Wednesday, January 30, 2013

Re: தயவு செய்து முழுவதும் படிக்கவும்! பகிரவும்!...AMWAY

2013/1/29 SAHA BUDEeN <sahabudeen7@gmail.com>

தயவு செய்து முழுவதும் படிக்கவும்! பகிரவும்!...AMWAY

தயவு செய்து முழுவதும் படிக்கவும்! பகிரவும்! ஒரு நல்ல மனிதரின் பொதுநல அக்கறை காரணமாய் இது உருவாகி உள்ளது. உங்கள் வெளிச்சப் பார்வையை இதை பகிர்ந்து வெளிபடுத்தவும்!! தயவு கூர்ந்து!!

"AMWAY " இந்திய மக்களுக்கு வேலைவாய்ப்பு தருவதாக உலா வரும் ஒரு அந்நிய நிறுவனம். இந்த நிறுவனத்தின் சில கொள்ளை உண்மைகளை கண்டறிய நான் எடுத்த சிறு முயற்சியின் விளைவுதான் இந்த பதிவு. இந்த நிறுவனத்தில் உள்ள நண்பர்கள் கண்ணில் பட்டவர்களை எல்லாம் பார்த்து சொல்லும் முதல் வார்த்தை "ஒரு பிஸ்னஸ் சொல்றேன் பன்றிங்களா?" இது தான் MLM நண்பர்களின் தாரக மந்திரம். ஒருவன் என்னதான் மாதம் முப்பதாயிரம் ரூபாய் சம்பாதிச்சாலும் உங்களுக்கு மேல் வருமானம் வருவதற்கு நான் ஒரு பிஸ்னஸ் சொல்லுறேன் பண்ணுங்க என்றால் மனுஷன் உடனே மண்டைய ஆட்டத்தான் செய்வான். அப்படி இருக்கும்போது வறுமையில் இருப்பவனையும், நடுத்தரகுடும்பத்தை சார்ந்தவனையும் பார்த்து இந்த வார்த்தையை சொன்னால் என்ன மாட்டேன் என்றா சொல்லுவான்?.

ஒருவனை இரண்டு வகையில் சுலபமாக மூளைச்சலவை செய்துவிடலாம் ஒன்று "இந்த தொழில் செய்தால் நீ செல்வந்தன் ஆகிவிடலாம் என்று, மற்றொன்று நீ இதை சாப்பிட்டால் உன் நோய் குணமாகிவிடும்" என்று . இவை இரண்டையும் சொல்லி சுலபமாக கொள்ளையடிக்கும் கொள்ளைக்கும்பல் இனத்தை சேர்ந்ததுதான் "AMWAY" இதுவரை தமிழ்நாட்டில் பல MLM நிறுவனங்கள் பலவிதமான வித்தைகளைக்காட்டி கொள்ளையடித்து ஓடிவிட்டனர். ஆனால் AMWAY நிறுவனம் கொஞ்சம் வித்தியாசமானது, சட்டப்பூர்வமான கொள்ளை கும்பல்.

ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு வணீக ரீதியிலான பொருட்கள் விற்பனைக்கு வருகிறது என்றால் உள்ளூர் கம்பனிகளும், நிறுவனங்களும் பாதிக்காத வகையில்தான் முடிவு எடுக்கப்படும். காரணம் வேறு ஒரு நாட்டில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்தால் உள்ளூர் நிறுவனங்களுக்கு வெளிநாட்டு நிறுவனத்தால் நஷ்ட்டம் ஏற்பட்டுவிடும் என்பதால், இது நடக்காதவாறு கவனித்துக்கொள்வது அரசின் கடமை. இந்த கொள்கையைத்தான் வளர்ந்துவரும் நாடுகள் என்று சொல்லப்படும் அனைத்து நாடுகளும் பின்பற்றி வருகின்றன. ஆனால் நம் இந்தியா அரசு மட்டும் இதுப்போன்ற நிறுவனங்களுக்கு வளைந்து கொடுத்து வருகிறது. இப்படி அரசின் அனுமதியில் கொள்ளையடிக்கும், மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நிறுவனங்களில் ஒன்று தான் இந்த நிறுவனம். இந்த AMWAY நிறுவனம் விற்பனை செய்யும் அனைத்துப்பொருட்களும் FMCG(FAST MOVING CONSUMER GOODS) மற்றும் PHARMACEUTICAL பிரிவை சேர்ந்தவை.

FMCG பொருட்கள் என்றால் நாம் தினமும் பயன்படுத்தும் பொருட்கள் பிரிவை சேர்ந்தது(உதாரணம்: சோப்பு,ஷாம்பு போன்றவை). இது போன்ற பொருட்களை விற்பனை செய்ய இந்தியாவில் ஏற்கனவே பல இந்திய நிறுவனங்கள் போட்டிப்போட்டுக்கொண்டு வருகின்றன, பின்பு எதற்காக இந்த பொருட்களை விற்பனை செய்ய அந்நிய நிறுவனத்துக்கு அரசு அனுமதி கொடுக்க வேண்டும்?. அடுத்தது PHARMACEUTICAL பொருட்கள், ஒருவனுக்கு உடலில் ஏதாவது பாதிப்பு என்றால் அவன் உடனே மருத்துவரை ஆலோசிப்பதுதான் சிறந்தது என்று அரசே அறிவுறுத்தி வருகிறது அப்படி இருக்கும்போது இவர்கள் எப்படி மருந்து பொருட்களை நேரடியாக விற்பனை செய்யலாம்?.

பொருளாதார வீழ்ச்சியும் ஆம்வே நிறுவனமும்:
ஒரு நாட்டில் பொருளாதார வீழ்ச்சி(RECESSION) ஏற்பட்டால் பங்குசந்தையில் உள்ள அனைத்து நிறுவனங்களும் பாதிப்படையும்/பங்கு விலைகள் வீழ்ச்சி அடையும். இது போன்ற நேரங்களில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைவதை சற்று தடுத்து நிறுத்துவது சில செக்ட்டார்கள் தான், அதனை டிபன்ஸ் செக்டார்(DEFENCE SECTOR) என்று சொல்வார்கள். அந்த DEFENCE SECTOR என்று சொல்லப்படும் செக்டர்களில் முக்கியமான இரண்டு செக்டார்கள் தான் இந்த FMCG மற்றும் PHARMACEUTICAL செக்டோர்கள். இந்த இரண்டு பிரிவுகளையும் உள்ளடக்கி விற்பனை செய்து வரும் நிறுவனம்தான் இந்த AMWAY நிறுவனமும். ஆனால் இது இந்திய நிறுவனம் இல்லை, இது ஒரு அயல்நாட்டு நிறுவனம். நம் நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டால் இந்த நிறுவனத்தால் நம் நாட்டிற்கு கடுகளவும் பயன் இல்லை. இப்படி இருக்கும்போது இந்த AMWAY நிறுவனம் DIRECT SALE என சொல்லப்படும் நேரடி விற்பனையில் வேறு ஈடுப்பட்டு வருகிறது. இதனால் DEFENCE SECTOR என சொல்லப்படும் இந்திய நிறுவனங்களுக்கு பதிப்பு கண்டிப்பாக இருக்கும், இப்படிப்பட்ட சூழ்நிலையில் எதிர்க்காலத்தில் நமது நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டால் பாதிப்பு முன்பை விட அதிகமாகவே இருக்கும். இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் நமது பாரத பிரதமர் இந்த AMWAY நிறுவனத்துக்கு அனுமதி கொடுத்து வருகிறார் என்றால் நீங்களே யோசித்துப்பாருங்கள் மன்மோகன் சிங்கின் திறமையை.
இதனால் நமக்கு என்ன பாதிப்பு என நீங்கள் நினைத்து விட முடியாது, கண்டிப்பாக பாதிப்பு உண்டு. நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டால் வேலை இழப்பால் பாதிக்கப்படப்போவது நாம்தான் மன்மோஹன்சிங் இல்லை. இவர் எப்படியும் அரசு வருவாயில் காலத்தை ஓட்டிவிடுவார். இப்போதாவது இந்திய குடிமகனுக்கு இருக்கும் கடமையை உணர்ந்து செயல்படுங்கள்.

இதுவரை நான் எழுதியதெல்லாம் நாட்டிற்கு பொருளாதார ரீதியில் எந்த ஒரு பாதிப்பும் வந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் தான். ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் எவன் எப்படி போனால் எனக்கென்ன எனக்கு பணம் வந்தால் போதும் என்று ஒருசிலர் இருப்பார்கள், இதோ உங்களுக்காகவே ஒரு சிறிய விளக்கம். நீங்கள் AMWAY நிறுவனத்தில் சம்பாதிப்பதை விட இழப்பதுதான் அதிகம் என்பதற்கு.

ஏமாற்றும் வழிகள்:

இந்த நிறுவனத்தில் யாரும் பிடித்துபோய் சேருவது இல்லை, நண்பனோ அல்லது உறவினரோ ஒரு பிசினஸ் பண்ணலாம் என்று சொல்லி ஒரு குறிப்பிட்ட இடத்துக்கோ அல்லது வீட்டிற்கோ அழைத்து செல்வார்கள். அங்கு அவர்களால் முடிந்தளவுக்கு மூளைச்சலவை செய்யப்படும். உதாரணத்துக்கு ஒரு குறுப்பிட்ட நபரை காண்பித்து இவர் மாதம் ஒருலட்சம்/ஐம்பதாயிரம் ரூபாய் ஆம்வே நிறுவனத்தால் சம்பாதிக்கிறார் என்று ஆசை வார்த்தையை கட்டவில்ப்பார்கள். இந்த வார்த்தையால்தான் பலர் நமது வறுமைக்கு ஒரு விடிவு வந்துவிடாதா என்று சேர்ந்து விடுகின்றனர்.

நமது இந்திய நிறுவனங்கள் ஒரு பொருளை தயாரிக்க செலவிடும் விற்பனை செலவில் இருந்து 30 % தான் செலவு செய்கின்றன, ஆனால் அது பயனாளர் கைக்கு வரும்போது மொத்த விற்பனை விலைக்கு வருகிறது, இதனால் நஷ்டம் அடைவது பயனாளர்தான். பயனாளர் மூலம் கடைக்காரர்,விநியோகஸ்த்தர்,விளம்பரதாரர் என பலர் லாபம் பெறுகின்றனர் என்று சொல்லிதான் இந்த நிறுவனத்தின் ஊழியர்கள் மக்களை ஏமாற்றுகின்றனர். இவர்கள் சொல்வது உண்மைதான், மூன்று ரூபாய் பொருட்செலவில் தயாரிக்கும் பொருளை நாம் பத்துரூபாய்க்கு வாங்குவது நிஜம்தான், இந்த வார்த்தைகளை கேட்டு பலர் ஏமார்ந்து விடுகின்றனர். நமது இந்திய நிறுவனத்துடன் ஆம்வே நிறுவனத்தின் பொருட்களின் விலையை ஒப்பிட்டு பார்த்தால் இந்திய நிறுவனங்களின் பொருட்கள்தான் மிகவும் விலை குறைவாக உள்ளது.
இந்திய நிறுவனத்தின் தரமான சோப் 15 - 20 ரூபாய்(கடைக்காரர், விநியோகஸ்த்தர், விளம்பரதாரர், நிறுவன லாபம் எல்லாம் உட்பட).
ஆனால் ஆம்வே நிறுவனத்தில் ஒரு சோப்பின் விலை 37 ரூபாய்(விளம்பரதாரர்,விநியோகஸ்த்தர், கடைக்காரர் இவர்கள் யாருக்கும் லாபம் கொடுக்காமலே)

மேலும் ஆம்வே நிறுவன பொருட்களின் விலைகள்.
TOOTHBRUSH(1) - 19 ரூபாய்
HAIR OIL(500 ML) - 95 ரூபாய்
SHAVING CREAM(70G) - 86 ரூபாய்
OLIVE OIL (1 LITRE) -400 ரூபாய்
FACE WASH -229 ரூபாய்
PROTIEN POWDER(1KG) - 2929 ரூபாய்
மேலே இருக்கும் விலை பட்டியல் உதாரணம் மட்டும்தான் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள் இந்த விலை நமது இந்திய நிறுவனத்தின் விலையை விட குறைவா?. இத்தனைக்கும் இவர்கள் விளம்பர நிறுவனங்கள் , விநியோகச்த்தர்கள், கடைக்காரர் என பலத்தரப்பட்டவர்களின் தொழில்களுக்கு நஷ்ட்டம் விளைவித்து மக்களுக்கு குறைந்த விலைக்கு(நேரடி விற்பனை(DIRECT SALE)) விற்பதாக சொல்லி விற்று வருகின்றனர்.

நேரடி விற்பனை(DIRECT SALE) என்றால் ஒருபொருளின் தயாரிப்பு செலவில் நிறுவனத்தில் லாபம் மட்டுமே வைத்து குறைந்த விலைக்கு விற்பதுதான் DIRECT SALE. ஆனால் ஆம்வே நிறுவனம் நேரடி விற்பனை செய்வதாக தம்பட்டம் அடித்துக்கொண்டு மற்ற இந்திய நிறுவனங்களை விட அதிக விலைக்கு விற்று வருகின்றனர். இந்திய நிறுவனங்கள் ஒரு டூத்பிரஷ் தயாரிக்க செய்யும் செலவு 4 ரூபாய்தான் ஆகிறது ஆனால் விற்பனை செய்யும்போது 15 ரூபாய்க்கு விற்பதாக ஆம்வே நிறுவனம்(ஊழியர்கள்) நமது இந்திய நிறுவனம் மீது குற்றம் சொல்கிறது. ஆனால் இவர்கள் விற்பனை செய்யும் டூத்பிரஷ்ஷின் விலையோ 19 ரூபாய் அப்படியென்றால் இவர்களுக்கு தயாரிக்க ஆகும் செலவே 15 ரூபாயா?

ஆம்வே நிறுவனத்தில் ஒருவர் இணைய வேண்டும் என்றால் 995 ரூபாய் கட்ட வேண்டும். (எந்த ஒரு செலவும் இல்லாமல் ஆம்வே நிறுவனத்துக்கு 995 ரூபாய் லாபம்)
பின்பு தனக்கு கீழே இரண்டு நபர்களை சேர்த்து விட வேண்டும்.
(எந்த ஒரு செலவும் இல்லாமல் நிறுவனத்துக்கு 1990 ரூபாய் லாபம், ஆக மொத்தம் உங்களால் ஆம்வே நிறுவனத்துக்கு 2985 ரூபாய் லாபம். இது நீங்கள் அந்த நிறுவனத்தில் இணையும்போது மட்டும்தான்)
இந்த நிறுவனத்தில் நீங்கள் சம்பாதிக்க வேண்டும் என்றால் மாதம் குறைந்தது 6000 முதல் 6200(100 pv) ரூபாய்க்கு பொருட்கள் வாங்க வேண்டும். ஒரு நிறுவனம் தனது பொருட்களை தயாரிக்க ஆகும் செலவு பொருட்களின் விற்பனை செலவில் 30 % தான். சரி ஆம்வே நிறுவனத்துக்கு 50 % என்று வைத்தால் கூட 3000 ரூபாய் லாபம் வருகிறது.
இப்போது கொள்ளை கும்பலின் கோள்ளை கணக்கை பாருங்கள்:
நீங்கள் ஆம்வே நிறுவனத்தில் இணையும்போது கட்டிய தொகை 995 ரூபாய்.
நீங்கள் பொருட்கள் வாங்கிய விலையில் கம்பனி லாபம் 3000 ரூபாய்(6000-3000).இது 50 % தான் லாபம், கூடலாம் .
ஆக மொத்தம் நீங்கள் இந்த நிறுவனத்தில் இணையும் போதே உங்கள் பக்க இழப்பு 3995 ரூபாய்.
இந்த நிறுவனத்தில் இணைபவர்கள் எவனோ ஒருவன் இந்த நிறுவனத்தில் ஒருலட்ச்சம் ரூபாய் சம்பாதித்து விட்டான் நாம் ஏன் சம்பாதிக்க முடியாது என்று எண்ணித்தான் இணைகின்றனர் அவர்களுக்காக ஒரு சிரிய விளக்கம்.
ஒருவன் ஒருலட்ச்ச்ம் ரூபாய் இந்த நிறுவனத்தில் சம்பாதித்தான் என்றால் இவன் தனக்கு கீழே குறைந்தது 100 நபர்களையாவது இணைத்திருப்பான்.(ஒரு நபர் இணையும்போது இந்த நிறுவனத்தில் கட்ட வேண்டிய தொகை 995 ரூபாய்)
100 x 995 = 99500 ரூபாய்
இந்த ஒருவன் மூலம் நிறுவனம் அடைந்த லாபம் மட்டும் 99500 ரூபாய். ஆனால் இதில் அவனுக்கு எந்த ஒரு லாபமும் கிடையாது. இவனுக்கு கீழே இருக்கும் ஒவ்வொருவரும் மாதம் 6000 ரூபாய்க்கு பொருட்கள் வாங்க வேண்டும் இதை 100 PV என்று சொல்வார்கள்.
3000 x 100 = 300000 ரூபாய்
அப்படிபார்த்தால் இவன் ஒருவன் மூலம் ஆம்வே நிறுவனத்துக்கு வந்த லாபம் மட்டும் 399500 ரூபாய். நிறுவனத்துக்கு ஒருமாத லாபம் 300000 ரூபாய் (மூன்று லட்சம்).
இவ்வளவு கொள்ளைகளும் போதாதென்று மேலும் ஒரு கொள்ளையாய் கணக்கை புதுப்பித்தல் ( ACCOUNT RENEWABLE) சார்ஜ் வேறு 480 ரூபாய் ஆண்டொன்றுக்கு.

இன்னொரு கொள்ளை விதிமுறை பற்றி சொல்லவேண்டும் என்றால் இந்த நிறுவனத்தில் இணைந்தால் வாங்கும் பொருட்களுக்கெல்லாம் கமிஷன் கொடுக்க மாட்டார்கள் அதிலும் ஒரு கொள்ளை விதிமுறையை வகுத்துள்ளனர். ஒருவன் இந்தநிருவனத்தில் இணைந்திருக்கிறான் என்றால் மாதம் 6000 ரூபாய்க்கு பொருட்களை கண்டிப்பாக வாங்கியே தீர வேண்டும் இல்லையென்றால் இவனுக்கு கீழே எவ்வளவு பொருட்கள் விற்பனை ஆனாலும் இவனுக்கு கமிஷன் கிடையாது. அதேபோல் இவர்கம் PV என்னும் POINT VALUE வேறு கடைப்பிடிக்கிறார்கள் தனக்கு கீழே 300 அல்லது 900 PV , அதற்கு மேல் பொருட்கள் விற்பனை செய்தால் தான் சம்பாதிக்க முடியும்.
300 PV = 16,500 ரூபாய் (விற்பனை விலையில் சலுகை போக)
900 PV = 49,500 ரூபாய் (விற்பனை விலையில் சலுகை போக)
இந்த PV விஷயத்தில் பல தில்லுமுல்லு வேலைகள் உள்ளது. இந்த நிறுவனத்தில் இணைந்தவர்கள் வீட்டில் உட்க்கார்ந்து கணக்கு போட்டு பாருங்கள் விளங்கும்.

லட்சங்களையும், கோடிகளையும் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தையை காட்டி இவர்கள் கோடி கோடியாய் மக்கள் பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர். ஆனால் இதெல்லாம் அறியாத மக்கள் தனது பணத்தை இது போன்ற நிறுவனங்களில் தொடர்ந்து இழந்துகொண்டேதான் வருகின்றனர். மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பாதித்தவன்(கவுரவமாய்) கூட இந்த நிறுவனத்தில் இனைந்து தனது உறவினர்கள் நண்பர்கள் வீட்டில் நாயாய் பேயாய் அழைந்து ஆம்வே பொருட்களை விற்பனை செய்து துளியளவு கூட லாபம் ஈட்ட முடியாமல் இருப்பதே நிஜம்.

இந்த நிறுவனத்தில் நான் பார்த்த மிகப்பெரிய கொடுமை ஒரு வாலிபன் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு இந்த நிறுவனத்தில் நாயாய் பேயாய் அழைந்து முழு நேரமாக தனது பொருட்களை விற்பனை செய்து, ஆட்களை சேர்த்து விட்டு வருவதுதான் . இவன் தனது பழைய நிறுவனத்தில் வாங்கிய மாத சம்பளம் 8000 ரூபாய், ஆனால் இந்த ஆம்வே நிறுவனத்தில் இவன் வாங்கிய சம்பளம் பாதி கூட இல்லை இதுவும் இவன் தான் ஏமார்ந்து வருவதை உணரும் வரைதான்.

இந்த பதிவை படிக்கும் ஒவ்வொரு வலைப்பதிவருக்கும் ஒரு சிறு வேண்டுகோள்:

தயவு செய்து இந்த பதிவை உங்கள் நண்பருக்கோ அல்லது உறவினருக்கோ இந்த பதிவில் உள்ள எழுத்துக்கள் சென்றடைய உதவுங்கள். இதில் உள்ள கருத்துக்களை எடுத்து சொல்லுங்கள்.
நான் ஒருத்தனிடம் ஏமாந்தேன் நீ என்னிடம் ஏமாறு என்பதே மல்டி லெவல் மார்கெட்டிங் தாரக மந்திரம்..

Mobile users( in UC browser) use copy paste to share this link in ur timeline/wall:
 https://m.facebook.com/photo.php?fbid=422415957796060&set=a.416980315006291.88376.416865818351074&type=3

--
*more articles click*
www.sahabudeen.com

Petro6 Chennai Engineering Vacancy

CAREERS

is committed to develop and train the new generation engineers in Oil and Gas engineering design to cater for the exponential requirements of experienced personnel in the Industry world wide.

In view establishing the team, we are seeking capable, self-driven and energetic professional Oil & Gas design personnel for the following positions.

Candidates should be committed to Quality and Safety, Innovative and a Pro-active approach to Engineering and Design activities. Experience in Engineering Design and a thorough knowledge of relevant codes & standards, Good communication skills, with fluency in English (both written and spoken), are essential requirements.

Lead / Senior Structural Engineer: Must posses Bachelor's/Master's degree in Civil / Structural Engineering. At least 12 / 7 years of experience in conceptual studies, FEED, detailed design & engineering. Prior knowledge of SACS and STADD Pro software will be considered as a suitable qualification.

Lead /Senior Process Engineer: Must posses Bachelor's/Master's degree in Chemical Engineering. At least 12 / 7 years of experience in conceptual studies, FEED, detailed design & engineering. HAZOP and design reviews, also pre-commissioning and commissioning procedures and activities. Process experience will include onshore & offshore upstream oil production and gas processing facilities. Experience in conducting process simulations particularly with HYSYS is essential. Familiarity with Process Hazard / Risk Analysis is advantageous. Responsibilities will include development of PFD's, P&ID's, UFD's & data sheet including sizing and specification equipment & instruments.

Lead / Senior Electrical Engineer: Must posses Bachelor's/Master's degree in Electrical Engineering. At least 12 / 7 years of experience in basic electrical engineering design including preparation of single line diagrams, schematic diagrams, load flow analysis, short circuit analysis, motor starting analysis, transient stability analysis, ground grid design, relay coordination and setting calculations, transformers, MCC's, cable sizing, lighting calculations, electrical equipment specification and layout etc. Shall be familiar with Hazardous Area Classification and be conversant with design software like EDSA, ETAP or CYME.

Lead / Senior Instrumentation Engineer: Must posses Bachelor's/Master's degree in Instrumentation Engineering. At least 12/7 to years of experience in conceptual studies, FEED, detailed design & engineering, and demands high levels competencies in the development of specifications, engineering and design for the procurement, installation and integration of systems and instrumentation. Hands on experience with INTOOLS will be an added advantage. Extensive experience of DCS / SGS / F&G systems is essential, as is experience of SCADA and communication networks. Familiarity with conducting and implementing safety studies is also desirable.

Senior Piping Engineer: Must posses Bachelor's / Master's degree in Mechanical / Chemical / Piping Engineering. At least 7 years of experience in design and engineering of piping and equipment layout. Capable of independently producing design calculations, MTO's, bill of material, review of isometric drawings, specifications, conducting drawing review and vendor design evaluation. Should be familiar in preparation of shop drawings for fabrication. Must be familiar with relevant design & API, ANSI, DIN, BS codes and experience with CAESAR II software for stress analysis. Exposure to PDMS/PDS piping 3D design review is essential.

Engineers: Structural / Process/ Piping / Mechanical / Electrical / Instrumentation.
Must posses Bachelor's/Master's degree in Mechanical / Electrical / Instruments and Controls Engineering with minimum 4 years of experience.

Trainee Engineers: Structural / Process/ Piping / Mechanical / Electrical / Instrumentation.
Fresh Graduates with Bachelor's/Master's degree in Mechanical / Electrical / Instruments and Controls Engineering.

Senior Designers - Structural / Piping / Electrical / Instrumentation: Must posses Diploma or ITI Draftsman's Certificate as minimum with at least 7 years of experience in respective discipline. The role involves leading small teams of designers and draftsmen in the preparation of CAD models using PDMS /PDS, design drawings, layouts and shop drawings for onshore and offshore facilities. This will involve working closely and interacting with the relevant discipline engineers to develop technical solutions in an efficient and pro-active manner. Activities also include checking of work performed by others, the generation of bills of materials for estimating and procurement purposes and detail design of facilities.

Structural / Piping / Electrical / Instrument Designers: Must posses Diploma or ITI Draftsman's Certificate as minimum with at least 4 years of experience in respective discipline. This will involve working closely and interacting with the relevant discipline engineers to develop technical solutions in an efficient and pro-active manner.

Interested candidates must apply in complete with latest bio-data and recent passport sized photograph clearly highlighting the relevant position applied to hr@petro6.com or by filling out this form online.

Registered Office:

III Floor, Module 34,
ELNET Software City,
Rajiv Gandhi Salai (OMR),
Taramani, Chennai – 600113
TamilNadu, INDIA.

Telephone : +91 44 30576076
Tele Fax : +91 44 30576077

E-mail address:

General Enquiries : info@petro6.com
Sales : sales@petro6.com
Jobs : hr@petro6.com

Please click here for the route map to our office

--
*more articles click*
www.sahabudeen.com

Tuesday, January 29, 2013

ஃபிகர்களிடம் பத்து கேள்விகள்..

ஃபிகர்களிடம் பத்து கேள்விகள்..

1.உங்க அப்பாகிட்ட மொபைல் ரீ-சார்ஜ் பண்ணுவதற்காக வாங்குகிற பணத்தையெல்லாம் என்னதாங்க பண்றீங்க?

2.
உங்களுக்கு பிறந்த நாள் என்றாலும் நாங்க தான் கிப்ட் வாங்கித் தரணும்..எங்களுக்கு பிறந்த நாள் என்றாலும் நாங்க தான் சாக்லெட்,ஐஸ்கிரிம்,வளையல்,இது போல இன்னும் நிறைய வாங்கித்தரணும்..இது என்னங்க நியாயம்?

3.
உங்களுக்கு எல்லாம் செருப்புக்கடையில ஹீல்ஸ் செருப்பை தவிர வேற செருப்பே தெரியாதா...ஆளாளுக்கு 3 அடி உயரத்துக்கு செருப்பு போட்டீங்கனா நாங்க எப்படிங்க உங்களுக்கு சரிசமமாக இருப்பது...?

4.
போஸ்டரில் கூட பார்க்க முடியாத ஒரு சில சூர்யா படங்களுக்கு தியேட்டருக்கு வரச்சொல்லி பார்ப்பது...அந்த கன்றாவியை பார்த்துட்டு சும்மா இருந்தாலும் பரவாயில்லை..படம் சூப்பரா இருக்குபா..இன்னொரு நாள் வந்து பார்ப்போமா..?

5.
அதிகாலை 3.00 மணிக்கும் எஸ்.எம்.எஸ். அனுப்புறீங்களே...உங்களை எல்லாம் உங்க அப்பா அம்மா பார்க்கவே மாட்டாங்களா...??(வந்த எஸ்.எம்.எஸ். என்னவென்றால்..குட் நைட்...ஸ்வீட் டீரீம்ஸ்..) இனிமே எங்க தூங்க...!!

6.
நீங்க அணிகின்ற சுரிதாரில் துப்பட்டாவின் பயன்பாடுதான் என்ன...ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமா பயன்படுத்துறீங்களே..ஏன்..?

7.
நீங்க தனியாக போகும்போது மட்டும் தலைகுனிந்து தரைபார்த்து செல்கீறிர்கள்..ஆனா நாலு பேர் மொத்தமா சேர்ந்தா மட்டும் எங்கிருந்து வருதுங்க தைரியம்..???(கீழிருந்து மேலாக கேவலமா லுக் விடுவதும் மேலிருந்து கீழாக ஒரு லுக் விடுவதும் கேவலமா பார்ப்பதும் நடத்துங்க..)

8.
எப்படி ஒரே ரிங்ல கட் ஆகிற மாதிரி போன் பண்றீங்க...???(பின் குறிப்பு..உலகிலே மிஸ்டு கால் செய்வதில் இந்தியா இரண்டாம் இடமாம்..)

9.
ஒவ்வொரு தியேட்டரிலும் டிக்கெட் விலை என்னவென்று தெரியுமா..?(இல்லை எல்லாமே ஓ.சி.தானா...)

10.
உங்களுக்கெல்லாம் டிராபிக் ரூல்ஸ் அப்படின்னு ஒன்னு இருக்கறது தெரியுமா.. டிரைவிங் லைசென்ஸ் எப்படி இருக்கும்னு தெரியுமா..?

http://www.muthamilmantram.com

--
*more articles click*
www.sahabudeen.com

மனைவியை மயக்குவது எப்படி? கவலையே வேண்டாம்!

மனைவியை மயக்குவது எப்படி? கவலையே வேண்டாம்!

மனைவியை மயக்குவது எப்படி? கல்யாணம் ஆயி பல வருசம் ஆச்சு. இன்னும் வண்டி மக்கர் பண்ணுதே என்று மனசுக்குள்ளே குமையும் நம்ம குரூப் மக்களே!

கவலையே வேண்டாம்! சின்னச் சின்ன டகல்பாச்சி வேலைகளை செய்தாலே போதும்!! பூதத்தை புட்டியில் அடைச்ச அலாவுதீன் கணக்கா ஆயிடலாம்!!

ஏன்னா மனைவிகளை கொஞ்சம் மயக்கத்திலேயே வச்சிருந்தாத்தான் நம்ம பொழப்பு ஓடும்!!

இது ஆண்களுக்கு மட்டும்.

மகளிர் வண்டியில் நாங்க மறந்தும் ஏறினா பிண்ணிட்ரீங்க இல்ல. அதுபோல இது அப்பாவி அப்பாக்களுக்கு மட்டும்!

1.
வீடு திரும்பும்போது ஒரு போனைப்போட்டு 'உனக்கு அல்வா புடிக்குமே இன்னைக்கு வாங்கிக்கிட்டு வரவா?'ன்னு சின்சியரா ஒரு கேள்வி கேளுங்க மக்களே! பாதிநாள் 'செலவு எதுக்கு? வேணாம்ன்னுதான் பதில் வரும்!' என்ன சரியா?

2.
மனைவி முன்பே எழுந்து காபி தருவது மலையேறிப்போன காலம்!

காலையில் நீங்கதான் முதலில் எந்திரிப்பீங்க! சும்மா ஒரு காபி போட்டு கொண்டுபோய் பெட்காபி சர்வீஸ் பண்ணி அசத்துங்க. லீவு நாளானால் ப்ரெட் டோஸ்ட் போட்டு ரெண்டு முட்டைய ரெடி பண்ணி ஆச்சரியப்படுத்துங்க.

3.
எல்லாத் தங்கமணிகள் போல உங்க தங்கமணியும் பெட் மேலே துவைத்த துணி, பெட்ஷீட்ன்னு ஒரு மலையே இருக்கும். கோவப்படாம தூங்கப்போகும் முன் எல்லாத்தையும் கொஞ்சம் அடுக்கி வைத்து விடுங்க.

4.
மதியம் சாப்பிட்டது, ப்ளேட் எல்லாம் இரவு அசதியில் அப்படியே போட்டு வைத்து இருப்பார்கள். நாம் தானே கடைசியா படுப்போம். எல்லாத்தையும் சத்தமில்லாம கழுவி அடுக்கி வைத்து விடுங்கள்.

5.
மனைவின்னாலே குண்டுன்னுதான் அர்த்தம்! அதை சுட்டிக்காட்டாம இருக்கவும் முடியாது! அப்படிப்பண்ணும்போது அது நக்கலில் போய் முடியும். அப்படியில்லாமல் 'இந்த சேலையில நீ குண்டாவே தெரியலியே', 'அந்த காம்பாக்ட் பவுடர் போட்ட கண் கருவளையம் தெரியவே இல்லை' இப்படிச் சொல்லணும்!

6.
ஒருநாள் சாயங்காலம் முழுக்க டி.வி. ரிமோட் அம்மிணி வசம் கொடுத்து விட்டு அவங்க விருப்பப்பட்ட சீரியல்களை பல்லைக்கடித்துக்கொண்டு பார்க்கவும்..

7.
வீட்டு நாயைப் புடிச்சு தண்ணி ஊத்தி குளிப்பாட்டிவிடுங்க. அம்மிணி வண்டியை கொஞ்சம் துடைத்து பளபளப்பாகி விடுங்க.

8.
வீட்டில் ஆணி அடிக்கணுமா?ன்னு கேட்டு சின்னச்சின்ன வேலைகளை முடிங்க.

9.
அடுப்படி சாமானை நோட்டமிட்டு தீரும் நிலையில் உள்ள வெல்லம், சீனி, காபித்துள் அயிட்டங்களை வாங்கிவந்து ஆச்சரியப்படுத்துங்கள். கூடவே அவங்களுக்குப் பிடித்த சமோசா, பப்ஸ் ஏதாவது!!

10.
ஞாயிறு போன்ற விடுமுறையில் அப்படியே ஒரு சுத்து. நோ சமையல்.. ஜாலிதான் அப்புறம்!

11.
எப்பவுமே அம்மாவை டார்ச்சர் பண்ணி வேலைவாங்கும் பொடியன்களை ஒரு ரெண்டு மணிநேரம் உங்க கண்காணிப்பில் ட்ரில் எடுங்க.

12.
குற்றம் கண்டுபிடித்து தொல்லை செய்வதை கொஞ்சம் தவிருங்கள். உங்களிடம் இருக்கும் குறைகளையும் கொஞ்சம் எண்ணிப்பார்க்கவும்!

13.
வார்த்தைகளில் கொஞ்சம் கனிவு கலந்து குடுங்க. நீங்க முதமுதலா பார்த்தபோது எப்படிப் பேசினீங்க என்று கொஞ்சம் ப்ளேபாக் பண்ணிப்பாருங்க.

14.
வெளியே கூட்டிப்போனா வேலைக்காரன் மாதிரி ஆயிடனும். கார் கதவைத்திறந்து விடனும். ஐஸ்கிரீமை ஓடிபோய் வாங்கி வந்து கொடுக்கணும்.

15.
அம்மாஞ்சியா இல்லாம மீசையை ட்ரிம் பண்ணனும், முடியை அழகா வெட்டிக்கணும். கொஞ்சம் லேட்டஸ்ட் ட்ரெஸ் போட்டுப் பழகணும்.

16.
ஒரே அடியா மனைவியே சரணம்னு ஆகிவிடக்கூடாது. கொஞ்சம் உங்களுக்கான நண்பர்கள், பெரிய மனித தொடர்புகளை வளர்த்துக்கொள்ளணும்.

17.
மனைவியின் நண்பிகள், சொந்தக்காரிகள் வந்தா வேலையில் உதவுகிறேன் என்று ஓவரா அவர்களை கவனித்துவிடக்கூடாது..

18.
மனைவியைப் பற்றியோ உங்கள் கல்யாணத்தையோ வைத்து காமெடி கீமெடி பிறர் இருக்கும்போது பண்ணிவிடாதீர்கள்.

19.
மனைவியுடன் பேச ஒரு நேரம் ஒதுக்கிவிடுங்கள். ஊன்றி கவனியுங்கள். கொஞ்ச நேரம் கழித்து 'இப்ப என்ன சொன்னே'ன்னு அசால்டா கேட்கக்கூடாது.

20.
முடி எப்படியிருக்கு, சீவியது நல்லயிருக்கா? சட்டை மேட்சாகுதா? போன்ற கேள்விகளைக்கேட்டு அதன் படி மாற்றிக்கொள்ளணும்.

இப்படி இன்னும் நிறையவுள்ளது..

http://sirakugalnews.blogspot.in

--
*more articles click*
www.sahabudeen.com

முட்டையை பச்சையாக சாப்பிடக்கூடாது ஏன்?

முட்டையை பச்சையாக சாப்பிடக்கூடாது ஏன்?

இரண்டு காரணங்களுக்காக :

1.
பச்சை முட்டையில் avidin என்ற

வேதிப்பொருள் உள்ளது.நாம்

அப்படியே குடிக்கும்போது அது குடலில்

சென்று biotin என்ற விட்டமின்

சத்தை உறிஞ்ச விடாமல்

செய்கிறது.தொடர்ந்து பச்சை முட்டை

சாப்பிட்டுவந்தால் கடும் பயோட்டின்

குறைபாடு ஏற்படும்

2.முட்டையின் ஓடு மெல்லியது.அதில்

சிறுசிறு கண்ணுக்குத் தெரியாத

துவாரங்கள் இருக்கும்.வெளி ஓட்டில்

உள்ள கோழியின் கிருமிகள்

உள்செல்வது எளிது.மேலும் நீண்ட

தொலைவுகள்

இது எடுத்துச்செல்லப்படும்போது

அதிர்வுகள் மூலம் கண்ணுக்குத்தெரியாத

சிறு கீறல் விழும்.இதன் மூலமும் சால்மோனெல்லா, பறவைக்காய்ச்சல் 

கிருமிகள் எளிதில் பரவும்.

மேலும் முட்டையானது கிருமிகள் வளர

ஒரு அருமையான ஊடகம் (good culture media).

எனவே எல்லா வயதினரும் எப்போதும்

முட்டையை வேகவைத்தோ

வறுத்தோதான் சாப்பிடவேண்டும்.

ஆஃப் பாயிலில் ஆஃப் ரிஸ்க் உள்ள

http://doctorrajmohan.blogspot.in

--
*more articles click*
www.sahabudeen.com

தெரிந்து கொள்வோம் வாங்க-33

தெரிந்து கொள்வோம் வாங்க-33

* சிலந்திகள் ஒரு வார காலம் வரை உணவு இல்லாமல் வாழ்கின்றன.

* மண்புழுவிற்கு 5 ஜோடி இதயங்கள் உள்ளன.

* தேனீயால் பச்சை, நீலம், ஊதா நிறங்களை பிரித்தறிய முடியும்.

* பூச்சி இனங்களில் தும்பியின் கண்கள் கூர்மையானவை.

* பட்டாம் பூச்சிக்கு நூரையீரல் இல்லை. அதன் வயிற்றுப் பகுதியில் உள்ள `ஸ்பிராக்கிள்' என்னும் துளைகள் வழியாக சுவாசிக்கின்றன.

* ஆண், பெண் இரண்டின் இனப் பெருக்க உறுப்புகளும் நத்தையில் காணப் படுகிறது. இதனால் அவை ஹெர்மப்ரோடைட்ஸ் என்று அழைக்கப்படுகிறது.

* யானையின்துதிக்கை ஒரு லட்சம் தசைகளால் ஆனது. அதன் இதயம் நிமிடத்திற்கு 28 தடவை மட்டுமே துடிக்கின்றன.

ஆஸ்திரேலியாவிற்கு அருகில் நவ்ரு என்னும் மிகச் சிறிய தீவு இருக்கிறது. இந்நாட்டின் மக்கள் எதற்காகவும் கவலைப்படத் தேவையில்லை. வசிப் பதற்கு வீடு, உண்ண உணவு, உடுக்க உடை போன்ற அத்தியாவசியத் தேவை அனைத்தையும் அரசாங்கமே கவனித்துக் கொள்கிறது. பாஸ்பேட் உரம் இயற்கையாகவே நவ்ரு நாட்டில் கிடைப்பதால் அதை அதிக அளவில் ஏற்றுமதி செய்து வருமானத்தை ஈட்டுகிறது. வெளிநாட்டுக்குச் செல்லவேண்டும் என்றால் கூட அரசாங்கமே எல்லாச்செலவுகளையும் ஏற்று குடிமக்களை அனுப்பி வைக்கிறது.

***

மத்திய தரைக் கடல் பகுதியில் தென் கிழக்கு பிரான்ஸ் எல்லையோரம் அமைந்துள்ள மிகச் சிறிய தீவு மோனாகோ. இது மொத்தமே அரை மைல் சதுர பரப்பளவு கொண்டதாகும். ஆனால் அளவை வைத்து இந்த தீவின் பொருளாதாரத்தை எடை போட்டு விட வேண்டாம். ஏனெனில் உலக கோடீஸ்வரர்களின் சொர்க்க புரியாக இந்த தீவு திகழ்கிறது. இங்கே ஒவ்வொரு கோடீஸ்வரரும் அவரவருக்குச் சொந்தமான ஆடம்பர, அலங்காரப் படகுகள் மூலம்தான் மதிக்கப்படுகிறார்கள். சுற்றுலாப் பயணிகளின் வரு மானத்தைக் கொண்டே இந்தத் தீவில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை இருக்கிறது.

***

சுவீடன் நாட்டில் உள்ள குடிமக்கள் அனைவருக்கும் அந்நாட்டு அரசாங்கம் தனித்தனி எண்களைக் கொடுத்துள்ளது. அரசு நிறுவனங்கள் அவர்களைப் பற்றிய எல்லா விவரங்களையும் அவர்களுக்கு அளிக்கப் பட்டுள்ள எண்களைக் கொண்டுதான் குறிப்பிட்டு வருகிறது. ஆண்களுக்கு இரட்டைப் படை எண்களும், பெண் களுக்கு ஒற்றைப்படை எண்களையும் கொடுத்து வருகின்றனர். வெளிநாடுகளில் இருந்து வந்து சில காலம் தங்குவோருக்கும் கூட இது போன்ற எண்கள் கொண்ட அடையாள அட்டையை தருகிறார்கள். இதன் மூலம் ஒவ்வொருவரது தேவையும் நடவடிக்கையும் கவனிக்கப்படுகிறது.

***

60 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கர் அணிந்திருக்கும் டையின் நிறத்தை வைத்தே அவர் எந்த ஊர்க்காரர் என்பதை அடையாளம் கண்டு கொள்ள முடியும். பச்சைநிற டை கட்டியிருந்தால் அவர் பாஸ்டனைச் சேர்ந்தவர். சிவப்பு நிறம் என்றால் அவர் சிகாகோகாரர். இப்படி ஒவ்வொரு பெரிய நகரத்துவாசிகளும் தங்க ளுக்கென்று விசேஷமாக டை தயாரித்துக் கொண்டார்கள். அதில் குறிப்பிட்ட கோடு நம்பர்களையும் குறிப்பிட்டு வைத்தார்கள். அப்போதுதான் நவீன டை அறிமுகமாகியிருந்ததால் அதை இரவில் கூட பலர் எறியாமல் அணிந்து கொண்டே தூங் கினார்கள்.

***

வியர்வையை வெளியேற்றவே நாய்கள் நாக்கை தொங்க விடுகின்றன. ஏனெனில் நாய்களுக்கு மற்ற இடங்களில் வியர்வைச் சுரப்பிகள் இல்லை.

* பூசணிக்கொடியின் வேர்கள் 2.4 கி.மீ. நீளம் வரை வளரும்.

* நத்தைக்கு 25 ஆயிரம் பற்கள் உண்டு.

* சாம்பிராணி ஒரு மரத்தின் பிசின் ஆகும்.

* அன்னாசிப் பழத்திற்கு விதைகள் கிடையாது.

* கரப்பான் பூச்சியின் இதயம் 13 அறைகளைக் கொண்டது.

* தேனீ நம்மைக் கொட்டியதுமே வலி ஏற்படக் காரணம் அது பார்மிக் என்னும் அமிலத்தை நம் உடம்பில் செலுத்துவதாகும்.

* மண்புழு தோல்மூலம் சுவாசிக்கும்.

* தவளையின் இதயத்தில் மூன்று அறைகள் உள்ளன.

**ஈசலுக்கு ஜீரண உறுப்பு கிடையாது. அதனுடைய ஆயுட்காலம் ஒரே ஒரு நாள் மட்டுமே. 24 மணி நேரத்திற்கு மேல் அதனால் வாழ முடியாது.

*கறையான் வெப்பம் மிகுந்தநாடுகளில் இருக்கும். ஆண்,பெண் கறையான், ஆணும் பெண்ணும் அல்லாத கறையான் என அவற்றில் மூன்று வகை உண்டு.

*திருக்குறளை முதன் முதலில் ஓலைச் சுவடியிலிருந்து அச்சேற்றிய வர்கள் இரண்டு புலவர்கள். திருத்தணி விசாகப் பெருமாளையர், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆறுமுக நாவலர். இந்த ஒப்பற்ற தொண்டினை இவர்கள் செய்யாவிடில் திருக்குறள் அழிந்தே போயிருக்கும்.

*பச்சோந்தி அடிக்கடி தன் நிறத்தை மாற்றிக் கொண்டே இருக்கும். சில சமயங்களில் காற்றை நிறைய உள்ளிழுத்து சுய உருவை விட பல மடங்கு பருத்துக் காணப்படும். இத னுடைய நாக்கு மிகவும் நீளமானது. 10 அங்குலத்திற்கு அப்பால் உள்ள பூச்சியை ஒரேயொரு நொடியில் கவரக்கூடிய சக்தி படைத்தது. இவையெல்லாவற் றையும் விட மிகவும் வியப்பை ஏற்படுத்துவது பச்சோந்தியின் கண்கள்தான். ஒரு கண் நேரில் இருப்பதை உற்று நோக்க, மற்றொரு கண் பின்னால் இருப்பதை பார்க் கும். அற்புதமான அமைப்பை உடையது. உலகில் வேறு எந்த உயிரினத்திற்கும் இந்த அமைப்பு கிடையாது.

நன்றி: யாழ் இணையம்

Engr.Sulthan

--
*more articles click*
www.sahabudeen.com

தெரிந்து கொள்வோம் வாங்க-31

தெரிந்து கொள்வோம் வாங்க-31

*பனானா எண்ணை என்பது எதிலிருந்து எடுக்கப்படுகிறது? - கச்சா எண்ணையி லிருந்து.

*வெள்ளரிக்காயில் எத்தனை சதவீதம் நீர் உள்ளது? - 96 சதவீதம்.

*உலகம் முழுவதும் பரவலாக சாகுபடி செய்யப்படும் பழமையான பருப்பு ரகம்? - பாதாம் பருப்பு

*ஆரஞ்சு, தக்காளி, தர்பீஸ், எலுமிச்சம் பழம் இவற்றுக்கு உள்ள பொதுவான ஒற்றுமை? - இவை பெர்ரி பழ வகையைச் சேர்ந்தவை

*அமெரிக்கர்கள் அதிகம் விரும்பிச் சாப்பிடும் பழம்? - வாழைப்பழம்

*முட்டைச் செடி என்று எந்தச் செடி அழைக்கப்படுகிறது? - கத்தரிக்காய்

*ஓக் மரம் எத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு பழங்கள் தரும்?- 50 வருடங்கள்.

*ரெட்வுட் என அழைக்கப்படும் மரத்தின் இன்னொரு பெயர்? - ராட்சத செகுவாயா

*அண்டார்டிகா கண்டம் தவிர அத்தனை கண்டங்களிலும் சாகுபடி செய்யப்படும் தானியம்? - கோதுமை.

*புதிய காபிச் செடியில் காபிக்கொட்டை எத்தனை ஆண்டுகளுக்கு பிறகு கிடைக்கும்? - 5 ஆண்டுக்குப் பின்.

*வில்லோ பார்க் மரத்திலிருந்து கிடைக்கும் மருத்துவ அமில - சாலிசிலிக்

*உலகிலேயே மிக உயரமாக வளரும் புல்? - மூங்கில்

*உலகிலேயே மிகப் பெரிய பூ எது? - ரப்லேசியா

*ஆப்பிளில் எத்தனை சதவீதம் நீர் உள்ளது? - 84 சதவீதம்.
தகவல்:யாழ் இணையம்

Engr.Sulthan

--
*more articles click*
www.sahabudeen.com

தெரிந்து கொள்வோம் வாங்க-32

தெரிந்து கொள்வோம் வாங்க-32
*காந்தியடிகளை முதன்முதலில் "மகாத்மா' என்று அழைத்தவர் ரவீந்திரநாத் தாகூர்.

*உலகின் 17 பல்கலைக்கழகங்களில் டாக்டர் பட்டம் பெற்ற ஒரே இந்தியர் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர்.ராதாகிருஷ்ணன்.

*யானையின் நீண்ட மூக்கை தும்பிக்கை என்று அழைக்கிறோம். இதில் ஒரு சிறு எலும்பு கூட கிடையாது. இது 40,000 தசை நார்களால் ஆனது.

*உலகில் பாம்புகளே இல்லாத நாடு அயர்லாந்து. 1,500 ஆண்டுகளாக அங்கு எவரும் பாம்பைப் பார்த்தது இல்லையாம்.

*அஜந்தாவில் உள்ள 27 குகைகளையும் செதுக்கி முடிக்க 700 ஆண்டுகள் ஆயின.

*இஞ்சியின் சமஸ்கிருதப் பெயர் "ஸ்ரீங்கவேரம்'. இதன் பொருள் மான் கொம்பைப் போன்று என்பதாகும்.

*உலகிலேயே நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்தும் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் தான் உள்ளன. ஒரு கிலோ கிராம் தோலுக்கு 20-22 லிட்டர் தண்ணீரையே பயன்படுத்துகின்றனர். உலக அளவு 40-42 லிட்டர் தண்ணீராகும்.

*சென்னையில் 1876-ம் ஆண்டு கடும் பஞ்சம் ஏற்பட்டது. அப்போதைய கவர்னர் பக்கிங்காம் மக்களுக்கு வேலை கொடுப்பதற்காக அடையாற்றையும், கூவம் ஆற்றையும் இணைக்கும் கால்வாய் ஒன்றை வெட்டினார். அவர் நினைவாக இது பக்கிங்காம் கால்வாய் எனப்படுகிறது.

*உலகிலேயே முதன்முதலாக பிஷப்பான பெண்மணி பார்பரா சிஹரிஸ். இவர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்.

*உலகிலேயே மிகப் பெரிய பல்கலைக்கழகம் மாஸ்கோவில் உள்ளது. அறைகளின் எண்ணிக்கை 49,000.

*உலகின் மிகப் பெரிய கதவுகள் அமெரிக்காவிலுள்ள அசெம்பிளி மாளிகையின் கதவுகள். இதன் உயரம் 400 அடிகள்.

*உலகின் கூரை எனப்படுவது பாமீர் பீடபூமி.

*உலகின் பெரிய கண்டம் ஆசியா.

*உலகிலுள்ள 181 நாடுகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள்.

*உலகின் மிகப் பெரிய தீவு கிரீன்லாந்து.

*உயரமான மிருகம் ஒட்டகச் சிவிங்கி.

*மிகப் பெரிய பறவை நெருப்புக் கோழி.

*மிகப் பெரிய அருங்காட்சியகம் லண்டன் அருங்காட்சியகம்.

*மிக நீளமான நதி மிஸெளரி மிஸிஸிப்பி (4,500 மைல் நீளம்).

*பேகம் ரொக்கயா ஷெகாவத் ஹூசைன், பண்டித ரமாபாய், சுப்புலட்சுமி, ருக்மணி தேவி அருண்டேல் ஆகியோர் கல்விப் பணியில் ஈடுபட்ட பெண்மணிகள்.

*டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி, டாக்டர்.ஜடா சோஃபியா ஸ்கட்டர், அம்புஜம்மாள், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் ஆகியோர் சமூகப் பணியில் ஈடுபட்ட பெண்மணிகள்.

*அமெரிக்க சுதந்திர தேவி சிலை கையின் நீளம் 16 அடிகள்.

*கார் திருட்டு அதிகம் நடப்பது அமெரிக்காவில்.

*அமெரிக்காவில் சிறைக் கைதிகள் "சிறைக் கண்ணாடி' என்ற பத்திரிகையை நடத்துகின்றனர்.

*அமெரிக்காவில் ஹெலிகாப்டர் டாக்ஸிகள் உள்ளன.

*அமெரிக்காவில் தான் முதன்முதலில் குதிரைப் பந்தயம் தோன்றியது.

*அலுமினியத்தை அதிகளவில் உற்பத்தி செய்யும் நாடு அமெரிக்கா.

*இன்று நாம் வாக்கியங்களுக்கு இடையே பயன்படுத்தும் கமா, செமிகோலன், முற்றுப்புள்ளி போன்ற குறியீடுகளை தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தியவர் வீரமாமுனிவர்.

*கர்ஸன் பிரபு காலத்தில் தான் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முறை அமலுக்கு வந்தது.

*அகாதெமி என்பது ஒரு கிரேக்க மொழிச் சொல். புகழ் பெற்ற கிரேக்கத் தத்துவஞானி பிளாட்டோ தமது சீடர்களுக்கு பாடம் கற்பித்த கோப்புகளைக் குறித்த சொல் இது. பின்னர் உயர் கல்வி போதிக்கும் கல்விக் கழகங்களை இச் சொல் குறிக்கத் தொடங்கியது.
 
*பிப்ரவரி மாதத்தை நியூமா எனும் சக்கரவர்த்திதான் முதன் முதலில் கி.மு.713-ல் ரோமன் காலண்டரில் அறிமுகப்படுத்தினார். அப்போது இது வருடத்தின் கடைசி மாதம். பின்னர், கி.மு.450-ல் தான் வருடத்தின் இரண்டாம் மாதமாயிற்று.

* மின்துடிப்புகளை ரேடியோ அலை மூலம் ஒரு மைல் தூரம் அனுப்பக் கூடிய ரேடியோ கருவியைக் கண்டுபிடித்தவர் மார்கோனி. முதன்முதலில் கோன் ஐஸ்கிரீமை தயாரித்த வரும் இவரே.

* புகழ்பெற்ற புன்னகை ஓவியமான மோனலிசா ஓவியத்தை வரைந்த லியானார்டோ டாவின்சியின் கற்பனைத் திறன் அறிவியலுக்கு ஒரு சவாலாக இருந்தது. அது எப்படித் தெரியுமா? முதன்முதலில் இதயத்தின் நிஜ வடிவம் இதுதான் என்பதை தத்ரூபமாக வரைந்து காட்டினார். பூக்களில் ஆண், பெண் உண்டு என கண்டுபிடித்துக் கூறினார். தாவரங்கள் சூரியனை நோக்கி வளர்வது போன்ற இவரது ஓவியங்கள் இயற்கை குறித்த ஆய்விற்கு பேருதவியாக இருந்தன.

*ஜான் டோமினிக் பாபி என்ற எழுத்தாளருக்கு பக்கவாதத்தால் கைகளும், கால்களும் பாதிக்கப்பட்டன. வாயால் பேசவும் முடியவில்லை. தனது நெருங்கிய உதவியாளரிடம் வெறுமனே கண்களை அசைத்து ஒவ்வொரு எழுத்து, வார்த்தை மற்றும் வாக்கியங்களைப் புரிய வைத்தார். இதன் மூலம் "தி டைவிங் பெல் அண்டு தி பட்டர்ஃபிளை' என்ற புத்தகத்தை எழுதினார். அவர் இறப்பதற்கு முன் 1996-ம் ஆண்டு இது வெளிவந்தது. இப்புத்தகம் மிக அதிகமாக விற்பனையான புத்தகங்களில் ஒன்றாக அமைந்தது.

*எந்தக் கருவியின் உதவியும் இல்லாமல் இதுவரை மக்கள் கேட்ட ஒலிகளிலேயே மிகப் பெரிய ஒலி 1833-ம் ஆண்டு ஆகஸ்டு 6-ம் நாள் கேட்டது. கனடா நாட்டில் உள்ள கிராக்டோ எரிமலையின் சீற்றம் தான் அது. அந்த ஒலி 3,000 மைல் தொலைவிற்குக் கேட்டது. அந்த எரிமலையின் கிளர்ச்சி அத்தீவின் தோற்றத்தையே மாற்றியதுடன், அதன் விளைவுகள் ஆங்கிலக் கால்வாயிலும் தாக்கத்தை ஏற்படுத்தின.

* கைரேகை போல் காலில் காணப்படும் ரேகைகளும் மனிதனின் ஆயுள் முழுவதும் மாறுவதில்லை.

* கோபி பாலைவனம் குளுமை நிறைந்த பகுதியாகும்.

* நெருப்புக் கோழி தண்ணீரில் நீந்தும்.

* மீனின் செதில்கள் மூலம் அதன் வயதை அறியலாம்.

* மிக வெப்பமான நட்சத்திரத்தின் நிறம் நீல நிறம்.

* காந்தியடிகள் தன் வாழ்நாளில் ஒரு முறை கூட விமானப் பயணம் மேற்கொண்டது கிடையாது.

* சீன நாட்டின் மீது படையெடுத்த ஒரே இந்திய மன்னர் முகம்மது-பின்-துக்ளக்.

* இந்திய தேசப்படத்தை முதன்முதலாக வரைந்தவர் ஆன்வின் என்ற பிரெஞ்சு நாட்டுக்காரர்.

* இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட உலோகப் பற்றாக்குறையினால் ஆஸ்கர் விருதுகள் மரத்தினால் செய்து வழங்கப்பட்டன.

* டார்வின் மண்புழுக்களைப் பற்றி ஆராய்ந்து 1881-ல் புத்தகம் எழுதினார்.

* மழைக் காலங்களில் திடீரென அதிகமான அளவில் ஈசல்கள் தோன்றுவதுண்டு. இதன் விலங்கியல் பெயர் எஃபமெரோப்டெரா.

* சாதாரணமாக எல்லா இடத்திலும் காணப்படும் 1.25 செ.மீ. நீளமுள்ள மண்புழுவானது 24 மணி நேரத்தில் சுமார் 900 செ.மீ. நீளத்திற்கு மண்ணைக் குடைந்து விடும்.

* சிலவகை நத்தைகள் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு மேல் தூங்கும் தன்மை கொண்டவை.

* வீட்டில் காணப்படும் ஈக்கள் சுமார் மணிக்கு 7 முதல் 8 கி.மீ. வேகத்தில் பறக்கும்.

* பிடரியுடன் உள்ள ஆண் சிங்கத்தை வீரமுள்ளது என நாம் நினைத்துக் கொண்டிருந்தாலும், உண்மையில் 90 விழுக்காடு விலங்குகளை வேட்டையாடிக் கொல்வது பெண் சிங்கம் தான்.

* நீண்ட ஆயுள் உடைய உயிரினம் ஆமை.

* முதலை, திமிங்கலம் ஆகியவற்றால் நீரில் மூச்சு விட முடியாது.
 
* சுபாஷ் சந்திரபோஸ் ஒரிசாவில் உள்ள கட்டாக் நகரில் 1897-ம் ஆண்டு பிறந்தார்.

* உலகில் முதன்முதலில் பயன்படுத்தப்பட்ட செல் போனை உருவாக்கிய நிறுவனத்தின் பெயர் மோட்டோரோலா.

* மனித உடலின் வேதியியல் ஆய்வுக்கூடமாகக் கருதப்படும் உறுப்பு ஈரல் தான்.

* சிறுநீர் வழியாக வெளியேற்றப்படுவது வைட்டமின் "சி' ஆகும்.

* தாதா சாகேப் விருது பெற்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பிருத்விராஜ் கபூர், ராஜ்கபூர்.
_________________