Wednesday, July 11, 2012

Fwd: tips


நாடி சமன்படுத்துதல் மருத்துவர், உமா வெங்கடேஷ்:
 
நம் உடல், நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு எனும் பஞ்சபூதங்களால் ஆனது. நம் நாக்கிலேயே, பஞ்சபூதங்களும் உள்ளன.
 
திடீரென காரமாக சாப்பிடத் தோன்றினால், நம் உடம்பில், காற்றின் அங்கம் குறைவாக உள்ளதென அர்த்தம்.
 
இதே போல், காரம், துவர்ப்பு காற்றின் அங்கம்; இனிப்பு நிலத்தின் அங்கம்; ஆகாயம் - புளிப்புத் தன்மை, நீருக்கு - உப்பு, நெருப்புக்கு - கசப்பு. பஞ்சபூதங்களின் என்ன தன்மைகள், நம் உடம்பில் குறைகிறதோ, அது தேவை என்பதை, நம் நாக்கு சொல்லும்.சாப்பிடும் போது, மெதுவாக, மென்று சாப்பிட வேண்டும். வாயின் இருபுறமும், உணவை நன்றாக பரப்பி மெல்ல வேண்டும். அப்போது தான், உமிழ்நீர் நன்றாக ஊறி, உணவுடன் இரண்டறக் கலந்து, செரிமானத்தை எளிதாக்கும். தண்ணீர் குடித்து, 15 நிமிடம் கழித்துத் தான் சாப்பிட வேண்டும். சாப்பாட்டிற்குப் பின், அரை மணி நேரம் கழித்துத் தான், தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் குடிக்கும் போது, நன்றாக வாயில் பரப்பி, அமைதியாக ருசித்து குடிக்க வேண்டும்.எந்த ஒரு காய் சாப்பிட்டாலும், அடுத்து குறைந்தபட்சம், 11 நாட்களுக்கு அதை ஒதுக்க வேண்டும். ஒரே காய்கறியை தொடர்ந்து சாப்பிட்டால், ஒரே விதமான சத்து தான் உடலுக்கு கிடைக்கும். இன்று, உணவில் துவரம் பருப்பு சேர்த்தால், நாளை பாசிப் பருப்பு சேர்க்க வேண்டும்.சாப்பிடும் போது, இரண்டு உதடும் சேர்ந்தே இருக்க வேண்டும். உள்ளுக்குள்ளேயே உணவு நொறுங்க வேண்டும். சாப்பிடும் போது பேசினால், காற்று உள்ளே போய், உணவுடன் கலந்து, வாயு சேர்ந்துவிடும்.காலையில் யோகா, மூச்சுப் பயிற்சி செய்துவிட்டு, அரை எலுமிச்சம்பழம், ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடிக்க வேண்டும். இதில், உடலுக்கு தேவையான இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, லேசான கசப்பு கிடைக்கும். இது, உடம்பின் பஞ்சபூத சக்தியை ஈடு செய்யும்.காலையில் சத்தான உணவு, மதியம் மிதமான உணவு, இரவு மிக லேசான உணவு. இது தான், உடலை எப்போதும் புத்துணர்ச்சியாக இருக்க வைக்கும்!



--
*more articles click*
www.sahabudeen.com



No comments: