Sunday, May 29, 2011

லாபம் பெற எளிய வழி(லி)கள்-15


லாபம் பெற எளிய வழி(லி)கள்-15

லாபநோக்கற்று கற்பனை நோக்கோடு எழுதியது 
  1. அடிக்கடி உண்ணாவிரதமிருப்பவர்களை ஹோட்டலில் வேலைக்கு வைத்தால் ஹோட்டல் முதலாளிக்கு லாபம்
  2. ரேஷன் கடையில் வேலை பார்ப்பவரை நட்சத்திர ஹோட்டல்களில் குழாய் மெக்கானிக்காக போட்டால் நீரை வீணடிக்காமல் மண்ணெண்ணெய் போல லிட்டர்கணக்கில் மிச்சப்படுத்தலாம்.
  3. கணக்குகாட்டாத பைனான்ஸ் கம்பெனி அதிபர்களை ஓட்டப்பந்தையத்தில் சேர்த்துவிட்டால் கட்டாயம் ஒலிம்பிக்கில் எதிர்காலம் மிகவும் பாதுகாப்பாகயிருக்கும்.
  4. மல்லிகைப்பூ வியாபாரியை இட்லிக்கடையில் வேலைக்கு சேர்த்தால் காய்ந்த இட்லியைகூட மல்லியப்பூ போல பரிமாரி வியாபாரத்தைப் பெருக்கலாம்.
  5. போலி டாக்டர்களை கறிக்கடைகளில் வேலைக்கு வைத்தால் அநாவசிய உயிரிழப்பை தவிர்த்து மக்கள் பிழைத்துக்கொண்டு கறிவாங்க கடைக்கு வருவர்.
  6. கிரிக்கெட்டில் பந்தை உருட்டுவவர்களை ஹாக்கி அணியில் சேர்க்கலாம் ரசிகர்களே!
  7. சிகரெட் அதிகம் பிடிப்பவர்களை எதிரி நாட்டு எண்ணெய் கிணற்றில் வேலைக்கு சேர்க்க பரிந்துரைக்கலாம்.
  8. குடித்துவிட்டு உலருபவர்களை குருவிகளை விரட்ட சோளக்காட்டில் பொம்மை வேலைகொடுக்கலாம்.
  9. அடுத்தவர் மேல வள்ளுவள்ளுயென்று கோபப்படுபவர்களை மிருகக்காட்சியில் காட்சிப்பொருளாக வைத்தால் சமகால மக்கள், குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான்யென ஒப்புக்கொள்வார்.
  10. மற்றவர் காசில் தொந்தி வளர்பவர்களை ரயில்மறியல் போராட்டத்தில் படுக்கவைத்து நூதனமாக தண்டபாலத்திற்கு ஆப்பு வைக்கலாம்.
  11. குடித்துவிட்டு வண்டி ஓட்டுவவர்களை டிரைவர் வேலைக்கு வைத்தால் இன்சூரன்ஸ் பணம் அதிகமாககிடைக்க வாய்ப்புள்ளது முதலாளிகளே!
  12. லஞ்சம் வாங்கும் ஊழியர்களை போலீஸ் கார் கழுவும் பணிதரலாம். உழைக்காமல் கையும் தப்பாது, கருப்பு பணமும் பைக்கு சிக்காது
  13. பிட்பாக்கெட் கில்லாடிகளை ஸ்கூலில் வாட்ச்மேனாக சேர்த்தால் ஸ்கூல் டொனேஷனை லாவகமாக பெற்றோரிடமிருந்து பெறலாம்.
  14. நடித்து பிச்சையெடுப்போரை வைத்து மெகா சீரியல் எடுத்தால் தயாரிப்பாளர்களுக்கு செலவு மிச்சம்
  15. குண்டு வைக்கும் தீவிரவாதிகளுக்கு, அண்டை மாநிலத்து அணைப்பகுதியின் அட்ரஸ் கொடுப்பேன்யென மிரட்டினால் நதிநீர் பிரச்சனையே வராது நணபர்களே!

இப்படி இப்படியெல்லாம் செய்தால் நாட்டில் எப்படி எப்படியோவந்த வேலையில்லா திண்டாட்டத்தை உருப்பிடியாய் ஒழித்து லாபம்பெறலாம் மக்களே!

இது சித்தாந்தம்னா, உட்கார்ந்து சிந்திங்க!
இது சித்தாந்தமில்லைனா, சிரிச்சிட்டுபோங்க!

No comments: