Tuesday, October 16, 2012

உங்க வீட்டுல ஃப்ரிட்ஜ் இருக்கா?

உங்க வீட்டுல ஃப்ரிட்ஜ் இருக்கா?

''கொஞ்சம் ஏமாந்தால் பாக்டீரியா படையெடுக்கும்!''

''வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் ஏ.சி. வைத்திருப்பவர்கள் எந்த அளவுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கடந்த இதழில் நன்றாகவே உஷார் படுத்திவிட்டீர்கள்'' - இப்படி 'அவள்' வாசகிகள் ஏகப்பட்ட பேரின் பாராட்டு மழையில் நனைந்துகொண்டே இருக்கிறோம்.

கூடவே, ''இதேபோல் வீட்டில் உபயோகிக்கப்படும் பல்வேறு பொருட்களின் பாதுகாப்பு மற்றும் பயன் பாட்டு முறைகளை பற்றியும் தொடர்ந்து எழுதுங்கள். இதனால், பல லட்சம் பேர் பலனடைவார்களே?!'' என்று உரிமையோடு வேண்டுகோள் கள் வேறு.

வாசகிகளின் ஆசையை உடனடியாக நிறைவேற்றுவது தானே 'அவள்' கடமை.

ஏ.சி-க்கு அடுத்தபடியாக ஃப்ரிட்ஜிலிருந்தே இதோ, கச்சேரி ஆ...ர...ம்...ப...ம்...

'ஸ்டார் ரெஃப்ரிஜிரேஷன் அண்ட் எலெக்ட்ரிகல்ஸ்' நிறுவனத்தின் உரிமை யாளரான எல்.சுரேஷ், ஃப்ரிட்ஜ் பற்றிய தகவல்களை இங்கே வழங்குகிறார்.

''அடுப்பில்லாத வீட்டைக் கூட பார்க்கலாம். ஆனால், ஃப்ரிட்ஜ் இல்லாத வீடு உண்டா? அன்றாட தேவைக் கான பால், காய்கறிகள் மற்றும் கூல்டிரிங்ஸ் போன்ற உணவுப் பொருட்களை கெடாமல் பாதுகாத்து குளிர்ச் சியைத் தந்து நம்மை மலர்ச்சி யடைய செய்யும் ஃப்ரிட்ஜ், கிட்டத்தட்ட குடும்பத்தில் ஓர் அங்கமாகவே மாறிவிட்டது. ஆனால், அத்தகைய பொருளை மாதக்கணக்கில், ஏன்... ஆண்டுக்கணக்கில்கூட பராமரிக்காமல் பலரும் கெடுத்துக் கொண்டிருக்கி றார்கள் என்பதுதான் வேதனை யான விஷயம்'' என்று வருத்தப்பட்டவர், ஃப்ரிட்ஜ் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் மற்றும் பாதுகாப்பு, பரா மரிப்பு என்று அனைத்தையும் வாரி வழங்கினார்.

புதிதாக ஃப்ரிட்ஜ் வாங்கும்போது நமக்கு பிடித்த கம்பெனியை செலக்ட் செய்து வாங்குவோம். ஆனால், முன்பக்கம் ஸ்டார் முத்திரையிருக்கிறதா என்று கவனித்து வாங்குவதுதான் புத்திசாலித்தனம். இந்த முத்திரை சிங்கிள் ஸ்டார் துவங்கி ஃபைவ் ஸ்டார் ரேஞ்ச் வரை உண்டு.

ஃப்ரிட்ஜுகளுக்காக அரசு கொடுத்திருக்கும் தர அங்கீகாரம்தான் இந்த ஸ்டார். அதாவது, மின்சாரம் குறைந்த அளவே தேவைப்படும் வகையில் தயாரிக்கப்படும் 200 லிட்டர் முதல் 400 லிட்டர் வரையிலான ஃப்ரிட்ஜ்களுக்கு இந்த ஸ்டார் முத்திரைகளை அரசாங்கம் வழங்கியிருக்கிறது.

ஃபைவ் ஸ்டார் தரச் சான்றிதழ் கொண்ட ஃப்ரிட்ஜ்கள் பார்ப்பதற்கு அழகாகவும் மிகவும் நேர்த்தியாக இருப்பதுடன், அத்தனை உள்வேலை களையும் கனகச்சிதமாக செய்யும் அளவுக்கு வடிவமைக்கப்பட் டிருக்கும். பால் பாக்கெட், ஐஸ்க்ரீம், காய்கறி, பழங்கள் என ஒவ் வொன்றுக்கும் தனித்தனி டிரேக்கள் இருக்கும். பொதுவாக ஃப்ரிட்ஜ் என்றால் பால் பாக்கெட்டை ஃப்ரீசரில் வைத்து, பிறகு தண்ணீரில் போட்டுவிட்டு காத்திருக்கவேண்டும். ஆனால், இதில் அந்த அவசியம் இருக்காது என்பதுதான் தனிச்சிறப்பு. அதாவது, ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்த சில நிமிடங்களிலேயே பாலை பயன்படுத்தும் அளவுக்கான டெம்ப்ரேச்சர் இருப்பதுபோல வடிவமைத்திருப்பார்கள்.

இருவர் மட்டுமே புழங்கக்கூடிய வீட்டில் 165 லிட்டர் கொள்ளளவுள்ள ஃப்ரிட்ஜ் வாங்கினால் போதுமானது. வீட்டு உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் பயன்பாட்டைப் பொறுத்தே தேர்வு செய்யுங்கள்.

தரமான ஸ்டெபிலைசர்கள் வாங்குவது அவசியம். ஆனால், ஃப்ரிட்ஜ் விற்கப்படும் ஷோ-ரூம்களில் பெரும்பாலும் தரமான கம்பெனி முத்திரையுடன் கூடிய ஸ்டெபிலை சர்கள் விற்கத் தயங்குவார்கள். ஏனென்றால், அதில் அவர்களுக்கு கிடைக்கும் கமிஷன் மிகக் குறைவு. அதேசமயம், தரமில்லாத ஸ்டெபிலைசர் களை விற்கும் போது அதிக லாபம் கிடைக்கும் என்பதால், வாடிக்கையாளர் களிடம் பேசிப் பேசியே தரமற்ற ஸ்டெப்லைசர்களை தலையில் கட்டிவிடுவதும் உண்டு. எனவே, தரமான கம்பெனியின் ஸ்டெபிலைசர்களையே கேட்டு வாங்குங்கள்.

ஃப்ரிட்ஜை ஒரு தடவை அணைத்துவிட்டால், மறுபடியும் உடனடியாக ஸ்விட்ச் ஆன் செய்யக் கூடாது. இதனால், ஃப்ரிட்ஜ் சீக்கிரத்தில் பழுதடைந்துவிடும். ஃப்ரிட்ஜ் இயங்கு வதற்கு அதன் உள்ளே இருக்கும் ஒரு வகையான கேஸ் முக்கிய காரணம். மேலும், ஃப்ரிட்ஜை அணைத்து வைக்கும்போது பைப்பில் கேஸ் அப்படியே அடைத்துக் கொள்ளும். அந்த பைப்பில் காற்றும் போகாது. எனவே, குறைந்தது மூன்று நிமிடங்கள் கழித்துதான் மீண்டும் 'ஆன்' செய்யவேண்டும். அப்போதுதான் ஃப்ரிட்ஜ் இயல்பு நிலைக்கு திரும்பி யிருக்கும்.

ஃப்ரிட்ஜ் வாங்கியவுடன், ஃப்ரீசர் கதவுக்குப் பின்னால், என்னென்ன பொருட்களை யெல்லாம் பயன்படுதக் கூடாது என்ற வழிமுறைகளை எழுதியிருப்பார்கள். முதலில் அதனை தெளிவாகப் படியுங்கள். சம்பந்தப்பட்ட கம்பெனி ஆட் களோ, சர்வீஸ் ஆட்களோகூட இதைப் பற்றி யெல்லாம் சொல்ல மாட்டார்கள். நீங்களாகத்தான் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஃப்ரீசரில் பொருட்கள் நன்றாக உறைந்துவிட்டால், அவற்றை எடுப்பதற்காக கூரான ஆயுதங்களைப் பயன்படுத்தகூடாது. ஃப்ரீசர் அமைந்து இருக்கும் பிளாஸ்டிக் டப்பாவில் அலுமினியம் காயில் பொருந்தப் பட்டிருக்கும். கூரான பொருட்கள் பயன்படுத்தினால், இந்த டப்பாவை கீறி, அதன் கீழே இருக்கும் அலுமினியம் காயிலின் மீது படக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. அப்படி படும்போது, 'டப்' என்று வெடித்து உள்ளிருந்து கேஸ் வெளியேறி, உங்கள் உடம்பில் பட்டுவிடலாம். இதனால், பெரும் விபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. சுவாசிப்பதால் பாதிப்பில்லை என்றாலும், உடம்பில் படும்போது பாதிப்புகள் ஏற்படும்.

ஃப்ரீசரில் இருந்து உறைந்த பொருட்களை எடுக்கும்போது, டீஃப்ராஸ்ட் பட்டனை அழுத் துங்கள். இதனால் ஃப்ரிட்ஜில் உள்ள அதிகப்படியான ஐஸ் கரைந்து, அதன் பின்புறம் இருக்கும் டிரேவில் விழுந்து விடும். இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை டீஃப்ராஸ்ட் செய்வதால் ஃப்ரிட்ஜ் சீக்கிரத்தில் பழுதடையாமல் இருக்கும்.

ஃப்ரிட்ஜ் ரிப்பேரானாலோ... தொடர்ந்து மின்சாரம் தடைப்பட்டாலோ... அதனுள் இருக்கும் கெட்டுப் போகக்கூடிய பொருட்களை வெளியே எடுத்து விடுங்கள். இல்லையென்றால் அது அழுகி துர்நாற்றம் வீசத் தொடங்கும். ரிப்பேரான ஃப்ரிட்ஜை ஈரத் துணியால் நன்றாக துடைத்து, எலுமிச்சம் பழத்தை வெட்டி ஃப்ரிட்ஜினுள்ளே ஆங்காங்கே வைத்து விடுங்கள். இதனால் துர்நாற்றம் அடிக்காது. கதவையும் திறந்து வையுங்கள்.

ஃப்ரிட்ஜ் வாங்கிய நாலைந்து வருடங்களில் அதன் கதவினுள் பொருத்தப்பட்டிருக்கும் கேஸ்கட் சற்று தளர்வடைந்துவிடும். இதனால் பாக்டீரீயாக்கள் படையெடுத்து வந்து கதவின் இடுக்கில் போய் உட்கார்ந்துவிடும். அந்த இடத்தில் குளுமையான காற்றும் வீசாததால் கிருமிகள் மெதுவாக ஃப்ரிட்ஜ் உட்பகுதியில் பரவும் அபாயமும் நேரலாம். அது பல வியாதிகளுக்கு வழி வகுக்கலாம். கேஸ்கட் சரியாகப் பொருந்தியிருக்கிறதா? இடைவெளி இருக்கிறதா என்று அடிக்கடி கவனியுங்கள்.

சாதாரண சோப்புத் தண்ணீரினால் ஃப்ரிட்ஜின், உள், வெளிப்புறங்களில் துடைத்தாலே போதுமானது. எந்த பாதிப்பும் வராது.

ஃப்ரிட்ஜின் வாழ்நாள் என்பது அதிகபட்சம் 12 ஆண்டுகள்தான். அதற்கு மேல் அதன் செயல்பாடுகள் தொய்வடைந்து விடும். எந்த விதத்தில் அதனால் தீங்கு ஏற்படும் என்று சொல்ல முடியாது. எனவே, 12 ஆண்டுகளாகிவிட்டால் உடனே டிஸ்போஸ் செய்துவிடுவது நல்லது.

ஃப்ரிட்ஜ் வாங்கிப் பொருத்தும்போது அதற்கான 'எர்த்' சரியாக இருக்கிறதா என்று எலெக்ட்ரீஷியனை கொண்டு பரிசோதித்து கொள்ளுங்கள்.

வெளியூர் சென்று இரண்டு நாளில் திரும்பும் பட்சத்தில் ஃப்ரிட்ஜை ஆனில் வைத்து செல்லலாம். ஆனால், 10 நாட்களாகும் என்றால் பொருட்களை வெளியே வைத்துவிட்டு, ஃப்ரிட்ஜை ஆஃப் செய்துவிட்டு போவதுதான் நல்லது.

ஃப்ரிட்ஜ் பயன்படுத்துகிறீர்கள் என்றால், குறைந்தது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறையாவது அதனை நன்கு சுத்தம் செய்து விடுங்கள்

 


--
*more articles click*
www.sahabudeen.com



No comments: