Thursday, December 11, 2014

தாங்க முடியாத தலைவலிக்கு உடனடி வைத்தியம்!


தலைவலி என்பது பொதுவாக அனைவருக்கும் ஏற்படக்கூடிய ஒரு பிரச்சினை. அனைத்து வயதினரும், அனைத்து தரப்பினரும் அனுபவிக்கக்கூடிய சாதாரண விஷயம் தலைவலி. தலைவலி என்றாலே எல்லோரும் உடனே ஏதாவது மாத்திரைகளை வாங்கிப்போட்டுக் கொள்கிறோம்.
அதில் சில மருந்துகள் பயன்தரும். சிலவற்றால் பயன் ஏதும் இருக்காது. அதனால் பணம் செலவாவது தான் மிச்சமாக இருக்கும். ஆகவே இவ்வாறு பயன் தராமல் பணச்செலவு வைக்கும் மருந்துகளை வாங்கிப் போட்டுக் கொள்வதை தவிர்த்து, வீட்டிலேயே பலன் தரக்கூடிய வீட்டு மருத்துவங்கள் பல இருக்கின்றன.

அவற்றைப் பயன்படுத்தினால், பணம் செலவாகாமல் இருப்பதோடு, தலைவலி விரைவில் குணமாகும். அப்படிப்பட்ட சில வீட்டு மருந்துகளைக் கீழே தருகிறோம். அதைப் படித்து பின்பற்றி, தலைவலியை இயற்கை முறை யில் குணமாக்குங்கள்.
கிராம்பும் உப்பும் கலந்த கலவை :

கல்லுப்பையும் சிறிது கிராம்பையும் எடுத்துக் கொண்டு, சிறிது பால் சேர்த்து அரைத்து உட்கொள்ள வேண்டும். இதனால் கல்லுப்பானது தண்ணீரை உறிஞ்சிக் கொள்ளும் தன்மை படைத்தது. ஆதலால், இக்கலவையிலுள்ள உப்பு, தலையிலுள்ள ஈரத்தினை உறிஞ்சிக் கொள்கிறது. அதன் காரணமாக தலைவலியின் தீவிரம் குறைகிறது.

வெந்நீரில் கலந்த எலுமிச்சைச் சாறு :

ஒரு டம்ளரில் வெந்நீர் எடுத்துக் கொண்டு, அதனுடன் சிறிது எலுமிச்சை பழச்சாறு சேர்த்துக் கலந்து குடித்தால் உடனடியாகத் தலைவலியின் தீவிரம் குறைவதை உணரலாம். பெரும்பாலான தலைவலிகள் வயிற்றில் வாயு உற்பத்தியாவதால் ஏற்படுகின்றன. அத்தகைய தலைவலிகளுக்கு இது சிறந்த பலனைத்தரும். இக்கலவை வயிற்றில் வாயு உற்பத்தியாவதையும் தடுத்து, தலைவலிக்கும் நிவாரணம் அளிக்கிறது.

யூகலிப்டஸ் தைலம் கொண்டு மசாஜ் :

தலைவலிக்கு மிகவும் சிறப்பான ஒரு மருத்துவம் யூகலிப்டஸ் தைலம் கொண்டு, மசாஜ் செய்தல் ஆகும். இதனைச் செய்தால் உடனடியாக நிவாரணம் கிடைப்பதை உணரமுடியும். யூகலிப்டஸ் தைலம் ஒரு சிறந்த வலி நிவாரணி ஆகும்.
சூடான பால் அருந்துதல் :
சூடான பசும்பால் அருந்துதல் தலைவலியை நன்றாகக் குறைக்க உதவும். மேலும் தலைவலியின் போது, உண வில் சிறிது நெய் சேர்த்துக் கொள்ளுதலும், தலைவலிக்கு நல்ல நிவாரணம் அளிக்கும்.

பட்டையை அரைத்துத் தடவுதல் :
தலைவலிக்கு மற்றுமொரு சிறப்பான மருத்துவமாகக் கருதப்படுவது, வீட்டில் மசாலாப் பொருட்களுள் ஒன்றான பட்டையை சிறிது தண்ணீர் விட்டு பட்டுப்போல அரைத்து பசைபோலாக்கி, அதனை நெற்றியில் பற்றுப்போல தடவ வேண்டும். இதனைத் தடவினால் தலைவலியானது கணப்பொழுதில் மறைந்து விடுவதை உணரலாம்.

மல்லியும் சர்க்கரையும் கலந்து குடித்தல் :
சிறிது மல்லியையும், சர்க்கரையையும் எடுத்துக் கொண்டு தண்ணீர் விட்டு அரைத்து, அதனைக் குடித்தாலும் தலைவலிக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். ஒரு வேளை சளிபிடித்ததால் ஏற்பட்ட தலைவலியாக இருந் தால், உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.

சந்தனத்தை அரைத்துத் தடவுதல் :
சந்தனக் கட்டையை எடுத்துக்கொண்டு, அதனை சிறிது தண்ணீர் விட்டு பசை போல மென்மையாக அரைத்து எடுத்துக்கொண்டு, அதனை நெற்றியில் பற்று போட்டால் தலைவலி பறந்துவிடும்.

தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்தல் :
நெற்றியில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் வரை மசாஜ் செய்து வந்தால், தலைவலி நீங்கும். தேங்காய் எண்ணெய் குளிர்ச்சியைத் தரும் குணம் கொண்டது. ஆகவே, கோடைக்காலத்தில் தலைவலியால் அவஸ்தைப்பட்டால், இம்மருத்துவம் நல்ல பலனைத் தரும்.

சிறிது பூண்டு ஜுஸ் அருந்துதல் :
சிறிது பூண்டுப்பற்களை எடுத்துக் கொண்டு, சிறிது தண்ணீர் விட்டு அரைத்து, அதிலிருந்து ஜுஸ் எடுத்து, இந்த ஜுஸை ஒரு டீஸ்பூனாவது அருந்த வேண்டும். இதனால் குடித்த பூண்டுச்சாறு தலைப்பகுதிக்குள் ஊடுருவிச் சென்று, வலி நிவாரணி போல செயல்பட்டு, தலைவலியை நன்றாகக் குறைக்கும்.

கால்களை வெந்நீரில் வைத்திருத்தல் :
ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு, வெந்நீர் நிரம்பிய வாளியில் கால்களை நனைக்கும் அளவுக்கு வைத்திருப்பது, தலைவலிக்கு மற்றொரு வீட்டு மருத்துவமாக செய்யப்பட்டு வருகிறது. இரவு படுக்கப்போகும் முன் பதினைந்து நிமிடங்களாவது, இதனைச் செய்ய வேண்டும்.
சைனஸினால் பாதிக்கப்பட்டு தலைவலியால் அவஸ்தைப்பட்டு வந்தாலும், நீண்டகாலமாக தலைவலியினால் அவஸ்தைப்பட்டு வந்தாலும், இம்முறையை குறைந்தபட்சம் மூன்று வாரங்களாவது செய்து வரவேண்டும். இதனால் நல்லதொரு முன்னேற்றத்தினை உணரக் கூடும்.

ஒரு துண்டு ஆப்பிள் சாப்பிடுதல் :
காலையில் படுக்கையை விட்டு எழுந்ததும், ஒரு துண்டு ஆப்பிளில் சிறிது உப்பு தடவி சாப்பிட வேண்டும். ஆப்பிளை சாப்பிட்டதும், சிறிது வெதுவெதுப்பான தண்ணீரோ, சூடான பாலோ அருந்த வேண்டும். இப்படி ஒரு பத்து நாட்களுக்கு செய்து வந்தால், நாள்பட்ட தலைவலி குறையும்.

பாதாம் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்தல் :
தலைவலிக்கு நல்ல நிவார ணம் அளிக்கும் பொருட்களில் பாதாம் எண்ணெயும் ஒன்று. எனவே நெற்றியில் சிறிதளவு பாதாம் எண்ணெய் தடவி, 15 நிமிடங்கள் வரை மசாஜ் செய்து வந்தால், தலைவலி நீங்கும்.

இஞ்சி, சீரகம், தனியா கலந்த தேநீர் அருந்துதல் :
தலைவலி உடனடியாக நீங்க வேண்டுமாப அப்படியென்றால், சிறிது இஞ்சி, சீரகம், மல்லி ஆகியவற்றை சிறிது தண்ணீரில் போட்டு, 5 நிமி டங்கள் கொதிக்க வைத்து, ஒரு தேநீர் போன்று தயாரித்து வடிகட்டி அருந்த வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது குடித்து வந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.

வெற்றிலையை அரைத்துத் தடவுதல் :
வெற்றிலைக்கு வலி நிவாரணித் தன்மை உள்ளது. இது தலைவலிக்கும் நல்ல நிவாரணத்தை அளிக்கும். அதற்கு சில வெற்றிலைகளை எடுத்துக் கொண்டு, அவற்றை நன்றாக அரைத்து எடுத்துக் கொண்டு, நெற்றியில் பற்றுப் போல தடவிக் கொள்ளவும். இதனால் தலைவலி மாயமாக மறைந்து போகும்.

சீஸ் சாப்பிடுவதைக் குறைத்துக் கொள்ளுதல் :
தலைவலியினால் அவதிப்படுகிறீர்கள் என்றால், சீஸ், சாக்லெட்டுகள், ஆட்டுக்கறி போன்றவற்றை முழுவதுமாகத் தவிர்த்து விட வேண்டும். இதற்குப் பதிலாக, வைட்டமின் சி, வைட்டமின் டி, வைட்டமின் பி12, புரதம், கால்சியம் ஆகியவை நிறைந்த உணவு வகைகளை அதிகமாக சேர்த் துக்கொள்ள வேண்டும். அதிலும் முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், வெந்தயக்கீரை போன்ற இலை வகைக் காய்கறிகளை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும். தலைவலியிலிருந்து விடு படவேண்டுமென்று விரும்பினால், ஃபாஸ்ட் புட் மற்றும் மசாலா உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும்.

நன்றாக தூங்குதல் :
பெரும்பாலான மக்கள் தலைவலியால் அவஸ்தைப்படுவதற்கு முக்கியமான காரணம் சரியான தூக்கம் இல்லாதது தான். எனவே தலைவலியிலிருந்து முழுமையாக விடுபட வேண்டுமானால், தூக்கத்திற்கு முதலிடம் கொடுக்க வேண்டும். அதிலும் ஒரு நாளைக்கு ஆறு மணிநேரமாவது ஆழ்ந்த தூக்கம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் தலைவலி குறையும். மேலே குறிப்பிட்டுள்ளவை நமது முன்னோர்கள் காலம் காலமாக கடைப்பிடித்து வரும் தலைவலிக்கான கை மருத்துவங்கள்.
இவற்றை நீங்களும் பின்பற்றி, தலை வலியிலிருந்து நிவாரணம் பெறுங்கள்.
http://pettagum.blogspot.in/2013/11/blog-post_8521.html

--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

No comments: