பிள்ளை படித்தது மறந்துவிட்டது என்கிறது.
· அம்மாவிற்கு உப்புப் போட்டேனா இல்லையா என்பது சந்தேகமாக இருக்கிறது.
· வேலையால் திரும்ப வரும்போது வாங்கி வரச் சொன்ன பால்மாவை வாங்க மறந்து தலையைச் சொறிகிறார் கணவன்.
· மேலதிகார் செய்யச் சொன்ன முக்கிய பணியை மறந்ததால் தொழிலை இழக்கிறார் பணியாளர்.
· t குடிச்சேனா இல்லையா என்பது மறந்துவிட்டது தாத்தாவிற்கு.
ஆம் எவரைப் பார்த்தாலும் மறதி கூடிவிட்டது என்கிறார்கள்.
எமது மூளையின் வளர்ச்சி குழந்தைப் பருவத்திலேயே நிறைவடைந்து விடுகிறது.
போதாக் குறைக்கு வயது போகப் போக மூளையின் கலங்கள் படிப்படியாகச் செயலிழந்து போகின்றன. எனவே வயதாகிக் கொண்டு செல்லும்போது ஞாபக சக்தியை சிறிது இழப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
ஆனால் எல்லா மறதிகளும் அவ்வாறு தவிர்க்க முடியாதவை அல்ல. எமது அக்கறையின்மையாலும், முயற்சிக் குறைவாலும்தான் பல விடயங்கள் எங்கள் நினைவை விட்டு அகலுகின்றன.
· 'நான் மறதிக்காரன். என்னால் எதனையும் நினைத்து வைத்திருக்க முடியவில்லை' என அவநம்பிக்கை அடைவது கூடாது.
· என்னால் நினைவு வைத்திருக்க முடியும் என நம்பிக்கை கொள்ளுங்கள். திடமான மனதுடன் அதற்கான முயற்சிகளை முன்னெடுங்கள்.
சில உத்திகள்
ஹார்வட் மருத்துவக் கல்லூரியினர் உங்கள் ஞாபக சக்திக்கு ஊக்கம் கொடுத்து, மறதியை தவிர்ப்பதற்கான சில உத்திகளைச் சொல்லியிருக்கிறார்கள்.
· வாழ்க்கையை ஒழுங்கான முறையில் கொண்டு செல்லுங்கள். கலண்டர்களை உபயோகியுங்கள். செய்ய வேண்டிய காரியங்களுக்கான லிஸ்ட்டுகளைப் பேணுங்கள். அட்ரஸ், டெலிபோன் நம்பர் போன்றவற்றை குறித்து வையுங்கள். இன்றைய காலத்தில் நல்ல ஒரு செல்பேசி இவை யாவற்றையும் உங்களுக்காக பேண உதலவும்.
· புதிய விடங்களை எதிர் கொள்ளும் போது அவற்றை முழுமையாக ஒரே நேரத்தில் விளங்குவதும் ஞாபகப்படுத்துவதும் சிரமமாக இருக்கலாம். எனவே பகுதி பகுதியாக உங்களால் ஜீரணிக்கக் கூடிய அளவுகளில் புரிந்து கொள்ள முயலுங்கள்.
· புதிய விடயங்களை கற்க நேர்கையில் கண், செவிப்புலன், மணம், சுவை, தொடுகை போன்ற எல்லாப் புலன்களையும் பயன்படுத்தி புரிந்து கொள்ள முயற்சியுங்கள்.
· அதே போல குறித்து வைப்பதும், அதனைப் பற்றிய சித்திரம் அல்லது வரை படத்தை வரைவதும் புதிய விடயங்களை நினைவில் நிறுத்த உதவும். இல்லையேல் வாய்விட்டு உரக்கச் சொல்வதும் மறக்க விடாது.
விடயத்தை மீள நினைவு கூருங்கள். ஆரம்பத்தில் அடிக்கடி, பின்பு சற்று நீண்ட இடைவெளிகளில். தொடர்ந்து இவ்வாறு செய்து வர மறதியை மறந்து விடுவீர்கள்
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
http://www.hainallama.blogspot.in
*more articles click*
www.sahabudeen.com
No comments:
Post a Comment