இஸ்லாம் தாடி வைப்பதை வலியுறுத்துகின்றது. விஞ்ஞான, மருத்துவ ஆய்வுகளும் இதை ஊர்ஜிதம் செய்கின்றன.விஞ்ஞான ஆய்வுகளின் படி தாடி வளர்ப்பதால் ஏற்படும்நன்மைகள்.
தாடி வைப்பதன் மூலம் பெண்கள் மத்தியில் கவர்ச்சியுள்ளவர ்களாகவும், ஆண்மையுள்ளவர்கள ாகவும் இருப்பதுடன் பெண்கள், தாடி வைத்திருக்கும் ஆண்கள்
மத்தியில் அவர்களது பெண் தன்மையை உணரக்கூடியவர்கள ாகவும் உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.
1973ல் கலிபோனிய ஸ்டேட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மனோதத்துவவியலாளர் Robert J. Pelligrini என்பவர் தாடி வைத்த 22 – 25 வயதெல்லையுடைய எட்டு இளம்
ஆண்களை தமது பரிசோதனைக்கு உட்படுத்தினார். அதாவது இந்த எட்டு ஆண்களையும் கீழுள்ள நான்கு நிலைகளில் புகைப்படம் எடுத்தார்.
1.முழு தாடியுடன்
2. முகத்தின் இரு பக்கங்களில் சிறு கோடு போன்ற சிறிய தாடியுடன்
3. மீசையுடன்
4. தாடி முழுவதும் மழித்து (தாடி இல்லாமல்) ஒவ்வொருவரிலிருந்து பெறப்பட்ட நான்கு புகைப்படங்களாக மொத்தம் 32 புகைப்படங்களை மனோதத்துவவியல்
படிக்கும் 64 ஆண் மாணவர்களுக்கும், 64 பெண் மாணவர்களுக்குமாகக் கொடுத்து புகைப்படங்களில் உள்ளவர்களின் உருவங்களை மதிப்பிடுமாறு கூறினார்.
ஒவ்வொரு புகைப்படமும் இரு ஆண்,இரு பெண் வீதம் மதிப்பிடப்பட்டது. Pelligrini இன் ஆய்வின் முடிவில் பெறப்பட்ட முடிவானது முகத்தில் அதிகளவில் முடியுள்ளவர்கள் தோற்றத்தில் ஆண்மையுள்ளவர்கள ாகவும்,அழகிய தோற்றமுடையவர்கள ாகவும், கம்பீரமுடையவர்க ளாகவும்,தக்க வளர்ச்சியுள்ளவர
்களாகவும், துணிவுள்ளவர்களா கவும், பெருந்தன்மையுடை யவர்களாகவும், ஆரோக்கியமானவர்க ளாகவும், கவர்ச்சியானவர்களாகவும் இருக்கின்றனர் என்பதாகும்.
தாடி வைப்பதனால் ஏற்படும் மருத்துவ நன்மைகள். மருத்துவ ஆய்வுகளின் படி தாடி வளர்ப்பதானது ஒரு மனிதனை தொண்டை, பல்ஈறு சம்பந்தமான
நோய்களிலிருந்து தடுக்கின்றது. மேலும், தாடியானது முகத்தின் சருமத்திற்கு கெடுதி விளைவிக்கக்கூடி ய இரசாயன வகைகளிலிருந்தும், மாசுள்ள வளிமண்டலத்திலிருந்தும் கெடுதி ஏற்படாமல் பாதுகாக்கும். மேலும் இதனால் முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் குறைந்து வயதான தோற்றம் ஏற்படுவதற்கான
வாய்ப்புக்கள் குறைவாகக் காணப்படும்.
தாடி சருமத்தை மூடி காணப்படுவதால் sebaceous சுரப்பிகளின் மூலம் பக்டீரியா தொற்றுக்களிலிரு ந்து பாதுகாக்கப்படுவதால் முகப்பருக்கள், புள்ளிகள்
ஏற்படுவது தடுக்கப்படும். தாடி முகத்தை குளிர்ச்சியாக வைத்திருப்பதுடன் நாடியையும் அபாயங்களிலிருந்து காப்பாற்றும். அத்துடன் தாடி வைப்பதனால்
சுவாசக் கோளாறுகள் ஏற்படுவதும் தடுக்கப்படும். மாற்று மத அமெரிக்க மருத்துவர் Charles Holmes என்பவரின் கருத்து. இந்த மருத்துவர் கூறுகின்றார்
"எனக்குப் புரியவில்லை ஏன் மக்கள் தாடி வைப்பதில் அதிருப்தி அடைகின்றனர். மக்கள் தலையில் முடி வளர்த்திருக்கும் போது முகத்தில் முடி வளர்ப்பதில்
என்ன தவறு இருக்கின்றது? தலை முடி கொட்டும் போது வெட்கத்திற்குள்ளாகும் மனிதன் தாடியை முழுவதுமாக மழிப்பது என்னை ஆச்சரியத்திற்கு
ள்ளாக்குகின்றது. நீண்ட தாடியானது மனிதனின் கழுத்துப் பகுதியை குளிர்த் தாக்கங்களிலிருந ்து பாதுகாக்கின்றது. நாம் அறிந்த வகையில் தாடி வளர்ப்பதானது மத அனுஷ்டானம் மட்டும் இன்றி மனிதனுக்கு நிறைய நன்மை பயக்கக்கூடியதாகவுள்ளது. முன்னைய காலத்து மருத்துவர்கள், தத்துவஞானிகள் கூட தாடி வளர்த்திருக்கிறார்கள். உதாரணமாக சார்ள்ஸ் டார்வின், லுயிஸ் பெஸ்டர், ஆபிரகாம் லிங்கன் இன்னும் பலர். ஆனால் மக்கள் சமீப காலமாகத் தான் மக்கள்
தாடி வைப்பதிலிருந்து விலகி நடக்கின்றனர்
--
No comments:
Post a Comment