Tuesday, January 21, 2014

குழந்தைக்கு கொடுக்கும் கொலஸ்ட்ரம் பாலின் நன்மை தெரியுமா?



--
*more articles click*
www.sahabudeen.com


குழந்தைக்கு கொடுக்கும் கொலஸ்ட்ரம் பாலின் நன்மை தெரியுமா?
(நன்றி : ஒன் இந்தியா வலைத்தளம் )

பிறந்த குழந்தை ஆரோக்கியமாகவும், வலுவோடும் இருப்பதற்கு காரணம் தாய்ப்பால் தான். அதிலும் பிரசவம் முடிந்ததும், முதலில் வெளிவரும் தாய்ப்பாலானது மஞ்சள் கலந்த நிறத்தில் இருக்கும். இந்த பாலைத் தான் கொலஸ்ட்ரம் என்று சொல்வார்கள். இந்த பாலானது குழந்தை பிறந்து ஒரு மணிநேரத்திற்குள் வெளிவரும். இந்த நேரத்தில் சிலர் இந்த பாலை குழந்தைக்கு கொடுக்காமல், அப்போது பவுடர் பாலைக் கொடுப்பார்கள் அல்லது சர்க்கரை தண்ணீரை கொடுப்பார்கள். இதற்கு காரணம், அவர்களுக்கு இந்த கொலஸ்ட்ரம் பாலின் நன்மை தெரியாததே ஆகும்.

உண்மையில் இந்த பாலில் தான், சாதாரண தாய்ப்பாலை விட அதிகமான அளவில் சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் இந்த பாலை குழந்தைகள் பருகினால், குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கும். எனவே இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு நல்ல மற்றும் ஆரோக்கியமான உணவு என்னவென்று பார்த்தால், அது கொலஸ்ட்ரம் தான். இப்போது அந்த கொலஸ்ட்ரம் பாலின் நன்மைகளைப் பார்ப்போமா!!!

* கொலஸ்ட்ரம் பாலில் புரோட்டீன்களும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருளும் அதிக அளவில் நிறைந்துள்ளது. இந்த பால் மஞ்சள் நிறத்தில் இருப்பதற்கு காரணம், இதில் அதிகமான அளவில் கரோட்டீன் என்னும் வைட்டமின் ஏ ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது.

* அதுமட்டுமின்றி இந்த பாலில் கரையக்கூடிய வைட்டமின்களும், கனிமச்சத்துக்களும் அடங்கியுள்ளன. மேலும் இது சற்று கெட்டியான நீர்மமாக இருப்பதால், இதனை குழந்தைக்குக் கொடுக்கும் போது, இதுவரை நீரில் ஊறிக் கொண்டிருந்த குழந்தையின் உடலானது வெளியே ஒரு புதிய சுற்றுசூழலுக்கு வருவதால் ஏற்படும் வறட்சியைத் தடுக்கும்.

* கொலஸ்ட்ரம் பாலில் சோடியம், பொட்டாசியம், ஜிங்க் மற்றும் குளோரைடு போன்ற குழந்தையின் முறையான நரம்பு மண்டலம், மூளை மற்றும் இதய வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களும் உள்ளன.

* இந்த பாலை குழந்தைக்கு கொடுக்கும் போது, அவர்களுக்கு உடலில் இருந்து வெளிவரும் முதல் கழிவானது (மலம்) எந்த ஒரு பிரச்சனையுமின்றி எளிதாக வெளிவரும்.

* மேலும் இந்த பாலில் ஆன்டிபாடிகள் அதிகம் உள்ளது. இந்த ஆன்டிபாடிகள் குழந்தையின் இரைப்பையில் எந்த ஒரு பிரச்சனையும் வராமல் தடுக்கும்.

* இந்த பாலின் மற்றொரு சிறப்பு என்னவெனில், இந்த பாலை குழந்தைக்கு கொடுத்தால், அதில் உள்ள சத்தானது, குழந்தையின் வாழ்நாள் முழுவதும் நன்மையைத் தரும்.

* அதுமட்டுமல்லாமல், குழந்தைக்கு மிகவும் சிறிய சிறுநீரகம் என்பதால், அதற்கு போதிய நீர்மத்தை வைத்திருக்கும் சக்தி இல்லாதால், சிறுநீரகமானது ஒருவித அழுத்தத்துடன் இருக்கும். எனவே இதனை குழந்தைகள் குடிக்க, அவர்களின் சிறுநீரகமானது சற்று வலுப்பெறும்.

எனவே இத்தகைய நன்மைகளை உள்ளடக்கிய கொலஸ்ட்ரம் பாலை குழந்தைகளுக்கு கொடுக்க மறக்க வேண்டாம்.

No comments: