Thursday, January 30, 2014

கால் விரல் நகங்கள் பராமரிக்க வழிகள்!

கால் விரல் நகங்கள் பராமரிக்க வழிகள்!

எப்படி முகத்தை அழகாக்குவதற்கு அத்தனை பராமரிப்புக்களை கொடுக்கிறோமோ, அதேப் போல் நகங்களுக்கும் சரியான பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.
- வெளியே போய்விட்டு வீட்டிற்கு வந்ததும், பாதங்களை வெதுவெதுப்பான நீரால், ன்கு சுத்தமாக கழுவ வேண்டும். அவ்வாறு கழுவும் போது, நகங்களையும் தேய்த்து கழுவ வேண்டும். இதனால் கால்களில் உள்ள அழுக்குகள் நீங்கிவிடும்.
- நகங்களை அழகாக்குவதற்கு நெயில் பாலிஷ் போடும் பழக்கம் இருக்கும். அவ்வாறு நெயில் பாலிஷ் போடும் பழக்கம் உள்ளவர்கள், வாரத்திற்கு 1-2 முறையாவது, நல்ல நெயில் பாலிஷ் ரிமூவர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் தான், நகங்கள் நன்கு வலிமையோடு, ஆரோக்கியமாக இருக்கும்.
- பாதங்களை வெதுவெதுப்பான சோப்பு நீரில் ஊற வைக்க வேண்டும். வேண்டுமெனில் அத்துடன் சிறிது நறுமண எண்ணெய்கள் அல்லது கல் உப்புக்களை சேர்த்துக் கொள்ளலாம். குறிப்பாக பாதங்களை 15 நிமிடமாவது ஊற வைக்க வேண்டும். இதனால் பாதங்கள் மற்றும் கால் விரல் நகங்களில் உள்ள கிருமிகள் மற்றும் அழுக்குகள் நீங்கிவிடும்.
- பாதங்கள் மற்றும் கால் விரல் நகங்களைச் சுற்றியுள்ள இடங்களை ஸ்கரப்பர் பயன்படுத்தி தேய்த்து, அங்கு தங்கியுள்ள இறந்த செல்கள் மற்றும் கிருமிகளை வெளியேற்றவும். முக்கியமாக இவ்வாறு தேய்க்கும் போது, அளவுக்கு அதிகமாக தேய்க்கக் கூடாது.
http://kulasaisulthan.wordpress.com

--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

Wednesday, January 29, 2014

Dear Friends I am looking for a new job

Dear Friends,

            I am looking for a new job in my career  .I am searching Contract or Permanent  job in Structural designer .I have 13+ Years Experienced in Power, Oil & Gas as  Structural Designer. If you have any Job in Your Concern or Your Friend Concern please refers my Attached Resume.

Software Proficiency: PDMS, Tekla , Auto Cad  and Micro station

Preferred Location: South India

Thank you,

Regards,

A.sahabudeen

--



நெய் உடலுக்கு ஆரோக்கியமானது தானா?



--
*more articles click*
www.sahabudeen.com


நெய் உடலுக்கு ஆரோக்கியமானது தானா?

நெய் உடலுக்கு ஆரோக்கியமற்றது என்று தான் அனைவரும் நினைக்கின்றோம். ஆனால் அது அளவுக்கு அதிகமானால் தானே தவிர, குறைவான அளவில் எடுத்தால் அல்ல.
ஏனெனில் சுத்தமான நெய்யில் ஃபேட்டி ஆசிட் அல்லது சுத்திகரிக்கப்பட்ட கொழுப்புகள் 89 சதவிகிதம் குறைவாக உள்ளது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.
வீட்டிலேயே வெண்ணெயை உருக்கி நெய்யாக மாற்றுவது தான், சுத்தமான நெய். இதய நோய் மற்றும் அதிக எடை இல்லாமல் இருப்பவர்கள், சுத்தமான நெய்யை சாப்பிடலாம்.
அதுவே உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள், முற்றிலும் நெய்யை தவிர்க்க வேண்டும். மேலும் ஒரு நாளைக்கு ஒருவர் 10-15 கிராம் நெய் தான், உடலில் சேர்க்க வேண்டும்.
நெய் உடலுக்கு ஆரோக்கியமானது தானா?
தொடர்ச்சியாக நெய்யை உடலில் சேர்த்து வந்தால், உடல் மற்றும் மனம் உறுதியடையும், மற்றும் உடலும் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் இதை சாப்பிட்டால் உடலில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறிவிடும். அதிலும் பார்வை, தசைகள் போன்றவை ஆரோக்கியமாக இருக்கும்.
கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்களுக்கு, நெய் ஒரு சிறந்த வழி. ஏனெனில் அவர்கள் வெண்ணெய்க்கு பதிலாக நெய்யை பயமின்றி சாப்பிடலாம். வெண்ணெயுடன் ஒப்பிடும் போது நெய்யில் மிகவும் குறைவான அளவில் கொழுப்பு உள்ளது. இதனால் உண்ணும் உணவுகள் எளிதில் செரிமானமடைந்துவிடும்.
சுத்தமான நெய் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும். இதனை ஃப்ரிட்ஜில் வைத்து சேகரிக்க வேண்டும் என்பதில்லை. நெய்யானது உடல் செரிமான மண்டலத்தை சீராக இயக்குவதோடு, தினமும் உடற்பயிற்சி செய்தால் உடல் எடையை குறைப்பதற்கும் உதவும்.
நெய்யில் வைட்டமின் ஏ, டி, ஈ மற்றும் கே சத்துக்கள் உள்ளன. இந்த வைட்டமின்கள் அனைத்தும், கரையக்கூடிய கொழுப்புகள். ஆகவே தான் இது உடல் எடையை அதிகரிக்காது என்று சொல்கின்றனர் நிபுணர்கள். சொல்லப்போனால் நெய்யில் செறிவூட்டப்பெற்ற கொழுப்புகள் அதிகம் உள்ளதால், இது உடலில் வைட்டமின்களை உறிஞ்சிக் கொள்கிறது.
சமையலில் பயன்படுத்தும் சமையல் எண்ணெயை விட நெய் மிகவும் சிறந்தது. ஏனெனில் அந்த எண்ணெய்கள் அதிக வெப்பத்தில் கருகிவிடும்.  ஆனால் நெய்யானது அவ்வாறு இல்லை, அது எவ்வளவு வெப்பத்திலும் வாசனையுடன் இருக்குமே தவிர, கருகாமல் இருக்கும்.
உடலுக்கு ஒரு சில கொழுப்புகளானது மிகவும் அவசியமானது. ஏனெனில் அந்த கொழுப்புகள் தான் செரிமான மண்டலத்தில் இருந்து வெளிவரும் ஆசிட், குடல் வாலை பாதிக்காமல் தடுக்கிறது. மேலும் இது நரம்பு, சருமம் மற்றும் மூளையை வலுவாக்குகிறது.
http://www.tamilhotpage.com/?p=138

Tuesday, January 28, 2014

ஸ்கிப்பிங்கை ஸ்கிப் பண்ணாதீங்க

ஸ்கிப்பிங்கை ஸ்கிப் பண்ணாதீங்க

'ஸ்கிப்பிங்கா? அட அதெல்லாம் சின்னப் பசங்க சமாச்சாரம்''னு நெனைச்சுப் பக்கத்தைப் புரட்டாதீங்க... சும்மா ஜாலியா 10 நிமிஷம் ஸ்கிப்பிங் செய்தாலே 100 கலோரிகள் வரை எரிக்க முடியும். கயிறாட்டம் எனத் தமிழில் சொல்லப்படும், செலவே இல்லாத இந்த ஸ்கிப்பிங் பயிற்சியை முறையாக எப்படிச் செய்வது? விரிவாகச் சொல்கிறார் ஃபிட்னஸ் பயிற்சியாளர் மகேந்திரன்.

''நமக்கு ஏற்ற ஸ்கிப்பிங் கயிறை எப்படித் தேர்ந்தெடுப்பது?'' 
''
ஒரு ஸ்கிப்பிங் கயிறை எடுத்து அதைத் தரையில் நீள வாக்கில் கிடத்தி, பாதி அளவு நீளம் இருக்கும் இடத்தில் கயிற்றின் மீது நின்றுகொண்டு, கயிற்றின் இருமுனைகளையும் இரு கரங்களாலும் மேல்நோக்கி உயர்த்த வேண்டும். கயிற்றின் இரு முனைகளும் உங்கள் அக்குள் பகுதிவரை இருந்தால் அந்தக் கயிறுதான் உங்களுக்கு ஏற்ற கயிறு.''

''எப்படி ஸ்கிப்பிங் செய்ய வேண்டும்?'' 
''
முதலில் நேராக நிற்க வேண்டும். பின்பு உங்களது ஸ்கிப்பிங் கயிறை உங்களது குதிக்காலின் கீழ் வைத்துக்கொள்ளவும். பின்பு மெதுவாகக் கயிறைச் சுழலவிட்டு அதன் வேகத்திற்கு ஏற்பக் கயிறைத் தாண்டித் தாண்டிக் குதிக்கவும்.  முதலில் மெதுவாக ஆரம்பித்து, பிறகு வேகத்தை சீராகக் அதிகரிக்க வேண்டும்.''

''ஸ்கிப்பிங்கில் எத்தனை வகைகள் உள்ளன?'' 
''
சாதாரணமாகத் தாண்டி விளையாடுதல் தவிர்த்து, முன்புறமாகத் தாண்டுதல், பின்புறமாகத் தாண்டுதல், ஓடிக்கொண்டே தாண்டுதல், குறுக்கு வாக்கில் தாண்டுதல் எனப் பல வகைகள் உண்டு. சாதாரணமாகக் குதித்தல் தவிர மற்ற முறைகளை உரிய பயிற்சியுடன்தான் செய்ய வேண்டும்.''

''ஸ்கிப்பிங் பயிற்சி மேற்கொள்ளும்போது கருத்தில்கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன?'' 
''
இதய நோயாளிகள், இடுப்பு மற்றும் மூட்டு வலி உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படிதான் ஸ்கிப்பிங் செய்யவேண்டும். புல்தரை, மணல் போன்ற மிருதுவான தரைப்பரப்பில்தான் ஸ்கிப்பிங் செய்ய வேண்டும். கான்கீரிட் போன்ற கடினமான தளங்களில் ஸ்கிப்பிங் செய்யக்கூடாது. அப்படிச் செய்யும்போது மூட்டுகளில் பிரச்னைகள் ஏற்படும். கட்டாயமாக ஷூ அணிந்து இருக்க வேண்டும். அவை பொருத்தமான அளவிலும் தரமானதாகவும் இருக்கவேண்டும். நாள் ஒன்றுக்குக் குறைந்தது 100 முறை தாண்டலாம். ஸ்கிப்பிங் செய்யும் இடம் காற்றோட்டத்துடன் இருக்க வேண்டும்.

பயிற்சியில் ஈடுபடுவதற்கு முன் குறைவான ஆகாரம் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். கூட்டாகச் செய்யும்போது மற்றவர்களைவிட அதிகமுறை செய்கிறேன் பேர்வழி என மல்லுக்கட்டி நிறைய முறை செய்ய வேண்டாம். இறுக்கமான ஆடைகளை அணிந்து ஸ்கிப்பிங் செய்யக்கூடாது.''

''ஸ்கிப்பிங் பயிற்சியால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?''

''10 நிமிட ஸ்கிப்பிங் பயிற்சி, எட்டு நிமிடங்களில் ஒரு மைல் தூரம் ஓடியதற்குச் சமம். ஒரு மணி நேரத்தில் 1300 கலோரிகள் வரை எரிக்கலாம். உடல் வலிமை அதிகரிக்கும். உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பு கரையும். கூன் விழாமல் தடுக்கலாம். உடலுக்கும் மனதுக்கும் ஒரு சேரப் பயிற்சி கிடைப்பதால் மன அழுத்தம், எதிலும் நாட்டமின்மை போன்ற பிரச்னைகள் நீங்கி மனம் ஒருமுகப்படும்.
அதனால், சின்ன வயசுக்காரங்க யாரும் ஸ்கிப்பிங்கை ஸ்கிப் பண்ணக்கூடாது.'


http://pettagum.blogspot.in/2012/11/blog-post_15.html



--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

பெருங்காயம் வெறும் சமையல் நறுமணப் பொருள் அல்ல

பெருங்காயம் வெறும் சமையல் நறுமணப் பொருள் அல்ல

பெருங்காயத்தை நாம் பெரும்பாலும் சமையலில் நறுமணம் ஊட்டக்கூடிய பொருளாகவே பயன்படுத்துகிறோம், ஆனால் இதற்கென்று பிரத்யேகமான மருத்துவப் பயன்கள் உண்டு.

பெருங்காயம், உஷ்ணத்தைத் தரக்கூடியது ; உணவை செரிப்பிக்கிறது ; சுவையை அதிகப்படுத்துகிறது. இது கூர்மையானதும் ஊடுருவும் தன்மையுமுடையதாகும், இது வாதத்தையும், கபத்தையும் கண்டிக்கிறது ; பித்தத்தை உயர்த்துகிறது. இது வயிறு உப்பல், கிருமி ஆகியவைகளின் சிகிச்சைக்கும் குடற் புழுவகற்றியாகவும் பயன்படும். 

உபயோகங்கள் : இது ஒரு நல்ல வாய்வகற்றி ; உணவுப் பொருள்களைச் சீரணம் செய்வதில் உதவி செய்கிறது. இது அதிகமாக வாத நோய்களில் உபயோகிக்கப்படுகிறது. இது, வழக்கமான அதாவது எப்போதும் உள்ள இருமலுக்கு கோழையகற்றியாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும், 
நீரேற்றத்தையும் - சவ்வுகளின் வீக்கத்தையும், காசத்தையும் நீக்குகிறது. சுவாச நோயில் இசிவகற்றியாகவும், வயிற்றில் ஏற்படும் பாதிப்புகட்கும், குடற் கிருமிகளை வெளிப்படுத்தவும் பயனுடையதாகிறது. 

இது, குடலின் உப்புதலை குறைக்கிறது. இதன் சிறப்புச் செய்கையினால் வலி உள்ள மாத விடாயின்போது தீட்டை அதிகமாக்குவதற்காகக் கொடுக்கப்படுகிறது. 

நரம்புத் தளர்ச்சியால் ஏற்படும் மூர்ச்சை நோயிலும், வலிப்பு நோயிலும், இது சம்பந்தமான நரம்புக் கோளாறுகளிலும் மிகவும் பயனுடையதாகிறது. 
பிரசவத்திற்குப் பிறகு நஞ்சக் கொடியை வெளியேற்ற கொடுக்கப்படுகிறது. இதை ( பெருங்காயத்தை ) எண்ணெயில் கரைய வைத்துக் காயங்கட்கு மேலே பூசுவதற்கும், காது நோய்களில் பழக்கமான நேர் மருந்தாகக் காது வலியைக் குறைக்க பயன்படுகிறது.

இதைப் பொரித்து உபயோகப்படுத்தலே நலம். பச்சையாக உபயோகித்தால் வாந்தியுண்டாகும். 

இதை நீர் விட்டு உரைத்து மார்பின் மீது பற்றிட குழந்தைகட்கு உண்டாகும் கக்குவான் குணப்படும். 

பிரசவத்தின் பின், அழுக்கை வெளிப்படுத்தக் காயத்தைப் பொரித்து, வெள்ளைப் பூண்டு, பனை வெல்லத்துடன் சேர்த்துக் காலையில் கொடுக்கலாம்.

கோழி முட்டை மஞ்சட் கருவுடன் காயத்தைக் கூட்டிக் கொடுக்க வறட்டிருமல், பக்க வலி நீங்கும். எண்ணெயிலிட்டுக் காய்ச்சி காதுக்கிட, காது வலி தீரும்.

http://pettagum.blogspot.in/2012/11/blog-post_481.html



--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

வினிகரை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என பார்க்கலாம்

வினிகரை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என பார்க்கலாம்

உங்கள் வீட்டுக் கிச்சனில்எவர்சில்வர் காஸ் அடுப்புக்கள், கண்ணாடி பொருட்கள் மற்றும் டைல்ஸ்கள் ஆகியவற்றை

வினிகர் மூலம் சுத்தம் செய்தால் அனைத்துமே பளிச் பளிச் என்றுதான் இருக்கும். 
பித்தளைச் சாமான்கள் பளிச்சிட சிறிது வினிகரை உருளைக்கிழங்கு வேகவைத்த தண்ணீருடன் கலந்து அந்தப்பொருட்களின் மேல் அழுத்தித் தேய்க்கவும், ஆனால் எந்தப் பொருளை சுத்தப்படுத்த வினிகரைப் போட்டாலும் அதிக நேரம் ஊறவைக்காது உடனே கழுவி விடுங்கள்.

குளியலறையில் உள்ள மார்பிள் தரையை சுத்தமாக்க ஒரு கப் வினிகரை ஒரு கப் சுடுநீரில் கலந்து கறைகளின் மீது தடவி, சிறிது நேரம் கழித்து சோப்புக் கரைசலைப் பல்துலக்கும் தூரிகையில் நனைத்து தரையைத் தேய்த்தால் மார்பிள் பளபளக்கும்.

எலக்ட்ரிக் கொஃபி மேக்கர் நீண்ட நாட்கள் ஆனதும், உட்புறம் உப்பு படிந்து விடும். இதனால் அடைப்பு ஏற்பட்டு, டிகாஷன் இறங்குவது தாமதமாகும், இதற்கு வினிகர் சிறிது எடுத்து நீருடன் கலந்து ஊற்றி வழக்கம்போல் ஓன் செய்ய வேண்டும், (கொஃபி பவுடன் போடக்கூடாது) வெந்நீர் மட்டும் டிகாஷன் வருவது போல வரும்.இதுபோல இரண்டு அல்லது மூன்று முறை சுத்தம் செய்தால், பின்பு டிகாஷன் ஸ்பீட் ஆக வரும்.

கண்ணாடிப் பாத்திரங்கள், கண்ணாடி டம்ளர்கள், கார் கண்னாடி இவற்றை வினிகர் கலந்த நீரினால் சுத்தமாகக் கழுவினால் பளபளக்கும்.

பல்செட் வைத்திருப்பவர்கள், அதை இரவில் வினிகர் கலந்த நீரில் போட்டு வைத்தால் வாடை இல்லாமல் இருக்கும்.

டைனிங் டேபிளில் சில சமயம் ஒரு துர்வாடை அடிக்கும். வினிகரை நல்ல மிருதுவான துணி அல்லது பஞ்சு கொண்டு துடைத்தால் வாடை போய் புதுசு போல பளபளக்கும்.

உங்கள் சருமம் உலர்ந்த சருமமாக இருந்தாலோ, அல்லது வெடிப்புள்ள சருமமாக இருந்தாலோ வினிகரை தடவினால் குணமாகும்.

ஷம்பூ போட்டு தலைகுளித்தபின் சிறிதளவு வினிகர் கலந்த நீரினால் அலசினால் முடிபட்டுப் போலாகும்.

வினிகர் கலந்த நீரில் பாதம் மூழ்கும்வரை அரைமணி நேரம் ஊறவைத்து பின்பு நன்றாக கழுவினால், கால்விரல் நகங்களில் உள்ள அழுக்குகள் போய், நகங்கள் சொத்தையாக இருந்தாலும் சில நாட்களில் சரியாகிவிடும்.

அரைகப் வினிகர் எடுத்து, குளிக்கும் நீரில் (Warm Water) கலந்து குளித்தால் சருமம் மிருதுவாகும்.

பொடுகுத் தொல்லை இருந்தால் ஒரு டேபிள் ஸ்பூன் வினிகரை தலையில் தடவி,சில நிமிடங்கள் கழித்து நன்கு அலசிக் குளித்தால் பொடுகு போய்விடும்.

Apple
 Cider Vinegar என்ற வினிகரை எலுமிச்சை ஜூஸ் அல்லது தேனில் விட்டுத் தண்ணீர் கலந்து குடித்துவரை உடல் எடை குறையும்.

ஒரு தே.கரண்டி வெள்ளை வினிகர், 3 தே.கரண்டி பன்னீர் ஆகியவற்றை ஒரு கப் தண்ணீரில் கலக்கவும். மிகச் சிறந்த சமச்சீரான PH சரும டோனர் தயார். முகத்தில் இதைத் த்ளித்துக் கொண்டால், புத்துணர்வைப் பெறலாம். வேக வைத்த உருளைக்கிழங்கு, துளி உப்பு, துளி கிளிசரின், 2 துளி வினிகர் ஆகியவற்றை கலந்து முகத்தில் பூசினால் மாசு மருவற்ற சருமத்தைப் பெறலாம். 


கறைபோக்கும் வினிகர். வெற்றிலைக் கறை துணியில் பட்டால், அந்த இடத்தில் வினிகர் ஊற்றி தேய்த்து கழுவினால் போய்விடும்.

அலுமினிய குக்கரின் உட்புறம் கறுப்பாக இருந்தால் சிறிது வினிகரைப் பூசி 15நிமிடம் வைத்திருக்கவும். பின்னர் சிறிது நீர் ஊற்றிக் கொதிக்க விட்டால் குக்கரின் கறை நீங்கிப் பளிச்சிடும்.

வாஷ்பேஷனில் தண்ணர் உப்பு படிந்து கறையாக இருந்தால் வினிகருடன் சாக்பௌடர் கலந்து பூசி சிறிது நேரம் வைத்திருந்து பின் தேய்த்துக் கழுவவும். 

கொழுப்பைக் குறைக்கும் வினிகர்! வெள்ளரியையும் தக்காளியையும் மெல்லியதாக வட்டவட்டமாக வெட்டிக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தையும் மெல்லியதாக அரிந்து கொள்ளவும். இக் கலவையில் சிறிது உப்பு போடவும். மல்லி இலைகளை மேலே தூவி விடவும். பின்பு சிறிது வினிகரையும் ஒலிவ் எண்ணெயும் கலக்கவும். பின்பு பரிமாறவும். வேண்டுமானால் சிறிது மிளகு சீரக கலவையையும் இத்துடன் சேர்க்கலாம். வினிகர் கலந்து இந்த சாலுட்டின் ருசி அருமையாக இருக்கும்.

வினிகர் சோப்பதால் உடம்பிலுள்ள கொழும்பு குறைக்கிறது. தவிர Anti inflammation வராமல் தடுக்கிறது. எதுவாயினும் அளவோடு சேர்ப்பது நல்லது. எங்கள் வீட்டில் இதை அடிக்கடி சாப்பிட்டு வருகிறோம்.

சுத்தப்படுத்தும் வினிகர்! குழந்தைகளின், ஃபீடிங் போத்தலை தினசரி கழுவும்போது துளி வினிகர் விட்டுக் கழுவினால் சுத்தமாகிவிடும்

பிளாஸ்க்கில், சொட்டு வினிகர் விட்டால் போதும் துர்வாடையற்ற பிளாஸ்க் பயன்படுத்த ரெடி.

ஸ்கூலுக்கம், அலுவலகத்துக்கும் கொடுத்தனுப்பும் டிபன் பாக்ஸ்களையும் இப்படி கழுவலாம்!

ஃப்ரிட்ஜில் காய்கறிகளின் வாடை, பால் வாடை, மாவு வீச்சம் என கவலையாக இருக்கும். எனவே வாரம் ஒரு முறை ஒரு ஸ்பூன் வினிகர் ஒரு மக் தண்ணீரில் ஃபிரிட் துடையுங்கள்.

உல்லன் துணிகள் பளிச்சிட கையால் பின்னிய உல்லன் துணிகளைத் துவைக்கும் போது 2 டேபிள் ஸ்பூன் வினிகரைத் தண்ணிரில் கலந்தால் துணிகள் பளிச் .. பளிச்தான்.

வெள்ளையுனிஃபார்ம் பளிச்சிட.. குழந்தைகளின் வெள்ளைனிஃபார்ம் துணிகளை வாரத்திற்கு ஒருமுறை நீலம் போடுவதற்கு முன் ஒரு பக்கெட் நீரில் இரண்டு ஸ்பூன் வினிகர் கலந்து அதில் துணிகளை முக்கி எடுத்து விட்டுப் பிறகு நீலம் போட்டு அலசுங்கள். துணிகள் தும்பைப் பூவைப் போல் வெண்மையாக இருக்கும்.

ப்ரஷர் குக்கரில் துரு பிடித்து கெட்டியாகி விட்ட ஸ்க்ரூவின் மேல், இரண்டு சொட்டு வினிகர் விட்டு, சற்று நேரம் கழித்துத் திருகினால் சுலபமாலக எடுக்க வரும்.

பித்தளை தட்டு, பாத்திரங்கள் பச்சையாக நிறம் மாறிவிட்டால், வினிகருடன் உப்ப சோத்து, சற்று ஊற வைத்து அழுத்தித் தேய்த்தால் பளிச்தான்.

பூச்சித் தொல்லை வராமல் இருக்க சமையலறையில் உள்ள அலமாரியில் பூச்சிகள் தொல்லை ஏற்படாமலிருக்கு, வினிகர் கலந்த நீரால் துடைக்க வேண்டும் வாரமிருமுறை!

வெண்கரு பிரியாமல் இருக்க …. அவித்த முட்டை தயாரிக்கும் போது முட்டை வேக வைக்கும் தண்ணரீல் சில துளிகள் வினிகர் சோப்பதால் வெண்கரு பிரியாமல் இருக்கும்

பட்டாணி நிறம் மாறமால் இருக்க  பச்சைப்பட்டாணி வேகவைக்கும் போது, அதன் உண்மையான பச்சை நிறம்போகமலிருக்க, நான்கு துளி வினிகர் ஊற்றி வேக வைத்தால் பச்சை நிறத்தை பாதுகாக்கலாம்.

முட்டை நாற்றம் வராமல் இருக்க .. தரையில் முட்டை விழுந்து உடைந்தால் துர்நாற்றம் வீதம் அதைப் போக்க சிட்டிகை அளவு உப்பு, வினிகர் இரண்டும் கலந்து துடைத்துவிட்டால், துரநாற்றம் மறையும்.

மீன் வாடை வராமல் இருக்க  மீன் கழுவும் போது, சிறிதளவு, உப்பு, வினிகர் இரண்டும் சேர்த்து கழுவினால் அந்த மீனின் கெட்ட வாடை நீங்கி விடும். மீனை உடனேயே சமைக்கவில்லை என்றாலும் வினிகர் ஊற்றி நன்றாக மூடி ஃபிரிட்ஜில் வைத்து விட்டால் மீன் இரண்டு நாட்கள் கெடாமலிருக்கும்.

கீரை, காய்கறியை ஃபிரெஷ் ஆக்கணுமா? கீரையோ, காயோ வாடியிருக்கிறதா? அது மூழ்குமளவு நீர் ஊற்றி ஒரு பாத்திரத்தில் வைத்து ஒரு ஸ்பூன் அளவு (அல்லது காய்களின் அளவுக்கேற்ப) வினிகர் ஊற்றி வைத்து விடுங்கள். பதினைந்து நிமிடத்தில் காய், கீரை எதாக இருந்தாலும் சோர்வு நீங்கி மலர்ந்த முகத்தோடு புதியது போல் காட்சி தரும்.

இறைச்சி ஸ்மூத் ஆக இறைச்சி வகைளை சமைக்கும் போது வினிகர் சிறிது கலந்து ஊறவைத்து பின் சமைத்தால் இறைச்சி மெத்தென்று பஞ்சு போல் வேகும்

பனீர் செய்ய.. பனீர் செய்ய எலுமிச்சை சாறு இல்லாவிட்டால் கொதிக்கும் பாலில் கொஞ்சம் வினிகர் சேர்த்துக் கிளறி பனீர் பரிந்ததும் வழக்கம் போல வடிக்கட்டிக் கொள்ளவும்.
வினிகரில் நனைத்துப் பிழிந்த துணியில் சீஸ் கட்டியை சுற்றி ஃபிரிட்ஜில் வைத்தால் ஃப்ரெஷ் ஆக இருக்கும்.

http://pettagum.blogspot.in/2012/11/blog-post_3307.html

--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

இளைஞர்களைக் கண்கானிப்பதில் பெற்றோர்களின்பொறுப்பு.

இளைஞர்களைக் கண்கானிப்பதில் பெற்றோர்களின்பொறுப்பு.

அமீருல் அன்சார் மக்கி

ஒரு சமூகத்தின் முதுகெலும்பாக திகழ்வது இளைஞர் சமூகம்தான். ஒரு சமூகத்தின் வெற்றியும் வீழ்ச்சியும் அவர்கள் கையிலேயே உள்ளது.

ஒரு சமூகத்தில் நல்ல மாற்றம் வருவதற்கு பங்களிப்பு செய்பவர்கள் இளைஞர்களே. இதனால்தான் ஆண்மீகவாதிகள் தொடக்கம் அரசியல் வாதிகள்வரை இவர்களை தவறான அடிப்படையில் வழிநடாத்தி தமது விருப்பங்களையும் எண்ணங்களையும் சமுகத்தில் பிரதிபலிக்கச் செய்கிறார்கள்.

இதனால் இளமைப் பருவத்தை சரியான முறையில் பயன்படுத்துவதென்றால் அந்த சமூதாயத்தில் உள்ள பெற்றோரின் கண்காணிப்பு இன்றியமையாததாகும்.

அல்லாஹ் மனிதனுக்கு வழங்கிய அருட்கொடைகளில் இளமைப் பருவம் மிகமுக்கியமானது. இந்தப்பருவத்தில் அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு அவனது தூதரின் வாழ்க்கையைப் பின்பற்றி நடப்பது என்பது இஸ்லாத்;தில் மகத்தான நன்மையைப் பெற்றுத்தரும் என்பதை ஹதீஸ்களில் காணலாம்.

அர்ஷில் நிழல் பெறும் ஏழு கூட்டத்தினரில் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு வளர்ந்த இளைஞரும் ஒருவர் என நபியவர்கள் அடையாளப் படுத்துவது இந்தப் பருவத்தின் முக்கியத்துவத்தை மேலும் வலியுறுத்துகிறது.

இந்தப் பருவம் எல்லோராலும் மதிக்கப் பட்டு எல்லோரும் வாழ்கையின் யதார்தத்தைப் புரிந்து அடியெடுத்து வைக்கவேண்டிய காலப் பகுதியாகும். இதனால்தான் இஸ்லாம் இதற்க்கு முக்கியத்துவம் அளிக்கிறது.

இளைஞர்கள் தமது மனோ இச்சைக்கு கட்டுப்பட்டு ஷைத்தானிய சக்திகளால்; வழிகெடுக்கப் பட்டு இஸ்லாமிய வழி முறைகளை மீறி செயல்படுகின்றனர்.

இதிலிருந்து இவர்களைப் பாதுகாப்பது பெற்றோரின் பொறுப்பு என்பது மிக முக்கியமானதாகும். பருவமடைந்த வயதிலிருந்து 19வயது வரை "ரீனேஜ்" பராயத்தினர் என அழைக்கின்றனர். ஆனால் இஸ்லாம் இளமைப்பருவம் பற்றிய விடயத்தை அல்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது.

"அவன்தான் உங்களை மண்ணிலிருந்து படைத்தான்; பின் இந்திரியத்திலிருந்தும் பின் அலக் என்னும் நிலையிலிருந்தும் (உருவாக்கி) உங்களைக் குழந்தையாக வெளியாக்குகிறான்; பின் நீங்கள் உங்கள் வாலிபத்தை அடைந்து, பின்னர் முதியோராகுகிறீர்கள்; இதற்கு முன்னர் இறந்து விடுவோரும் உங்களில் இருக்கின்றனர் .

இன்னும் நீங்கள் ஒரு குறிப்பிட்ட தவணையை அடைவீர்கள்; (இதிலிருந்து) நீங்கள் உணர்வு பெறும் பொருட்டு (இதை அறிந்து கொள்ளுங்கள்)" (அல்குர்ஆன் 40:67)

இதில் குழந்தைப் பருவத்திற்க்கும் முதுமைப் பருவத்திற்க்கும் இடைப்பட்ட காலப் பகுதியை இளமைப்பருவமாக இஸ்லாம் கூறுகிறது. என்றாலும் இதில் திருமணத்திற்கு முந்திய காலப் பகுதி மிக முக்கியமான பகுதியாகும்.

இவ்வயது பராயத்தினர் எதிர் கொள்ளும் பல முக்கிய பிரச்சினைகள் உள்ளன. ஆனால் பெற்றோர்கள் இவற்றைப் பற்றி சிந்திக்காது வாழ்கையின் வேறு பல விடயங்களுக்கும் தமது முன்னேற்றத்திற்குமே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். திடீரென தமது பக்குவமற்ற வயதில் உள்ள பிள்ளைகள் ;விடுவிக்கப்பட முடியாத அல்லது இழப்பீடு செய்ய முடியாத சிக்கலில் சிக்கிய பின்னர்தான் திரும்பிப் பார்க்கின்றனர் என்ற விஷயம், தினசரி சந்திக்கும் சம்பவங்கள் அனுபவங்கள் மூலம் அறிய முடிகின்றது.

இதனால் இஸ்லாம் இந்த வயதினர் விடயத்தில் பாரிய பொறுப்பை பெற்றோரிடம் பொறுப்புச்சாட்டுகிறது. அவ்வாறான பொறுப்பை சுருக்கமாக பார்ப்போம்.

01 நல்லமுறையில் உபதேசம் செய்தல் :

பக்குவமற்ற இளம் வயதினர் நல்லது கெட்டது தொடர்பாக சீர்தூக்கி வேறுபடுத்தி தீர்மானங்கள் எடுக்க முடியாத வயதினர்.

இவர்களின் அனுபவமற்ற தன்மையும் அறியாமையும் இவர்கள் தவறுகளில் சிக்குவதற்;க்கும் காரணமாக இருக்கின்றன.

இதனால் இவர்களது நடவடிக்கைகள் மீது பெற்றோர்கள் கண்காணிப்பாக இருப்பதுடன் அவர்களது மனநிலைகளைப் புரிந்து அவர்களுக்கு ஒரு நல்ல ஆலோசகராகவும் அவர்களுடன் நட்பாகவும் அதேநேரம் கட்டுக்கோப்பாகவும் வழிநடாத்த வேண்டும்.

இதனை ஸூரத்து லுக்மானில் லுக்மான் அலை அவர்கள் தனது மகனுக்கு செய்த உபதேசத்தின் மூலம் அல்லாஹ் அழகாக பின்வருமாறு தெளிவுபடுத்துகிறான்.

"இன்னும் லுஃக்மான் தம் புதல்வருக்கு "என் அருமை மகனே! நீ அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே நிச்சயமாக இணை வைத்தல் மிகப் பெரும் அநியாயமாகும்,"" என்று நல்லுபதேசம் செய்து கூறியதை (நினைவுபடுத்துவீராக)". (அல்குர்ஆன் 31:13)

"(லுஃக்மான் தம் புதல்வரிடம்) என் அருமை மகனே! (நன்மையோ, தீமையோ) அது ஒரு கடுகின் வித்து அளவே எடையுள்ளது ஆயினும்; அது கற்பாறைக்குள் இருந்தாலும் அல்லது வானங்களில் இருந்தாலும்,

அல்லது பூமிக்குள்ளே இருந்தாலும் அல்லாஹ் அதையும் (வெளியே) கொண்டு வருவான்; நிச்சயமாக அல்லாஹ் நுண்ணறிவு மிக்கவன்; (ஒவ்வொன்றின் அந்தரங்கத்தையும்) நன்கறிபவன்". (அல்குர்ஆன் 31:16)

"என் அருமை மகனே! நீ தொழுகையை நிலை நாட்டுவாயாக நன்மையை ஏவி, தீமையை விட்டும் (மனிதர்களை) விலக்குவாயாக உனக்கு ஏற்படும் கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்வாயாக நிச்சயமாக இதுவே உறுதியான செயல்களில் உள்ளதாகும்" (அல்குர்ஆன் 31:17)

"(பெருமையோடு) உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையாகவும் நடக்காதே! அகப்பெருமைக்காரர், ஆணவங் கொண்டோர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான்." (அல்குர்ஆன் 31:18)

"உன் நடையில் (மிக வேகமோ, அதிக சாவதானமோ இல்லாமல்) நடுத்தரத்தை மேற்கொள்; உன் குரலையும் தாழ்த்திக் கொள்; குரல்களிலெல்லாம் வெறுக்கத்தக்கது நிச்சயமாக கழுதையின் குரலேயாகும்." (அல்குர்ஆன் 31:19)

நாமும் எமது பிள்ளைகள் விடயத்தில் இது போன்ற நல்ல உபதேசங்களை வழங்க வேண்டும் என்பதற்காகத்தான் இதனை எடுத்துக் கூறுகிறான்.

02 எமது பிள்ளைகள் விடயத்தில் ஆழ்ந்த கண்காணிப்பு அவசியம் பெற்றோர்களாகிய நாம் எமது பிள்ளைகள் விடயத்தில் ஆழ்ந்த கண்காணிப்புடன் செயற்பட வேண்டும்.

ஆனால் பெற்றோர்களில் பலர் பொருளாதாரம், தமதுமுன்னேற்றங்கள், மேலும் தமதுபதவி உயர்வு, உயர்கல்வி, அவற்றில் போட்டிகள், பொருள் தேடுதல், மற்றும் அவர்களின் தனிப்பட்ட நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து முழுமூச்சாக ஓடிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் தமது பிள்ளைகள் கல்வி நடவடிக்கையிலேயே முற்றுமுழுதாக ஈடுபட்டிருக்கின்றார்கள்.

சில சந்தர்ப்பங்களில் பிள்ளைகளுக்கு வீடுகளில் தனிமையே துணையாகின்றது. இவர்களுக்கு தனிமை என்பது மிகவும் ஆபத்தான விடயம் என்பதை எவரும் உணர்வதில்லை. இதனால்தான் நபியவர்கள் கூறுகிறார்கள்.

"நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்புதாரிகள் உங்கள் பொறுப்பைப் பற்றி நாளை மறுமையில் விசாரிக்கப் படுவீர்கள் ஒரு குடும்பத் தலைவன் அந்தக் குடும்பத்தின் மீது பொறுப்புதாரியாவான் " (ஆதாரம புகாரி, முஸ்லிம்;)

எனவே குடும்பத்தில் உள்ள குடும்பத் தலைவன் குறிப்பாக குடும்பம் பற்றிய கண்காணிப்பில் இருக்க வேண்டும் .அதனால்தான் அல்லாஹ் மேலும் ஒரு வசனத்தில் பின்வருமாறு கூறுகிறான்.

முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்; அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும்; அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர், அல்லாஹ் அவர்களை ஏவியதற்கு அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள், தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள் (அல்குர்ஆன் 66:6)



--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com