Saturday, January 19, 2013

தூக்கம் வரவில்லையா – இதோ எளிமையான டிப்ஸ் !

தூக்கம் வரவில்லையா இதோ எளிமையான டிப்ஸ் !

"சரியான தூக்கமே இல்லை, ரொம்ப டயர்டா இருக்கு" இந்த புலம்பல் இப்போது சகஜமாகிவிட்டது. பணத்தை துரத்தும் பரபரப்பான வாழ்க்கையில் நிம்மதியான தூக்கத்திற்கு வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. தூக்கம் இல்லாமல் போவதற்கு மன அழுத்தம், கவலைகள், வேகமான வாழ்க்கை முறை மற்றும் உடல் / மன ரீதியான கோளாறுகள் காரணமாக இருக்கலாம். இயற்கையான முறையில் அதிக முயற்சி இன்றி தூங்க சில வழிமுறைகள் இதோ:

    ஒரே மாதிரியான நேரத்தில் படுத்து எழுந்து பழகுங்கள்

தூங்குவதற்கு ஏற்றபடி சுத்தமாகவும் காற்றோட்டமாகவும் கொசு தொல்லை இல்லாமலும் அறையை தயார் செய்து கொள்ளுங்கள். சுத்தமான அறை அமைதியான, தெளிவான மனதை கொடுக்கும்.

     டீ, காபி போன்ற பாணங்களை இரவில் முற்றிலும் தவிர்த்திடுங்கள்
     இரவில் மென்மையாக கை, கால் மசாஜ் செய்து கொள்வது நல்லது.
     இரவில் பொறித்த, எண்ணை அதிகம் உள்ள மற்றும் மசாலா அதிகமான உணவுகளை தவிர்ப்பது நல்லது. லேசான உணவு நல்ல உறக்கத்திற்கு உதவும்.
      படுக்கும் முன் இளம் சூடான பால் குடிக்கலாம்.
     பேரீச்சம் பழம், செர்ரி பழம் இவற்றில் இயற்கயான தூக்கத்தை ஏற்படுத்தும் வேதி பொருட்கள் இருப்பதால் இவற்றை இரவில் சாப்பிடலாம்.
     பகலில் அதிகமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் உடலின் தேவையில்லாத கழிவுகள் சுலபமாக வெளியேறிவிடும்.
     யோகாசனம், தியானம் இவை நல்ல உறக்கத்தை தரும்.
     பகல் நேரங்களில் சொகுசு பார்க்காமல் முடிந்த அளவு உடல் உழைப்பை வெளிப்படுத்தவேண்டும்.  இதனால் இரவில் உடல் களைப்பாகி தூக்கம் எளிதில் வரும்.

இங்கே சொன்ன டிப்ஸ் தூக்கத்திற்கானசூழலை மட்டுமே உருவாக்கி கொடுக்கும். ஆனால் தூக்கம் என்பது அமைதியான மற்றும் திருப்தியான மனநிலையில் இருந்தால் மட்டுமே எளிமையாக சாத்தியமாகும். எனவே, குழப்பங்களோ திருப்தி இல்லாத நிலையோ இருந்தால், இவை தூங்காமல் இருந்து சிந்திப்பதால் தீராது என்பதை உணர்ந்து எதுவாக இருந்தாலும் காலையில் புத்துணர்ச்சியுடன் பார்த்துக்கொள்ளலாம் என்று சிந்தனை / கவலை இவற்றுக்கும் குட் நைட் சொல்லிவிட்டு, நிம்மதியாக தூங்கி விடுங்கள்.

http://pettagum.blogspot.in



--
*more articles click*
www.sahabudeen.com


No comments: