தொப்பையை குறைக்க எளிதான எட்டு வழிகள்…! |
--
தொப்பையை குறைக்க எளிதான எட்டு வழிகள்…! |
HOW TO USE USSD CODES ?
--->> To Use This Codes, First Type This Codes And Then Press CALL Green Button.
Aircel USSD Codes -
Aircel Customer Care Number - 121 or 123
Your Aircel Number - dial *131# or *1#
Balance Check - *125# or BAL to 121
Local Mobile Calls Balance - *111*4#
Internet Setting - PI to 121 or ALL to 121
Check GPRS Balance - *126*4# or *126*1# or *301#
3G Activation - START 3G to 121
Switch Off - *21*904#
DND Service - DND to 1909
Rate Cutter - 1215 or *122#
e-Recharge - *124*(your aircel number)#
Value Added Service - 1214
IMIS no - *222# or *2# or *214#
Aircel free 3G Service - *122*5*1# or *122*456# ( 6 am to 9 am IST till 15th May)
Aircel Free Hellotune - UL to 5800000 ( not confimed )
Free Sms Message Center No - +919808932698 or +91905063222 or +919050563221
Balance Transfer - *122*666#
Airtel USSD Codes -
Airtel Customer Care Number - 121
Airtel Voucher :- *101*your voucher card no#
Know your mobile number - *282#, *121*9# , *140*1600#, *400*2*1*1*0#*121*9# , *121*11# for 3G, *121*11# for 3G &, Just send a blank sms to 59103.
Airtel Complaint no - 198
DND Service - dial 1909 ( Activation or Deactivation )
Balance Check - *123#
Mobile Office Activate or Deactivation - *567#
Airtel Gift Service - *141#
To check Airtel 2G data balance :- Dial *123*10#
To check Airtel 3G data balance :- Dial *123*11#
Twitter Service - *515#
Facebook service - *325#
Daily pack 2G internet - *555*2#
Recharge - dial 123
Airtel live Setting - LIVE to 52567
Gprs Packs - MRP GPRS to 51619
Mobile Portability - PORT to 1909
3G Activation - 3G to 121
Airtel Callertune Trick - 543211888
Balance Transfer - *141# and Choose Options.
Receive Airtel Live Settings :- SMS LIVE to 52567receive Airtel Live Settings :- SMS LIVE to 52567
To Stop any services - SMS STOP to 121/1210
To Start any services - SMS START to 121/1210
Reliance USSD Codes -
To know Mobile Number : *1#
To Check balance or validity period : *367# ,*333*1*1*1#, *306# &, *702#
Special Packs :- *777#
Caller Tunes – *999#
Packs :- *123# , *321#
Latest Balance information :- *333*1*2*1#
VAS balance :- *333*1*4*1#
Activate Caller Tune :- *333*3*1*1#
Deactivate caller tune :- *333*3*1*2#
Local Call balance :- *367*2#
common access no. or admin menu :- *369
GPRS data balance :- *367*3#
GPRS data balance for check type :- "MBAL" and send to "55333" ( don't put -- " " )
Reliance customer care :- *333 , *369
Activate Miss Call alert :- *333*3*2*1#
Deactivate Miss call alert :- *333*3*2*2#
For GPRS setting :- "ALL" to "55100"
Reliance Voucher :- *368# or *305*14 digit pin# and call info 58401
Free Internet :- *123*099#
Bsnl USSD Codes -
To know your Mobile Number - Dial 164 and call or *8888#
Balance and validity details - *123#
GPRS data balance check - *123*10#
SMS local - *123*1#
National sms - *123*2#
Network call - *123*5#
Local network call - *123*6# (data bal check for UP)
Night GPRS pack - *123*8#
Video call bal - *123*9#
Customer care Eastern region - 9400024365
FnF Numbers Enquiry - Dial *124#
SMS Balance Enquiry - Dial *125#
Voice Packs Info - (RC200) : *126#
Last Call Charge Details - *102#
Data Balance Enquiry - *234#
Vodafone USSD Codes -
Vodafone Customer Care Number - 111 or 198 (Complaint No)
Main Balance Check - *141#
Gprs Balance Check - *141*9# or *111*6#
Know 3G data card balance :- *111*5*2#
Your Vodafone Number - *121*0# or *555# or *8888# or Dial 164 or *111*2#
SMS Balance - *142#
Call Balance Check - *145#
3G Activation - Prepaid-> ACT 3G to 144, Postpaid-> ACT 3G to 111
Gprs balance data balance :- GPRS to 144
Night GPRS balance :- *123*8#
20 MB 3G plan :- *444*8# (for old plan)
GPRS PACKS-->
1 day GPRS pack - *121*05#
3 days GPRS pack - *121*14#
7 days GPRS pack - *121*25#
15 days GPRS pack - *121*49#
1 month GPRS pack - *121*98#
3G GPRS Packs -->
5GB 1 month 3G - *121*851#
8GB 1 month 3G - *121*1251#
DND Service - dial 1909 then choose option Activation or Deactivation
Rate Cutter - *121*10# and 10 paise per min activated on your mobile.
Hellotune Trick - dial 5525 or 54206090 and select song Activated in your mobile.
Balance Transfer - *131*<Amount><Receiver No>#
Idea USSD Codes -
Idea Customer Care Number - 12345 or 198 (complaint no)
Balance Checker - *123# or *130# or *212#
3G Activation - ACT 3G to 12345
Activated Service For idea Live Tv - 3GTV To 54777
Activated Service For idea GPRS - FRESH To 4666
Deactivated Service For idea Cricket - UNSUB ONDCKTPOR To 55456
Idea Service Number - *147#
Idea GPRS Setting - SET to 54671
Hunny Bunny Hellotune - HB to 56789
Your Idea Number - *100#
Check Mobile Number :- *789# or *100# ( For Karnataka )
SMS Balance - *161*1# or *451#
DND Service - START 0 to 1909 or Call 1909
Balance Transfer - *567*<receiver no><space><Amount>#
Transfer Limit - 10 to 50 Rs.
DoCoMo USSD Codes -
Know Your Mobile Number - *1#
Balance - *111# or call 12525
Internet Balance - *111*1#
Customer Care 121 or 198
1909 or sms START DND to 1909
Recharge - *135*2<Recharge pin>#
Activating daily/weekly/new services/Internet Packs - *141#
More Info - *191# (last 3 recharges , VAS, etc….)
To Activate 3G - ACT3G to 53333
வேலை.நெட் |
Posted: 23 Jul 2014 04:58 PM PDT |
Posted: 23 Jul 2014 04:09 PM PDT |
Posted: 23 Jul 2014 11:40 AM PDT |
Posted: 23 Jul 2014 11:40 AM PDT |
Posted: 23 Jul 2014 11:40 AM PDT |
IBM நிறுவனத்தில் HR Partner பணிக்கு MBA பட்டதாரிகள் தேவை – Chennai – July 2014 Posted: 23 Jul 2014 11:40 AM PDT |
Posted: 23 Jul 2014 11:40 AM PDT |
You are subscribed to email updates from வேலை.நெட் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |
சமீபத்தில் அரசாங்கத்தால் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 25 பைசா நாணயம் உங்களிடம் கிடைத்தால் இனி தூக்கி எறிந்துவிடாதீர்கள். காரணம், அதன் மதிப்பு இன்றைக்கு 30 ரூபாய் என்கிறார்கள். 25 காசுக்கே இவ்வளவு மதிப்பு என்றால், பழங்கால நாணயத்திற்கு இன்னும் எவ்வளவு மதிப்பு இருக்கும்! உங்களிடம் பழங்கால நாணயங்கள் இருந்தால், அதை வைத்தே நீங்கள் பல ஆயிரம் ரூபாயைச் சம்பாதிக்கலாம். எப்படி என மெட்ராஸ் காயின் சொஸைட்டியின் நிறுவனர் டி.ஹெச்.ராவிடம் கேட்டோம்.
நாணயச் சங்கம்!
"மெட்ராஸ் காயின் சொஸைட்டி, நாணயம் சேகரிப்பாளர்களின் ஆர்வத்தை ஊக்கப்படுத்துவதற்காக 1991 முதலே செயல்பட்டு வருகிறது. இங்கு வரும் ஆர்வலர்களுக்கும், வியாபாரிகளுக்கும் நாணயம் சேகரிப்பு முறைகள், அதுகுறித்த சந்தேகங்கள் நிவர்த்தி செய்யப்படுகின்றன. பெரும்பாலானவர்கள் நாணயங்களைச் சேகரித்து வருகிறார்கள். ஆனால், எப்படி சேகரிக்க வேண்டும் என்ற விஷயம் அவர்களுக்குத் தெரியவில்லை. பழங்காலத்து நாணயங்களை சிலர் தகர டப்பாக்களில் போட்டு வைத்து வருகிறார்கள். இதனால் நாணயங்கள் நாளடைவில் துரு பிடித்துவிடும். சேகரிக்கப்படும் நாணயங்களை பிளாஸ்டிக் டப்பாக்களில் போட்டு வைக்கலாம். அதைவிட கடையில் விற்கப்படும் காயின் ஆல்பங்களை வாங்கி அதில் நாணயங்களைப் போட்டு வைக்கலாம். ஆல்பத்தில் நாணயங்களைப் போடும்முன், வெதுவெதுப்பான நீரில் நாணயங்களைக் கழுவி எடுத்து பருத்தி துணியால் துடைத்து வெயிலில் சிறிது நேரம் காயவைத்து அதன்பிறகே ஆல்பத்தில் போடலாம்.
விற்பனையும், விலை நிர்ணயமும்!
மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள அஸ்விதா கேலரியில் நாணயம் சேகரிப்பாளர்கள், வியாபாரிகள் கூடுவார்கள். அங்கு அவர்களுக்கு இருக்கும் சந்தேகத்தை மெட்ராஸ் காயின் சொஸைட்டியில் உள்ள மூத்த நாணயம் சேகரிப்பாளர்கள் நிவர்த்தி செய்வார்கள். பின்னர் வியாபாரிகளுக்கும், சேகரிப்பாளர்களுக்கும் இடையில் இருக்கும் நாணயங்கள் வாங்குவது, விற்பது போன்ற விஷயங்கள் நடக்கும்.
நாணயம் விற்பவர்கள் நிர்ணயிக்கும் விலையானது வாங்கும் ஆர்வலர்களுக்கு உடன்பாடாக இல்லை என்று அவர்கள் எங்களை நாடினால், அதற்கான விலையை நிர்ணயிக்க நாங்கள் உதவுவோம். 1 அணா, 10 பைசா, 20 பைசா, குறிப்பிட்ட தலைவர்களின் உருவம் பதிக்கப்பட்ட நாணயம் மற்றும் வெளிநாட்டு அரிய நாணயங்கள் போன்றவற்றுக்கு சந்தையில் தனியாக விலை மதிப்பிடப்படுகிறது. இந்த விலை டிமாண்ட் பொறுத்து மாறும். இந்தியா மற்றும் உலக நாடுகளில் உள்ள நாணயங்களின் விவரங்கள் அடங்கிய புத்தகங்கள் கடைகளில் கிடைக்கும். இந்தப் புத்தகத்தை வாங்கி நாணயம் குறித்த விவரங்களைத் தெரிந்துகொள்வது நல்லது" என்றார் டி.ஹெச்.ராவ்.
போலி நாணயங்கள் உஷார்!
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள கடை ஒன்றில், 'இங்குப் பழங்கால நாணயங்கள் விலைக்கு வாங்கப்படும்' என்ற அறிவிப்பைப் பார்த்ததும் அதற்குள் நுழைந்து விசாரித்தோம். அந்தக் கடையின் ஊழியர் ஒருவர், "வாடிக்கையாளரிடமிருந்து பழங்கால நாணயங்களைப் பெற்றுக்கொண்டு அந்த நாணயங்களின் தரத்திற்கேற்ப விலை தருகிறோம். இந்த நாணயங்களை நாங்கள் ஒன்று சேர்த்து ஆல்பம் செய்து சந்தையில் விற்றுவிடுவோம். இந்த ஆல்பங்கள் தலைவர்களின் உருவங்கள் மற்றும் பல உருவங்கள் அச்சிடப்பட்ட தொகுப்புகளாகவும், அது தயாரிக்கப்பட்ட காலம் சார்ந்தும் இருக்கும்.
வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்படும் நாணயங்கள் நூறு முதல் நூற்றைம்பது ஆண்டுகளுக்குள் வெளியிடப்பட்டவையாக இருந்தால், அவற்றின் நிலைக்கேற்ப 200 ரூபாய் முதல் 1,500 ரூபாய்வரை தருவோம். மன்னர் காலத்து நாணயங்கள், மேலும் சில அரிய வகை நாணயங்கள் லட்சம் ரூபாய் வரை விலை போகக்கூடியவை.
இதைச் சாக்காக வைத்து சிலர் போலியான நாணயங்கள், போலியாக அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளையும் காட்டி மக்களை ஏமாற்றி சந்தையில் விற்கின்றனர். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் முகம் நேராக இருப்பது போன்ற நாணயம் அரசால் அச்சிடப்படவேயில்லை. ஆனால், அப்படி ஒரு நாணயம் இருப்பதாகவும் அதன் விலை 20,000 ரூபாய் என்றும் சிலர் ஏமாற்றி வருகின்றனர். அதேபோல் பழைய நூறு ரூபாய் நோட்டில், உலக உருண்டையில் பாம்புகள் சுற்றி பின்னிக் கொண்டிருப்பதுபோல போலி நோட்டுகளை அச்சிட்டு லட்சக்கணக்கில் சந்தையில் விற்கின்றனர். மக்கள் இதை நம்பி ஏமாற வேண்டாம். இந்தியன் காயின் சொஸைட்டி என்ற அமைப்பு சார்பாக வெளியிடப்பட்டுள்ள புத்தகத்தில் பழங்காலத்திலிருந்து தற்போதுள்ள நாணயங்கள் வரை இந்தியாவில் கிடைக்கும் அனைத்து நாணயங்களின் எடை, அளவு, நிறம், செய்யப்பட்ட உலோகம், காலம் போன்ற குறிப்புகள் தரப்பட்டிருக்கும். அந்தத் தகவல்களைப் பார்த்து, வாங்கும் நாணயம் உண்மையானதுதானா எனத் தெரிந்துகொள்ளலாம்" என்றார்.
கவனிக்க!
பழங்கால நாணயங்களை வாங்கும்போது பின்வரும் விஷயங்களைக் கவனிப்பது நல்லது.
* போலியான நாணயங்கள் பாலிஷ் செய்யப்பட்டிருக்கும், எடையில் மாறுதல்கள், வடிவம் மற்றும் தர வேறுபாடுகள் இருக்குமானால் அவை போலியானவை.
* எந்தெந்த கடைகள் உண்மையானவை என்று ஆராய்ந்தபின் நாணயங்கள் வாங்க வேண்டும்.
* அரசு அருங்காட்சியகங்களில் குறிப்பிட்ட நாட்களில் பழங்கால நாணயங்கள் விற்பனைக்கு வைக்கப்படும். அதற்கான அறிவிப்புகள் செய்தித்தாள்களில் வெளியிடப்படும். அங்கு சென்று பணம் செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம். சிலர் தாங்கள் சேகரித்துவைத்திருக்கும் நாணயங்களை விற்க முன்வருவார்கள். அவர்களிடமும் பெறலாம்.
இது ஓர் அறிவு சேகரிப்பு!
"என் பத்தாவது வயதில் இருந்தே பழைய ஒரு பைசாவை சேகரிக்கத் தொடங்கினேன். இன்னும் நாணயம் சேகரிக்கும் ஆர்வம் எனக்கு குறையவில்லை" என்கிறார் சதீஷ்குமார். சென்னை தாகூர் பொறியியல் கல்லூரியில் மின்சார்பு மற்றும் மின்னணுவியல் துறையில் படித்துவரும் இவர், ராஜராஜசோழன் காலத்திலிருந்த பழங்கால நாணயங்கள் முதல் தற்போதுள்ள பத்து ரூபாய் நாணயம் வரை ஆண்டுகள், அடையாளங்கள், சுதந்திரத்திற்கு முன், பின் என ஏராளமான நாணயங்களை ஆல்பங்களில் சேகரித்து வைத்திருக்கிறார்.
பிளாட்ஃபாரத்தில் பழங்கால நாணயம்!
பழங்காலத்து நாணயங்கள், ஆங்கிலேயர் காலத்தில் வெளியிடப் பட்ட ரூபாய் நோட்டுகள் என பல அரிய பொக்கிஷங்களை மதுரை அமெரிக்கன் கல்லூரி எதிரில் முருகன் என்பவர் பிளாட்ஃபார கடையாக வைத்து விற்பனை செய்து வருகிறார். இந்தத் தொழில் மூலம் மாதம் சுமார் 10,000 ரூபாய் வரை வருமானம் சம்பாதிக்கிறார்.
"பழசுக்கு மவுசு என்றுமே குறையாது. என் சிறு வயது முதலே சேகரித்த நாணயங்களையும், விலை தந்து வாங்கிய நாணயங்களையும் வைத்து இந்தத் தொழிலை செய்து வருகிறேன். இந்தத் தொழிலுக்கு வந்த ஆரம்பத்தில் மதுரை நாணய சேகரிப்பாளர் சங்கத்தில் என்னை இணைத்துக்கொண்டேன். அங்கே என்னைப் போல நாணயங்களைச் சேகரிப்பவர்கள் நண்பர்களானார்கள். அவர்களே என்னை இந்தத் தொழில் தொடங்க ஊக்கமளித்தனர். பின்னர் என்னால் இயன்றவரை இதில் முதலீடு செய்தேன். சிலரிடம் இதுபோல பழைய காலத்து நாணயங்கள் இருக்கும். ஆனால், அதன் மதிப்பு தெரியாது. இதுபோன்றவர்களை தேடிப் பிடித்து அவர்களிடம் உள்ள நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுக்களை வாங்கினேன். அவற்றை வைத்து பிளாட்ஃபார கடையாக வைத்திருக்கிறேன். இந்தத் தொழிலில் நான் செய்திருக்கும் முதலீடு 40,000 ரூபாய்தான். ஆனால், எனக்கு இதிலிருந்து மாதம் சுமார் 10,000 ரூபாய் வருமானம் வருகிறது" என்றார் பெருமையாக.
அறிவுக்கு விருந்தாகவும், நிலையான வருமானத்தையும் தரும் இந்த நாணயம் சேகரிப்பை இனி நீங்கள்கூட செய்யலாமே!
- செ.கார்த்திகேயன்,
http://kulasaisulthan.wordpress.com
எந்த சோப் வாங்குவது, என்ன பேஸ்ட் வாங்குவது என்பது உள்ளிட்ட பல கேள்விகள் வாடிக்கையாளர்களுக்கு இருக்கும். . இந்த அத்தனை கேள்விகளுக்குமான எளிய பதில்தான் பிராண்ட். எளிய வழி என்று சொல்லுவதை விட குறுக்குவழி என்று சொல்லலாம். இந்த பொருளுக்கு இந்த பிராண்ட என்று மக்கள் மனதில் பதிய செய்துவிட்டால் போதும், அதன்பிறகு விற்பனையை மக்கள் பார்த்துக்கொள்ளுவார்கள். ஆனால் இதை மக்கள் மனதில் பொசிஷன் செய்யவேண்டும். அது ஒன்று அவ்வளவு எளிமையான காரியம் கிடையாது. அதே சமயத்தில் முடியாத காரியமும் கிடையாது.
மக்கள் மனதில் ஒரு பொருள் பதிய வேண்டும் என்றால் அந்த பொருள் மீது நம்பிக்கை இருக்க வேண்டும். இந்த நம்பிக்கை, ஒரு பொருள் வாடிக்கையாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் போது கிடைக்கும்.
தவிர, ஒரு பொருள் தொடர்ந்து நிலையான தரத்திலே பொருளைத் தயாரிக்க வேண்டும்.
இது முதல் படிதானே தவிர இது இறுதிநிலை கிடையாது. ஏனென்றால் உங்களை மாதிரியே நிறைய நிறுவனங்கள் தரமான பொருளைத் தயாரிப்பார்கள் இருக்கிறார்கள்.
முதல் முதலில் சந்தைக்கு வரும் போது, மற்ற நிறுவனங்களில் இல்லாத புதுமை உங்கள் தயாரிப்புகளில் இருக்க வேண்டும். உங்கள் தயாரிப்புகளில் புதுமை இருக்கலாம். ஆனால் சந்தையில் இருக்கும் போட்டி நிறுவனம், இதே போல பொருளை தயாரிப்பு எவ்வளவு நாள் ஆகப்போகிறது? அதனால் உங்களை தயாரிப்புகளை ஒரு பிராண்ட் ஆக்குங்கள். உங்கள் பொருள் பற்றிய மதிப்பீடுகளை சந்தையில் உருவாக்குங்கள். இதற்கு பொசிஷனிங் என்று சொல்லுவார்கள்.
சந்தையில் நிறைய ஷூக்கள் இருக்கிறது. ஆனால் விளையாட்டு வீரர்களுக்கான ஷு என்றால் அது அடிடாஸ் என்று ஆகிவிட்டது. அடிடாஸ் போட்டு விளையாடும் போதும் எதுவும் சாத்தியம் என்ற நிலையை உருவாக்கி இருக்கிறது இந்த நிறுவனம்.
மேலும் விளையாட்டு வீரர்களுக்கு என்ன தேவை என்பதை சரியாக பேசி, அவர்களுக்கு தேவையானதை உருவாக்குகிறது இந்த நிறுவனம். தேவையானதை மட்டுமல்லாமல் தரத்திலும் உறுதியாக இருக்கிறது. ஆனால் இத்தோடு இந்த நிறுவனம் நிறுத்திக்கொள்வதில்லை. நிறைய விளம்பரங்கள், வீரர்கள் மற்றும் நிகழ்ச்சிக்கு ஸ்பான்ஸர்ஷிப் வழங்குவது உள்ளிட்ட வேலைளையும் இந்த நிறுவனம் செய்கிறது.
மேலும் வெற்றியடைந்த வீரர்களை இந்த நிறுவனத்துக்காக பேசவைப்பது, 'Nothing is impossible' என்ற வார்த்தையை வீரர்கள் மனதில் விதைக்கிறது. இப்போதுஅடிடாஸ் என்றாலே நத்திங் இஸ் இம்பாஸிபிள் என்றாகிவிட்டது.
1950களில் ஆரம்பிக்கப்பட்டது ரேமண்ட் நிறுவனம். ஆண்களுக்கான பிராண்ட் இது. இதன் துணிகள் மிகவும் தரமாக இருக்கும். இதன் விலையும் கூட மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது கொஞ்சம் அதிகமே. தரம் நன்றாக இருந்தாலும் விலை அதிகமாக இருப்பது என்றைக்குமே ரிஸ்க்தான். அதனால் தரமான துணிகளையும்
தாண்டி அடுத்த கட்டமாக ஒரு வேலையை செய்தது ரேமண்ட். இதை பயன்படுத்துவர்கள் மீது ஒரு இமேஜை உருவாக்கிறது. . Raymond's – 'The Complete Man' இந்த வாக்கியம் மிக பிரபலம். இந்த துணியை பயன்படுத்துபவர்கள் ஒரு முழுமையான ஆண் என்று சொல்லி விளம்பரபடுத்தியது.
அதாவது நல்ல அப்பா, நல்ல மகன், நல்ல கணவன் என்று சொல்லி விளம்பரபடுத்தியது.
இந்த ஸ்லோகனை விளம்பரப்படுத்தி பல வருடங்கள் ஆகியும், ஆண்களுக்கான ஆடையில் இந்த நிறுவனம் இன்னும் முன்னணியில் இருக்கிறது.
இது போல இன்னும் பல உதாரணங்களை நாம் சொல்ல முடியும். விஷயம் இதுதான். ஒரு தரமான பொருளை தயாரிப்பதை விட முக்கியம், அதை சரியான வாடிக்கையாளர்களுக்கு கொண்டு செல்வதும் அதை பிராண்ட் ஆக்குவதும்.
சந்தையில் இருக்கும் பல பொருட்களில், மற்றவற்றைத் தவிர்த்துவிட்டு, உங்களை பொருட்களை வாங்கவேண்டும் என்றால் நம்பிக்கை, பிராண்ட், பொஷுசன் இவை முக்கியம் என்று உங்களுக்கு சொல்லத்தேவை இல்லை என்றே நினைக்கிறேன். ஆர். கே. செந்தில்வேல்குமார் – தொடர்புக்கு krsvk@jsb.ac.in
http://kulasaisulthan.wordpress.com
அநேகமாக அனைத்து கம்ப்யூட்டர்களுமே, மவுஸ் தரக்கூடிய அனைத்து வசதிகளையும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு கிடைக்கின்றன. நாம், இந்த வசதிகளை முழுமையாக அறியாமல், சில செயல்பாடுகளுக்கே பயன்படுத்துகிறோம். இங்கு மவுஸ் பயன்படுத்தி, நாம் ஒரு கம்ப்யூட்டரில் மேற்கொள்ளக் கூடிய அனைத்து செயல்பாடுகளையும் பார்க்கலாம். இதன் மூலம் நாம் நம்முடைய வேலைப் பயன்களைப் பல மடங்காக்கலாம்.
ஷிப்ட் கீ + மவுஸ் கிளிக்:
அனைத்து டெக்ஸ்ட் எடிட்டர்கள் மற்றும் புரோகிராம்கள், அனைத்து டெக்ஸ்ட் அல்லது குறிப்பிட்ட டெக்ஸ்ட் பகுதியினை ஷிப்ட் கீ மற்றும் மவுஸ் இணைத்துப் பயன்படுத்தி ஹைலைட் செய்வதனை அனுமதிக்கின்றன. எடுத்துக் காட்டாக, டெக்ஸ்ட் ஒன்றின் பாரா தொடக்கத்தில், கர்சரைக் கொண்டு சென்று, ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு, பாராவின் இறுதி நிலையில், கிளிக் செய்தால், பாரா முழுவதும் ஹை லைட் செய்யப்படும்.
இதில் இன்னொரு வழியும் உள்ளது. டெக்ஸ்ட் எடிட்டர் ஒன்றில், ஆல்ட் கீயை அழுத்திக் கொண்டு மவுஸை இழுத்தால், டெக்ஸ்ட்டின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் தேர்ந்தெடுக்கலாம். உங்கள் டெக்ஸ்ட்டின் பாரா, நெட்டு பத்தியாக இருந்தால், இந்த கீ செயல்பாடு பயன் தரும்.
ஸ்குரோல் வீலின் பயன்கள்:
நாம் எல்லாரும், மவுஸ் வீலைப் பயன்படுத்தி, டெக்ஸ்ட் பக்கம் ஒன்றில், மேலும் கீழுமாகப் போகும் வழியினைத் தெரிந்து வைத்திருப்போம். மவுஸ் வீலைக் கொண்டு மேலும் சில செயல்பாடுகளை மேற்கொள்ளலாம்.
மவுஸ் வீல், வீல் மட்டுமல்ல. அது ஒரு பட்டனாகவும் செயல்படும். இதனை அழுத்தினால், மவுஸின் மூன்றாவது பட்டனாகச் செயல்படும். இதன் மூலம் ஒரு டேப் அல்லது லிங்க்கில் கிளிக் செய்து, இணையதளப் பக்கம் ஒன்றைத் திறக்கலாம். திறந்திருக்கும் டேப் மீது வீலை அழுத்தினால், அந்த இணையப் பக்கம் மூடப்படும்.
பிரவுசர் ஒன்றில், மேலும் கீழுமாகச் செல்கையில், ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு செயல்பட்டால், இணையப் பக்கங்கள் ஊடாக, இன்னும் சற்று வேகமாகச் செல்ல முடியும். கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு, மவுஸ் வீலை மேலாக ஸ்குரோல் செய்தால், பக்கமானது ஸூம் செய்யப்படும். கீழாக ஸ்குரோல் செய்தால், பக்கம் ஸூம் அவுட் செய்யப்படும்.
இணையத்தில் உலா வருகையில், ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு ஸ்குரோல் செய்தால், முன்னும் பின்னுமாகச் செல்ல முடியும். பின்னால் ஸ்குரோல் செய்தால், இணையப் பக்கங்கள் கீழாகவும். முன்னால் ஸ்குரோல் செய்தால், இணையப் பக்கங்கள் மேலாகவும் செல்லலாம். சில மவுஸ் வீல்களை இடது அல்லது வலதாக அழுத்திச் சென்று, இணையப் பக்கத்தின் முன், பின்னாகச் செல்லலாம்.
டபுள், ட்ரிபிள் கிளிக்:
சொல் ஒன்றைத் தேர்ந்தெடுக்க, அதன் மீது கர்சரைக் கொண்டு சென்று, இரண்டு முறை கிளிக் செய்திட வேண்டும். பாரா முழுவதையும் தேர்ந்தெடுக்க, பாராவில் எந்த இடத்திலும் கர்சரைக் கொண்டு சென்று வைத்து, மூன்று முறை கிளிக் செய்தால் போதும். டபுள் கிளிக் செய்தபடி, மவுஸை அப்படியே இழுத்துக் கொண்டு சென்றால், செல்லும் வழியில் உள்ள டெக்ஸ்ட் அனைத்தும் தேர்ந்தெடுக்கப்படும்.
ரைட் கிளிக் பயன்பாடு:
டெக்ஸ்ட் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, பின்னர் அதனை உங்கள் விருப்பப்படி கையாள, ரைட் கிளிக் செய்திடலாம். மேலும், ஏதேனும் ஆப்ஜெக்ட் ஒன்றின் பண்புகள் அறியவும், அதன் மீது ரைட் கிளிக் செய்திடலாம். கிடைக்கும் மெனுவில் இதற்கான ஆப்ஷன் கிடைக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட் மீது ரைட் கிளிக் செய்த பின்னர், காப்பி செய்து, பின்னர் வேறு ஒரு இடத்தில் ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனு மூலம் பேஸ்ட் செய்திடலாம்.
பைல் அல்லது டெக்ஸ்ட் மீது ரைட் கிளிக் செய்து மவுஸின் ரைட் பட்டனை அழுத்தியவாறு, குறிப்பிட்ட இடத்திற்கு இழுத்துச் சென்று விடலாம். அங்கு, அதனை காப்பி செய்திடவா, நகர்த்திடவா என்ற ஆப்ஷன் கேட்கப்படும். நாம் தேர்ந்தெடுப்பதற்கேற்ப, செயல்பாடு மேற்கொள்ளப்படும். பிரவுசர் ஒன்றில், ஏதேனும் லிங்க் ஒன்றில், கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு, கிளிக் செய்தால், அந்த லிங்க் காட்டும் இணைய தளம் திறக்கப்படும்.
கண்ட்ரோல் கீ + மவுஸ் கிளிக் /ஹைலைட்டிங்:
கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டிருக்கையில், இடது பட்டன் கிளிக் செய்து, நாம் டெக்ஸ்ட் அல்லது ஆப்ஜெக்ட்களைத் தேர்ந்தெடுக்கலாம். தொடர்ச்சியாக இல்லாமல் உள்ள டெக்ஸ்ட் மற்றும் ஆப்ஜெக்ட்களைத் தேர்ந்தெடுக்க கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு, மவுஸின் இடது பட்டனை அழுத்தலாம்.
மவுஸ் பக்கவாட்டு பட்டன்கள்:
புதியதாக வரும் மவுஸ்களில் பக்கவாட்டிலும் பட்டன்கள் தரப்பட்டுள்ளன. இந்த பட்டன்களை இயக்கினால் எந்த செயல்பாடு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதனை புரோகிராம் செய்திடலாம். மாறா நிலையில், இடது கட்டைவிரல் பட்டன், இணையப் பக்கம் ஒன்றில், பின்னோக்கிச் செல்ல உதவுகிறது. இதனால், இணையப் பக்கத்தில் செல்வது நமக்கு மகிழ்ச்சி தரும் செயலாக உள்ளது. ஏனென்றால், மவுஸ் கர்சரை நகர்த்தி நாம் இணையப் பக்கத்தில் அங்கும் இங்குமாகச் செல்ல வேண்டியதில்லை.
மவுஸில் உள்ள Snap To வசதி:
நம்மில் பலர் இந்த வசதியினைப் பயன்படுத்துவதே இல்லை. இந்த வசதியினைத் தேர்வு செய்து விட்டால், எந்த ஒரு டயலாக் பாக்ஸிலும், உங்கள் செயல்பாட்டிற்குப் பின்னர், மவுஸின் கர்சர் தானாக, அதில் உள்ள பட்டன்களுக்குச் செல்லும். எடுத்துக் காட்டாக, நீங்கள் ஒரு பைலை அழிக்கிறீர்கள் அல்லது புரோகிராம் ஒன்றை மூடுகிறீர்கள். உடனே உங்களுக்கு நீங்கள் பைலை அழிக்க விரும்புகிறீர்களா? அல்லது புரோகிராமினை மூட விரும்புகிறீர்களா? என்று ஒரு கேள்வி கேட்கப்படும். உடனே, நீங்கள் மவுஸை நகர்த்தி, கர்சரைக் கீழாகத் தரப்படும் பட்டன்களுக்குக் கொண்டு சென்று கிளிக் செய்திட வேண்டும். இந்த Snap To வசதியை இயக்கிவிட்டால், மவுஸ் கர்சர் தானாகவே, ஓகே பட்டனில் சென்று நிற்கும். எனவே, நீங்கள் கேட்கப்படும் செயல்பாட்டிற்கு இணங்கினால், மவுஸ் பட்டனை அழுத்தினால் போதும். இது மவுஸின் கர்சரை எடுத்துச் செல்லும் நேரத்தை நமக்கு மிச்சப்படுத்துகிறது.
இந்த Snap To வசதியை எப்படி இயக்கி வைப்பது? என்ற கேள்வி எழுகிறதா, உங்கள் மனதில்? கண்ட்ரோல் பேனல் சென்று, அங்கு Mouse properties என்பதனைக் கிளிக் செய்திடவும். இங்கு Pointer Options என்ற டேப்பின் கீழாக, Snap To என்பதன் முன் உள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளத்தினை ஏற்படுத்தவும். இந்த செயல்பாட்டினை மேற்கொள்கையில், மவுஸின் மற்ற செயல்பாடுகளையும் இங்கு காணலாம். எடுத்துக் காட்டாக, மவுஸின் நகர்த்தல் வேகத்தினை அதிகப்படுத்த ஆப்ஷன் தரப்பட்டிருப்பதனைக் காணலாம். இது நம் செயல்பாட்டின் வேகத்தை அதிகரிக்கும்.
விண்டோ டைட்டில் பாரில் மவுஸ் கிளிக்:
எந்த விண்டோவாக இருந்தாலும், அதன் டைட்டில் பாரில், மவுஸ் கொண்டு டபுள் கிளிக் செய்தால், அது மினிமைஸ் செய்யப்படும். ஏற்கனவே மினிமைஸ் செய்யப்பட்டிருந்தால், அது விரிக்கப்படும்.
http://kulasaisulthan.wordpress.com
இறந்தவர்களுக்காக என்னென்ன செய்யலாம்?
துஆச் செய்தல்
மைய்யித்தை அடக்கி விட்டு அங்கே நின்ற நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உங்களின் சகோதரருக்காக பாவமன்னிப்பு கேளுங்கள். அவருக்கு உறுதியைக் கேளுங்கள். ஏனெனில் அவர் இப்போது விசாரணை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார் என்று கூறினார்கள். (இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: அபூதாவூத், ஹாகிம்)
குடும்பத்தாரோ இறந்தவருக்கு தான் துஆக் கேட்காமல் கபுருக்கு அருகில் இமாம் ஃபாத்திஹா ஒத மற்றவர் ஆமின் கூறும் நடைமுறையையே காணுகிறோம்.
அடுத்து இறந்தவருக்காக அவரது குழந்தைகள் துஆச் செய்யவேண்டும்.
ஒரு மனிதன் இறந்துவிட்டால் அனைத்தும் நின்றும் விடுகின்றன. நன்மையைத் தொடர்ந்து தரும்படியான இவன் செய்த தர்மம், பிறர் பயன்படும் கல்வி, இவனுக்காக துஆச் செய்யும் இவனது குழந்தை ஆகிய மூன்றைத்தவிர என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: முஸ்லிம், அஹ்மத்)
இந்த ஹதீஸில் பிள்ளைகள் துஆச் செய்ய வேண்டுமென்பதை அறிகிறோம் ஆனால், நடைமுறையோ கூலிக்கு ஆள் பிடித்து பாத்திஹா என்ற பெயரில் பத்தி, சாம்பிராணி, கறி, சோறு என்று அமர்க்களப்படுத்துகிறார்கள்.
தர்மம் செய்தல்
எனது தாய் மரண வேளையில் இருந்தார்கள். அவர்கள் பேசியிருந்தால் தர்மம் செய்யும்படிச் சொல்லியிருப்பார்கள் என நினைக்கிறேன். அவர்களுக்காக நான் தர்மம் செய்தால் அவர்களுக்கு பலன் தருமா? என்று ஒருவர் கேட்டார். ஆம் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதிலளித்தர்கள். (ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
எனது தந்தை சிறிது சொத்தை வஸிய்யத் எதுவும் செய்யாமல் விட்டு விட்டு இறந்துவிட்டர். அவருக்காக நான் அதை தர்மம் செய்தால் அவருக்கு (அல்லாஹ்) பகரமாக்குவானா? என்று ஒருவர் கேட்டார், அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆம் என்றார்கள். அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: முஸ்லிம், அஹ்மத்)
நோன்பு வைத்தல்
அல்லாஹ்வின் தூதரே! என் தாயாருக்கு ஒருமாத நோன்பு வைப்பது தம்மீது கடமையாயிருக்க இறந்துவிட்டனர். நான் அதை அவர்களுக்காக நிறைவேற்றலாமா? என்று ஒருவர் கேட்டார். உனது தயாருக்கு கடன் இருந்தால் அதை அவர்களுக்காக நிறைவேற்றத் தானே செய்வாய்? என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர் ஆம் என்றார். அப்படியானல் நிறைவேற்றப்பட அதிக தகுதி வாய்ந்தது அல்லாஹ்வின் கடன்(நோன்பு) ஆகும். என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
ஹஜ் செய்தல்
என் தாய் ஹஜ் செய்ய நேர்ச்சை செய்திருந்தார்கள், ஆனால் இறக்கும்வரை அதை நிறைவேற்றவில்லை. அவர்களுக்காக நான் ஹஜ் செய்யலாமா? என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஜுஹைனா என்ற கிளையைச் சேர்ந்த ஒரு பெண் கேட்டார் அதற்கு என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், நீ அவர்களுக்காக ஹஜ்செய். எனவே இந்த(ஹஜ்) கடனையும் நிறைவேற்று. அல்லாஹ்வின் கடன் நிறைவேற்றப்படுவதற்கு அதிகக் தகுதி வாய்ந்தது என்று கூறினார்கள். (இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, புகாரி)
ஒரு மூமின் இறந்து விட்டால் அவரது பிள்ளைகள் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவருக்காக துஆச் செய்வது, அவருக்காக தர்மம் செய்வது, ஹஜ், நோன்பு போன்ற கடமைகளை நிறைவேற்றலாம் என்பதை மேற்கண்ட ஹதீஸின் மூலம் விளங்கலாம். அல்லாஹ் நம் அனைவரையும் நபி வழியில் நடக்க துணைபுரிவானாக ஆமின்!
நன்றி -இளையான்குடி தக்வா டிரஸ்ட்