இரத்த அழுத்தமும் உடல் உறுப்புக்களும்
டாக்டர் A. ஷேக் அலாவுதீன்
MD., (Chin.Med), A.T.C.M (CHINA)
Zhejiang University, Hangzhou, (China)
(Chinese Traditional Medicine).
MD., (Chin.Med), A.T.C.M (CHINA)
Zhejiang University, Hangzhou, (China)
(Chinese Traditional Medicine).
இதயம்: இதற்காக மனிதன் எதையும் இழக்க தயாராகின்றான். அதனால் தானே என்னவோ இன்று பார்க்கும் இடமெல்லாம் ஹார்ட் ஸ்பெசலிஸ்டுகளின் போர்டுகள் தென்படுகின்றன. எந்த பத்திரிக்கையைப் பார்த்தாலும் என் மகனுக்கு ஹார்ட் ஆபரேசன் செய்ய 5 லட்சம் தேவை, உதவி செய்யுங்கள். என் கணவருக்கு ஹார்ட் ஆபரேசன் செய்ய வேண்டும் உதவி செய்யுங்கள் என்று விளம்பரங்கள் வருகின்றன. வரும் விளம்பரங்கள் உண்மை தான் என்பதில் எமக்கு சந்தேகம் இல்லை. அவர்களுக்கு மருத்துவம் பார்த்த டாக்டர்கள் ஆபரேசன் தான் தீர்வு என்று சொல்கிறார்களே அது தான் உண்மையா?இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.
நம் வீட்டிலோ, நம் தெருவிலோ அல்லது நம் ஊர்களிலோ பலரை இது போல் சந்தித்துக் கொண்டு தான் இருக்கின்றோம். ஆபரேசன் தான் தீர்வு என்ற டாக்டர்களின் தவறான முடிவை கேட்டு பல லட்சம் பணம் திறட்ட முடியாமல் கதி கலங்கி நிற்கும் எத்தனையோ பேரை நாம் தினமும் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றோம். வாழ வேண்டிய வயதில் இதயத்தைக் காரணம் காட்டி கணவன், மனைவி இருவரையும் சேரவிடாததால் பல குடும்பங்கள் மவுனமாக அழுவது நம் காதுகளுக்கு கேட்காமலில்லை. இவைகளை பார்க்கும் போதும் கேட்கும் போதும் நம் மணம் தவிக்காமலில்லை. வேறு வழி தெறியாத காரணத்தால் நவீன மருத்துவத்தின் அவலங்களை சகித்துக் கொண்டு வாய் பொத்தி மவுனமாய் நிற்கின்றோம். இனி இந்த நிலை தொடர கூடாது நம் மக்கள் தெளிவடைந்து மாற்று வழிமுறைகளை தெரிந்துக் கொண்டு தன்னை காத்துக் கொள்ள வேண்டும் என்று உங்களைப் போன்று நினைக்கும் உங்களில் ஒருவனுடைய முயற்சியே இந்த தொடர். இதய நோயைக் காரணம் காட்டி மோசடி செய்தவர்களின் முகத் திரையை கிழித்து இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையூட்டி அவர்களுடைய வாழ்வை வசந்த மாக்கும் முயற்சியே இந்த இதயமே………இதயமே, இன்ஷா அல்லாஹ். இதயமே இதயமே இதயம், இதன் அழகிய துடிப்புகளே உயிருக்கு அறிமுகம். துடிப்புகளின் ஏற்ற இறக்கமே நோய்களின் விளக்கம். துடிப்புகளின் மவுனம், அதுதான் மரணம். இறைவனின் படைப்புகளில், ஓர் அற்புத தொழிற்சாலை. இதை உச்சரிக்காத உயிரும் இல்லை, பாடாத கவிஞனும் இல்லை. ஹார்ட் அட்டாக், இரத்த அழுத்தம், நெஞ்சு வலி மற்றும் படபடப்பு இன்னும் இது போன்ற வியாதிகளின் கதாநாயகனே இந்த இதயம் தான். இதில் ஹார்ட் அட்டாக் பற்றி விரிவாக ஆராய்வோம். இதயம் அது தானாக இயங்குவதில்லை, உடல் உறுப்புகள் பாதிப்பு அடையும் போது அவை தன் நிலையை மூளைக்கு தெரிவிக்க மூளை இதயத்திற்கு உத்தரவிடுகின்றது. இதயம் தன் இரத்த ஓட்டம் மூலம் பாதிக்கப்பட்ட உறுப்பிற்கு சக்தி அளித்து அதன் சக்தியை சமநிலைப்படுத்தி உறுப்பை சீராக இயங்க வைக்கின்றது. ஆனால் நவீன மருத்துவம் இதயம் தானாக இயங்குவதாக நினைத்து அதன் வேகத்தைக் குறைக்க மருந்து மாத்திரைகள் கொடுத்து இதயத்தின் இயக்கத்தை கெடுத்துவிடுகின்றனர்.
சிகரட் புகைப்பவர்களே ஜாக்கிரதை, சிகரட் புகைப்பவர்கள் நுரையீரலை பாதிக்கச் செய்து, இதயத்தைக் கெடுத்து தன்னைத் தானே அழித்தும் கொள்கின்றார்கள். நுரையீரலும் பெருங்குடலும் ஜோடி உறுப்புகளாகும். அதாவது காற்று சம்பந்தப்பட்டவை. இது போன்று வரும் ஹார்ட் அட்டாக்குகளை ஒரு திறமையான அக்கு பஞ்சர் மருத்துவர் எளிதாக சரியாக்கிவிட முடியும். அதுவும் சில நிமிடங்களில். என்ன ஆச்சரியமாக இருக்கின்றதா. இதயமும் நுரையீரலும் சந்திக்கும் இடத்தை தேர்வு செய்து சிகிச்சையளிக்கும் போது நோயாளி சில நிமிடங்களில் பூரண நிவாரணம் பெறுவார். சிறுநீரகம் சிறுநீர் பை: நீர் என்னும் மூலப் பொருளோடு சம்பந்தப்பட்ட சிறுநீரகம் பாதிபடைந்து பாதிபடைந்த சிறுநீரகத்தின் தகவலைப் பெற்று சக்தியை சரிப்படுத்த இதயத்தால் இரத்த ஓட்டத்தை அனுப்ப முடியாத போது ஏற்படும் ஹார்ட் அட்டாக் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட ஹார்ட் அட்டாக்காகும். இந்த அட்டாக் சிறுநீர்பை சம்பந்தப்பட்டிருந்தால் மாலை 3 மணியிலிருந்து 5 மணிக்குள்ளும், சிறுநீரகம் சம்பந்தப்பட்டிருந்தால் மாலை 5 மணியிலிருந்து 7 மணிக்குள் ஏற்படும். குறிப்பாக மாலை 5 மணிக்கு முன்பும் பின்பும் ஏற்படும். இந்த நேரம் தான் அணைவருக்கும் சிறுநீர் போக தூண்டுதல் அதிகம் உள்ள நேரம். இதயமும் சிறுநீரக சக்தி நாளங்களும் சந்திக்கும் இடத்தை தேர்வு செய்து சிகிச்சையளிக்கும் போது இந்த அட்டாக்கிலிருந்து நோயாளியை உடன் காப்பாற்றிவிடலாம்.
கல்லீரல் பித்தப்பை: சுமார் இரவு 12 மணிக்கு முன்பும் பின்பும் ஏற்படும் ஹார்ட் அட்டாக் அநேகமானவை கல்லீரல் பித்தப்பை சம்பந்தப்பட்டபையாகவே இருக்கும் வயிறு எரிச்சல், நெஞ்சு எரிச்சல் போன்றவைகளால் இவர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். இரவில் குளிர்ந்த நீரை குடித்தாலும் இந்த எரிச்சல் நிற்காது. இவைகள் கல்லீரல், பித்தப்பை பாதிக்கப்பட்டதின் முன்னரிவிப்புகள். நாக்கில் வெண்மை படர்ந்திருக்கும். பித்தப் பையும் கல்லீரலும் மரம் என்னும் மூலப் பொருளைச் சார்ந்தவை. இவையிரண்டும் இணை உறுப்புகள். பித்தப்பை பாதிக்கப்பட்டால் வரும் ஹார்ட் அட்டாக் இரவு 11 முதல் 1 மணிக்குள்ளும் கல்லீரல் பாதிக்கப்பட்டால் வரும் ஹார்ட் அட்டாக் இரவு 1 மணி முதல் 3 மணிக்குள்ளும் வரும். சரியான அக்குபஞ்சர் புள்ளிகளை தேர்ந்தெடுத்து சக்தியை தூண்டும் போது சில நிமிடங்களில் மாயமாய் மறைந்து விடும். (நேர் வழி பெறும்) அவர்கள் எத்தகையோரென்றால், அவர்கள் தாம் (முற்றிலும்) ஈமான் கொண்டவர்கள்;;. மேலும், அல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன. அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க” – அத்தியாயம் 13:28 நடு இரவில் மட்டும் தான் இந்த ஹார்ட் அட்டாக் வரும் என்றில்லை, தூங்காமல் அடிக்கடி கண் விழித்துக் கொண்டிருந்தாலும், பல நாள் தூக்கமில்லாமல் இருப்பவர்களுக்கும் வரும். மதிப்பிற்குறிய நமது குடிகாரர்களுக்கும் வரும். மதுவிற்கு அடிமையானவர்களே இனியாவது எச்சரிக்கையாக இருங்கள். கண் விழித்து T. V. சீரியல் பார்க்கும் சகோதரிகளே கவணம். விடுமுறை நாட்களில் வீடியோ கேசட்டுகளை விடிய விடிய பார்க்கும் சகோதரர்களே கவனம். நமக்காக குடும்பம் காத்திருக்கின்றது. பித்தப்பை, கல்லீரல் சம்பந்தப்பட்ட ஹார்ட் அட்டாக் நடு இரவில் தான் வரும் என்றாலும் குடிகாரர்களுக்கும் கண் விழிப்பவர்களுக்கும் எந்த நேரத்திலும் வரலாம். அப்படி எந்த நேரத்தில் வந்தாலும் சம்பந்தப்பட்டவர் குடிகாரராகவோ, கண்விழித்தவராகவோ இருந்தால் நிச்சயம் அவர் பித்தப்பை கல்லீரல் சம்பந்தப்பட்ட ஹார்ட் அட்டாக்கினாலேயே அவர் பாதிக்கப்ப்டடிருகிகின்றார் என்று உடன் முடிவு செய்து சிகிச்கையளிக்க வேண்டும். உதாரனமாக சொல்ல வேணடுமானால் ஒருவருக்கு மாலை 5 மணிக்கு ஹார்ட் அட்டாக் வருகின்றது என்று வைத்துக் கொள்வோம். உடனே நாம் மாலை 5 மணி அப்படியானால் இது சிறுநீரக சம்பந்தப்பட்ட ஹார்ட அட்டாக் என்று முடிவு செய்யக் கூடாது. சம்பந்தப்பட்டவரின் குனாதிசயங்களையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் (இது பற்றி விரிவாக வரும் தொடர்களில் பார்ப்போம்). இதயம் சிறுகுடல்: பிரியமானவர்களுக்காக மிகவும் பிரியமானவர்கள் குளிர்ச்சியாக என் இதயத்தை உனக்கு தருகின்றேன் என்ற வசனங்கள் பேசுவது அக்குபஞ்சர் மருத்துவத்திற்கு எதிரானது. இதயம் நெருப்பு என்னும் மூலப் பொருளால் ஆனது. இதன் இனை உறுப்புகளும் சிறுகுடலும் நெருப்பு என்னும் மூலப் பொருளால் ஆனதே. இதயம் தன்னைத் தானே இயக்க சக்தி பெறாமல் போகும் போதும் அல்லது மற்ற உறுப்புகளின் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் தினறும் போதும் இதயம் சம்பந்தப்பட்ட ஹார்ட் அட்டாக் வருகின்றது. காலை 11 மணியிலிருந்து 1 மணிக்குள் வரும் ஹார்ட் அட்டாக் எல்லாம் இதயம் சம்பந்தப்பட்டவையே (நவீன மருத்துவம் எமர்ஜென்சியை ரெடியாக திறந்து வைத்திருந்து காத்திருக்கும் நேரமும் இது தான்). இதயத்திற்கு சக்தியளிக்கும் புள்ளியை தூண்டும் போது வந்த இடம் தெரியாமல் மறைந்து போய்விடும் இந்த ஹார்ட் அட்டாக். வயிறு மண்ணீரல்: சாப்பிட்டுக் கொண்டிருந்தார், திழுரென்று இறந்து விட்டார் என்று கேள்விப்பட்டிருப்போம். சாப்பிடும் போது வரும் ஹார்ட் அட்டாக் வயிறு மண்ணீரல் சம்பந்தப்பட்டவையே. காலை 7 மணியிலிருந்து 9 மணிக்குள் வருவது வயிறு சம்பந்தப்பட்ட ஹார்ட் அட்டாக். காலை 9 மணியிலிருந்து 11 மணிக்குள் வருவது மண்ணீரல் சம்பந்தப்பட்ட ஹார்ட் அட்டாக்காகும். பொதுவாக காலை 9 மணிக்கு முன்பும் பின்பும் வருபவை வயிறு சம்பந்தப்பட்ட ஹார்ட் அட்டாக்கே. வயிறு போதுமான சக்தியோடு இயங்கினால் இந்த அட்டாக் வராது. காலை 7 மணி முதல் 9 மணிக்குள் சாப்பிடும் பழக்கத்தை கடைபிடியுங்கள். காலையில் அதிகம் சாப்பிடுங்கள், இரவு சாப்பாட்டை குறையுங்கள். நன்றாக மென்று சாப்பிடுங்கள். காலையில் பட்டினி கிடக்காதீர்கள். காலை உணவே நாள் முழுவதும் உழைப்பதற்கு தேவையான சக்தியை தருகின்றது. எனவே காலை உணவிற்கு முக்கியத்துவம் கொடுங்கள். இரவு உறங்குவதற்கு நமக்கு சக்தி தேவையில்லை. அந்த நேரத்தில் அதிகம் சாப்பிடாதீர்கள். வாகனத்தை ஓட்ட ஆரம்பிக்கும் போது தான் பெட்ரோல்ஃழுசல் தேவை. பயணம் முடிந்து வாகனத்தை நிறுத்தும் போது பெட்ரோல்ஃழுசல் தேவையில்லை. இதை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இது போன்று கவனத்தை செலுத்தினால் வயிறு சம்பந்தப்பட்ட ஹார்ட் அட்டாக்கை தவிர்க்கலாம். இதுவரை: இதுவரை நாம் ஹார்ட் அட்டடாக் எப்படியெல்லாம் வரும், எப்படிப்பட்டவருக்கு வரும், எந்த உறுப்புகள் பாதிக்கப்பட்டால் வரும். எந்தெந்த நேரத்தில் வரும் என்பதையெல்லாம் சுருக்கமாக பார்த்தோம். ஒருவருக்கு ஹார்ட் அட்டாக் வருகின்றது என்றால் ஓர் உண்மையான அக்குபஞ்சர் மருத்துவரின் மிக விரைவான நாடி பரிசோதனை மூலம் எந்த உறுப்பு பாதிக்கப்பட்டிருக்கின்றது என்பதை தெரிந்துக் கொண்டு, நபரின் குனாதிசயங்கள் (குடிகாரரா, கண் விழித்தவரா), அப்போதைய சுழ்நிலையை (ஓடிவந்தவரா, சாப்பிட்டுக் கொண்டிருந்தவரா) கவனத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட நேரத்தையும் மனதில் கொண்டு சிகிச்சையளித்தால் விலை மதிக்க முடியாத பல உயிர்களை காப்பாற்றுவதுடன் (இன்ஷா அல்லாஹ்) பல குடும்பங்களை சந்தோரூத்தில் வாழ வைக்கலாம். இதில் எதையுமே கவனத்தில் கொள்ளாமல் உடனே E.C.G. எடுத்து I.C.U. வைத்துவிட்டு நிற்கும் டாக்டரிடம் நோயாளியின் நிலையை குடும்பத்தினர் கேட்கும் போது அந்த பொறுப்புள்ள டாக்டர் சொல்லும் பதில் என்ன தெரியுமா?எங்களால் தற்போது ஒன்றும் சொல்ல முடியாது 1 நாள் போக வேண்டும் அல்லது 48 மணி நேரம் கழித்து தான் எதையுமே சொல்ல முடியும். என்ன அறிவு பூர்வமான பதில்? 48 மணி நேரம் கழித்து இவர் என்னத்தை சொல்வது?நாங்களே தெரிந்துக் கொள்கிறோம். உயிரோடு இருக்கின்றார் என்று, இல்லையென்றால், இறந்து விட்டார் என்று. என்று நாம் ஆங்கிலம் படித்தவன் எல்லாம் அறிவாளி என்று நினைத்தோமே அன்றே நமது சுய சிந்தனையை இழந்து விட்டோம். அதோடு அறிவு பூர்வமான பல நமது சொந்த மருத்துவத்தையும் நாம் மறந்து விட்டோம். உண்மையைச் சொன்னால் நவீன மருத்துவத்திற்கு ஹார்ட் அட்டாக்கிற்கான காரணம் எதுவும் தெரியாது. அப்படியானால் சிலர் எப்படி பிழைத்துக் கொள்கிறார்கள் என்கிறீர்களா?அது இவர்கள் செய்யும் டிரீட்மென்டால் அல்ல. உடலே தன்னைத் தானே சீர்படுத்திக் கொள்ளும் போது சிலர் இறையருளால் பிழைத்துக் கொள்கிறார்கள். மற்றபடி சிறப்பாக செய்வதெல்லாம் I.C.U-வில் வைத்துவிட்டு அழகாக பில் போடுவது தான். வாய்வு தொல்லையால் பாதிக்கப்பட்ட பலருக்கு மூச்சு தினறல், நெஞ்சு எரிச்சல் வரும். E.C.G. எடுத்துப் பார்த்தால் ஹார்ட்டில் பிரச்சினைப் போல் காட்டும். உடனே I.C.U.-வில் சேர்த்துவிடுவார்கள். வாய்வு தொல்லையா (GAS TROUBLE), ஹார்ட் அட்டாக்கா?என்று பகுத்தறிந்து பார்க்கத் தெரியாத ஒரு மருத்துவம் தான் நவீன மருத்துவம். இன்ஷா அல்லாஹ் தொடரும் - ☼ ☼ ☼ ☼ ☼ ☼ ☼ ☼ ☼ ☼ - |
No comments:
Post a Comment