Tuesday, September 4, 2012

வளைகுடாவில் வசிப்போரின் இந்தியப்பெருநாள் - முழு விளக்கம் - ஹஸனீ



வல்ல நாயனின் திருப்பெயர் போற்றீ
 
அன்புடைய இஸ்லாமிய  சகோதரர்களுக்கு,
 
அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ்)
 
இறைவனின் அருளால் " வளைகுடாவில் வசிப்பவரின் இந்தியப்பெருநாள் " என்ற தலைப்பிட்ட மார்க்க சட்ட விளக்கம் 18/08/2012 அன்று என்னால்
 
பதிவுசெய்யப்பட்டது.
 
அது சம்பந்தமாக சில சகோதரர்களிடமிருந்து நேர் மற்றும் எதிர்மறை கருத்துகள் மெயில் முலமாகவும், தொலைபேசி மூலமாகவும் கிடைக்கப்பெற்றேன்.
 
சந்தேகம் இருப்பவர்கள் தெளிவு பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த கருத்து தொடர்பாக முழுசெய்திகளை மீள்பதிவு செய்ய ஆசைப்படுகிறேன்.
 
இது விவாதத்திற்கல்ல தெளிவுக்காக மட்டுமே.
 
- ஹஸனீ
 
 
நோன்புகாலத்தில் ஒருவர் பிரயாணம் மேற்கொண்டால் அவர் எந்த ஊரில் இருக்கிறாரோ அந்த அடிப்படையில் தான் பெருநாள் கொண்டாடவேண்டும்.
 
அவர் சென்ற ஊரில் 30 நோன்பாகவும் இவருக்கு அதைவிட ஒரு நாள் கூடுதலாக  அதாவது 31 நோன்பு பிடிக்கவேண்டிய நிலை ஏற்பட்டால் அவர் அந்த
 
நோன்பை கண்டிப்பாக நோற்றாகவேண்டும்.
 
என்ற கருத்து அடிப்படையில் நாம் பதிவுசெய்திருந்தேன்.
 
இது ஏதோ புதிய கருத்து போன்று நல்ல தெளிவான சில சகோதரர்கள் கூட என்னிடம் சந்தேகம் கேட்டனர்.
 
இது என் சொந்த கருத்தோ அல்லது உலக முஸ்லிம்கள் ஒன்று பட்டிருக்கும் கருத்திலிருந்து முரண்பட்டதோ கிடையாது.
 
இன்னும் சிலர் இது இந்தியா, பாகிஸ்தான் முப்திகளின் கருத்து என்று குறிப்பிட்டிருந்தனர்.
 
இது இந்தியா மற்றும் பாகிஸ்தான் முப்திகளின் தனிப்பட்ட கருத்துமட்டுமல்ல, சவூதியின் தலைமை முப்தியான அஷ்ஷேக் அப்துல்லாஹ் பின் பாஜ்,
 
 
இன்னும் அப்துல் ரஜாக் அபீபி (FI) , அப்துல்லாஹ் பின் அத்யான் போன்றவர்களின் தீர்ப்பு
 
( இதன் அரபி மூலம் கீழே தரப்பட்டுள்ளது)
 
إذا بدأت الصيام في بلدي ثم سافرت أثناء رمضان إلى بلد آخر صاموا بعدنا بيوم ، فهل أواصل الصوم مع المسلمين هناك وبذلك أصوم اليوم الحادي والثلاثين؟

 

الحمد لله
"العبرة في ابتداء الصيام في البلد التي سافر منها ، وفي نهايته في البلد التي قدم إليها ، وإذا كان مجموع ما صامه ثمانية وعشرين يوماً وجب عليه قضاء يوم ؛ لأن الشهر القمري لا يكون أقل من 29 يوماً ، وإن كان قد أتم صيام ثلاثين يوماً في البلد الذي سافر إليه وبقى على أهل البلد صيام يوم مثلاً وجب عليه أن يصوم معهم حتى يفطر بفطرهم يوم العيد ، ويصلي معهم يوم العيد .
وبالله التوفيق ، وصلى الله على نبينا محمد وآله وصحبه وسلم " انتهى.
اللجنة الدائمة للبحوث العلمية والإفتاء .
الشيخ عبد العزيز بن عبد الله بن باز ... الشيخ عبد الرزاق عفيفي ... الشيخ عبد الله بن غديان .
"فتاوى اللجنة الدائمة للبحوث العلمية والإفتاء" (10/129) .
 
 
 
 
 ஒருவர் ரமலான் உடைய மாதத்தில் ஒரு ஊரிலிருந்து பயணம் செய்து மற்றொரு ஊருக்கு சென்றால் அவர் எந்த ஊரில் உள்ளாரோ அந்த ஊரின் நிலையை
 
கடைபிடிக்கவேண்டும்.
 
ஒருவர் இந்தியாவிலிருந்து ஆப்ரிக்கா போன்ற நாடுகளுக்கு பிரயாணம் செய்தால் அவர் சில சமயம் 28 நோன்பை மட்டுமே அடைந்திருப்பார்.
 
அப்படிப்பட்ட சூழலில் அவர் அவர்களோடு சேர்ந்து பெருநாள் கொண்டாடிவிட்டு. பின் ஒரு நாள் 29 நோன்பை  களா செய்வார். ஏனெனில் ஹதீஸ்
 
அடிப்படையில் நோன்பு என்பது 29 பிறை தேடவேண்டும் இல்லையெனில் முப்பது என்று நபியவர்கள் கூறியுள்ளார்கள்.
 
ஆகையால் இஸ்லாத்தில் 28 நோன்பு என்பது கிடையாது. எனவே அவர் ஒரு நோன்பை களா செய்யவேண்டும்.
 
ஆனால் இதற்கு மாற்றமாக, இன்றைய நடைமுறையில் அதிகம் நிகழ்கின்ற துபை, சவூதி போன்ற நாடுகளிலிருந்து பெருநாள் கொண்டாட இந்தியா
 
வருபவர்கள் அதிகம்.
 
இந்நிலையில் அவர்கள் நோன்பின் காலத்தில் துபை, சவூதியிலிருந்து கிளம்பி இருந்தால் அவர்கள் இந்தியாவில் தங்கள் நோன்பை தொடர்ந்து கடைசியில்
 
இந்தியாவில் பெருநாள் கொண்டாடும் அன்று கொண்டாடுவார்கள்.
 
 
அவர்களின் நோன்பு 31 ஆக இருந்தாலும் சரியே, ஏனெனில் நபியவர்களின் கூற்று" பிறை பார்த்து நோன்பு வையுகள், பிறை பார்த்து நோன்பை நிறைவு
 
செய்யுங்கள்" . இங்கே இந்தியாவில் பிறைகாணப்படாததால் நோன்பு வைக்கவேண்டும்.
 
இன்னும் இன்றுள்ள பிறைகுழப்பத்திற்கு நபியவர்கல் 1400 ஆண்டுகளுக்கு முன் சொன்ன தீர்ப்பு " அபூ ஹுரைரா அவர்கள் அறிவிக்கிறார்கள் : நோன்பு என்பது
 
மக்கள் என்று நோன்பு நோற்கிறார்களோ அன்று தான், அது போன்று பித்ர் என்பதும் என்று மக்கள் பித்ர் (திறக்கிறார்களோ) அன்று தான். ( ஆகையால், இந்த
 
ஹதீஸ் அடிப்படையில் சமூக ஒற்றுமை கருத்தே அங்கிகாரத்திற்குரியது. பெரும்பான்மை மக்கள் நோன்பை ஆரம்பிக்கும் தினம் ஆதாரமாக
 
எடுத்துக்கொள்ளப்படும்.)
 
இப்பொழுது 31 நாள் ஆகிறதே என்ற குழப்பம் வரும், இங்கு குழம்ப வேண்டியதில்லை.
 
நாம் ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு ரமலானில் பிரயாணம் செய்தால், எந்த ஊரில் நாம் நோன்பு திறக்கும் நேரத்தில் இருக்கிறோமோ அந்த
 
அடிப்படையில் தான் நோன்பு திறப்போம். இல்லை நான் இருக்கும் ஊரில் இன்னும் நோன்பு திறந்திருக்க மாட்டார்கள் எனவே நானும் நோன்பு திறக்க
 
மாட்டேன் என்று  நாம் கால தாமதப்படுத்தி நோன்பு திறக்க முடியாது.
 
இதே அடிப்படையில் தான் நாம் இந்தியாவில் வைக்கும் நோன்பு, நாம் அதற்கு 31 என்று பெயரிட்டுக்கொண்டாலும் அல்லது கொஞ்சம் அதிக நேரம் என்று
 
பெயரிட்டுக்கொண்டாலும் அது நம் பிரச்சனை.
 
அது போன்று ஒருவர் ரமலானுடைய 30 அல்லது 29 யை துபையில் பூர்த்திசெய்து அங்கு ஷவ்வாலின் பிறைகண்ட பிறகு அங்கிருந்து இந்தியா பயணம்
 
செய்தால் அவர் இந்தியாவில் நோன்பு நோற்க வேண்டியதில்லை,
 
 
மாறாக அவர் இந்தியாவில் பெருநாள் வரை பொருத்திருப்பார் ஆனால் நோன்பு நோற்க மாட்டார் ( ஏனெனில் அவர் துபையிலிருந்து கிளம்பும்போதே
 
ஷவ்வாலை அடைந்திருந்தார்) இந்த சட்டத்தயே பலர் தவறாக புரிந்து கொண்டு நோன்பு காலத்தில் துபையிலிருந்து கிளம்பி இருந்தாலும் இந்தியா வந்த
 
பின்பு நோற்காமல் இருக்கிறனர், இது தவறு.
 
 நோன்பை காலத்தை அடைந்தவர் நோன்பு நோற்க வேண்டும்
 
ஷவ்வாலை அடைந்தவர் (கடைமையான ) நோன்பு நோற்க்கவேண்டியது இல்லை  . இது தான் விதி (Thumbrule).
 
அல்லாஹ்வே முழுமையாக அறிந்தவன்.
 
 
 
 
- ஹஸனீ 
 
 
 
 
 



--
*more articles click*
www.sahabudeen.com



No comments: