Saturday, October 6, 2012

துல் ஹஜ் மாதத்தின் முந்திய பத்து நாட்களின் சிறப்புகள்



துல் ஹஜ் மாதத்தின் முந்திய பத்து நாட்களின் சிறப்புகள் (16/10/2012, As per Saudi Hijra Dhul-Haj 1st strat)

அல்லாஹ்வின் திருப்பெயரால்.....

ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களும் மிக சிறப்புக்குரிய நாட்களாகும் ஆகவே இந்த நாட்களில் செய்யும் நல் அமல்களை தெரிந்து நாமும் அமல் செய்து அல்லாஹ்வின் அருட்கொடைகளை பெற்றவர்களாகுவோமாக.

சிறப்புகள்1-
துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறியபோது அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவுமா? என நபித்தோழர்கள் கேட்டார்கள். அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவும்தான் ஆனால் அல்லாஹ்வின் பாதையில் பொருளையும் உயிரையும் அர்ப்பணித்து வீரமரணம் அடைந்தவரைத் தவிர என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் : புகாரி


2- நாட்களில் மிகச்சிறந்த நாள் அரஃபாவுடைய நாள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் : ஸஹீஹ் இப்னு ஹிப்பான்.
 
எல்லாம் வல்ல அல்லாஹ் தன் நல்லடியார்களுக்கு அவர்களின் குறுகிய ஆயுளில் நிறைந்த நல்லமல்களைச் செய்து மகத்தான பேறுகளைப் பெறுவதற்காக சில முக்கிய நாட்களை வழங்கியிருப்பது அவனுடைய மிககப்பெரிய கருணையாகும்.சிறப்புக்குரிய அந்த நாட்களாவன:-
1. ரமளான் மாதம்,
2.
ரமளானின் கடைசிப் பத்து நாட்கள்.

3.
ரமளானின் லைலத்துல் கத்ரு இரவு.
4.
ஜும்ஆவுடைய நாள்.
5.
ஜும்ஆவுடைய நாளில் இமாம் மிம்பரில் ஏறியது முதல் இறங்குவதுவரை.
6. ஒவ்வொரு நாளும் பிந்திய இரவு.
7. அந்த வரிசையில் ஒன்றுதான் துல் ஹஜ் மாதத்தின் இந்தப் பத்து நாட்களும்! இந்;நாட்களின் சிறப்புக்கு குர்ஆனிலும் ஹதீஸிலும் பல ஆதாரங் கள் உள்ளன! அல்லாஹ் கூறுகிறான்

وَالْفَجْرِ (1) وَلَيَالٍ عَشْرٍ

வைகறைப் பொழுதின் மீதும் பத்து இரவுகளின் மீதும் சத்தியமாக! (அல்பஜ்ர் 89:1-2)
1.துல் ஹஜ்ஜின் பத்து நாட்களைக் கொண்டு இறைவன் ஆணையிட்டுக் கூறுவதென்றால் நிச்சயமாக அவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே இருக்கவேண்டும். இல்லை யெனில் அவ்வாறு ஆணையிட்டுக்கூறும் அவசியமில்லை

2.அடியார்கள் தன்னை குறிப்பிட்ட நாட்களில் நினைவுபடுத்த வேண்டும் என்று கூறிய நாட்களும் இந்த துல்ஹஜ் பத்து நாட்களில் தான் வருகிறது.
இறைவன் திருமறையில் கூறுகிறான்:

لِيَشْهَدُوا مَنَافِعَ لَهُمْ وَيَذْكُرُوا اسْمَ اللَّهِ فِي أَيَّامٍ مَّعْلُومَاتٍ عَلَى مَا رَزَقَهُم مِّن بَهِيمَةِ الْأَنْعَامِ

'அவர்கள் தங்களுடைய (இம்மை,மறுமைப்) பேறுகளை பெறுவதற்காகவும், சாதுவான கால்நடைகளை அவர்களுக்கு வழங்கியதற்காகவும்,குறிப்பிட்டநாட்களில் அல்லாஹ்வின் பெயரைக் கூறுவதற்காகவும்,( ஹஜ்ஜுக்கு வருவார்கள்) 22:28.
இவ்வசனத்தில் 'குறிப்பிட்ட நாட்கள்' என்பது துல்ஹஜ் மாதத்தின் பத்து நாட்களாகும் என்பது பெருமபாலான் அறிஞர்களின் கருத்தாகும். இப்னு உமர் (ரலி)இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோரும் இக்கருத்தையே வலியுறுத்துகின்றனர்.

3. துல்ஹஜ்ஜு பத்து நாட்களும், உலக நாட்களில் மிகவும் சிறந்த நாட்களாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவதையும் விடவும் சிறந்ததா? என நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டபோது, ஆம் அல்லாஹ்வின் பாதையில் போர்புரிவதையும் விடவும் இது சிறந்தது.ஆனால் ஒருவன் அவனுடைய பாதையில் தனது உயிர்,பொருள் போர் ஆகிவற்றால் போர் புரிந்து திரும்பி வராமல் ஷஹீதாகி மரணித்தவரைத் தவிர' எனக்கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) ,ஆதாரம்: புகாரி)

4. அரபா நாளும் அதில் உள்ளது. அரபா நாள் பாவங்களுக்கு மன்னிப்பும், நரகவிடுதலையும் நிடைக்கும நாளாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:- அல்லாஹ் நரகிலிருந்து தனது
அடியார்களை அதிகமாக விடுதலை செய்யும் நாள் அரபா நாளாகும்.இதைத் தவிர வேறு எந்த நாட்களிலும் இவ்வாறு விடுதலை செயவதில்லை.அல்லாஹ் அந்நாளில் இறங்கி வந்து,இவர்கள் என்ன விரும்புகின்றனர்? என்று தனது வானவர்களிடம் பெருமையாகக் கேட்பான். (அறிவிப்பவர் ஆயிஷா(ரலி), ஆதாரம்: முஸ்லிம்.)
துல்ஹஜ் பத்து நாட்களின் சிறப்புக்கும்,மாண்புக்கும் அரபாத் நாள் அந்நாளில் இருப்பது ஒன்றே போதுமானது.
 
5. துல்ஹஜ் பத்துநாட்களிலும் அமல் செய்வது ஏனைய நாட்களில் அமல் செய்வதைவிடவும் மேலானது. ஏனெனில் நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்:- உலக நாட்களில் மிகவும் அமலகள் செய்வதில் அல்லாஹ்வுக்கு மிகவும் உவப்பான நாட்கள் துல்ஹஜ் பத்து நாட்களாகும.; இதுபோல் வேறு எந்நாட்களும் இல்லை! எனவே இந்த நாட்களில் லா இலாஹ இல்லல்லாஹு என்றும்,அல்லாஹு அக்பர் என்றும்,அல் ஹம்து லில்லாஹ் என்றும் அதிகமதிகமாகச் சொல்லுங்கள்! (அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி) நூலகள் : முஸ்னத் அஹ்மத்,தப்ரானி.)
பத்ஹுல் பாரியில் இப்னு ஹஜர்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் :      துல்ஹஜ் மாதத்தின் இந்தப் பத்து நாட்களின் சிறப்புக்குக் காரணம் இஸ்லாத்தின் தலையாய வணக்கவழிபாடுகள் இந்நாட்களில் ஒருங்கே அமைந்திருப்பதாகும்! தொழுகை, நோன்பு, தர்மம், ஹஜ் ஆகிய யாவும் இந்நாட்களில் நிறை வேற்றப்படுகின்றன! இந்த நிலை வேறு எந்த நாட்களிலும் அமைவதில்லை! எனவே நாம் இந்நாட்களில் பின் வரும் நல்அமல்களில் அதிகக் கவனம் செலுத்துவது சிறப்பாகும் :-
 
இந்நாட்களை நாம் சிறப்பிப்போம்.
 
நன்மைகளைத் தேடிக்கொள்வதற்கான் இதுபோன்ற காலகட்டங்களில் பாவமீட்சி தேடி இறைவன்பக்கம் திரும்புவதே ஒரு முஸ்லிமுக்கு அழகாகும்! அது தூய்மையான பாவமீட்சியாகவும் வாய்மையான தாகவும் இருக்கவேண்டும்! பாவங்ளை விட்டு விலகுவதுடன் இனி எப்போதும் அவற்றைச் செய்வதில்லை என்று உறுதி கொள்ள வேண்டும்! நிச்சயமாக பாவங்கள்தாம் இறையருளைப் பெறவிடாமல் மனிதனைத் தடுத்து அவனை இறைவனை விட்டும் தூரமாக்கு கின்றன!
 
நாம் அனைவரும் வாய்மையுடனும் தூய்மையுடனும் இறைவனை வணங்கிவழிபட்டு அவனது அன்பையும், அருளையும் பெறமுயல் வோமாக!


இந்த நாட்களில் செய்யும் அமல்கள்;

1- ஹஜ் உம்ரா:- ஒரு உம்ரா மற்ற உம்ராவுக்கு இடைப்பட்ட பாவங்களுக்கு பரிகாரமாகும். மேலும் ஏற்றுக்கொள்ப்பட்ட ஹஜ்ஜுக்குரிய கூலி சுவர்க்கத்தைத்தவிர வேறு எதுவும் இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.ஆதாரம் - புகாரி முஸ்லிம்.

2- நோன்பு
இந்நாட்களில் ஸுன்னத்தான நோன்புகளை நோற்கவேண்டும்., நோன்பும் நல்லமல்களில் உள்ளதாகும். (9 நோன்புகளை நோற்கவேண்டும்)
[குறிப்பு- துல் ஹஜ் மாதத்தின் பத்தாம் நாளாகிய பெருநாளன்று நோன்பு நோற்பது தடை செய்யப்பட்டுள்ளது.ஆதாரம் - புகாரிமுஸ்லிம்]

3-உபரியான  தொழுகைகள், உபரியான  தர்மங்கள்,
குர்ஆன் ஓதுவது, பாவமன்னிப்பு தேடுவது, நன்மையை ஏவுவது, தீமையை தடுப்பது, உறவினர்களுக்கு உதவுவது, போன்ற நல் அமல்களில் ஈடுபடுவது.


4- அரஃபா நோன்பு :-
அரஃபா நோன்பு (நோற்பவருக்காக) அந்த நாளுக்கு முந்திய வருடத்தின் பாவங்களையும் அதற்கு பின்னுள்ள வருடத்தின் பாவங்களையும் அல்லாஹ் மன்னிப்பான் என நான் நம்புகின்றேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.ஆதாரம்-முஸ்லிம்
[குறிப்பு :- அரஃபா நோன்பை ஹாஜிகள் நோற்க்கக்கூடாது ஹஜ் செய்யாதவர்கள் இந்த நோன்பை நோற்பது மிகவும் சிறந்தது]


அரஃபா தினத்தன்று அரஃபாவில் தங்கியிருந்த நபி (ஸல்) அவர்கள் தன்னிடம் கொண்டுவந்த பாலை அருந்தி தான் நோன்பு நோற்கவில்லை என்பதை மக்களுக்கு அறிவித்திருக்கின்றார்கள்.ஆதா
ரம் புகாரி முஸ்லிம்.

5- தக்பீர் கூறுவது:-
கடமையான தொழுகைகளுக்குப் பின்னரும் பள்ளிவாசல் வீடு கடைவீதி போன்ற எல்லா இடங்களிலும் தக்பீர் கூறுவது ;

ஹஜ் மாத முதல் பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக இல்லை. ஆகவே லாஇலாஹா இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர், அல்ஹம்து லில்லாஹ் போன்ற திக்ருகளை அதிகமாக செய்யுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் : அஹ்மத்.

இப்னு உமர் (ரலி) அபூஹுரைரா (ரலி) ஆகிய இரு நபித்தோழர்களும் துல்ஹஜ் (மாதம் ஆரம்ப) பத்து தினங்களிலும் கடைவீதிகளுக்கு செல்லும் போதெல்லாம் தக்பீர் கூறுவார்கள் இவ்விருவரும் கூறுவதை கேட்கின்ற மற்ற மக்களும் தக்பீர் கூறுவார்கள்.
ஆதாரம் - புஹாரி.


6- ஹஜ் பெருநாள் தொழுகை இன்னும் குத்பா பிரசங்கத்தில் கலந்து கொள்வது.
நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப்பெருநாளிலும் கன்னிப்பெண்கள் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் (உட்பட) முஸ்லிம்களின் பிரார்த்தனைகளிலும் நல்ல அமல்களிலும் கலந்து கொள்ள வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு கட்டளையிட்டார்கள். மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் தொழுகையில் கலந்து கொள்ளாமல் தொழுகை நடக்கும் பகுதிக்கு வெளியே இருந்து கொள்ள வேண்டும் என்றார்கள்.
ஆதாரம் :- புகாரி முஸ்லிம்.


7- உழ்ஹிய்யா:-
உழ்ஹிய்யா என்பது ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைக்கு பின் இறை திருப்தியை நாடி அறுக்கப்படும் பிராணிக்கு சொல்லப்படும் இது நபியவர்கள் வலியுறுத்திய சுன்னத்தாகும்.கொம்புள்ள கறுப்பு நிறம் கலந்த இரண்டு வெள்ளை நிற ஆடுகளை நபி (ஸல்) அவர்கள் உழ்ஹிய்யாவாக கொடுத்தார்கள் அப்போது பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்று கூறி அவ்விரண்டின் ஒரு பக்கத்தின் மீது தனது காலை வைத்து கையால் அறுத்தார்கள்.
ஆதாரம் - புஹாரி.



நன்றி; இப்ராஹீம் மதனி மற்றும் மவ்லவி இஸ்மாயில் ஸலபி ஆகியோரின் ஆக்கங்களில் இருந்து தொகுக்கப்பட்டது.


with peace,
Shahjahan bin Mohamed Umer
+91 81972 81300 
Banglore
"Help People"
இரு மனிதர்களுக்கிடையில் நியாயமாக நடந்து கொள்வது ஒரு தர்மமாகும்.
வாகனத்தின் மீது ஏறுகின்ற ஒருவரை அதன் மீது ஏற்றி விடுவது ஒரு தர்மமாகும்.
அதுபோலவே அதன் மீது அவருடைய சுமைகளை ஏற்றி விடுவதும் ஒரு தர்மமாகும்.
ஒரு நல்ல வார்த்தை பேசுவதும் ஒரு தர்மமாகும்.
தொழுகைக்காக நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் ஒரு தர்மமாகும்.
ஊறு விளைவிக்கக் கூடிய பொருளொன்றை நடைபாதையிலிருந்து அப்புறப்படுத்துவதும் ஒரு தர்மமாகும்.
- நபி (ஸல்) ,
நூற்கள்: புகாரி,

Don't forget to Do Exercise daily 30 min for healthy life

நல்ல தகவல்களை நாலு பேருடன் பகிருங்கள் நண்பர்களே...
தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்



--
*more articles click*
www.sahabudeen.com



No comments: