வாயில் போட்டு சாப்பிடுங்கள். இது மிகப் பெரிய ´டைவர்ஷனை´ கொடுக்கும்- இது அனுபவ வார்த்தை எனவே நம்புங்கள். 2வது நாள் முழுவதும் உங்களுக்கு ரொம்பவே கஷ்டமாகத்தான் இருக்கும், கிட்டத்தட்ட பைத்தியம் பிடிப்பது போலவும் இருக்கும். இருந்தாலும் மனதை கட்டுப்படுத்துங்கள், டைவர்ஷனைத் தரும் வகையிலான சிந்தனைக்கு மாறிப் பாருங்கள், நிச்சயம் புகை பிடிக்கும் உணர்வை கட்டுப்படுத்த முடியும்.

- 3வது நாளில் உங்களுக்குள் பெரிய மாற்றத்தை உணர முடியும். புகை பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் வெகுவாக குறைந்திருப்பதை நீங்களே உணர முடியும். அப்படி ஒரு வேளை தவிர்க்க முடியாமல் தோன்றினாலும், உடனே கடைக்குப் போய் கடலை மிட்டாயை வாங்கி வாயில் போடுங்கள்.

இந்த மிக மிக எளிய முறையில் 3 நாட்களிலேயே, ஒரு வேளை உங்களால் கட்டுப்படுத்த முடியாவிட்டால் கூடுதலாக 2 நாட்களை எடுத்துக் கொள்ளலாம், உங்களது புகை பிடிக்கும் பழக்கத்தை நீங்கள் கட்டோடு நிறுத்தி விட முடியும் அல்லது குறைத்து விட முடியும்.

அது எப்படிய்யா கடலை மிட்டாயை வச்சு தம் அடிப்பதைக் குறைக்க முடியும், பெரிய டுபாக்கூரா இருக்கே என்று அவ நம்பிக்கையுடன் கேட்கிறீர்களா.. அப்படிச் சொல்லாதீங்க, நிச்சயம் முடியும். உங்களுக்கு மன உறுதியும், கட்டுப்பாடும் மட்டும்தான் இந்த சமயத்தில் மிக மிக முக்கியமாக தேவை.

 

இன்னொரு விஷயம், இந்த மூன்று நாட்களுமே நீங்கள் வீட்டில் உட்கார்ந்து கொண்டு இதைச் செய்து பார்க்காதீர்கள், சத்தியமாக உங்களால் புகைப் பழகத்தை விடவே முடியாது. நீங்கள் எங்கு வழக்கமாக சிகரெட் வாங்குவீர்களோ அதே கடைக்குப் போய்த்தான் இந்த ´மருந்தை சாப்பிட´ வேண்டும். அப்போதுதான் உங்களைப் பிடித்துள்ள இந்த ´நோய்´ குணமாகும்.
இதுவும் கூட ஒரு வகையில் ´சைக்கலாஜிகல் அப்ரோச்´தான். அதாவது சிகரெட்டை சிகரெட்டை வைத்தே விரட்டுவது.

 

விலைவாசி நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. 2.50ரூபாய்க்கு விற்ற கிங்ஸ் இன்று 6 ரூபாய்க்கு வந்து விட்டது. ஒரு நாளைக்கு நீங்கள் சராசரியாக பத்து சிகரெட்டை ´சாப்பிடுவதாக´ இருந்தால் ஒரு நாளைக்கு 60 ரூபாய் வரை செலவிட வேண்டும். ஒரு மாதத்திற்கு 1800 ரூபாய் செலாவாகிறது. ஒரு வருடத்திற்கு சராசரியாக 22,000 ரூபாய் செலவாகிறது. கேட்கவே படு கொடுமையாக இருக்கிறதில்லையா.. அதை விட மகா கொடுமை உங்களது வாழ்நாளை நீங்களே தினசரி தீவைத்துக் கொல்வது. ஒருசிகரெட்டானது உங்களது ஒரு நாள் ஆயுளைக் குறைக்கிறதாம். அத்தோடு உங்களைச் சுற்றியுள்ளவர்களையும் கூட காவு வாங்கி விடுகிறது.

எனவே இனியும் கையில்´தம்´மோடு திரியாதீர்கள்.. மனதில் தெம்போடு திரிய கடலை மிட்டாயை வாங்குங்கள், மனம் நிறைய நம்பிக்கையோடு புது வாழ்க்கையைத் தொடங்குங்கள்
Disclaimer: கடலை மிட்டாய் என்பது ஒரு மீடியம்தான். கடலை மிட்டாய்க்குப பதில் சாக்லேட், மின்ட் என எதை வேண்டுமானாலும் நீங்கள் பயன்படுத்தலாம்உங்களுக்குத் தேவை திசை திருப்ப உதவும் ஒரு டைவர்ஷன் மட்டும்தான். உங்களுக்குப் பிரியமானவர்களை நினைத்துக் கொண்டாலும் கூட நீங்கள் புகை பிடிப்பதை விட முடியும்…!

http://www.pagejaffna.com/?p=9219


--
*more articles click*
www.sahabudeen.com



பொதுஅறிவில் - மருத்துவம் …. கேள்வியும் பதிலும்.

பொதுஅறிவில் - மருத்துவம் …. கேள்வியும் பதிலும்.

1.கண்ணில் இராசயணப் பொருள்கள்,கழுவும் இராசயணப் பொருட்கள் படும் போது என்ன செய்வீர்கள்?
1.
கண்களை எக்காரணம் கொண்டும் அழுத்தவோ தேய்க்கவோ கூடாது.பட்ட பொருட்கள் நன்றாக கழுவி செல்ல,நல்ல இளவெப்ப தண்ணீரில்,lukewater, கழுவுங்கள்.தலையை சரிவாக வைத்து ஓடும் தண்ணீரால் கண்ணை திறந்து வைத்த வண்ணம் கழுவுங்கள்.மெதுவாக நெற்றியில் இருந்து தண்ணீரை பாய விடுவதன் மூலம் இராசயணப் பொருட்களை கழுவலாம்.தண்ணிரைத் தவிர வேறு எதையும் பாவிக்காது,கைகளையும் நன்றாக கழுவிய பின் இவற்றை செய்வது சிறந்தது. முடிந்தால் சன் கிளாஸ் மூலம் அல்லது வெளிச்சம் படாது கண்களைப் பாதுகாப்பாக மறைத்து, மருத்துவரிடம் செல்லலாம்.

2.
தூரப்பார்வை,கிட்டப்பார்வை,மாலைகண்,நிறப்பார்வையின்மை என்ன தெரியுமா?
2.
தூரப்பார்வை -Hyperopia, farsightedness, longsightedness or hypermetropia என்பர்.குவிவில்லையைப் (convex lenses,)பாவிப்பர். லாசர் முறையில் குணப்படுத்த முடியும்.
கிட்டப்பார்வை..nearsightedness (அமெரிக்கன்)shortsightedness (பிரிட்டிஷ்)--பொதுவாக Myopia. உட்குவிந்த வில்லைகளைப் Concave lenses பாவிப்பர்.லாசர் முறையில் குணப்படுத்தவும் முடியும்.
நிறக்குருடு Colour blindness நிறங்களைப் பார்க்க முடியாதிருப்பது.அதே சமயம் இரவு நேரங்களில் பார்வை நன்றாக இருக்கும் என்பதால் போரின் போது இரவு நேர உளவு வேலைகளுக்கு இவர்களைப் பாவிக்கிறார்கள். மிருகங்களுக்கும் நிறங்களைப் பார்க்க முடியாது.
மாலைக்கண்-Nyctalopia - Night Blindness வெளிச்சம் இல்லாத நேரங்களில் பார்வை இல்லாமல் இருப்பதாகும்.
பார்வையற்றவர்கள்- இவர்களுக்கு பொதுவாக கேட்பதும் தொட்டறிவதும் சிறப்பாக இருக்கும்.பிரெயிலி முறையில் படிக்க முடியும்.

3.
வெள்ளை,பிரவுண் சர்க்கரை(white and brown sugar) எது சிறந்தது?
3.
இரண்டிலும் அதிக வேறுபாடு கிடையாது.ஒரே அளவான கலோரிகளே உண்டு.அரிசியில் உள்ள தவிடு போல் சிலர் நினைத்தாலும்,கரும்புக் கழிவு(molasses) காரணமாகவே இந்த நிறம் ஏற்படுகிறது.மிக சிறிய அளவில் சில கனிமப்பொருள்(மினரல்) இருப்பதுடன் ருசியில் சிறிது வேறுபடுகிறது.அவ்வளவுதான்.

4.
எலும்புப்புரை (Osteoporosis) என்பது என்ன?
4.
எலும்புப்புரை என்ற ஒஸ்டியொபொறோசிஸ் என்பது எலும்பு முறிவு ஏற்படக்கூடிய எலும்பு சம்பந்தப்பட்ட நோய்.இது பொதுவாக பெண்களில் அரைவாசிப் பேருக்கும் ,ஆண்களில்,அநேகமாக 50 வயதிற்கு மேல் கால்வாசிப் பேருக்கும் வருகிறது.வைட்டமின் K,B12,D கல்சியம் குறைபாட்டினால் வருகிறது.

5.Acne
என்பது என்ன?
5.Acne
என்பது முகப்பருவின்,pimples, சிறிது அதிக நிலையாகும்.பொதுவாக இளையவர்களுக்கு வருகிறது.சரியான காரணம் காணப்படாத இது, முகத்தில்,குழிகளையும்,தோலின் நிறத்தையும் மாற்றி விடுகிறது.ஹார்மோன் மாற்றம், கர்ப்பகாலம்,சேபம்(sebum) எனப்படும் எண்ணைப் பொருள் சருமத்தில் அழியும் செல்களை வெளிக் கொணருகிறது.இது காய்ந்து அடைபட்டுப் போவதால் முகப்பருக்கள் வருகின்றன.அதனால் அடிக்கடி தண்ணீரினால் கழுவுவது சிறந்தது. தொடர்ந்து முகத்தில் குழிகள்,நிறமாற்றம் ஏற்பட்டு acne,என்ற நிலைக்கு செல்கிறது.தற்போது,UCLA and the University of Pittsburgh, நமது உடம்பில் உள்ள சாதுவான பக்ரீயாக்களை வைத்து முகப்பரு,acne, சுலபமாக குணப்படுத்த முடியும் என்று கண்டுள்ளனர்.இனி முகப்பருவுக்கு Goodbye தான்.அதே சமயம், University of California and the vaccine company Sanofi-Pasteur ,தடுப்பு ஊசி ஒன்றையும் கண்டு பிடித்துள்ளனர்.

6.
முடிஉதிர்வு காரணம் என்ன?
6.
தினமும் 100-150 வரையிலான முடி உதிர்வு அனைவருக்கும் ஏற்பட்டு சில புதியவை உருவாகின்றன. ஆண்களுக்கு ஏற்படுவது, நீரிழிவு,புற்று நோய் ,புரதக் குறைவு,சில மருந்துக்கள்,தைரொயிட்,அதிக வைட்டமின் ஏ,குறைவான இரும்புச்சத்து,,தலைக்கு கிடைக்காத பயிற்சி போன்றவை காரணமாகும்.
பொதுவாக ஆண்களுக்கு ஏற்படுவதை,baldness,என்று சொல்வார்கள்.இதற்கு சில மருந்துகள், தெளிப்பு,ஸ்பிறே,ஹார்மோன்கள் பாவனையில் உள்ளன.தவிர நவீன அறிவியலில் முடி நடுவது,மற்றும் சமீபத்தில் கண்டு பிடிக்கப்பட்ட ஹர்மோன்கள்,மற்றும் சில மருந்துகள்(Minoxidil-Rogaine,Finasteride-Propecia -இவை இன்னமும் சரியாக நிரூபிக்கப்படவில்லை) பயன்படுத்தப்படுகிறது. இவை ஆளுக்கு ஆள் வேறுபடும் என்பதால்,டெமட்டொலொகிஸ்ட் ஐ கலந்தாலோசித்தால் அதிக பலன் உண்டு.
பெண்களுக்கு உணவு வகையாலும் சில ஹார்மோன்கள் எடுப்பதாலும்(Minoxidil-Rogaine -இவை இன்னமும் சரியாக நிரூபிக்கப்படவில்லை) சரி செய்யப்படுகிறது.தலையை இறுக்கமாக கட்டுவது,பயிற்சி இல்லாத முடி,தைரொயிட்,சில மருந்துக்களின் தாக்கம்,45 வயதிற்கு மேற்பட்ட பெண்கள்,இரத்தப் போக்கு,ஒழுங்கற்ற மாதவிடாய்,பருவ மாற்றம்,மனஅழுத்தம் இப்படி பல காரணங்களை சொல்லலாம்.சிலருக்கு தொகுதி தொகுதியாக அப்படியே கையோடு வந்துவிடும்(alopecia). ஒருவரின் உடல் சமூக நிலையை கொண்டே பாதுகாப்பது, தடுப்பது, வளர செய்வது தங்கி உள்ளது. Marilyn Sherlock, chairman of the Institute of Trichologists முடி மூன்று விதமாக(anagen, catagen, and telogen ) வளருகிறது.பொதுவாக முடியின் ஆயுள்காலம் மூன்று வருடங்கள்.

7.
இரையக உண்குழலியப் பின்னோட்ட நோய் (Gastroesophageal reflux disease (GERD)) அல்லது அமிலப் பின்னோட்ட நோய் (Acid Reflux) என்பது என்ன?
7.
இரையக உண்குழலியப் பின்னோட்ட நோய் (Gastroesophageal reflux disease (GERD)) அல்லது அமிலப் பின்னோட்ட நோய் (Acid Reflux) என்பது இரைப்பையில் இருந்து உணவுக்குழாய்க்கு இரைப்பைச்சாறும் உணவுகளும் மேல்நோக்கித் தள்ளப்படுவதனால்,நெஞ்செரிவு,குமட்டல்,அதிக உமிழ் நீர் சுரத்தல் போன்றவை.அமிலத் தன்மையுடைய உணவுகளைத் தவிர்த்தல் நல்லது.இது ஒரு நீண்டகால நோயென்பதால் உரிய நேரத்தில் கவனியாது விடின் புற்றையும் ஏற்படுத்தலாம்.endoscopy, biopsy, X-ray போன்ற முறைகளால் கண்டறியப்படுகிறது.

8.
உடலில் தண்ணீரின் அளவு என்ன?
8. 66%
தண்ணீர்

9.
உங்கள் கட்டை விரலும்,மூக்கும் ஒரே அளவானவை.சரியா?
9.
ஆமாம் ஒரே அளவுதான்.அளந்து பாருங்கள்.

10.நீங்களும் உங்கள் வயதும் ஒன்றா?
10.
நமது உடலின் பாகங்கள் பாம்பு தன் தோலை உரித்து புதுபித்துக் கொள்வது போல், புதிப்பிக்கப்படுகின்றன. மூளையையும்,கண்களையும் தவிர சரும கலங்கள்,14 நாட்களில் புதுப்பிக்கப்படுவது போல், மற்றைய பாகங்கள் புதிப்பிக்கப்படுகின்றன. நெஞ்செலும்புக் கூடு,அதாவது எலும்பு கலன்கள், 10-12 வருடங்களுக்கு ஒரு முறையும்,சிவப்பணுக்கள் 120 நாட்களும்,ஈரல் 300-500 நாட்களும், இப்படி வேறுபடுகின்றன.ஆனால் DNA மாற்றம் பெறுவதில்லை.இப்போ உங்கள் வயதும் நீங்களும் ஒன்றாக முடியுமா?

11.
வியர்வைக்கு மணம் உண்டா?
11.
கிடையாது.பக்டீரியாக்கள் காறணமாகவே மணம் ஏற்படுகிறது.

12.
வியர்வை எதற்காக ஏற்படுகிறது?
12.
யுரியா,அமோனியாவை வெளியேற்றவும்,உடல் உஸ்னத்தை சரிப்படுத்தவும்,உடலில் 2-4 மில்லியன் வியர்வை துவாரங்கள் உண்டு.

13.
நமது உடம்பிற்கு தேவையான விட்டமின்கள் எத்தனை?
13.
நமது உடலுக்கு 13 முக்கிய வைட்டமின் கள் தேவைப்படுகிறது. A,C,D,E,K, B -B1 (thiamine), B2 (riboflavin), B3 (niacin), vitamin B-6, vitamin B-12, and folate. இவை நாம் உண்ணும் உணவில் இருந்து கிடைக்கிறது.D யின் பெரும்பகுதி சூரிய ஒளியில் இருந்து கிடைக்கிறது.

14.
சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் விட்டமின் எது, எவ்வளவை உடல் பெறுகிறது?
14.
வைட்டமின் D ,80-90 %

15.
ஏன் பறக்கும் விமானத்தில் யன்னல்களை திறக்க முடியாதபடி செய்துள்ளனர்?
15.
நிலத்தில் புவிஈர்ப்பும்,காற்றின் மூலக்கூறும்,air molecules concentrated , செறிவுடையதாக இருக்கும்.மேலே போகப் போக காற்றின் அடர்த்தி குறைவடைவதால்,hypoxia, or lack of oxygen(பிராணவாயுக் குறைவு) பயணிகள் பாதிக்கப்படுவர். மேலே காற்றின் அழுத்தம் குறையும் போது, குளிரான நிலையை அடைவார்கள்.3000 மீ.மேலே 11000 மீ வரை நிலையில் வெப்ப நிலை மைனஸ் 51 பாகை செல்சியுஸ் அளவிற்கு செல்லுமாதலால், இறந்துவிடக் கூடிய ஆபத்து உண்டு.இதைவிட வெப்பம் கூடிய இடத்தில் இருந்து குறைந்த இடத்திற்கு செல்கிறது.(காப்பி ஆறுவது போல்) அதாவது, வெளியே குளிர்,உள்ளே சூடு,வெளியே உள்ள வெப்ப நிலையை சமப்படுத்த உள்ளே இருந்து வெளியே செல்லும் போது,அதை நிரப்ப வேகமாக உள்ளே நுழையும் காற்று,உள்ளே இருக்கும் விசைச் சுழலி இவையின் தாக்கம், எவருமே உயிருடன் இருக்க முடியாது. யன்னலை திறக்கலாமா?

சக்தி.

http://www.usetamil.com/t27479-3#43010


--
*more articles click*
www.sahabudeen.com