Wednesday, January 16, 2013

நபியவர்கள் எங்கள் உயிருக்கு மேல் - மீள்பதிவு - ஹஸனீ


நபியவர்கள் எங்கள் உயிருக்கு மேல் என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட கட்டுரை சில அன்பர்களின் வேண்டுகோளின் படி மீண்டும் மீள்பதிவு செய்யப்படுகிறது.

இந்த கட்டுரை " innocence of Muslim" என்ற திரைப்படம் வந்ததற்க்குப்பின் முஸ்லிம்கள் தங்களிடம் நிலைப்பாட்டை எவ்வாறு அமைக்கவேண்டும் என்ற அடிப்படையில் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் புத்தகமான புஹாரியின் ஒரு பாடத்திலிருந்து எடுத்து எழுதப்பட்டது.

இது ஒரு வசந்த காலம் நபியவர்கள் வரலாறுகள் மீண்டும் பழைய தமிழகம் போன்று வீதியெங்கும் முழங்க ஆரம்பித்துவிட்டது. 

தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும் சீறா தொடர் சொற்பொழிவுகள் நடத்தப்படுகின்றன.

இன்னும், ஒரு படி மேலே போய் பள்ளிவாயில்களில் நாம் வைக்கிற நிக்ழச்சிகளை கடைதெருவுகளில் வைத்தால் மாற்றுமத சகோதர்களின் காதுகளிலும் நம் நபியவர்களின் வரலாறுகள் விழ ஒரு வாய்ப்பு பிறக்கும்.

நபியவர்களை பற்றி பேசுவது கேட்பதும் ஒரு இறைவணக்கமே (இபாதத்தே) அது மஸ்ஜிதில் நடத்தப்பட்டாலும், கடைத்தெருவில் நடத்தப்பட்டாலும் சரியே.

அப்படி நடத்தப்படுவதற்கு நம் தூண்டுகோளாக இருந்தால் ( அது சிந்தனை ரீதியாகவோ அல்லது பொருளாதார ரீதியாகவோ) அத்தனை கணக்கிடப்பட்டு நாளை மறுமையில் இறைவனால் கூலி வழங்கப்படுவோம்.

வெளிநாடுகளில் வாழ்கிற சகோதர்கள் இது போன்ற சீறா நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிற வாய்ப்பு கிடைக்காவிட்டால். 

குறைந்த பட்சம் ரஹீக் போன்ற நபியவர்கள் வரலாற்று நூற்களை குடும்பத்தோடு அமர்ந்து ஒரு, இரு பக்கங்கள் தினமும் படித்துக்காட்டினால் நம் குழந்த்தைகள் நபியவர்களைப்பற்றி தெரிய ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியவர்கள் ஆவோம். ( பொதுவாக இது போன்ற புத்தகங்களை நாம் பார்த்தவுடன் ஆசையோடு வாங்குவோம், அன்று அலமாரியில் வைத்தோடு சரி, பின் வீட்டை சுத்தம் செய்யும் தினத்தன்று அவை நம் பார்வைகளை தொட்டுப்போகும் மனதில் ஒரு குற்றவுணர்வோடு.

(குறிப்பு : இதை எழுதிக்கொண்டிருக்கும் போது ஒரு செய்தி செங்கோட்டையில் நடைபெற்ற  ஒரு மஸ்லிஜில் சிலர் புகுந்து அங்கு பேசிக்கொண்டிருந்தவரை கடுமையாக தாக்கியிருக்கிறார்கள், இச்செய்தி காவல்துறை வரை சென்று பின் ஒரு கலவரமாகும் நிலை ஏற்பட்டுள்ளது. 
இப்பொழுது அவர் மருத்துவமனையில் உள்ளார் அவரின் உடல்நிலைக்கு து ஆ செய்யவேண்டுகிறேன்.

உமரே! உம் உயிரை விட நீங்கள் என்னை பிரியப்படாதவரை உங்கள் ஈமான் முழுமையாகாது என்று உமர் (ரலி) அவர்களை பார்த்து நபியவர்கள் சொன்ன செய்தி என்று தான் நம் இஸ்லாமிய இளவல்கள் காதில் விழும் என்று தெரியவில்லை. 

அவர்கள் தான் நபியவர்கள் பெயர் சொன்னதற்காக அடிக்க களமிறயிக்கிறார்கள்,தாங்கள் ஏதோ சத்தியத்தை நிலைநிறுத்திவிட்டதாக தவறாக நினைக்கிறார்கள் இறைவன் அவர்களுக்கு சத்தியத்தை சத்தியமாக விளங்குவதற்கும் அசத்தியத்தை அசத்தியமாக விளங்கவும் தவ்பீக் செய்வானாக. ஆமீன்)







நம் உயிருக்குயிரான உயிரினும் மேலான சத்தியத்தூதர் நபிகள் (ஸல்) அவர்கள் குறித்து வெளியிட்டப்பட்ட குறும்படம் உலக அரங்கில் சில அரக்கர்களை
 
அடையாளப்படுத்தியது.
 
அதன் வெளிப்பாடாக உலக முஸ்லிம்கள் உலகின் எல்லா மூலைகளிலும் தத்தம் எதிர்பலைகளை காட்டிவருகின்றனர்.
 
இது போன்ற தருணங்களில் ஒரு முஸ்லிம் தங்களின் எதிர்ப்பை முறைப்படி பதிவு செய்யவேண்டும்.
 
இன்னும் சில ஊடகங்கள் அமெரிக்க அதிபர் ஒபாமாவே அப்படத்தை பார்த்துவிட்டு, அப்படி "எதிர்க்கவேண்டிய அளவிற்க்கு ஒன்றுமில்லை"
 
ஏதோ இவரின் சர்டிபிகேட் ரொம்ப உயர்ந்தது போன்றும், இன்னும் இவர் ஏதோ பெரிய தியாகி போன்றும் சித்தரித்து அவரின் சொற்கள் இன்று மீடியக்களில்
 
இப்படம் குறித்து வலம் வருகிறது.
 
தங்களின் சிந்தனையாலும், செயலாலும் நாகரிகம் கெட்ட இன்னும் தன் வம்ச வழியாலும் ( இன்று இறைவன் அருளால் அவரின் குடும்பம், தாய் பற்றிய
 
ஆவனப்படம் வெளியிடப்பட்டுள்ளது) வெட்கம் கெட்ட வழியில் உள்ளவர்கள் தங்களை போன்றே பிறரையும் பார்கிறார்கள்.
 
பெருமானாரின் வரலாற்றைப்பாதுகாக்க முஸ்லிம்களை விட இறைவன் போதுமானவன்.
 
அவர்கள் வெள்ளைமாளிகையில் இருந்தாலும் அவர்கள் இறைவன் கேவலப்படுத்திவிடுவான் என்பது இது தான் சான்று.
 
ஏதோ அவரின் தாய்பற்றி உண்மைச்செய்தி  வந்தவுடன் வருத்தப்படுகிராறாம் ஒபாமா.
 
இப்பொழுது இதையும் கருத்துச்சுகந்திரம் என்று சொல்லவேண்டியது தானே.
 
தனக்கென்று வரும்போது வலிக்கிறது, ஒபாமாவே பொறுத்திரு இன்னும் முடியவில்லை இன்னும் இறைவன் இதற்கு வித்திட்ட அத்துணை பேரையும்
 
கேவலப்படுத்து காலம் சமீபமானது.
 
இஸ்லாமியரகளுக்கு எங்கள் தலைவர் முஹம்மது ரஸுலுல்லாஹ் உயிரைவிட மேல்.
 
இப்படிதான் சொல்லித்தருகிறது எங்கள் வேத மறை,  எங்கள் உயிரைக்கொண்டாவது அந்த கலங்கத்தை துடைத்தெடுப்போம்.
 
இந்த இடத்தில் இஸ்லாமியர்களுக்கு சில வரிகள்.
 
அவர்களின் செயல்கள் குறித்த நம் எதிர்ப்புகளை முறையாக உலகம் முழுவது பதிவுசெய்துவிட்டோம்.
 
அத்தோடு நம் கடமைமுடிந்துவிட்டதா.
 
இமாம் புஹாரி அவர்கள் தன்னுடைய ஹதீஸ் புத்தகத்தில் நல்லொழுக்கம் என்றஅத்தியாயத்தின் கீழ் இறைமறுப்பாளர்கள் நபியவர்களை தாக்கி
 
வசைபாடிகள் கொள்ளவேண்டிய நிலை என்ற தனி பாடத்தைக்கொண்டுவருகிறார்.
 
அதில் உள்ள நபிமொழிகளின் சாரம் இதோ:
 
 
 
 
6150. ஆயிஷா(ரலி) அறிவித்தார். 
இணைவைப்பாளர்களைத் தாக்கி வசைக் கவி பாட (கவிஞர்) ஹஸ்ஸான் இப்னு ஸாபித்(ரலி) அவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'குறைஷியரான அவர்களுடன் பின்னிப் பிணைந்துள்ள) என் வமிசப் பரம்பரையை என்ன செய்வாய்?' என்று கேட்டார்கள். அதற்கு ஹஸ்ஸான்(ரலி) அவர்கள், 'குழைத்த மாவிலிருந்து முடியை உருவியெடுப்பது போன்று தங்களை(யும் தங்கள் வமிச் பரம்பரையையும் வசையிலிருந்து) உருவியெடுத்துவிடுவேன்' என்ற பதிலளித்தார்கள். 
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான உர்வா(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். 
நான் (என் சிறிய தாயார்) ஆயிஷா(ரலி) அவர்களிடம் ஹஸ்ஸான் இப்னு ஸாபித்(ரலி) அவர்களை (அவதூறு பரப்புவதில் சம்பந்தப்பட்டதால்) ஏசிக் கொண்டே போனேன். அப்போது அவர்கள், 'அவரை ஏசாதே! ஏனெனில், அவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்காக (இணைவைப்பவர்களைத் தாக்கி) பதிலடி கொடுத்துக் கொண்டிருந்தார்' என்றார்கள்.  
6152. அபூ ஸலமா இப்னு அப்திர் ரஹ்மான் இப்னி அவ்ஃப்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். 
ழூழூ(கவிஞர்) ஹஸ்ஸான் இப்னு ஸாபித் அல் அன்சாரி(ரலி) அவர்கள் அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடம், 'அபூ ஹுரைரா! இறைத்தூதர் சார்பாக (எதிரிகளுக்குக் கவிதைகளின் மூலம்) பதிலடி கொடுப்பீராக. இறைவா! தூய ஆன்மா(ஜிபிரீல்) மூலம் ஹஸ்ஸானை வலுப்படுத்துவாயாக! என்று கூறியதை நீங்கள் செவியுற்றீர்கள் அல்லவா?' என்று விவரம் கேட்டார்கள். 
அதற்கு அபூ ஹுரைரா(ரலி) அவர்கள், 'ஆம்' என்று பதிலளித்தார்கள். 
Volume :6 Book :78
 
 
 6153. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார். 
நபி(ஸல்) அவர்கள் (பனூகுறைழா போரின்போது, கவிஞர்) ஹஸ்ஸான்(ரலி) அவர்களிடம், 'எதிரிகளுக்கு (பதிலடியாக) வசைக் கவிதை பாடுங்கள். (வானவர்) ஜிப்ரீல் உங்களுடன் (துணையாக) இருப்பார்' என்று கூறினார்கள்.
 
என்று இறைமறுப்பாளர்கள்  சொன்ன செய்திகளுக்கு தன் தோழர்களைக்கொண்டு பதிலளிக்க வைத்தார்கள்.
 
 
இன்னும் ஒரு ஹதீஸ் இப்படி கூறுகிறது.
 
ஹைஸம் இப்னு அபீ சினான்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். 
அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் தங்களின் பேச்சுக்கிடையே நபி(ஸல்) அவர்களப் பற்றிக் குடிப்பிட்டார்கள். அப்துல்லாஹ் இப்னு ரவாஹா(ரலி) அவர்கள தவறானவற்றைக் கூறுபவர் அல்லர். (நபி(ஸல்) அவர்களைப் பராட்டிய பின்வருமாறு) அவர் பாடினார் என்றார்கள்: 
எங்களிடையே இறைத்தூதர் இருக்கிறார்கள். வைகறை பொழுது புலரும் நேரத்தில் அவர்கள் இறைவேதத்தை ஓதுகிறார்கள்; குருட்டுத்தனத்தில் இருந்த எங்களுக்கு அவர்கள் நேர்வழி காண்பித்தார்கள். அவர்கள் கூறியது நிச்சயம் நிகழும் என எங்கள் உள்ளங்கள் உறுதியாக நம்புகின்றன். இரவில் இணைவைப்பாளர்கள் படுக்கையில் அழுந்திக் கிடக்கும்போது இவர்கள் படுக்கையிலுருந்து எழுந்து தொழுவார்கள்.
 
ஸஹாபாக்கள் மறுப்புப்பாட்டு பாடுவதோடு இன்னும் நபியவர்களின் புகழையும் எடுத்துரைத்தார்கள்.
 
இன்று எல்லாம் ஊடக உலகம், நபியவர்களைப்பற்றி எப்படி தவறுகள் பரப்பப்பட்டதோ அதுபோன்று அவர்களைப்பற்றிய சரியான செய்திகள் அதேவிதத்தில்
 
பரப்பப்படவேண்டும்.
 
இன்னும் சில ஹதீஸ்களில் நபியவர்கள் ஹஸ்ஸான் (ரலி) அவர்களுக்கு பள்ளிவாசலிலே ஒரு மேடைஅமைத்துக்கொடுத்து அதில் பாட வைத்தார்கள்
 
இன்னும் அதைப்பார்த்து நபியவர்கள் சந்தோஷப்பட்டார்கள்.
 
அந்த நபிபுகழ்பாடிய மேடைகள் தமிழ்மண்ணில் எங்கே?
 
நபியவர்களில் வரலாறுகள் தொடரந்து தமிழ்மண்ணில் ஒழித்துக்கொண்டிருந்தது.
 
ஏதோ பெரிய சமூக மாற்றம் செய்கிறோம் என்ற அடிப்படையில் சிலர் இஸ்லாத்திற்கு உரமிட்டதாக நினைத்து அத்துனையும் தடுத்து நிறுத்தினர்கள்
 
நிறுத்தத்தூண்டினர். இன்று தானே விளங்குகிறது அவர்கள் உரமிடவில்லை, உலைஅல்லவா வைத்திருக்கிறார்கள்.
 
அப்படி விழாக்கள் நடைப்பெற்றதால் மாற்றுமதத்தவர்கள் கூட நபியவர்களை பற்றி ஒரு காலத்தில் விளங்கிவைத்திருந்தார்கள்.
 
தமிழ்சமூகம் மீண்டும் அறிவு பெறவேண்டும்,
 
நபியவர்களின் வரலாறுகள் தொடர் சொற்பொழிவுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்வேண்டும்.
 
 
அதுவும் வீதிகளில் வைத்து நடத்தப்படவேண்டும்.
 
இது எதோ தான் தோன்றித்தனமா அல்லது இஸ்லாத்திற்கு மாற்றமான கருத்தில்லை.
 
இதைதான் இன்றைய காலையில் செய்யச்சொல்கிறது புஹாரி கிரந்தத்தின் கருத்து.
 
 
ஆகையால், இன்றே நாம் சூழுரைப்போம், நம்மால் முடிந்த வரையில் நபியவர்களைப்பற்றிய சரியான செய்திகள் மீடியாக்களில் பதிவுகளைப்
 
ஏற்படுத்துவோம்.
 
வெளிநாட்டில் வாழ்பவர்கள் தம் தமிழ் மண்ணில் தத்தம் ஊர்களிலாவது மீலாது ( சிறா) விழா நடத்த தம்மால் ஆன முயற்ச்சிகளை மேற்கொள்வோம்.
 
அப்படி செய்தால் தான் நபியவர்களின் பெயரில் ஏற்பட்ட கலங்கத்தை நீக்க நாம் மேற்கொண்ட முயற்சிகளை முழுமையாக்கியவர்களாவோம்.
 
யாஅல்லாஹ் எங்களுக்கிடையில் உள்ள குரோதங்கள் மறந்து நபியவர்களின் பிரியத்தை எங்களின் உண்ர்விலும், உயிரிலும், இரத்தத்திலும், சதையிலும் ஆக்குவாயாக.
 
 
எங்கள் உயிர் உடலைவிட்டு பிரியும் வரையில் நபிய்வர்களின் பிரியத்தை எங்களை உயிரைவிட மேலானதாக்குவாயாக.
 
யாஅல்லாஹ் எங்களின் நபியவர்களின் உயர்வின் பொருட்டு இந்த மானம் கெட்ட மிருகங்களை மனிதர்கள் ஆக்குவாயாக.
 
 
- ஹஸனீ
 
*more articles click*
www.sahabudeen.com


No comments: