சவூதி சவூதி தான்............!!
சவூதி அரேபியாவை பற்றி அறிந்துகொள்வோம்,
ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு நாட்டை பற்றி பலவிதமான அபிப்ராராயம் இருக்கும், அந்த வகையில் சவூதி அரேபியா என்றாலே உடனே நினைவுக்கு வருவது சட்டம் கடுமையான நாடு என்பது தான் நமக்கு தோன்றும்,
அந்த வகையில் சவூதி அரேபியாவை பற்றிய நாம் அறிந்த சுவாரஷ்யமான தகவல்களை இந்த பதிவில் காண்போம்,
1) முஸ்லிம் ஒருவர் தன் வாழ்வில் ஒருமுறையேனும் புனிதப்பயணம் மேற்கொள்ள வேண்டிய புனிதத்தளமான மெக்காவும், மெதினாவும் சவூதி அரேபியாவில் தான் உள்ளது.
2) உலகின் இரண்டாவது மிகப் பெரிய எண்ணெய் கிடங்குகளை கொண்ட நாடாக சவூதி உள்ளது.
3) கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ரஷ்யாவிற்கு அடுத்த படியாக உலகின் இரண்டாவது மிக அதிகமான கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடு சவூதி என்பது குறிப்பிடத்தக்கது.
4) worlds sixth largest natural gas reserves என்ற இயற்கைவாயு சேமிப்பில் உலகின் ஆறாவது இடத்தில் சவுதி உள்ளது.
5) வளைகுடா நாடுகளில் அதிக பரப்பளவையும், அரபு நாடுகளில் அல்ஜீரியாவிற்கு அடுத்த இடத்திலும் சவுதி உள்ளது.
6) Abraj al bait towers இந்த ஹோட்டல் Mekkah royal hotel tower என்றும் அழைக்கப்படுகிறது. இது பல உலக சாதனைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த ஹோட்டல் இவ்வாண்டு திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இவ்வாண்டு திறக்கப்படும் பட்சத்தில் உலகின் மிகப்பெரிய உயரிய ஹோட்டல் (tallest hotel) என்ற பெருமையை அடையும்.
7) Abraj al bait towers ல் உள்ள clock தான் உலகின் tallest clock tower என்ற பெருமையையும், largest clock face என்ற பெருமையையும் பெறுகிறது. இதன் சிறப்பு என்னவென்றால் 25 கிமீ தொலைவில் இருந்து கடிகாரத்தைப் பார்க்க முடியுமென்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
8) உலகின் இரண்டாவது மிகப் பெரிய கட்டிடம் (World largest building) என்ற பெருமையை Abraj al bait towers அடைகிறது. இது குறித்து நீங்கள் அறிய விரும்பினால் இதை கிளிக் செய்யவும். http://en.wikipedia.org/wiki/Abraj_Al_Bait_Towers
9) உலகின் மிக பெரிய இராணுவ நிதி செலவழிப்பதில் சவூதி ஏழாவது இடத்தில் உள்ளது. மிகப் பெரிய மக்கள் தொகை கொண்ட இந்தியா எட்டாவது இடத்தில் உள்ளது.
10) மன்னர் அப்துல்லா உலகின் மூன்றாவது வலிமை வாய்ந்த தலைவராகக் கருதப்படுகிறார். அமெரிக்கா, சீனா நாட்டின் தலைவர்கள் முதல் இரு இடங்களை முறையே பெற்றுள்ளதாக இவ்வாண்டு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
11) அமெரிக்காவை ஆட்டிப் படைத்த ஒசாமா பின்லேடனின் சொந்த நாடு சவுதி. SBG (Saudi Binladan Group) சவூதி பின்லேடன் குரூப் என்ற கம்பெனி தான் சவுதியில் மிகப் பெரிய Contracting company என்பது குறிப்பிடத்தக்கது.
12) இளவரசி நூரா பல்கலைகழகம் (princess noura bin abdul Rahman university(PNU) , இது தான் உலகின் மிகப் பெரிய பெண்களுக்கான கல்லூரி
13) The world's largest Automated People Mover (APM) train வசதி பெற்றுள்ள university ஆக PNU விளங்குகிறது. APM Railway யின் நீளம் 14 KM & In rush hour, 70000/HR பயணிகளை ஏற்றி செல்லுமளவுக்கு ரயில் வசதி செய்யப்பட்டுள்ளது என்றால் PNU University யைப் பற்றி நாம் வேறு என்ன சொல்ல வேண்டும்! சவுதி அரேபியா உலகின் கல்விக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் ஐந்தாம் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
14) 13000 மில்லியன்/வருடம் (ஒரு கோடியே முப்பது லட்சம்), வெளிநாட்டிலிருந்து முஸ்லிம் மக்கள் மெக்காவிற்கு வந்து வழிபட்டு செல்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மற்ற மதத்தினர் மெக்கா மற்றும் மெதினா நகர எல்கைக்குள் செல்ல முடியாது. கடந்த ஆண்டு 2011 அரசு அறிக்கைப் படி, ஹஜ் பயணிகளாக மெக்கா வந்தவர்கள் எண்ணிக்கை 1828195.
15) முஸ்லிம்கள் தங்களின் உயிரை விட மேலாக கருதும் நபிகள் நாயகம் பிறந்த புண்ணியத் தளம் தான் முஸ்லிம்கள் வழிபடும் இந்த மெக்கா.
16) உலகின் மிகப் பெரிய மசூதிக்குரிய பெருமை, மெக்கா மசூதியையே சாரும்.
17) அரபு நாடுகளின் மிகச் சிறந்த பல்கலைகழகம் சவுதி அரேபியாவின் King Saud university விளங்குகிறது.
18) சவுதி அரேபியாவின் தேசிய விலங்காக ஒட்டகம் உள்ளது. ஒட்டகத்தை வளர்ப்பவர்கள் மிகப் பெரிய செல்வந்தர்களாகப் பார்க்கப்படுகிறார்கள்.
19) கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஓரினச் சேர்க்கை, தீவிரவாதம், விபச்சாரம், போதைப் பொருள் தயாரித்தல் அல்லது கடத்தல், தேசப் பாதுகாப்பு, கடவுளுக்கு எதிராக விமர்சித்தல், இன்னும் சில விரோத செயல்களுக்கு மரண தண்டனையும், ஆயுள் தண்டனையும் வழங்கப்படுகிறது. குற்றங்களுக்கு கடும் தண்டனை என்பதை உபயோகிக்கும் உலக நாடுகளில் முதன்மையானது சவுதி.
20) திரை அரங்குகள் இல்லாத ஒரே நாடாக சவுதி அரேபியா உள்ளது.
21) பூங்காக்களைப் பொறுத்தவரை Familiy park and Bachelor park என்று தனித் தனியாகவே உள்ளது.
22) உணவகங்களில் Family க்குத் தனியாகவும், Bachelor க்குத் தனியாகவும் இருக்கும்.
23) தொழுகை நேரங்களில் அரசின் உத்தரவுப்படி அனைத்து கடைகளும் அடைத்து வைக்கப்படும். ஒரு சில மிகப் பெரிய ஷாப்பிங் மாலில் மட்டும் உள்ளே செல்ல அனுமதி உண்டு. விலை போடுவது என்பது கிடையாது. இறைவனுக்குப் பிறகு தான் வியாபாரம் என்பதைக் கடைபிடிக்கும் ஒரே இஸ்லாம் நாடாக சவுதி உள்ளது.
24) உலகின் மிகப்பெரிய விமான நிலையமாக சவூதி திகழ்கிறது, King Fahd International Airport (KFIA) தான் உலகின் largest airport in the world ஆக உள்ளது.
25) Saudi ARAMCO தான் உலகின் Second largest public company ஆக உள்ளது. இது Dammam ல் உள்ளது.
26) Saudi ARAMCO உலகில் அதிக அளவு crude oil reserves ஐயும், உலகில் அதிக அளவு ஒரே நாளில் ஆயில் உற்பத்தி செய்யும் நிறுவனமும் சவூதியில்தான் உள்ளது. ஆயில் சம்பந்தமான 1oo pattern rights வைத்துள்ள saudi aramco, இங்குதான் உள்ளது. ஒரேநாளில் 12 millions/day அளவுக்கு SAUDI ARAMCO நிறுவனம் உற்பத்தி செய்கிறது.
27) கெமிக்கல் உற்பத்தியில் SABIC SAUDI ARABIYA தான் பல பொருட்களை உற்பத்தி செய்வதில் முன்னிலை வகிக்கிறது. குறிப்பாக Ethlene glycol உற்பத்தியில் உலகில் இரண்டாமிடத்தையும், Poly ethlene தயாரிப்பில் மூன்றாமிடத்தையும், Poly propline, Poliyofins உற்பத்தியில் உலகில் நான்காம் இடத்தையும் தன்னகத்தே வைத்துள்ள, SABIC சவுதியில் தான் உள்ளது.
28) Mono Ethlene Glycol உற்பத்தியில் உலகில் முதலிடத்தில் உள்ள SABIC தான் வளைகுடா நாடுகளின் மிகப் பெரிய கம்பெனியாக உள்ளது.
29) உலகின் மற்ற நாடுகளை விட பல நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி ஒவ்வொரு குடும்பத்தின் பொருளாதார உயர்வை ஏற்றி விடும் உலகின் ஒரே நாடு சவூதி அரேபியா. சவூதி அரேபியாவில் மட்டும் அனைத்து நாட்டு மக்களையும் காணலாம்
--
*more articles click*
www.sahabudeen.com
No comments:
Post a Comment