வீட்டை சுத்தம் செய்யணுமா? கோலா வெச்சு ட்ரை பண்ணுங்க…
குளிர்பானங்களில் ஒன்றான கோலா, குடிப்பதற்கு மட்டும் தான் பயன்படுத்த முடியுமா என்ன? இல்லை அதனை வைத்து வீட்டை சுத்தப்படுத்தலாம். சொல்லப்போனால் கோலாவும் ஒரு வகையான வீட்டை சுத்தப்படுத்தும் பொருட்களில் ஒன்றாகவும் பயன்படுத்தலாம். ஆகவே அடுத்த முறை கோலாவை வாங்கி முற்றிலும் குடித்துவிடாமல், சிலவற்றை சேமித்து வைத்து, வீட்டை சுத்தப்படுத்தலாம். அத்தகைய கோலா கறை போகாத, அழுக்கு நிறைந்த பொருட்களை எளிதில் சுத்தப்படுத்தும். அத்தகைய கோலாவை எவற்றிற்கெல்லாம் பயன்படுத்தலாம் என்று பார்ப்போமா!!!
* சமைப்பதற்கு அடுப்பில் அடிக்கடி வைத்து, அதனால் கருப்பாக மாறிய பாத்திரங்களை கூட, கோலாவை வைத்து சுத்தம் செய்தால் எளிதில் அந்த கருப்பானது போய்விடும். ஆகவே பாத்திரங்களை புத்தம் புதிது போல் மாற்றுவதற்கு சிறந்த பொருளில் கோலாவும் ஒன்றாகிவிட்டது. அதிலும் அந்த கருப்பான பாத்திரத்தை சுத்தம் செய்வதற்கு, அந்த பாத்திரத்தில் கோலாவை விட்டு, அடுப்பில் வைத்து, தீயை குறைவில் வைத்து விடவும். பின் 15 நிமிடங்கள் கழித்து அதனை இறக்கி தேய்த்தால், அதில் உள்ள கருப்பு நீங்கி புத்தம் புதிதாக மாறிவிடும்.
* துணிகளில் ஏதேனும் கறை படிந்துவிட்டால், உடனே கடைகளில் விற்கும் கறைகளை நீக்கும் பொருளை வாங்கி நீக்குவோம். ஆனால் அவற்றை விட இந்த கோலாவை பயன்படுத்தி துவைத்தால், துணிகளில் ஏற்பட்ட கறைகளை காணவே முடியாது.
சிலசமயங்களில் துணிகளில் இரத்தக் கறை அல்லது கிரீஸ் கறைகள் படிந்துவிட்டால், அப்போது ஒரு சிறிய துணியில் கோலாவை நனைத்து, நீக்கலாம். வீட்டில் வாஷிங் மிஷின் பயன்படுத்துபவர்கள் என்றால் துணிகளோடு சிறிது கோலாவை ஊற்றி, சோப்பு பவுடரை போட்டு துவைத்தால், கறைகள் சுத்தமாக போய்விடும். அதுமட்டுமல்லாமல், கடைகளில் விற்கும் பொருட்களை வாங்கி கறைகளை நீக்கினால், கறை ஏற்பட்ட இடம் நன்கு தெரியும், ஆனால் கோலாவை வைத்து பயன்படுத்தினால், அந்த கறை எங்கு ஏற்பட்டது என்று கண்டுபிடிக்கவே முடியாது. www.sahabudeen.com
* கோலாவை வைத்து வாஷ்பேஷன், பாத் டியூப், டாய்லட் போன்றவற்றை கூட சுத்தம் செய்யலாம். அதற்கு கோலாவை அவற்றிலெல்லாம் ஊற்றி 20-30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்னர் டாய்லட் பிரஷ் வைத்து தேய்த்து, தண்ணீர் ஊற்றினால், புத்தம் புதிது போல் மின்னும்.
* ஏதேனும் துரு பிடித்த பொருட்களை இருந்தாலம் அவற்றையும் கோலாவால் சுத்தம் செய்ய முடியும். அதற்கு கோலாவை, இரவில் படுக்கும் முன் துருப்பிடித்த பாத்திரத்தில் ஊற்றி ஊற வைத்து, மறுநாள் காலையில் தேய்த்தால், துரு எளிதில் போய்விடும்.
* கண்ணாடிப் பொருட்களை கோலாவை வைத்து சுத்தம் செய்தால், அதில் படிந்திருக்கும் தூசிகள் எளதில் நீங்கிவிடும். இது ஒரு சிறந்த கிளாஸ் கிளீனர். ஆகவே கோலாவை ஒரு காட்டனில் தொட்டு, கண்ணாடியை துடைத்தால், கண்ணாடி நன்கு மினுமினுப்போடு இருக்கும்
--
*more articles click*
www.sahabudeen.com
No comments:
Post a Comment