Monday, December 29, 2014

வாயில் ஊறும் உமிழ்நீர்

வாயில் ஊறும் உமிழ்நீர்
எச்சிலைத் துப்பாதீர் என்ற வாசகம் தாங்கிய பலகைகளை நாம் பல இடங்களில் பார்த்திருப்போம்.

எச்சில் என்பது வாயில் ஊறும் உமிழ்நீர். அது உணவை செரிப்பதற்கும், வாயின் உள் பகுதியையும், தொண்டைக் குழியையும் ஈரப்பதமாக வைத்திருப்பதற்கும் உதவுகிறது.

உடல் என்னும் வீட்டில் இருக்கும் ஒன்பது வாசல்களில் வாயும் ஒன்று. இது உணவை உண்பதற்கும், பேசுவதற்கும் பயன்படுகிறது.

உமிழ்நீரை வெளியில் துப்புதல் ஆகாது என சித்தர்கள் முதல் தற்கால மருத்துவர்கள் வரை கூறுகின்றனர்.

புளிப்பு, இனிப்பு இவற்றின் சுவையை உணர்ந்தால் வாயில் உமிழ்நீர் தானாக ஊறும்.

அதுபோல் உடலுக்கு ஒவ்வாமை ஏற்படுத்துகின்ற உணவுகளை சாப்பிட்டாலும் உமிழ்நீர் அதிகம் சுரக்கும்.

உடலில் உமிழ்நீர் சுரப்பிகள் மூன்று ஜோடிகள் உள்ளன.

1.
பரோடிட் சுரப்பி
2.
சப்மாண்டிபுலர் சுரப்பி
3.
சப்லிங்குவல் சுரப்பி

பரோடிட் சுரப்பி

இது காதுகளுக்குக் கீழே அமைந்துள்ளது. இதன் நாளங்கள் வழியாக கன்னங்களின் உட்புறம் இரண்டு மேல் கடவாய் பற்களுக்கு மேல் இந்த சுரப்பு நாளங்களின் துவாரங்கள் உள்ளன. இந்த நாளங்களுக்கு ஸ்டென்சன்ஸ் நாளங்கள் என்று பெயர். இது மனித உடலில் நீர் வறட்சி ஏற்படும்போதெல்லாம் அதிகம் சுரந்து வறட்சியைக் குறைக்கிறது.

சப்மாண்டிபுலர் சுரப்பி

இது பரோடிட் சுரப்பிகளுக்குக் கீழே அமைந்துள்ளது. இதன் நாளங்கள் நாக்கின் அடிப் பகுதியில் துவாரங்களாக அமைந்துள்ளன.

சப்லிங்குவில் சுரப்பி

கன்னங்களின் உள்ளே இரண்டு பக்கங்களிலும் அமைந்துள்ளன. இதன் துவாரங்கள் வாய் முழுவதும் அமைந்துள்ளன.
உமிழ்நீரின் தன்மைகள்

உமிழ்நீர் காரத்தன்மை கொண்டது. இது அதிக என்ஸைம்களைக் கொண்டது. இதில் ஆண்டிபயாடிக் அதிகம் உள்ளது. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன.

உமிழ்நீர் சராசரியாக ஒரு மனிதனுக்கு 1500 மி.லி. அளவு சுரக்கிறது. இந்த அளவு உண்ணும் உணவின் அளவைப் பொறுத்தும் மன எண்ணத்திற்கும் ஏற்றவாறு மாறுபடுகிறது..

உமிழ் நீரின் முக்கிய பணி சீரணமாக்குவது.

நொறுங்கத் தின்றால் நூறு வயது என்பது பழமொழி.

நொறுங்க என்பது நன்றாக மென்று என்று பொருள்.

உணவை நன்கு மென்று சாப்பிட்டால் நோயின்றி நூறுவயதுக்கு மேல் வாழலாம் என்று கூறுகின்றனர்.

உணவை மெல்லும்போது உமிழ்நீர் உணவுடன் நன்கு கலந்து அதில் உள்ள என்சைம்கள் உணவின் நச்சுத்தன்மையைப் போக்கி உணவுக் குழலுக்குச் செல்ல ஏதுவாகிறது. மேலும் இதில் கலந்துள்ள நொதி பித்தத்துடன் சேர்ந்து உணவை எளிதில் சீரணிக்க உதவுகிறது.

பொதுவாகவே அஜீரணம், வாந்தி, தலைச்சுற்றல் உண்டானால் கூட உமிழ்நீர்தான் அதிகம் சுரந்து உடலை சீர்படுத்துகிறது. வாய்ப்புண்ணை ஆற்ற உதவுவதும் உமிழ்நீர்தான்.

உமிழ்நீர் சுரப்பியின் அளவு குறைந்தாலும், அதிகரித்தாலும் கடினத் தன்மை அடைந்தாலும் அது நோயின்அறிகுறியாகும்.
சிலர் பாக்கு புகையிலை மற்றும் போதை வஸ்துக்களை உபயோகிப்பார்கள். அது உமிழ்நீருடன் சேர்த்து விஷநீராகி உடலைக் கெடுக்கிறது.

மதக் கோட்பாடுகளில் விரதம் இருக்கும் காலங்களில் உமிழ்நீரை விழுங்காமல் வெளியே துப்பிவிடுவார்கள். இந்த உமிழ்நீரானது உள்ளே சென்றால் அதிகமாக பசியைத் தூண்டும் என்ற காரணத்தால் விரத காலங்களில் உமிழ்நீரை விழுங்குவதில்லை.

ஆனால் இத்தகைய சிறப்பு வாய்ந்த உமிழ்நீரை சிலர் தங்களுக்குப் பிடிக்காதவர்களை அவமானப் படுத்துவதற்காக வெளியே துப்புவார்கள்.

உமிழ்நீர் என்பது அடுத்தவரை அவமானப் படுத்தும் நீர் அல்ல. அது நம்மை நோயின்றி காக்க சுரக்கும் அமிர்த நீராகும்
http://www.pettagum.blogspot.in/2013/10/blog-post_8036.html

--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

Saturday, December 27, 2014

அழுக்கு-கறை நீங்க

அழுக்கு-கறை நீங்க

அழுக்கு நீங்க
  • கழுத்தில் அணித்திருக்கும் மஞ்சள் சரடு அழுக்கடைந்து விட்டால் சலவை சோடாவை பஞ்சில் எடுத்து சுடுநீரில் நனைத்து அதனால் சரடை நன்கு உருவித் துடைத்துக் கழுவினால்
  • பளிச்சென்று இருக்கும்.
வெள்ளிப் பாத்திரம் பளிச்சிட
  • கடலைமாவுடன் எலுமிச்சைச்சாற்றை சேர்த்துப் பிசைந்து அதனால் வெள்ளிப் பாத்திரங்களைக் கழுவினால் பளிச்சென்று ஆகிவிடும்.
நகைகளில் எண்ணெய் நீங்க
  • கல் பதித்த நகைகளில் உள்ள எண்ணெயை நீக்க சாக்பீஸை தண்ணீரில் நனைத்து அதன் மீது தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவினால் போதும்.
நகைகள் பளிச்சிட
  • சிறிதளவு மஞ்சள், நீல டிடர்ஜென்ட் பவுடர் இரண்டையும் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து சிறிது நேரம் தங்க நகைகளை போட்டு பின்பு எடுத்து டூத் பிரஷ்ஷால் சுத்தம் செய்தால் நகைகள் பளிச்சிடும்.
திருகாணி பொருத்தமாக இருக்க
  • தோடு, மூக்குத்தி இவைகளின் திருகாணியை பூண்டுச் சாற்றில் தேய்த்து திருகினால் பொருத்தமாக இருக்கும்.
தோல் பொருள்கள் பளபளக்க
  • தோல் சாமான்கள் பளபளக்க வாசலினை தேய்த்து உலர விட்டு பிறகு கம்பளி துணியால் துடைக்க வேண்டும்.
  • தோல் பொருள்கள் மீது படியும் காளானை வெங்காயச்சாறு கொண்டு தடவி துடைத்தால் போதும்.
இரும்பு சாமான் புதியது போல் இருக்க
  • இரும்பு சாமான்களை ஆறு மணி நேரம் ஊறவைத்து கழுவினால் புதியது போல் இருக்கும்.
துரு நீங்க
  • இரும்பு பொருள்களில் படிந்துள்ள துருவை நீக்க உப்பு கரைத்த எலுமிச்சைச்சாற்றை தடவினால் போதும்.
  • அரிவாள்மனை, தேங்காய் துருவி, கத்தி போன்றவைகளில் உள்ள துருவைப் போக்க இவற்றின் மீது ஒரு சீமை வெங்காயத்தை தேய்த்தால் துரு போய் விடும்.
துருப்பிடிக்காமல் இருக்க
  • கத்திகள் துருப்பிடிக்காமல் இருக்க அவைகளில் எண்ணெய் தடவி பிளாஸ்டிக் பேப்பரில் வைத்தால் துரு பிடிக்காது.
  • குண்டூசி டப்பாவில் சிறிதளவு சாக்பீஸ் தூளை தூவி வைத்தால் துருப்பிடிக்காது.
  • இரும்பு டூல்ஸ், ஆணிகள் முதலியன வைக்கும் பெட்டிக்குள் ஒரு கரித்துண்டை வைத்தால் அது காற்றில் உள்ள ஈரத்தை உறிஞ்சி கொள்ளும். பொருட்கள் துரு பிடிக்காது.
எண்ணெய் பசை போக
  • பித்தளை விளக்கில் உள்ள எண்ணெய் பசையைப் போக்க விபூதியுடன் மண்ணெண்ணெய் கலந்து உலர்ந்த துணியால் தேய்த்தால் போய் விடும்


--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

Thursday, December 25, 2014

ஏன் வேண்டும் பான் கார்டு?

ஏன் வேண்டும் பான் கார்டு?


கருப்புப் பணத்தை ஒழிப்பது பற்றி அதிகம் பேசுவது நடுத்தர மக்கள்தான். லஞ்சம், கணக்கில் வராத வருவாய் இவையே கருப்புப் பணத்தின் ஊற்றுக்கண்கள். இந்தப் பிரச்சினையை முற்றிலும் தடுக்க இயலாது எனினும் படிப்படியாக குறைக்க முடியும்.

இரண்டு வழிகளில் கருப்புப் பண பயன்பாட்டைக் குறைக்கலாம். ஒன்று, குறிப்பிட்டத் தொகைக்கு மேல் கொண்ட எல்லா பரிவர்த்தனைகளையும் Electronic payment மூலம் செய்ய வைக்கலாம்.
அதாவது, கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளைப் பயன்படுத்துதல். அதனுடன் பான் கார்டு எண் குறிப்பிடுவதைக் கட்டாயமாக்குதல். அப்படிச் செய்தால் நமது அனைத்து பரிவர்த்தனைகளும் பான் கார்டு எண் மூலம் வருமான வரித் துறையால் கண்காணிக்கப்படும்.
அவ்வாறு கண்காணிக்கப்படும்போது, ஓர் ஆண்டில் நாம் செய்யும் செலவுகள், நாம் செலுத்தும் வருமான வரியைவிட அதிகமாக இருக்கிறது என்றால், கூடுதல் வரி செலுத்த வேண்டி வரும். இதற்கான விசாரணைகளில் கணக்கில் வராத வருவாய்களைக் கண்டறிவதன் மூலம் கருப்புப் பணம் களையப்படும்.
சரி, யாரெல்லாம் பான் கார்டு வாங்க வேண்டும்? ஆண்டுக்கு சராசரியாக இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் கொண்டவர்கள் வருமான வரி செலுத்த வேண்டும். அவர்களுக்கு பான் கார்டு அவசியம். மேலும் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வங்கிகளில் செலுத்தவோ எடுக்கவோ பான் கார்டு எண் கொடுக்க வேண்டும். பான் கார்டு இல்லாதவர்கள், தனக்கு வருமான வரி கட்டும் அளவுக்கு வருமானம் இல்லை அல்லது வரியை நானே கட்டிவிடுவேன் என்று உறுதி அளிக்க வேண்டும். இதற்கு சில படிவங்கள் வங்கிகளில் இருக்கும். அதைப் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.
அது மட்டுமில்லாமல் வாகனம், நிலம், வீடு போன்ற மதிப்புள்ள பொருட்களை வாங்கும்போதும் பான் கார்டு எண் அவசியம். தவிர, அரசு வேறு எதற்கெல்லாம் பான் கார்டு எண்ணைக் குறிப்பிட வலியுறுத்துகிறதோ அற்கெல்லாம் கொடுக்க வேண்டும்.
அதே நேரத்தில் ஒருவர் பான் கார்டு வாங்கியதாலேயே அவர் வருமான வரி கட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை. வருமானம் குறிப்பிட்ட அளவைத் தாண்டும்போதுதான் வரி கட்ட வேண்டும். பான் கார்டு வைத்திருப்பதில் ஒரு நன்மை உண்டு. அதை அனைத்து அரசு மற்றும் அரசு சாராத நிறுவனங்களில் உங்கள் அடையாள அட்டையாகப் பயன்படுத்தலாம்.
பான் கார்டு வாங்குவதும் மிக எளிது. புகைப்படத்துடன் கூடிய அடையாளச் சான்று, முகவரிச் சான்று இருந்தாலே போதுமானது. இதற்கு 100 ரூபாய் வரை செலவாகும். இதற்கான முகவர்கள் எல்லா ஊர்களிலும் உள்ளனர்.
http://kulasaisulthan.wordpress.com


--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

Tuesday, December 23, 2014

விக்கல், ஏப்பம் அடிக்கடி வருவதேன்? அடிக்கடி வருவதேன்?

விக்கல், ஏப்பம் அடிக்கடி வருவதேன்? அடிக்கடி வருவதேன்?

எண்டோஸ்கோபி சிகிச்சையைப்பற்றிய கேள்விகளுக்கு கோவை என்.ஜி. மருத்துவமனை நிறுவனர், லேப்ராஸ்கோபி, எண்டோஸ்கோபி சிகிச்சை  நிபுணர் டாக்டர். மனோகரன் பதில் அளிக்கிறார்.
மது குடிப்பவர்கள் அதிக போதையால் சாப்பிடாமல் தூங்கிவிடுகிறார்கள். இதனால் உடல் உள்ளுறுப்புகளுக்கு ஏற்படும் கேடு என்ன?
மது குடித்துவிட்டு சாப்பிடாமலிருப்பதால் வயிற்றில் புண் உண்டாகும். அதுவே தொடருமானால் கேன்சர் வரலாம். தொடர்ந்து இவ்வாறு செய்வதால்  ரத்த வாந்தி ஏற்படலாம். கணையம், ஈரல் முதலானவை பாதிக்கப்படலாம். சில சமயங்களில் மூச்சுத்திணறல் வரலாம்.
அடி வயிற்றில் இடது புறமும், வலது புறமும் அவ்வப்போது வலிக்கிறது. இது எதனால் ஏற்படுகிது?
வலது புறத்தில் வலி இருந்தால் அப்பண்டிக்ஸ் எனப்படும் குடல் வால்வு பிரச்னையாக இருக்கலாம். இரண்டு புறத்திலும் வலி இருந்தால் குடலில்  கிருமிதொற்று இருக்கலாம். அதுவே தொடர்ந்து வலி இருந்து வாந்தி வந்தால் சிறுநீரகத்தில் கல் இருக்கலாம். எனவே, உடனே மருத்துவரை  அணுகுவது நல்லது.
நீச்சல் குளத்தில் நீச்சல் பயிற்சி பெறுபவர்கள் துவக்க நிலையில் நீச்சல் குள நீரை குடித்து விடுகின்றனர். இதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?
நீச்சல் குளத்தில் சிலர் சிறுநீர் மற்றும் மலம் கழித்துவிடுகிறார்கள். எனவே, அந்த நீர் மாசுபட்டுவிடுகிறது. அதை பருகும்போது கிருமி தொற்று  ஏற்பட்டு வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை போன்ற உபாதைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
எண்டோஸ்கோபி பரிசோதனையை முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக மேற்கொள்ள வேண்டுமா?
மேற்கொள்ளலாம். வயிற்றில் ஏதேனும் பிரச்னையிருப்பின் எண்டோஸ்கோபி பரிசோதனை செய்து பார்த்துக்கொள்ளலாம். உள்ளே உள்ள  பிரச்னைகளை ஸ்கேன் மூலமாக 90 சதவீதம் பார்க்கலாம். ஆனால் எண்டோஸ்கோபி மூலமாக நேரடியாக பார்க்க முடியும்.

சிலர் 4 அல்லது 5 நாட்களுக்கு மலம் கழிக்காமல் உள்ளனர். இதற்கு காரணம் கண்டறிய கொலனோஸ்கோபி உதவுமா?

சில சமயம் மலக்குடல் பகுதியில் சுருக்கம் அல்லது மூலநோயிருந்தால் இது போன்ற பிரச்னை ஏற்படும். 60 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் 6  மாதங்களாக மலம் கழிக்கவில்லை. எனவே அவர் பயந்து திரவ உணவை மட்டும் எடுத்துக்கொண்டார். அவருக்கு கொலனோஸ்கோபி பரிசோதனை  செய்து பார்த்ததில் மலம் இருகி கல்போன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்பு அதை சிறு சிறு துண்டுகளாக உடைத்து எடுத்தோம். இப்பொழுது  நன்றாக உணவு உண்கிறார். எந்த பிரச்னையுமில்லாமல் மலம் கழிக்கிறார். எனவே, நார்சத்து மிகுந்த உணவை எடுத்துக்கொள்ளவேண்டும். தண்ணீர்  அதிகமாக பருகவேண்டும்.
கேன்சர் நோயாளிகளுக்கு வாய் வழியாக உணவு கொடுக்க முடியாமல், நீர் உணவை புனல் மூலம் தொண்டைக்குழியில் ஓட்டை போட்டு  கொடுக்கிறார்களே? உமிழ்நீர் இல்லாமல் செல்லும் உணவு செரிக்குமா? வேறு பிரச்னை வருமா?
தொண்டையிலிருந்து அல்ல. வயிற்றிலிருந்து நேரடியாக குழாய் மூலமாக அல்லது மூக்கு வழியாக உயிர் வாழ்வதற்குத் தேவையான சப்ளிமெண்ட்  உணவு அளிக்கப்படும். அதனால் பிரச்னை ஒன்றுமில்லை.

விக்கல், ஏப்பம் அடிக்கடி வருகிறது. காரணம் என்ன?

உணவுக்குழாயில் புண் இருக்கலாம் அல்லது எதுக்கலிச்சலாக இருக்கலாம். தகுந்த மருத்துவரை அணுகுவது நல்லது.
சாப்பிடும்போது திடீரென்று புரையேறுகிறது. மூச்சுக்குழாயில் உணவு துகள் செல்வதாலா? வேறு காரணமா? மூச்சுக்குழாயில் உணவு சிக்கினால்  எண்டோஸ்கோபி மூலம் எடுக்க முடியுமா?

சாப்பிடும்பொழுது உணவுக்குழாய் வழியாக உணவு செல்லும். அந்த நேரத்தில் பேசும்போது மூச்சுக்குழலில் உணவு செல்ல நேரிடும். அப்பொழுதுதான்
  புரையேறுகிறது. ஆனால் உணவுத்துகள் தானாகவே வெளி வந்துவிடும். சில சமயங்களில் உணவுத்துகள் சிக்க நேர்ந்தால் உயிருக்கே ஆபத்தாக  அமைந்துவிடுவதுண்டு. எனவே, சாப்பிடும்போது பேசுவதைத் தவிர்க்கவேண்டும்.
http://kulasaisulthan.wordpress.com

--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

Sunday, December 21, 2014

இப்படித்தான் பல் துலக்க வேண்டும்…

இப்படித்தான் பல் துலக்க வேண்டும்

1 முன் பற்களை கீழ் அசைவில், 45 டிகிரியில் பிரஷ்ஷை ஏந்தி, பற்கள் மற்றும் ஈறுகளை சுத்தம் செய்ய
வேண்டும்.


2 பின் பற்களை மெதுவாக மேலும், கீழுமாக பிரஷ் செய்ய வேண்டும்.


3 கீழ் கடவாய் பற்களை உள்புறமாக மேல், கீழ் அசைவோடு சுத்தம் செய்ய வேண்டும்.


4 மேல் மற்றும் கீழ் முன் பற்களை உள்ளிருந்து, வெளியே பிரஷ் செய்ய வேண்டும்.


5 கடவாய் பற்களின் மேல் பகுதியை முன்பின் அசைவோடு மெதுவாக சுத்தம் செய்ய
வேண்டும்.


6 இறுதியாக நாக்கில் ஒட்டிக் கொண்டிருக்கும் உணவுப் பொருள்களை அகற்ற மற்றும் துர்நாற்றம் ஏற்படாமலிருக்க பிரஷ் செய்ய
வேண்டும்.

விளம்பரத்தில் காட்டுகிற மாதிரி பிரஷ் முழுக்க நிறைய பேஸ்ட் வைத்து பல் துலக்க வேண்டியதில்லை. வேர்க்கடலை அளவுக்கு பேஸ்ட் இருந்தாலே போதும். பேஸ்ட்டானது, பிரஷ்ஷின் உள்ளே இறங்கும்படி, அதன் அமைப்பு இருக்க வேண்டும். பல் துலக்கி முடித்ததும், விரல் நுனிகளால், ஈறுகளை மென்மையாக மசாஜ் செய்து விடலாம்.

பற்களை மிதமான அழுத்தம் கொடுத்துத் தேய்த்தால் போதும். ஆக்ரோஷமாக, அதிக அழுத்தத்துடன் தேய்த்தால் எனாமல் பாதிக்கப்படும். எனாமல்தான் பற்களுக்குக் கவசம்.
3 மாதங்களுக்கொரு முறை பிரஷ்ஷை மாற்ற வேண்டும். வாய்துர்நாற்றம் இருப்பவர்கள், பற்களில் கூச்சம் இருப்பவர்கள், ரத்தம் கசிவதை உணர்பவர்கள் எல்லாம், பல் மருத்துவரின் ஆலோசனையின் பேரில், பிரத்யேக பற்பசை மற்றும் மவுத்வாஷ் உபயோகிக்கலாம்.


--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

Saturday, December 20, 2014

பயனுள்ள குறிப்புகள் :


1. வாழைக்காய், வாழைப்பூ, வாழைத்தண்டு இவைகளை சமைக்கும்போது இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் விட்டு தாளித்தால், மிகுந்த மணத்துடன் இருக்கும்.

2. சர்க்கரை பொங்கலின் சுவை மேலும் பிரமாதமாக இருக்க கொஞ்சம் மில்க்மெய்ட் சேர்த்தால் அற்புதமான சுவையை சுவைக்கலாம்.

3. இட்லி கெட்டியாக இருந்தால் நாலு பச்சை அப்பளங்களை தண்ணீரில் நனைத்து மிக்ஸியில் ஒரு நிமிடம் ஓட விட்டு மாவில் கலந்து வார்த்துப்பாருங்கள். இட்லி பூ மாதிரி இருக்கும்.

4. உருளைக்கிழங்கு பொரிக்கும் முன்பு சிறிதளவு பயத்தம் மாவை தூவுங்கள். பொரியல் மொறு மொறுப்பாக, சுவை அசத்தலாக இருக்கும்.

5. முந்திரி பருப்பை எறும்பு அழிக்காமல் இருக்க சிறிதளவு பச்சை கற்பூரத்தை போட்டு வைக்கலாம்.

6. அரிசி களைந்த இரண்டாவது கழு நீரை சமயலுக்குப் பயன் படுத்தலாம். இதில் வைட்டமின் B6 மற்றும் B12 இருக்கிறது. இந்த நீரில் புளி ஊற வைக்கலாம், காய்கறி வேக விடலாம்.

7. மிளகாய் வத்தலை வறுக்கும் முன்பு, அதனுடன் அரை தேக்கரண்டி உப்பைச் சேர்த்தால் நெடி வராது.

8. துவரம்பருப்பை வேக வைக்கும்போது, பருப்புடன் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தையும் கலந்து வேக வைத்தால், சாம்பார் இரவு வரை ஊசிப்போகாமல் இருப்பதுடன் உடம்புக்கும் நல்லது, குளிர்ச்சியும் கூட.

9. குலோப்ஜாமூனை ஆறிய பாகில் போட்டு ஊற வைத்தால் உடையவே உடையாது, விரிசலும் ஏற்படாது.

10. பொதுவாக எந்த ஊறுகாய்க்கும் கடுகு எண்ணெய் ஊற்றி விட்டால் விரைவில் கெட்டுப்போவதை தவிர்க்கலாம்.

11. தர்பூஸ் தோலை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிளகு தூள் அல்லது மிளகாய் தூள், உப்பு தூவி எண்ணெய் விட்டு வதக்கவும். வெள்ளரிக்காய் பொரியல் போன்று சுவையுடனும், வித்தியாசமான மணத்துடணுமிருக்கும்.

12. கடலை மாவுக்குப் பதிலாக ஒரு பங்கு பச்சரிசியும், ஒரு பங்கு பச்சை பருப்பும் கலந்து மிக்ஸியில் சன்னமாக அரைத்து உப்பு காரம் போட்டு பஜ்ஜி செய்யலாம்.

13. மணத்தக்காளி வத்தல் குழம்பை இறக்கியவுடன் அதில் சுட்ட அப்பளத்தை நொறுக்கிப் போட்டால் ருசியே ருசிதான்.

14. வாழைப்பூவைப் பொடிப்பொடியாக நறுக்கி அத்துடன் முருங்கை கீரையையும் சேர்த்து வதக்கி அடிக்கடி சாப்பிட்டால் குடற்புண் குணமாகும்.

15. எலுமிச்சை சாதம் கலக்கும் போது ஒரு ஸ்பூன் வதக்கிய வெங்காய துருவலை சேர்த்தால் வாசனையாகவும் சுவையாகவும் இருக்கும்

 

டிப்ஸ் டிப்ஸ்..

*கோதுமை மாவில் வண்டு பிடிக்காமல் இருப்பதற்காக சிறிதளவு உப்பை கலந்து வைத்தால் வண்டு பிடிக்காது

*காப்பர் பாட்டம் பாத்திரம் மங்காமல் இருப்பதற்காக சிறிது உப்பையும், வினிகரையும் பாத்திரத்தின் மேல் பூசி துணியால் அழுத்தி தேய்த்தால் பாத்திரம் பளிச்சின்னு இருக்கும்.

*மிக்ஸி ஜாடியில் உள்ள பிளேடை கழற்ற இயலாமல் இருந்தால், அதை கழற்றுவதற்கு ஜாடியில் பிளேடு மூழ்கும் வரை வெண்ணீர் ஊற்றி சிறிது நேரம் வரை வைக்கவும். பின்பு நீரை கிழே ஊற்றி விட்டு பிளேடை கழற்றினால் எளிதில் கழற்றலாம்.

*இட்லி சாம்பாரில் கடைசியாக மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், கொத்தமல்லி போன்றவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு வறுத்து விட்டு மிக்ஸியில் அரைத்து சாம்பாரில் போட்டால் கூடுதல் சுவையாக இருக்கும்.

*உருளைக்கிழங்கு வறுவல் செய்யும்போது புளிப்பு இல்லாத தயிர் அரைக்கரண்டி ஊற்றி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்

*வற்றல் குழம்பு வைக்கும்போது சிறிதளவு கடுகு, மஞ்சள்தூள், மிளகாய் வற்றல் போன்றவற்றை வெறும் பாத்திரத்தில் போட்டு வறுத்து அதனை தூளாக்கி குழம்பில் போட்டு இறக்கினால் நல்ல மணமாக இருக்கும்.

*சப்பாத்தி எப்போதும் சூடாக இருக்க வேண்டுமானால் சில்வர் பேப்பரில் சுற்றி வைத்தால் சூடாக இருக்கும்.

*உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால் பாத்திரங்கள் பளபளப்பாக இருக்கும்.

*ரசம் செய்யும்போது அதனுடன் தேங்காய் தண்ணீரைச் சேர்த்தால் அருமையான ருசியாக இருக்கும்.

*காய்ந்த மிளகாயை வறுக்கும்போது நெடி வரும். அவை வராமல் இருப்பதற்கு சிறிது உப்பு போட்டு வறுத்தால் நெடி வராது.

*காய்கறிகள் வறுக்கும்போது, எண்ணெய் சூடாகும் போது சிறிது சர்க்கரை சேர்த்து செய்தால் சுவையாக இருக்கும்.

 

டிப்ஸ்..

*வெங்காய பக்கோடா செய்ய மாவு பிசையும் போது வறுத்த நிலக்கடலையை பொடி செய்து மாவுடன் சேர்த்து பிசையவும். இதனால் பக்கோடா மொறு மொறுவென்று ருசியாக இருக்கும்.

*சப்பாத்தி செய்து எண்ணெய் வடிகட்டியில் போட்டு மூடி வைத்தால் அடியில் உள்ள சப்பாத்தி வேர்த்து ஈரமாகாமல் இருக்கும்.

*சக்கரைப் பொங்கல் செய்யும்போது அரை கப் தேங்காய் பால் ஊற்றிக் கிளறி இறக்கினால், பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும்.

*தேங்காய்த் துருவல் மீதியானால், அதை லேசாக வதக்கி சிறிது உப்பு சேர்த்து வைத்தால் மறுநாள் சமையலுக்குப் பயன் படுத்திக் கொள்ளலாம்.

*பவுடர் மற்றும் ரசம் பவுடர் எப்போதும் புதியதாக மணம் மாறாமல்
இருக்கவேண்டுமா? சாம்பார் பவுடர் மற்றும் ரசம் பவுடர் பாக்கெட்டுகளை
பிரிஜ்ஜின் பிரீஸரில் வைத்து உபயோகிங்கள். மணம் மாறாமல் இருக்கும்.

*வெங்காய சட்னி கசக்காமல் இருக்க வேண்டுமா? வெங்காயத்தை சிறிது எண்ணெய் விட்டு வதக்கியபின் அரையுங்கள். சட்னி கசக்காமல் ருசிக்கும்.

 

சாப் பாட்டு பொட்டலம் கட்டப் போகிறீர்களா? சாப்பாட்டைப் பொட்டலமாக கட்டும்போது வாழை இலையை பின்புறமாகத் திருப்பி தணலில் லேசாகக் காட்டியபின்னர் கட்டினால் இலை கிழியாமல் இருக்கும்.

பீன்ஸ், பட்டாணி, முட்டை கோஸ் போன்ற காய்கறிகள் நன்றாக குழைய வேகவைக்க வேண்டுமா? முதலில் உப்புப் போடாமல் வேகவைத்து, வெந்தபிறகு உப்பு சேர்க்கவேண்டும்.

பன்னீர் மசாலா செய்யும்போது பன்னீரை வறுத்தவுடன் உப்புத் தண்ணீரில் சிறிது நேரம் போட வேண்டும். பன்னீர் பஞ்சு போல மிருதுவாக இருக்கும்.

சுவர்களில் ஆணி அடித்திருப்போம். அது தேவையில்லை எனில் அதை எடுத்து விட்டு சுவரின் வண்ணத்திற்கு ஏற்ப, வண்ணக் கலவையை பற்பசையில் கலந்து ஓட்டை போட்ட இடத்தில் அடைத்துவிட்டால் ஓட்டை தெரியாமல் மறைந்துவிடும்.

விஷேசங்களுக்கு சென்று வந்தவுடன் பட்டு புடவையை களைந்து உடனே மடித்து வைக்க கூடாது. நிழலில் காற்றாட 2 அல்லது 3 மணி நேரம் உலரவிட்டு பின்பு அதனை கைகளால் அழுத்தி தேய்த்து மடித்து எடுத்து வைக்கவேண்டும்.

 

சமையல் டிப்ஸ்...!

*கறிவேப்பிலை நீண்ட நாட்கள் காயாமல் இருப்பதற்கு ஒரு அலுமினியப் பாத்திரத்தில் போட்டு மூடி வைத்தால் காயாமல் இருக்கும்.

*இட்லி மாவு புளிக்காமல் இருப்பதற்கு வெற்றிலையை காம்பு கிள்ளாமல் பாத்திரத்தில் குப்புற இருப்பது போல போடவும். இரண்டு நாட்கள் கெடாமலும், புளிக்காமலும் இருக்கும்.

*தோசைகல்லில் தோசை சுடும் போது தோசை மாவில் சிறிது சர்க்கரையைப் போட்டு தோசை சுட்டால் மொரு மொறுப்பாக வரும்.

*கறிவேப்பிலை காய்ந்து விட்டால் அதனை தூக்கி எரிந்துவிடாமல் இட்லி பானையில் அடியில் தண்ணீரில் கறிவேப்பிலையை போட்டு இட்லி சுட்டால் வாசனையாக இருக்கும்.

*வறுத்த வெந்தயத்தை சாம்பாரில் போட்டால் சாம்பார் சுவையாகவும், வாசனையாகவும் இருக்கும்.

*கிழங்குகள் சீக்கிரம் வேக வைப்பதற்கு பத்து நிமிடம் உப்பு கலந்த நீரில் ஊற வைத்து விட்டு வேக வைத்தால் சீக்கிரம் வெந்துவிடும்.

*வெயில் காலத்தில் பெருங்காயம் கட்டியாகி விடும். அப்படி ஆகாமலிருக்க பச்சை மிளகாயை காம்பு எடுக்காமல் பெருங்காய டப்பாவில் போட்டால் பஞ்சு போல் மிருதுவாக இருக்கும்.

*சப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன்னால் கையில் சிறிதளவு உப்பைத் தடவிக் கொண்டால் கையில் சப்பாத்தி மாவு ஒட்டாது

.*பச்சை மிளகாயை காம்புடன் வைக்காமல் காம்பை எடுத்து விட்டு நிழலான இடத்தில் வைத்தால் நீண்ட நாட்கள் இருக்கும்.

*கோதுமை மாவில் வண்டு பிடிக்காமல் இருப்பதற்காக சிறிதளவு உப்பை கலந்து வைத்தால் வண்டு பிடிக்காது

டிப்ஸ் டிப்ஸ்..

சாப்பாட்டில் கவனம் கொள்ளுங்கள்!
 

*சாப்பிட்ட உடன் சில்லென ஒரு
டம்ளர் தண்ணீர் குடிக்கும் பழக்கம் பலருக்கும் உண்டு. உடலில் கொழுப்பு சேரவும், செரிமானப் பிரச்னைகள் வரவும் இது காரணமாகிவிடும். சாப்பிட்டு
சிறிது நேரம் கழித்து மிதமான சூட்டில் தண்ணீர் குடிப்பதே நல்லது.

*சாப்பிட்ட உடனே போய் படுத்து தூங்கி
விடாதீர்கள். இது சாப்பிட்டவை நன்றாக செரிமானம் ஆகாமல் வாயு சிக்கல் போன்ற பிரச்னைகள் வரக் காரணமாகிவிடும். உடல் எடையும் அதிகரிக்கும்.

*அவ்வப்போது ஒரு வேளை சாப்பாட்டை தவிர்த்துவிட்டு ஓடினால்,
  இன்னும் கொஞ்சம் எடை குறையலாம் என்பது தப்பான எண்ணம். உண்மையில் அது உடல் எடையை அதிகரிக்கவே தூண்டும். காரணம், ஒரு நேரம் சாப்பிடாமல் இருந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். உடனே, உடல் இனிப்புப் பொருளைத் தேடும். கடைசியில், அன்று அதிக கலோரி உட்கொண்ட நாளாக மாறிவிடும்.

*சிக்கனில் கொழுப்பு கம்மி என பலரும் நினைப்பதுண்டு. தோல் இல்லாத சிக்கன் சாப்பிட்டால்தான் அந்தக் கணக்கு சரிவரும். சிக்கனின் தோலில் இறைச்சியைவிட மூன்று மடங்கு அதிக கொழுப்பு உண்டு... கவனம்.

*சாப்பிட்டதும் சிகரெட் பிடிப்பது சிலரின் தலையாயக் கடமை. அது பயங்கர ஆபத்தை அழைத்து வரும். சாப்பிட்டபின் ஒரு தம் அடிப்பது, பத்து தம்
அடிப்பதற்குச் சமம்

http://pettagum.blogspot.in/2014/10/blog-post_13.html


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

பளிச்சென முகம் பிரகாசிக்க..


'கல்யாணப் பொண்ணுஇப்படியா களையிழந்து இருக்கிறது?' என்று கேட்கும் அளவுக்கு வாழ்க்கைமுறை, சுற்றுச்சூழல், வேலைப்பளு, உணவுப் பழக்கங்கள் போன்றவை இன்றைய இளைய தலைமுறையினரைப் பாதிக்கிறது.

உணவு

தினசரி மூன்று லிட்டர் வரை தண்ணீர் குடிப்பதன் மூலமும் உடல் ஆரோக்கியத்தையும், அழகையும் தக்கவைக்கலாம். தினமும் மூன்று வெவ்வேறுவிதமான பழங்களை எடுத்துக்கொள்வது சருமத்துக்குத் தேவையான வைட்டமின், நீர்ச்சத்தைத் தந்து, தோலில் வறட்சியைப் போக்கிப் பளபளப்பாக்கும். உணவில் பொன்னாங்கண்ணி மற்றும் கேரட் தினசரி சேர்த்துக்கொண்டால், சோர்வு நீங்கி முகம் எப்போதும் பிரகாசிக்கும்்.

பாதாம் பருப்பை இரவில் நீரில் ஊறவைத்து காலையில் சாப்பிடுவது நல்லது. முகப்பருக்கள் வருவதற்கு அதிகக் கொழுப்பும் ஒரு காரணம். எண்ணெய்ப் பலகாரங்கள், கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு, பாலை நன்கு காய்ச்சி அதில் இரண்டு பேரீச்சம்பழங்களைப் போட்டு, மறுநாள் காலை அருந்தலாம். முகத்தின் பளபளப்புக்கு பேரீச்சம் பழம் கேரன்டி.

பியூட்டி பார்லர்

பிளீச்சிங் செய்துகொள்வதைக் காட்டிலும் ஃபேஷியல் செய்து கொள்வது நல்லது. கெமிக்கல் ஃபேஷியல் செய்துகொள்வதால் தோல் தொடர்பான பாதிப்புகள் ஏற்படலாம். முகத்தின் சருமமும் மிருதுத்தன்மையை இழந்து கரடுமுரடாக மாறலாம். ஆப்பிள், ஆரஞ்சு, பப்பாளி, வெள்ளரிக்காய், தக்காளி, கேரட், வாழைப்பழம் போன்ற இயற்கை முறையில் செய்யப்படும் பழ ஃபேஷியல் எல்லா வகை சருமங்களுக்கும் ஏற்றது. பக்க விளைவுகள் இல்லாதது. சருமத்துக்கான சத்துக்களுடன், நீர்ச்சத்தும் சேர்ந்து பளபளப்பைக் கூட்டும். மேலும், அழகு நிலையத்தில் முகத்துக்கு அக்குபிரஷர் சிகிச்சையும் கொடுக்கப்படுகிறது. இதனால் முகம் மற்றும் உடலின் இயக்கங்கள் தூண்டப்பட்டு, தலைவலி, டென்ஷன் குறைந்து மனதும், உடலும் ரிலாக்ஸாகும். ரத்த ஓட்டம் சீராகும். இந்த நிம்மதியே, முகத்தில் புத்துணர்ச்சியையும் பொலிவையும் தரும். மேலும் முகத்தில் எண்ணெய் அதிகம் வழிந்தாலும் வறண்டுபோனாலும் அதற்கும் பார்லரில் இயற்கை முறையில் தீர்வைத் தர முடியும்.

அசத்தலான அழகுக்கு!

தினமும் தண்ணீரில் வேப்பிலைகளைப் போட்டு 10 நிமிடங்கள் கழித்துக் குளிக்கலாம். இது சருமத்துக்கு எந்தப் பாதிப்பும் வராமல் காக்கும். வாரம் இருமுறையாவது சோப்புக்குப் பதிலாக கடலைப் பருப்பு, பாசிப் பயிறு போன்றவற்றை அரைத்துக் குளிக்கலாம்.

வாரம் ஒரு முறை பப்பாளிப் பழத்தை நன்றாகப் பிசைந்து, அந்தக் கூழை முகத்தின் மீது பூசி 15 நிமிடங்கள் உலரவைத்து பின் குளிக்கலாம். இது சருமத்துக்கு மிருதுத்தன்மையைக் கொடுக்கும்.

இரு வாரங்களுக்கு ஒரு முறையேனும் தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பதன் மூலம் உடல் குளிர்ச்சி அடையும்.

வாரம் ஒரு முறை பால், பாதாம் அல்லது பிஸ்தா பருப்புடன் சிறிதளவு மஞ்சள் கலந்து முகத்தின் மீது 15 நிமிடங்கள் பூசிவிட்டுக் குளித்தால் மிகவும் நல்லது.

வெளியில் சென்றுவிட்டு வந்த பிறகு, கெட்டியான மோரில் ஒரு வெள்ளைத் துணியை நனைத்து முகத்தின் மீது அப்படியே 10 நிமிடங்கள் வைத்திருப்பது புத்துணர்ச்சியைத் தரும்.

மாதம் ஒரு முறை முகத்துக்கு மசாஜ் செய்வது, ஆவி பிடிப்பது, நீராவிக் குளியல்போடுவது மிகவும் நல்லது.

கிரீம்கள் மற்றும் பவுடர்கள் வியர்வை வெளியேறுவதைத் தடுப்பதால், தோல் நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இவற்றைத் தவிர்ப்பது நல்லது.

தினமும் அதிகாலையில் எழுந்திருப்பது, சூரிய ஒளிக்கதிர்கள் படுமாறு 20 நிமிடங்கள் ஆசனங்கள் செய்வது போன்றவை மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்ச்சி அளிக்கும்.

முகம் நன்கு அழகாக பொலிவோடு இருப்பதற்கு, தினமும் காலையில் நெல்லிக்காய் சாற்றுடன், சிறிது தேன் சேர்த்து குடிக்க வேண்டும்

சிலர், இளமை வயதுகளைத் தாண்டிய பிறகும் கம்பீரமாய் காட்சியளிப்பார்கள். சிலரோ இளம் வயதிலேயே முதுமை தட்டிப்போய் தோன்றுவார்கள். இவர்கள் மட்டும் எப்படி அன்று பார்த்தது மாதிரியே இன்றும் இருக்கிறார்கள்? என்று சிலரைப் பார்க்கும்போதுதான் தோன்றுகிறது. நமது வயதை முதலில் வெளிப்படுத்துவது சருமம்தான். அதை ஒழுங்காக, சீராகப் பராமரித்தாலே நமது இளமை நீடித்திருக்கும். எண்ணெய் அதிகமுள்ள உணவுகளை உட்கொள்வதாலும் சருமத்தில் முதுமைத் தோற்றம் தெரிகிறது.

இதைத் தடுக்க, முகத்தைப் பாதுகாக்கும் வகையில் தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சரி, எப்படி இளமையைத் தக்கவைத்துக்கொள்வது என்று பார்ப்போம்

தண்ணீர் நல்லது : இளமையைத் தக்கவைப்பதில் தண்ணீர் முக்கியப் பங்கு வகிக்கிறது. சருமத்தை மென்மையாக்குவதற்கும், பாதுகாப்பதற்கும் தினமும் குறைந்தபட்சம் 1 லிட்டர் தண்ணீர் பருகுவது நல்லது என்கிறார்கள் சரும நிபுணர்கள்.

இளமை காக்கும் உணவுகள்: என்றும் இளமையுடன் இருக்க தொடர்ந்த உடற்பயிற்சியும், பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், இறைச்சி, மீன் போன்ற ஆரோக்கிய உணவுகளை உட்கொள்வதும் அவசியம். உடல் திசுக்களைப் புதுப்பிக்கும் திறனுடைய ஆன்டி ஆக்சிடென்ட் குணம் நிறைந்த உணவுகளை உட்கொள்வதால் முகம் சுருக்கம் இல்லாமலும், மென்மையாகவும் தோன்றும். மேலும், பசலைக்கீரை, அவுரிநெல்லிகள், கேரட், தக்காளி, கிரீன் டீ போன்றவற்றையும் சேர்த்துக்கொள்வது நன்மை பயக்கும்.

ஆழ்ந்த உறக்கம் அவசியம்: சரியான உறக்கம் இல்லாததாலும் உடல் அழகு பாதிக்கப்படும் என்பதை பலர் அறிவதில்லை. சரியான தூக்கமின்மை, சோர்வை ஏற்படுத்தும், இளமையையும் பாதிக்கும். இரவில் குறைந்தது 6, 7 மணி நேர உறக்கம் அவசியம். அதைத் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால், மனதில் புத்துணர்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியத்திலும், சருமத்திலும் பொலிவு ஏற்படும்.

கவலை கூடாது: ஏதாவது ஒரு கவலையை இழுத்துப் போட்டுக் கொண்டு அதில் மூழ்குவது பலருக்கும் பழக்கமாக இருக்கிறது. கவலை உடல் நலத்தையும், அழகையும் பாதிக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. எனவே கவலையை விட்டொழியுங்கள். மகிழ்ச்சியுணர்வை வளர்த்துக்கொள்ளுங்கள். அப்புறம் பாருங்கள், உங்கள் முகம் ஜொலிக்கும்!

http://www.muthamilmantram.com



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

பேரிக்காய் – சில மருத்துவ குறிப்புகள்! ! ! !

ஆசியா மற்றும் ஐரோப்பா பகுதிகளை தாயகமாகக் கொண்டவை பேரிக்காய்கள். 'ரோசாசியே' தாவர குடும்பத்தை சேர்ந்த பேரிக்காயின் அறிவியல் பெயர் 'பைரஸ் கமியூனிஸ்'. பச்சை, சிகப்பு, மஞ்சள், ஆரஞ்சு போன்ற நிறங்களிலும், உருண்டை, மணி வடிவங்களிலும் பேரிக்காய்கள் விளைகின்றன. ஆசிய பகுதிகளில் ஆகஸ்ட் மாதத்தில் பேரிக்காய் பழங்கள் அறுவடை செய்யப்படுகின்றன.

பேரிக்காய் ஆப்பிள் வகையைச் சார்ந்தது. எனினும் ஆப்பிளில் இல்லாத விட்டமின் ஏ இப்பழத்தில் உள்ளது. ஆப்பிளை விட இது விலை மலிவு என்றாலும் ஆப்பிளைவிட பல மருத்துவக்குணங்கள் உடையது.

சுவையான இந்தப் பழத்தில் ஏ, பி, பி2, என வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இரும்பு சத்து, சுண்ணாம்புச் சத்து, கணிசமான அளவு உள்ளது.

  • உடலிற்கு வலிமையளிக்கக் கூடிய நார்சத்துப் பொருட்கள், நோய் எதிர்ப்பு பொருட்கள் உள்ளிட்ட சத்துக்கள் அடங்கி உள்ளன. 100 கிராம் பழத்தில் 3.1 கிராம் நார்ப் பொருட்கள் காணப்படுகின்றன.
  • பேரிக்காயில் உள்ள நார்ப் பொருட்கள் குடல் புற்றுநோய்க்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியாக பயன்படுகின்றன. இதில் காணப்படும் எளிதில் கரையாத 'பாலிசாக்ரைடு' மூலக்கூறுகள் குடலில் சேரும் புற்று நோய் நச்சுகளை அகற்றவல்லது.
  • குறைந்த ஆற்றல் அளிக்கக் கூடியவை பேரிக்காய்கள். 100 கிராம் பழத்துண்டில் 58 கலோரி ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது. இவற்றை தொடர்ந்து சாப்பிட்டால் உடல் எடை, கொழுப்பின் அளவு கட்டுக்குள் இருக்கும்.
  • அதிக அளவிலான 'வைட்டமின்-சி' சத்துப்பொருட்கள் பேரிக்காயில் நிறைந்து உள்ளன. புதிதாக பறித்த 100 கிராம் பழத்தில் 7 சதவீதத்திற்கு 'வைட்டமின்-சி' காணப்படுகிறது.
  • பேரிக்காயில் பீட்டா கரோட்டீன், லுட்டின் மற்றும் ஸி-சான்தின் போன்ற சத்துப் பொருட்களும் காணப்படுகின்றன. இவை உடலுக்கு வலிமை அளிப்பதுடன், சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியாகவும் செயல்படுகின்றன.
  •  தாமிரம், பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற தாது உப்புகள் பேரிக்காயில் கணிசமாக உள்ளன. இவை தவிர பி- குழும வைட்டமின்களான பைரிடாக்சின், ரிபோபிளேவின் மற்றும் போலேட் போன்றவையும் மிகுதியாக காணப்படுகின்றன.
  •  பேரிக்காய் பழங்கள் உடலுக்கு ஒவ்வாமை (அலர்ஜி) போன்ற உபாதைகளை ஏற்படுத்துவதில்லை.

வளரும் குழந்தைகளுக்கு:

வளரும் குழந்தைகளுக்கு சுண்ணாம்புச் சத்தும், இரும்புச் சத்தும் அவசியத் தேவை. இந்த சத்துக்கள் பேரிக்காயில் நிறைந்துள்ளன. பேரிக்காய் எலும்பு, தசை வளர்ச்சிக்கும் உடல் வலுவுக்கும் உதவுகிறது. பேரிக்காய் கிடைக்கும் காலங்களில் வாங்கி இரவு உணவுக்குப்பின் படுக்கைக்கு செல்லும் முன் ஒரு பழம் வீதம் சாப்பிடக் கொடுத்தால் குழந்தைகள் நன்கு வளர்ச்சி பெறுவார்கள்.

இதயப் படபடப்பு நீங்க:

இதயப் படபடப்பு உள்ளவர்கள் தினமும் இருவேளை ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் இதயப் படபடப்பு நீங்கும்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு:

கருவில் வளரும் குழந்தை நன்கு வளர பேரிக்காய் பெரிதும் உதவுகிறது. கருவில் உள்ள குழந்தையின் எலும்பு வலிமை பெற பேரிக்காய் சிறந்த மருந்து.

தாய்ப்பால் சுரக்க:

பிறந்த இளம் குழந்தைக்கு தாய்ப்பாலே சிறந்த ஊட்டச் சத்து மிகுந்த உணவாகும். தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். குழந்தை பிறந்தது முதல் தாய்ப்பால் கொடுப்பது மிகவும் அவசியம். ஆனால் தற்போது தாய்ப்பால் கொடுப்பது குறைந்து வருகிறது. சில பெண்களுக்கு தாய்ப்பால் சரியாக சுரப்பதில்லை. இவர்கள் காலையிலும் மாலையிலும் 1 பேரிக்காய் வீதம் தினமும் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.

வாய்ப்புண் குணமாக:

வயிற்றில் புண் இருந்தால்தான் வாயில் புண் ஏற்படும். இந்த வாய்ப் புண்ணையும், வயிற்றுப் புண்ணையும் ஆற்றும் சக்தி பேரிக்காய்க்கு உண்டு. தினமும் ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் விரைவில் குணமாகும்.

வயிற்றுப் போக்கு:

உண்ணும் உணவின் அலர்ஜி காரணமாக சிலருக்கு வயிற்றுப் போக்கு உண்டாகும். மேலும் சிலருக்கு பாக்டீரியாக்களால் வயிற்றுப் போக்கு உண்டாகும். தினமும் பேரிக்காய் ஒன்று சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் போக்கு நீங்கும்.

சிறுநீரக கல்லடைப்பு நீங்க:

இரத்தத்தில் இருந்து பிரிந்த தாது உப்புக்கள் சிறுநீரகத்தில் படிந்து அவை கல்லாக மாறுகின்றன. இவற்றைப் உடைத்து வெளியேற்ற தினமும் இரண்டு பேரிக்காய் சாப்பிட்டு வருவது நல்லது.

* உடல் சூட்டைத் தணிக்கும்.

* கண்கள் ஒளிபெறும்.

* நரம்புகள் புத்துணர்வடையும்.

* தோலில் ஏற்பட்ட பாதிப்புகளை குணப்படுத்தும்.

* குடல், இரைப்பை இவைகளுக்கு நல்ல பலம் கிடைக்கும். உடலை வலுவாக்கும்.

பேரிக்காய் கிடைக்கும் காலங்களில் உண்டு அதன் மருத்துவப் பயன்களை முழுமையாகப் பெறுவோம்.

http://chittarkottai.com



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

வட்டி – ஒரு சமுதாயக் கேடு!

 "(அதிகமானோர்) வட்டியை உண்ணக் கூடிய அல்லது அதனுடை புழுதியாவது படியக் கூடிய ஒரு காலம் மக்கள் மீது வரும்" என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவப்பது அபூ ஹுரைர (ரலி) அவர்கள். (நஸாயீ)

இன்றைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு பார்க்கும் போது இந்நபி மொழி நூற்று நூறு பொருந்தி வருவதை தெளிவாகவே நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. வட்டியின் பக்கம் திரும்பிப் பார்க்கவே கூடாது என்று முடிவு எடுத்து செயல் பட்டு வரும் பல சகோதரர்கள் ஏதேனும் ஒரு நெருக்கடியை சந்திக்கும் போது, இந்தத் தீமையில் போய் மாட்டிக் கொள்கிறார்கள்.

வட்டி என்பது பாவம் தவறு என்று அணைவர்களும் அறிந்திருந்தும் நடப்பது என்ன?

  • எனது மனசாட்சியின்படி வட்டியும் ஒரு தொழில் தான். (வீட்டு வாடகை, கார் வாடகை போன்று இதுவும் ஒன்று தான்).
  • நேரடியாக வட்டி வாங்குவது ஹராம். ஆனால் பேங்க், எல் ஐ சி, வீட்டு லோன், இன்ஸ்டால்மெண்ட் வட்டி போன்றன இன்றைய காலத்தில் தவிர்க்க இயலாதது.
  • எங்களுக்கு யாரும் கடன் தருவது இல்லையே! வட்டிக்குத் தானே பணம் பெற வேண்டும்.
  • ஒத்தி என்பதும் வியாபாரம் தானே! வாழையடி வாழையாக எங்களது முன்னோர்கள் செய்து வந்துள்ளார்களே!
  • கடனாக ஒரு தொகையை விவசாயிடம் கொடுத்து விட்டு வருடா வருடம் இத்தனை மூட்டை நெல் வாங்குவதும் ஒரு வகை வியாபாரம் தானே!
  • வியாபாரிகளிடையே நடைபெறும் ஏலச் சீட்டு இதுவும் எங்களுக்குள் உள்ள ஒரு உதவி முறை தானே!

இப்படி அவரவர்கள் வட்டியில் மூழ்கி உள்ளனர்.  சிலர்களுக்கு வட்டி பற்றித் தெரியாமல் உள்ளனர். ஆனால் மார்க்கத்தை அறிந்த பலர் இதனுள் மூழ்கியுள்ளதை நினைக்கும் போது மிகவும் வேதனையாக உள்ளது. நல்லது கெட்டது, ஞாயம் பேசும் இவர்கள் வட்டியின் கொடுமையை சிந்திப்பது இல்லை.

பலர் சேவை செய்வார்கள், வணக்கங்கள் பல செய்வார்கள் ஆனால் பணம் என்றால் பின் தங்கி விடுவார்கள். ஆம் ஜகாத் ஸதகா விசயத்தில் பொடு போக்கு ஏமாற்று. ஆனால் பணத்தைப் பெருக்க வட்டி விசயத்தில் அதிக அக்கறை!

இப்படி பணம் படைத்த பலர் தங்களது தேவைகளை அளவுக்கு மேல் பெருக்கிக் கொண்டு பேராசையால் கடன் வாங்கி பல சொத்துக்களை வாங்கி வட்டி கட்டுகின்றனர். ஆக ஜகாத் கொடுக்க வேண்டிய இவர்கள் இன்று இல்லை என்றுமே கடனாளியாக உள்ளனர். ஏழைகளை வாழ்வை உயர்த்தும் ஜகாத் இப்படி ஏமாற்றப்படுகிறது. தேவையுள்ள எளியவர்களுக்கு இவர்கள் எப்படி கடன் கொடுப்பார்கள்!

ஆனால் பேராசையால் அதிக வட்டிக்கு பணத்தை கொடுத்து முதலையும் இழப்பார்களே தவிர தேவையுள்ள மனிதர்களுக்கு அழகிய கடன் கொடுப்பது இல்லை! தங்கத்திலே முதலீடு செய்தார்கள். சிட் பண்டிலே முதலீடு செய்தார்கள். சிட்பண்டுகாரன் ஓடி விட்டான். தங்கம் 2 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த விலையை விட குறைந்து விட்டது.

ஆக உங்கள் பணம் உங்களுக்கும் நஸ்டம் சமுதாயத்திற்கும் பயன்படவில்லை! அந்த தேவையுள்ள மனிதன் கட்டும் வட்டிக்கு நீங்களும் ஒரு காரணம் என்பதை மறக்கலாமா?

உண்மையில் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டிருந்தால் உணவு தரக்கூடியவன் அல்லாஹ்.! அல்லாஹ்வின் நாட்டம் இன்றி இந்த பணம் எனக்கு எந்த நன்மையையும் செய்யாது நான் சேர்க்கும் இந்த பணம் எனது வாரிசுகளுக்கு எந்த பயனையும் ஏற்படுத்தாது என்று நம்ப வேண்டும்.

ஒன்றுமில்லாத எத்தணையோ குடும்ப வாரிசுகள் இன்று மிகவும் உயர்வான நிலையில் உள்ளனர். படிக்காதவர்கள் பலர் படித்தவர்களை விட நல்ல நிலையில் உள்ளனர். திறமையானவர்களை விட திறமையற்றவர்கள் பலர் மிகவும் நல்ல நிலையில் உள்ளதைப் பார்க்கின்றோம். முயற்சி மட்டும் நம் கடமை. பலன் என்பது அல்லாஹ்வின் கையில் என்பதை நம்ப வேண்டும்.

"வட்டியினால் அதிகரிக்கும் ஒருவனது செல்வம், இறுதியில் குறைந்து (அழிந்தே) விடுகிறது" என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூட்கள்: இப்னு மாஜா, ஹாகிம்.

"அல்லாஹ் வட்டியை அழிக்கிறான்; தர்மங்களை வளர்க்கிறான். நன்றி கெட்ட எந்தப் பாவியையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்" (2:276)

வட்டியில் திளைக்கும் சகோதரர்களே! கீழே உள்ளவற்றை கொஞ்சம் சிந்தியுங்கள்:

"வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். "வியாபாரம் வட்டியைப் போன்றதே" என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து, வட்டியைத் தடை செய்து விட்டான். தமது இறைவனிடமிருந்து அறிவுரை வந்தப்பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் (வட்டித் தொழில்) செய்வோர் நரகவாசிகள் ஆவர். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். (அல் குர்ஆன்: 2:275)

"நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் வர வேண்டிய வட்டியை விட்டு விடுங்கள்!" "அவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால் அல்லாஹ்விடமும் அவனது தூதரிடமும் போரிடுவதாகப் பிரகடனம் செய்து விடுங்கள்" (அல் குர்ஆன்: 2:278,279.)

"வட்டியை உண்பவன், அதனை உண்ணக் கொடுப்பவன், அதற்கு சாட்சியம் அளிக்கும் இருவர், கணக்கு எழுதுபவன் ஆகிய அனைவரையும் நபிகள் நயாகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்" என அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: இப்னு மாஜா.)

'ஏழு பெரும் பாவங்களை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்ன போது, 'சொல்லுங்கள் அல்லாஹ்வின் தூதரே!' என்று அவர்களது தோழர்கள் கூறினார்கள். அப்போது, '1.அல்லாஹ்வுக்கு இணை வைப்பது. 2.சூனியம். 3.கொலை 4.வட்டி உண்பது 5.அனாதைகளின் சொத்தை உண்பது 6.போரில் புறமுதுகு காட்டுவது 7.அபலைப் பெண் மீது அவதூறு சொல்வது' என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

'ஒரு திர்ஹம் வட்டி என்பது அல்லாஹ்விடத்தில் முப்பத்து ஆறு முறை விபச்சாரம் செய்த குற்றத்தை விட கொடியதாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் ஹன்ழலா (ரலி), நூல்: தாரகுத்னீ)

ஒத்தி என்றால் என்ன?
ஒத்தி என்பது ஒருவர் ஒரு குறிப்பிட்ட தொகையை குறிப்பிட்ட காலத்திற்காக வீட்டுச் சொந்தக்காரரிடம் கொடுத்து விட்டு, அவரது வீட்டில் இவர் குடியிருப்பார் அல்லது மற்றவருக்கு வாடகைக்கு விட்டு விடுவார். நிர்ணயிக்கப்பட்ட காலம் முடிந்ததும் பணம் திருப்பிச் செலுத்தப்படும், வீடும் வீட்டுச் சொந்தக்காரரிடம் ஒப்படைக்கப்படும்.

ஒத்தியில் ஈடாக கொடுக்கப்படும் வீட்டையோ கடையையோ, ஒத்தி வாங்கியவர் குடியிருக்கவோ வாடகைக்கு விடவோ முடியாது. அவ்வாறு செய்தால் அது வட்டியாகும் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகிறது.

'சவாரிக்குரிய கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் (தீவனம் போன்ற) செலவுகளுக்குத் தக்கவாறு (அதன் மீது) சவாரி செய்யலாம். பால் கறக்கும் கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் செலவுக்குத் தக்கவாறு அதன் பாலை அருந்தலாம். பால் அருந்துபவரையே தான் செலவு சார்ந்திருக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

ஏலச்சீட்டு வட்டியாகுமா?:

ஏலச்சீட்டு என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளவர்கள் குறிப்பிட்ட அளவு தொகையை மாதாமாதம் செலுத்திவர வேண்டும். அந்த குழுவினரின் முன்னிலையில் ஏலம் விடப்படும். அவசர தேவைக்காக பணம் தேவைப்படுபவர்கள், பண நெருக்கடியில் உள்ளவர்கள் ஏலம் எடுப்பார்கள். அதிகமாக குறைத்துக் கொண்டு ஏலம் கேட்பவர்களுக்கே அது கொடுக்கப்படும். எவ்வளவு தொகை குறைக்கப்பட்டதோ அந்த தொகை கழிவு எனப்படும், அது மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கப்படும்.

இது ஆதாரம் தேவைப்படாத அளவு முடிவு செய்யப்படத்தக்க விஷயம். சந்தேகமின்றி இது வட்டியே ஆகும்.

குலுக்கல் சீட்டு:

குலுக்கல் சீட்டு என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளவர்கள் குறிப்பிட்ட அளவு தொகையை மாதாமாதம் செலுத்திவர வேண்டும். அந்த குழுவினரின் முன்னிலையில் எல்லோரது பெயர்களையும் சீட்டில் எழுதி ஒருவரது பெயரை மட்டும் குலுக்கி எடுப்பார்கள். எவரது பெயர் குலுக்கி எடுக்கப்பட்டதோ அவருக்கு அந்த மாதத்திய தொகை வழங்கப்படும். அடுத்த மாத குலுக்கலில் இவரது பெயர் எழுதப்படாது.

அவரவருக்கு கிடைக்கும் தொகை சரிசமமாக கிடைக்கும் என்பதால் இது அனுமதிக்கப்பட்ட ஒன்றே.

தவணை முறையில் பொருள் வாங்குவது:

இந்த முறையிலும் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று, ஒரு பொருளுக்குரிய விலை ரொக்கமாக வாங்கினால் என்ன விலையோ அந்த தொகையை சிறிது சிறிதாக மாதாமாதம் கொடுத்து வருவது. இது அனுமதிக்கப்பட்ட ஒன்று.

இரண்டாவது, ஒரு பொருளுக்குறிய விலை ரொக்கமாக வாங்கினால் என்ன விலையோ அந்த விலையை விட கூடுதலாக வைத்து அந்த தொகையை சிறிது சிறிதாக மாதாமாதம் கொடுத்து வருவது. இது தடுக்கப்பட்டது.

வங்கியில் வேலை செய்வது:

'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்)

பகடி கூடுமா?:

பகடி என்பது ஒருவருக்குச் சொந்தமான கடையில் மற்றவர் வாடகைக்கு இருப்பார். அந்தக் கடை மற்றவருக்கு தேவைப்படும் போது, வாடகைக்கு இருப்பவர் அவரிடமிருந்து பெரிய தொகையை கேட்டு வாங்கிக் கொள்வார்.

பகடி கொடுப்பதும் கூடாது, பகடி வாங்குவதும் கூடாது.

அல்லாஹ் நம் அணைவர்களையும் மோசமான வட்டியிலிருந்து காப்பாற்றுவானாக!

http://chittarkottai.com



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com