Monday, July 2, 2012

குரானை தன்னை அறியாமலேயே இழிவு படுத்தும் சில முஸ்லிம்கள் ?

குரானை தன்னை அறியாமலேயே இழிவு படுத்தும் சில முஸ்லிம்கள் ?

  

அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர்களே

 

 

குரானை தன்னை அறியாமலேயே இழிவு படுத்தும் சில முஸ்லிம்கள் ? சமீப காலமாக அதிகரித்துள்ளனர். அதிலும் போஸ்டர் அடித்து விழா நடத்தி அதை செய்கிறார்கள்.

 

எப்படி என்று கேட்கிறிர்களா?

 

ம்ம்ம்மம்மம்ம்ம்ம் . சில இஸ்லாமிய பொது கூட்ட மேடையில் பேசும் போது கணியமற்ற வார்த்தைகளின் நடுவே குரானின் ஆயத்துகள் ... 

குற்றம் குறை சொல்லி ஒரு முஸ்லிமை இன்னொரு முஸ்லிம் தாக்கி பேசும் போது உதாரணமாக குரானின் ஆயத்துகள் மற்றும் ஹதீஸ்கள்.

 

என்று வெளிபடையாக அறிந்தவை பல. இன்னும் மாற்றுமத நண்பர்களுக்கு இஸ்லாத்தை பிரசாரம் செய்யும் போது குரானையே எந்த ஒரு எச்சரிகையும் இல்லாமல் கொடுப்பது .. அதை அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று இவர்கள் கண்காணிபார்களா என்ன?

 

எனது இந்து நண்பர் ஒருவர் ஒரு இஸ்லாமிய கண்காட்சிக்கு சென்ற போது ஏகத்துவத்தை போதித்து குரானையும் கொடுத்து விட்டார்கள். அவனோ நேராக என்னிடம் வந்து என்னட உங்க ஆளுங்க கிறிஸ்டியன் போல சீப்பா பேசுறாங்க .. வர்புருதுறாங்கநு சொன்னான். 

 

பிறகு என்ன சொன்னங்கன்னு விசாரிச்சு அத அவனுக்கு புரிற மாதிரி பொறுமையா சொன்னான்.

 

(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது. ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் - அல்லாஹ்(யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான். அல்-குரான் - (2-256) 

 

 

என்ற வசனத்தை அவனுக்கு புரியும் படி சொல்லிவிட்டு அவன் கேட்ட கேள்விக்கு பதிலும் சொன்னேன்.

 

இறுதியாக அவன் அந்த குரானை என்னிடம் கொடுத்துவிட்டு. குரான கொடுக்குரான்களே இத படிக்காம துக்கி போடுட என்ன பண்ணுவாங்கனு கேக்குறான் ?

 

என்னிடம் மௌனம் மட்டும் பதில் .. 

 

அவனோ பத்திரமா வட்சுகனு குரானை கொடுத்துவிட்டு போனான்.

 

 

எந்த ஒரு எச்சரிகையும் இல்லாமல் குரானை கொடுத்தவர்களா? ஆப்கனின் குரான் பிரதி எரிப்பு பற்றி கவலை படுபவர்கள்?

இஸ்லாத்தை ஓரளவேனும் கற்று கொள்ள விரும்புபவர்களிடம் அல்லவா குரானை கொடுக்க வேண்டும்.

 

தன்னிலை! அறிந்தோ அறியாமலோ சில முஸ்லிம்கள் தங்கள் கையினால் குரானை அவமதிகின்றனர்.

 

அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள் நஸ்ரானிகளின் வழியை பின்பற்றதிர்கள்.

 

 

ஏகத்துவத்தை போதிப்பது நல்ல அமல் ஆனால் அதை அண்ணல் நபி முஹம்மது ஸல் வழியில் செய்யுங்கள் . . நஸ்ரானிகளின்  வழியில் இல்லை ..

 

முதலில் இஸ்லாத்தின் மீது ஆர்வத்தை ஏற்படுத்துங்கள் , பிறகு தெளிவுபடுத்துங்கள் , பிறகு குரானை கொடுங்கள்.

முதலில் தண்ணீரின் அவசியத்தை சொல்லவேண்டும் , பிறகு தண்ணீரை சுத்தபடுத்த வேண்டும் , பிறகே பருக கொடுக்க வேண்டும். 

 

எடுத்ததும் கொடுத்தால் குடிப்பவர் யார்? துப்புபபர் யார்? என்று தெரியாது ..

 

அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் எமக்கும் உமக்கும் உலக முஸ்லிமான ஆண் பெண் அனைவருக்கும் நல்லதையே தந்தருள்வானாக ! அமீன் !

 

 

இவன்

 

முஹம்மத் ரபிக் அலி

--
*more articles click*
www.sahabudeen.com



No comments: