இறந்தோரின் பெயரால் செய்யபடும் புதுமைகள் (பித் அத்கள்)
மார்க்க காரியங்களில் ஒரு அமலை செய்தால் அது நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுடைய சொல்,செயல்,அங்கீகாரம் ஏதாவது ஒன்று இருக்க வேண்டும்.அப்படி எதுவுமே இல்லமால் நாமாக ஒன்றை மார்க்கம் என்று செய்தால் அதனுடைய விளைவு நம்மை நரகத்தில் சேர்த்து விடும் என்பது தெளிவான நபிகளாரின் எச்சரிக்கை..
கீழே நாம் தொகுதிருப்பவை அனைத்தும் இஸ்லாத்தாலும்,நபிகள் நாயகம் (ஸல்) அவர்களாலும் கற்று தர படாதவை இவைகள் அனைத்தும் இறந்தோரின் பெயரால் செய்ய படும் புதுமைகள்…….
* மய்யித்துக்கு நகம் வெட்டுதல்; பல் துலக்குதல்; அக்குள் மற்றும் மர்மஸ்தான முடிகளை நீக்குதல்
*மய்யித்தின் பின் துவாரத்திலும் மூக்கிலும் பஞ்சு வைத்து அடைத்தல்
*ஜனாஸாவைக் குளிப்பாட்டும் போது சில திக்ருகளை ஓதுதல்
* குளிப்பாட்டும் போது மய்யித்தின் நெற்றியில் சந்தனத்தாலோ, அல்லது வேறு நறுமணப் பொருட்களாலோ எதையும் எழுதுதல்
* ஜனாஸா எடுத்துச் செல்லும் போது சில திக்ருகளைக் கூறுதல்
* ஜனாஸா தொழுகையில் ஒவ்வொரு தக்பீரின் போதும் கைகளை அவிழ்த்து உயர்த்துதல்
* இறந்தவருக்காக யாஸீன் ஓதுதல்
* இறந்தவருக்காக மூன்றாம் ஃபாத்திஹா, ஏழாம் ஃபாத்திஹா, நாற்பதாம் ஃபாத்திஹா, கத்தம், வருட ஃபாத்திஹாக்கள் ஓதுதல்
* இறந்தவருக்காக ஹல்கா, திக்ருகள், ராத்திபுகள் நடத்துதல்
* இறந்தவர் வீட்டில் விருந்து அளித்தல்
* கப்ரின் மேல் எழுதுதல்; கல்வெட்டு வைத்தல்
* கப்ருகளைக் கட்டுதல்; கப்ருகளைப் பூசுதல்
* கப்ருக்கு அருகே நின்று தல்கீன் ஓதுதல்
* ஆண்டு முழுவதும் சோகம் அனுஷ்டித்தல்
* உடலுக்கு அருகில் விளக்கேற்றி வைத்தல்
* உடலுக்கு அருகில் ரொட்டி போன்ற உணவுகளை வைத்தல்
* இறந்தவர் வருவார் என்ற நம்பிக்கையில் வீட்டின் வாசலில் விடிய விடிய விளக்கு போடுதல்
* அடக்கம் செய்து முடிக்கும் வரை இறந்தவரின் குடும்பத்தார் சாப்பிடாமல் இருத்தல்
*இறந்தவரின் வீட்டிலிருந்து மாதவிடாய் மற்றும் குளிப்புக் கடமையானவரை வெளியேற்றுதல்
*பூக்களை தூவி ஜனாஸாவை எடுத்து செல்லுதல்
* உடலுடன் உணவுப் பொருள் கொண்டு சென்று கப்ரில் வினியோகம் செய்தல்
* கப்ரில் பன்னீர் தெளித்தல்,பூ மாலைகளை போடுதல்
* அடக்கம் செய்து விட்டு, இறந்தவரின் வீடு வரை வந்து விட்டுச் செல்லுதல்; அங்கு முஸாஃபஹா செய்தல்,வரிசையில் நின்று ஸலாம் கொடுத்தல்
* இறந்தவர் விரும்பிச் சாப்பிட்டதை தர்மம் செய்தல்
* இறந்தவருக்காகக் குர்ஆன் ஓதுதல்
* அடக்கம் செய்த மறுநாள் காலையில் கப்ரைப் போய் பார்த்தல்
* வெள்ளிக்கிழமை தோறும் பெற்றோர் கப்ரை ஸியாரத் செய்தல்
* ஷஃபான் 15 அன்று கப்ருக்குச் செல்லுதல்
* ஷஃபான் 15 அன்று இறந்தவர் பெயரால் உணவு சமைத்தல் பாத்திஹாக்கள் ஓதுதல்
* ஷஃபான் 15ல் அடக்கத்தலத்தை அலங்காரம் செய்தல்,இனிப்பு பதார்த்தங்களை வழங்குதல்
* இரண்டு பெருநாட்களிலும் கப்ருகளுக்குச் செல்லுதல்
* திரும்பும் போது கப்ருக்கு முதுகைக் காட்டாமல் திரும்புதல்
இது போன்ற செயல்கள் அனைத்தும் பித்அத்களாகும். இவை அனைத்தும் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும்.
அல்லாஹ்வும், அவனது தூதரும் சொல்லித் தராததைச் செய்தால் அது நன்மையின் வடிவத்தில் இருந்தாலும் அதன் விளைவு நரகமாகும்.
பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட போலிச் சடங்குகளை விட்டொழித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்தவற்றை மட்டும் செய்து நன்மைகளை அடைவோம்.
பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட போலிச் சடங்குகளை விட்டொழித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்தவற்றை மட்டும் செய்து நன்மைகளை அடைவோம்.
நேர் வழி காட்ட அல்லாஹ் போதுமானவன்..
http://kulasaisulthan.wordpress.com--
No comments:
Post a Comment