கொடூர நோய்களை பரப்பும் பி.டி மஞ்சள் வாழைப்பழம் – ஓர் அதிர்ச்சி தகவலும் ! நல்ல வாழைப்பழத்தின் ஒரு இனிப்பான தகவலும்.....
முன்பெல்லாம் டாக்டர்கள் தினமும் ஓரு வாழைப்பழமாவது சாப்பிடுங்கள், உடம்புக்கு ரொம்ப நல்லது என்பார்கள். ஆனால் தற்போது மரபணு மாற்று பெரிய மஞ்சள் வாழைபழத் தை சாப்பிடவே வேண்டாம் என்று எச்சரிக்கிறார்கள்.
காரணம் தற்போது சென்னை வாசிகள் பெரும்பாலோர் உட லில்-தொண்டையில் அலர்ஜி, சைனஸ், தும்மல், வயிற்றுக் கோளாறு, வயிற்றுவலி, சிறுநீரக கற்கள், அடிக்கடி தலைவலி, புட் பாய்சன், என்று கடுமையாக அவதிப்படுகிறார்கள். இவர்க ளை நோயாளிகளாக மாற்றியது இந்த மரபணு மாற்று மஞ்சள் வாழைப்பழங்கள் தான்.
இயற்கையான வாழைப்பழம் பழுத்தால் இரண்டொரு நாளில் அழுகிவிடும். இயற்கையான மஞ்சள், பச்சை வாடன், ரஸ்தாளி, மலைபழம், தேன்கதளி, நாட்டுப் பழம், நாட்டுச்சக்கைப்பழம், கற்பூர வள்ளி, ஏலக்கி ஆகிய வாழைப் பழங்கள் மணமாகவும், நல்ல ருசி யாகவும் இருக்கும்.
இந்த பழங்கள் உடம்புக்கு சத்தாகவு ம், மற்ற உணவை செரிமானமாக்க வும் பயன்படும். மலச்சிக்கலால் பாதிக்கப்படுவோரும் தினமும் இரவில் வாழைப்பழம் சாப்பிடு வார்கள்.
பொதுவாக இயற்கையான வாழை ரகங்களில் நோய் தொற்று ஏற்படு ம். இவற்றை பூச்சுக் கொல்லிகளை பயன்படுத்தி நோயை கட்டுப்படுத்த வேண்டும். இந்த ரகங்களை பழுத்த உடன் நாம் சாப்பிடுவது வழக்கம்.
பூச்சிக்கொல்லிகளை அழிப்பதற்கு பதிலாக பூச்சிகளை கொல் லும் விஷச்சத்தை வாழைமரத்தின் மரபணுவில் செலுத்தி அமெ ரிக்க விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர்.இதைத் தான் நாம் பி. டி.வாழை என்று அழைக்கிறோம். கேவின் டிஷ் என்ற பெயருடன் இந்த மரபணு மாற்று வாழைப்பழம் நம்மூரில் கள்ளத்தனமாக விற்கப்படுகிறது. இப்பழங்களில் விஷத்தன்மை மிக அதிகமாக இருப்பதால் அமெரிக்காவில் இந்த வாழைப்பழம் பயிரிடவோ விற்கவோ அனுமதிக்கப்படவில்லை.
ஏழ்மையிலும் பசிபட்டினியிலும் வாடும் ஆப்பிரிக்க நாடு உகாண்டா. இங்குதான் முதன் முதலில் 2007 -ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் உகாண்டா அதிபரை மிரட்டி அந்நாட்டின் பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டு வர செய்து பி.டி. வாழை எனப்படும் கேவின் டிஷ் வாழைப்பழத்தை முதன் முதலில் பயிரி ட செய்தார்.
நோய்களை பரப்பும்:
உகாண்டாவில் பயிரிடுவதற்கு முன்பாகவே இந்தியாவில் சர்வ தேச கம்பெனிகள் இந்திய நிறுவனங்களி ன் துணையுடன் கள்ளத் தனமாக இவ் வகை மரபணு மாற்று பி.டி. கேவின்டிஷ் வாழைப் பழத்தை பயிரிடவும் விற்பனை செய்யவும் ஆரம்பித்து விட்டனர்.
இந்த கேவின்டிஷ் மரபணு மாற்று மஞ்சள் வாழைப்பழம் பெங்களூர் வாழை ப்பழம் என்ற பெயரில் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் விற்கப்படுகி றது. முதலில் சென்னையில் சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலை யத்தில் பெங்களூர் வாழைப்பழம் என்ற பெயரில் இந்த பி.டி. வாழைப்பழம் விற்கப்பட்டது. மக்களுக்கோ, வியாபாரிகளுக்கோ இதன் கொடூரத்தன்மை பற்றி எதுவும் தெரியாததால் சென்னை முழுவதும் இந்த வாழைப்பழ விற்பனை விரிவு படுத்தப்பட்டது.
மாதக்கணக்கில் வைத்திருந்து விற்றாலும் கெட்டுபோகாது என் ற ஆசை வார்த்தை கூறி வியாபாரி கள் இந்த மரபணுமாற்று கேவின் டிஷ் வாழைப்பழத்தை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள். இதனால் சென்னையில் முக்கிய கம்பெனிகளின் சூப்பர் மார்க்கெட் டுகளில் வாழைப்பழம் மட்டுமே விற்கும் நிலை உள்ளது. மதுரை, சேலம், கோவை, நெல் லை போன்ற நகரங்களில் இந்த பி.டி. மரபணு மாற்று வாழைப்பழம் அறிமுகப்படுத்தப்பட்டாலும் இதற்குபோதிய வரவேற்பு இல்லை. இந்த மரபணு மாற்று வாழைப்பழம் இயற்கை வாழைப்பழம் போல் ருசியாக இருக்காது.
இதனால் மற்ற நகரங்களில் இதனை யாரும் வாங்கவில்லை. எனவே சென்னையில் அறிவிக்கப்படாத தடைபோல வேறு இயற் கையான வாழைப்பழமே விற்காத வண்ணம், சர்வதேச நிறுவன ங்கள் கேவின்டிஷ் வாழைப்பழம் மட்டுமே விற்கும் வண்ணம் ரகசியமாக சதி செய்துவிட்டன. இதற்கு கார்ப்பரேட் கம்பெனிகள் பெரிதும் உதவியாக உள்ளன.
பி.டி. கத்தரிக்காய்க்கே இன்னும் இந்திய அரசு முழுமையான அனும தி வழங்கவில்லை. பி.டி.ரக மரப ணு காய்கறி, பழங்கள், உயிரை மெல்லமெல்ல கொல்லும் விஷமாகும். ஒருமுறை மட்டும் காய் த்து கனியாகும்.
செயற்கையாக மலட்டுத்தன்மை ஆக்கப்பட்ட மரபணு மாற்று காய் கறி பழங்களை தொடர்ந்து சாப்பிட் டால் மலட்டுத்தன்மை ஏற்படுவதோ டு, கேன்சர், செரிமான கோளாறு, தோல்நோய், சிறு நீரக நோய்கள், அலர்ஜி போன்றவை உண்டாகும்.
இந்நிலையில் இந்திய அரசிடமோ, விவசாயத்துறையிடமோ, பல்கலை கழகங்கள், ஆராய்ச்சி சாலைகளிலோ எந்தவித அனுமதி யும் பெறாமல் கேவின்டிஷ் மஞ்சள் வாழைப்பழம் பெங்களூர் வாழை ப்பழம் என்ற பெயரால் விற்பனை செய்யப்படுகிறது.
எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது?
பெங்களூர் வாழைப்பழம் என்று விற்பனை செய்யப்படும் மரபணு மாற்று பி.டி. ரக மஞ்சள் வாழைப்பழம் காட்டு கொட்டை வாழை யில், மீன் சோளம், காட்டுமொச்சை இவற்றின் மரபணுவை புகுத்தி கண்டு பிடிக்கப்ப ட்டதாகும்.
இயற்கையான வாழை ரகங்கள் வாழையடி வாழையாக வாழை மரத்தின் கிழங்கிலிருந்து செடி வளரும். அதனை பிரித்து நட்டா லே புதிய வாழையை பயிர் செய்ய முடியும். ஆனால் பி.டி. ரக கேவின்டிஷ் வாழை ஒரு முறை மட்டுமே காய்க்கும் வண் ணம் மரபணுவில் மாற்றம் செய்யப் பட்டு செயற்கையாக மலடாக்கப்பட்ட தாகும். எனவே விவசாயிகள் தாமாக வே மறுதடவை பயிர் செய்ய முடியா து.
திசுவளர்ப்பு முறையில் செடி வாழை சர்வதேச கம்பெனிகளின் ஏஜெண்டுகளால் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு பயிரிட வழங் கப்படுகிறது. இவ்வகை பி.டி. ரக மரபணு மாற்று வாழையை தொடர்ந்து தோட்டத்தில் பயிர் செய்தால் அந்த நிலத்தில் உள்ள நன்மை செய்யும் புழு, பூச்சிகள், பாக்டீரியாக்கள் மொத் தமாக அழிக்கப்பட்டு அந்த நிலம் எந்த பயிரும் வைக்க முடியாத வண்ணம் பாலைவனமாக மாறிவிடும் என்கிறார் டாக்டர் திருத்தணிகாசலம்.
இதுவரை வாழைப்பழ ரகத்தில் உள்ள அதிர்ச்சியான கெடுதல்களை பார்த்தோம் இனி நல்ல செய்தியினையும் பார்ப்போம்
வாழைப்பழத்தில் ஜப்பானின் சமீபத்திய கண்டுபிடிப்பு..!
என்னவென்றால்...
வாழைப்பழத்தில் மஞ்சள் நிற தோலில் கரும்புள்ளிகள் அல்லது கரிய தடங்கள் எவ்வளவுக்கெவ்வளவு காணப்படுகிறதோ அந்த அளவுக்கு அதில் அதிகமான TNF (Tumor Necrosis Factor) என்ற நன்மையானபொருள் ஒன்று உருவாகி, அது நம் உடலில் உள்ள செல்களை பாதுகாப்பதுடன் மிக அருமையான கேன்சர் நோய் எதிர்ப்பு சக்தியாக மாறுகிறதாம்..! அதுமட்டுமில்லாது... பச்சை தோலை விட கரிய தடங்கள் கொண்ட மஞ்சள் தோல் வாழைப்பழம், இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் செயல்பாட்டை ஊக்குவிப்பதில் 8 மடங்கு சிறப்பானதாம்..!
ஆகவே... கரிய புள்ளிகள்/தடங்கள் கொண்ட மஞ்சள் தோல் வாழைப்பழம் ஒன்றை தினமும் சாப்பிட்டு நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொள்வோம் சகோஸ்..!
ஒரு நாளைக்கு 3 வாழைப்பழம் ஏன் சாப்பிடவேண்டும்?
நாளொன்றுக்கு 3 வாழைப்பழங்கள் சாப்பிடுவதால் "ஸ்ட்ரோக்' ரிஸ்க் குறைகிறது என்று பிரிட்டிஷ் மற்றும் இத்தாலிய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
காலை உணவு, மதிய உணவு பிறகு மாலையில் ஒரு வாழைப்பழம் என்று நாளொன்றுக்கு 3 வாழைப்பழங்கள் சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான பொட்டாசியத்தை வழங்கி அதன் மூலம் மூளையில் ரத்தக் கட்டு ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது என்கின்றனர் இந்த ஆய்வாளர்கள்.
எனவே வாழைப்பழம் உள்ளிட்ட பொட்டாசியம் அதிகம் உள்ள உனவுப்பொருட்களான பசலைக்கீரை, பால், மீன், உள்ளிட்ட உணவுப்பொருட்களை எடுத்துக் கொண்டால் ஸ்ட்ரோக்கிலிருந்து தப்பிக்கலாம் என்றே கூறுகின்றனர் இந்த ஆய்வாளர்கள்.
வாழைப்பழங்கள் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் என்று இதற்கு முந்தைய ஆய்வுகள் தெரிவித்துள்ள நிலையில், தற்போது இந்த ஆய்வு முடிவுகள் மேலும் வாழைப்பழ உபயோகத்தை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கபப்டுகிறது.
தினசரி பொட்டாசியம் அளவு 1,600மிலி கிராம் இருந்தாலே போதுமானது ஸ்ட்ரோக் ரிஸ்க் குறைகிறது!
ஒரு வாழைப்பழத்தில் சராசரியாக 500மிலி கிராம் பொட்டாசியம் உள்ளது. இது ரத்த அழுத்தத்தை சரியாக வைத்திருப்பதோடு உடலில் திரவங்களின் சமச்சீர் தன்மையையும் பாதுகாக்கிறது.
பொட்டாசியம் சத்து குறைவாக இருந்தால் சீரற்ற இருதயத் துடிப்பு, வாந்தி, வயிற்றுப் போக்கு ஆகியவை ஏற்படும்.
பொட்டாசியம் அளவுடனான உணவுவகைகளை எடுத்துக் கொள்வதில் அனைத்து நாட்டு மக்களுமே பின் தங்கியுள்ளனர்.
பொட்டாசியம் அளவை பரிந்துரைக்கப்பட்ட அளவில் ஏற்றி, உப்பைத் தவிர்த்து வந்தால் ஸ்ட்ரோக்கினால் ஏற்படும் சாவுகளை பாதியாகக் குறைக்கலாம் என்கின்றனர் இந்த ஆய்வாளர்கள்.
இந்த ஆய்வு அமெரிக்கன் காலேஜ் ஆஃப் கார்டியாலஜி நடத்தும் இதழில் வெளியாகியுள்ளது.
--
*more articles click*
www.sahabudeen.com
No comments:
Post a Comment