Tuesday, October 2, 2012

டேப்ளட் பிசி - க்களின் விலைகள் மற்றும் சிறப்புகள்

டேப்ளட் பிசி - க்களின் விலைகள் மற்றும் சிறப்புகள்

டேப்ளட் பிசி என்றால் என்ன?

டேப்ளட் பிசி என்பது சிறியதொரு Digital Electronic சாதனமாகும். இதில் முதன்மை உள்ளீட்டு சாதனாகமாக தொடுதிரை அமைந்திருக்கும்.  இந்தியாவில் Ipad -ன் விலை அதிகம். Ipad-ற்கு மாற்றாக வெளிவந்திருக்கும் சாதனமே (Netbook)டேப்ளட் பிசி ஆகும். குறைந்த விலையில் அதிகப் பயனைத்தரும் இந்த டேப்ளட் பிசியை அனைவரும் விரும்புகின்றனர். கணினியில் செய்யக்கூடிய வேலைகளனைத்தையும் ஏறக்குறைய இதிலேயே செய்து முடிக்கலாம் என்பதால் இன்று பலராலும் விரும்பப்படும் ஒரு சாதனமாக இந்த டேப்ளட் பிசி விளங்குகிறது. இப்பதிவில் டேப்ளட் பிசிக்களின் விலைகள் மற்றும் அதில் அடங்கியிருக்கும் பகுதிகள், சிறப்புகள் (Key Features ) ஆகியவற்றைப் பார்ப்போம்.

முதலில் குறைந்த விலையுடன் கூடிய 3G வசியுடன் வெளிவந்திருக்கும் டேப்ளட் பிசிக்களில் விலைகளைப் பார்ப்போம். (Low Cost of Tablet PCs)

Wammy Ethos


Wammy Ethos tablet pc

wickedleak நிறுவனத்தின் தயாரிப்பு இது. 3G வசதியைக்கொண்ட இந்த டேப்ளட் பிசி ICS -ல் இயங்குகிற 7 இன்ச் திரை கொண்டது. WiFi, Bluetooth,mini USB, HDMI Port மற்றும் 3G கட்டமைப்பைக் கொண்டது. அதிக நேரம் நீடிக்கும் 3500 mAH பேட்டரி உள்ளடக்கியது. இதன் விலை ரூபாய்: 8,999 மட்டுமே.

iBerry Auxus AX03G
iBerry Auxus AX03G

3G SIM Slot கட்டமைப்புடன் கூடிய 7 இன்ச் Screen வசதியைக் கொண்டது. கடந்த பதிவில் கூறியது போல இதில் சிம் ஸ்லாட் வசதி இருப்பதால் உங்களால் இதன் மூலம் போன் பேசவும், கேட்கவும் முடியும். 1GHz processor, Mil 400GPU, Dual cameras, WiFi மற்றும் ப்ளுடூத்(Blue tooth)வசதியுடன் வெளிவந்திருக்கும் இந்த டேப்ளட் பிசியின் விலை ரூபாய்: 9,900 மட்டும்.

NXG Xtab 3G
NXG Xtab 3G tablet pc

NXG நிறுவனத்தாரின் தயாரிப்பு இது. இந்நிறுவனத்தின் 3G வசதிகொண்ட டேப்ளட் பிசிதான் Xtab 3G. வித்தியாசமான processor, GPU, bluetood, GPS மற்றும் Android ICS கொண்டது. இதன் விலை ரூபாய் 12,490.

BSNL Penta TPad WS704C
BSNL Penta TPad WS704C

3G வசதியுடன் கூடிய மற்றுமொரு Tablet PC இதுவாகும். பி.எஸ்.என்.எல் -ன் தயாரிப்பு இது. இந்த டேப்ளட் பிசி 1GHz powered tab உடன் GPS, Bluetooth, Wi-Fi கொண்டது. இதில் 4GB internal memory, 512MB RAM, 7 இஞ்ச் அகலத்திரை (Capacitive Touchscreen)கொண்டது. இந்த டேப்ளட் பிசியை உபயோகித்தவர்கள் பெரும்பாலும் இதில் நிறைய பிரச்னைகளை சந்தித்து வருவதாக ஏற்கனவே கூறியிருக்கிறார்கள். இதன் விலை ரூபாய் 13,199.

ரூபாய் பத்தாயிரத்துக்கும் குறைவான விலைகொண்ட Tablet PC களின் விலைப்பட்டியல்கள்:

Aakash Tablet 

இந்த ஆகாஸ் டேப்ளட் பிசிக்களை நேரடியாக ஆன்லைன் மூலமாக வாங்கலாம். உலகில் மிகக்குறைந்த விலை டேப்ளட் பிசி என பெயரெடுத்த இந்த ஆகாஷ் டேப்ளட் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என்பது கூடுதல் சிறப்பு. இந்த டேப்ளட் பிசி 366MHz processor உடன் ஆன்ட்ராய்ட் 2.2 OS -ல் இயங்கக்கூடியது. இதன் விலை 2,500 முதல் 2,999.

akash tablet pc


WishTel Tablet
WishTel Tablet

மற்றுமொரு விலை குறைந்த டேப்ளட் பிசி இது. புதிய நிறுவனத் தயாரிப்பான இந்த டேப்ளட் பிசி, ஆகாஸ் டேப்ளட் பிசியுடன் ஒப்பிடும்போது எந்த அளவுக்கு சிறந்தது என்பதை இது வெளிவந்த பிறகே தெரியும். விலை: தெரியவில்லை.

ATab 7 inch for Students

ATab 7 inch for Students

இந்த டேப்ளட் பிசி மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்ட சிறப்பு டேப்ளட் பிசி. இதில் 1.1GHz ப்ராசசர், Android இயங்குதளத்துடன் வெளிவந்திருக்கும் இதன் விலை ரூபாய்: 6,000.

Classpad Tablet
Classpad Tablet

ஆகாஷ் டேப்ளட் பிசியை விட இது சிறந்தது. இது மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்ட டேப்ளட் பிசி. இதன் விலை 6000 முதல் 14,000 வரை. 

BSNL - Penta T-Pad IS701R
BSNL - Penta T-Pad IS701R

Penta நிறுவனத்தின் தயாரிப்பு T-Pad IS701R டேப்ளட் பிசி. ஆகாஷ் நிறுவனத்தின் டேப்ளட் பிசி போட்டியாளராக கருத்தப்படும் பி.எஸ்.என்.எல் ன் Penta நிறுவனத்தின் தயாரிப்பான இதில் Powerful 1 GHZ processor, andriod 2.3, 7inch resistive touchscreen, Wi-Fi மற்றும் Front Camera வைக் கொண்டிருக்கிறது. இதன் விலை 3,250/-

Kobian iXA
Kobian iXA tablet pc

மற்றுமொரு குறைந்த விலை டேப்ளட் பிசி இது. இதன் விலை 3,999. இதில் android 2.3, 1GHz processors, 4GB internal memory, 512MB RAm, Wi-Fi மற்று 7 இன்ச் Touchscreen கொண்டது. இதில் resistive touch screen உள்ளதால் இதற்கு நல்லதொரு விற்பனை எதிர்பார்ப்பு இருக்கிறது. இதன் விலை ரூபாய் 3,999. 

Attitude Daksha
Attitude Daksha tablet pc

குறைந்த விலை டேப்ளட் பிசிக்களில் இதுவும் ஒன்று. 7 இன்ச் capacitive touchscreen ICS இயக்கத்துடன் 1.2 GHz prossing power கொண்டது. 512MB RAM, 4GB internal memory, WiFi மற்றும் External 3G யை ஆதரிக்கும் வசதி. இதில் front facing camera வும் உள்ளது. இதன் விலை ரூபாய் 5,399.

xtab A10
xtab A10 tablet pc

Android 4.0 இயங்குதளம் கொண்ட முதல் குறைந்த விலை டேப்ளட் பிசி இது. இதில் 1.5 GHz processor, internal speakers, 3G dongle ஆதரிக்கும் வல்லமை மற்றும் WiFi வசதி, வீடியோ சாட்டிங் செய்வதற்கு பயன்படும் Front VGA camera ஆகிய வசதிகளை உள்ளடக்கியது. இதன் விலை 4GB வசதியுடன் கூடிய டேப்ளட் பிசி ரூபாய்: 5,490 , 8G வசதிகொண்ட புதிய பதிப்பிற்கு ரூபாய் 6,490.

Sanei N77 Elite
Sanei N77 Elite tablet pc

VeeDee நிறுவனத்தின் தயாரிப்பு இது. 1.2GHz பவர்ட்ட் டேப்ளட் இது. இதில் 512MB RAM, 8GB internal storage, A13 CPU உள்ளடங்கியுள்ளது. 2600mAh battery, 7inch screen,ICS, Wi-Fi வசதிகளைக் கொண்டது. 
இதன் விலை ரூபாய்: 5,999. 

Wammy 7 ICS tablet
Wammy 7 ICS tablet pc

மற்றுமொரு ஆன்ட்ராய் 4.0 பதிப்புகொண்ட டேப்ளட் பிசி இது. இதில் உள்ள சிறப்பம்சங்கள் 512 MB RAM, 4 GB internal memory, mini USB Port, HDMI port, 7 இன்ச் Capcitive Touchscreen மற்றும் 800/480 pixel resolution. இவ்வசதிகளை அனைத்தையும் உள்ளடக்கிய இந்த டேப்ளட்டின் விலை ரூபாய் 6,025. 

Micromax Funtab

Android 4.0 இயங்குதளத்துடன் A 1.2 GHz powered கொண்டது. Tata Photon 3G dongle, சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவது, சாட்டிங் செய்வது, மெயில்கள் பார்ப்பது என மாணவர்களுக்கு பயன்படும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும் சிறப்பு டேப்ளட் பிசி இது. 400 Mali GPU கொண்டது. இதன் விலை (4GB பதிப்பு மற்றும் tata photon 3G dongle உடன் சேர்த்து) ரூபாய் 6,499 மட்டுமே.

veedee D10e

ICS OS உடன் 1GHz Processor,7 inch capacitive screen கொண்டது. இதில் GPS, internal 3G மற்றும் ப்ளூடூத் இல்லை.இதன் விலை 6,990.

Ainol Novo 7 Tornados 7

இந்த டேப்ளட் பிசி AMlogic CPU, 1GHz உடன் mali400, 1GB ROM, 8GB internal memory மற்றும் 7 இன்ச் capcitive screen கொண்டது. இதன் விலை ரூபாய் 6,990/-

Karbonn Smart Tab 1

இந்தியாவில் டேப்ளட் பிசி சந்தையில் நுழைந்திருக்கும் மற்றுமொரு டேப்ளட் பிசி Karbonn Smart Tab 1 ஆகும். வித்தியாசமான CPU, GPU கொண்டுள்ளதால் இது இன்னும் பிரபலமடையவில்லை. ICS யில் இயங்கும் இது 7 இன்ச் capacitive screen கொண்டது. 3D G-sensors, external 3 Dongle ஆதரவு மற்றும் நல்ல தரமிக்க பேட்டரி கொண்டது. இதன் விலை ரூபாய் 6,990 ஆகும். 

BSNL Penta TPad IS703C

IS703C டேப்ளட் பிசி capacitive touchscreen உடன் 1GHz pewer, 1GB RAM, 8GB internal storage, ICS, 3G வழி External dongle, front camera ஆகிய வசதிகளைக் கொண்டது. இதன் விலை 6,999.

Zenithink ZT-282 C71+

இது ஒரு 1GHz cortex A9 பவர்ட் டேப்ளட் ஆகும். ICS OS இயங்கும் இந்த டேப்ளட் பிசி முன்பக்க கேமரா(Front Camera), 1GHz RAM, 4GH internal memory. மற்றும் 3G Dongles ஆதரிக்கும் தன்மை. இந்த Zenithink ZT-282 C71+ டெப்ளட் பிசியின் விலை: 7,990.

xtab A10 Plus

xtab -ன் மாற்றியமைக்கப்பட்ட பதிப்பு xtab A10 Plus. நல்ல தரமான higher resolution screen. 7 இன்ச் ஸ்கிரீன் மற்றும் 1024x600 pixels resoltion கொண்டது. இதில் இரண்டு கேமரா உள்ளது. ICS இல் இயங்க கூடிய இந்த டேப்ளட் பிசி 1GB RAM கொண்டது. இதன் விலை: 7,990

HCL Me U1 and HCL MyEdu

இந்த இரண்டு டேப்ளட் பிசிக்களும் HCL ன் தாயாரிப்பு. ICS OS ல் இயங்கக் கூடிய இவை higher resolution screen கொண்டவை. 7 இன்ச் capcitive touchscreen, WiFi, external 3G support, front camera போன்ற பல வசதிகளை உள்ளடக்கிய இந்த டேப்ளட் பிசியின் விலை 
HCL Me U1: ரூபாய்: 7999. 
HCL MyEdu -ன் விலை :ரூபாய்: 9,999 to 11,499. 

Beetel Magiq II

Beetel Magiq II டேப்ளட் பிசி 7 இன்ச் TFT screen உடன் 768 MHz processor, android 2.2 OS, 2MP resolution உடன் கூடிய facing and rear என இரண்டு கேமராக்கள் கொண்டுள்ளது. இது 3G, EDGE, GPRS, WiFi ஆகிய வசதிகளையும் கொண்டுள்ளது. 

இதன் விலை: ரூபாய் 9,250 

Mercury mTab

Android 2.3 OS -ல் இயங்கக்கூடிய இந்த டேப்ளட் பிசி 1.2 GHz Processor, Wi-Fi வசதியைக் கொண்டது. ஆனால் இதில் 3G வசதி இல்லை. இதில் முகப்பு பக்க 1.3 MP கேமரா மட்டும் உள்ளது.
விலை ரூபாய் 9,499.

Milagrow Tablet PC for Women

7 இன்ச் டேப்ளட் பிசியான இது 1.2 GHz Processor கொண்டது. வித்தியாசமான வண்ணங்களைக் கொண்ட இந்த டேப்ளட் பிசியானது மகளிர்க்கானது. குறைந்த எடைகொண்ட இந்த டேப்ளட் பிசியில் Wi-Fi, dual Camera, 3G support வசதிகள் உள்ளடங்கியுள்ளது. இதன் விலை ரூபாய் 9,990. 

Auxus AX02

Android 4.0 இயங்குதளத்துடன் கிடைக்கும் இந்த டேப்ளட் பிசி 7 inch capatitive touchscreen உடன் கிடைக்கிறது. இதில் 1 GHz processor உடன் வெளிவந்திருக்கும் இதன் விலை ரூபாய் 10,000. தற்போதைய விலை சற்று கூடுதலாக இருக்கலாம். 

கூடுதலாக விலை அதிகம் கொண்ட டேப்ளட் பிசிக்களும் இருக்கின்றன. மற்றுமொரு பதிவில் அவற்றைப் பற்றியும் பார்ப்போம். நன்றி நண்பர்களே..
-தங்கம்பழனி

நன்றி: http://www.gogi.in

--
*more articles click*
www.sahabudeen.com



No comments: