Sunday, July 14, 2013

முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்க

முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்க

தற்போது அழகாக இருக்கும் முகத்தின் அழகை கெடுப்பதில் கரும்புள்ளிகளும் ஒன்று. அதிலும் இந்த பிரச்சனை டீனேஜ் வயதினரையே அதிகம் பாதிக்கிறது.
அது ஆண்களானாலும் சரி, பெண்களானாலும் சரி. அவ்வாறு கரும்புள்ளிகள் வந்துவிட்டால், அதைப் போக்குவது என்பது கடினம்.

கரும்புள்ளிகள் கூட ஒரு வகையான பருக்கள் தான். இத்தகைய கரும்புள்ளிகளை நீக்க சிறந்த வழி என்றால் அது முகத்தில் அதனை போக்க பயன்படுத்தும் ஃபேஸ் மாஸ்க் தான்.

மேலும் ஃபேஸ் மாஸ்க்கை போட, கடைகளில் விற்கும் கெமிக்கல் கலந்த பொருட்களை பயன்படுத்துவதை விட, வீட்டிலேயே இருக்கும் பொருட்களை வைத்தே, அதனை ஈஸியாக நீக்கலாம்.

இத்தகைய இயற்கை பொருட்களை பயன்படுத்தினால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் போவதோடு, சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள், முகத்துளைகளில் இருக்கும் அழுக்குகள் மற்றும் அதிகப்படியான எண்ணெய் போன்றவை எளிதில் போய்விடும்.

முட்டை சருமத்திற்கு மிகவும் சிறந்த பொருள். அதனை சருமத்திற்கு பயன்படுத்தினால் சருமம் பொலிவு பெறுவதுடன், முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளும் போய்விடும்.

அதற்கு முட்டையின் மஞ்சள் கருவுடன், ஜெலட்டின் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் பாலை சேர்த்து, 1 நிமிடம் சூடேற்றவும். பின் அதனை நன்கு பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும்.

பின் அதனை முகத்திற்கு தடவி, 5-10 நிமிடம் காய வைக்க வேண்டும். பிறகு அதனை முகத்தில் இருந்து விரல்களால், உரித்து எடுக்கவும். பின் முகத்தை குளிர்ந்த நீரால் தடவவும். இவ்வாறு செய்து வந்தால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் போவதோடு, சருமமும் இறுக்கமடையும்.

எலுமிச்சை சாற்றில் இருக்கும் ஆல்பா ஹைட்ராக்ஸி ஆசிட் சருமத்தில் இருக்கும் பாக்டீரியா, கிருமிகள் போன்றவற்றை அழிப்பதோடு, சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள், கரும்புள்ளிகளை எளிதில் நீக்கிவிடும்.

மேலும் எலுமிச்சை சாற்றை முட்டையின் வெள்ளை கருவோடு கலந்து பேஸ்ட் செய்து முகத்திற்கு தடவி, 10 நிமிடம் கழித்து, அதனை முகத்தில் இருந்து உரித்துவிட வேண்டும். பின் அதனை மைல்டு ஃபேஸ் வாஷால் கழுவி விட வேண்டும். இதனால் அழுக்குகள் மற்றும் அதிகப்படியான எண்ணெய்கள் நீங்கிவிடும். www.sahabudeen.com

 

ஆரஞ்சு பழத்தின் தோலை காய வைத்து, பொடி செய்து, பாலுடன் கலந்து பேஸ்ட் போல் செய்து முகத்திற்கு தடவ வேண்டும். வேண்டுமென்றால் அதில் சிறிது எலுமிச்சை சாற்றையும் சேர்த்து கலந்து தடவலாம்.

அவ்வாறு அதனை தடவி 10-15 நிமிடம் காய வைத்து, பின் அதனை நீக்கிவிட்டு, வெதுவெதுப்பான நீரால் முகத்தை கழுவவும். முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை நீக்க பெரும்பாலோனோர் இந்த முறையையே அதிகம் பயன்படுத்துகின்றனர்.

மேற்கூறியவற்றையெல்லாம் செய்து வந்தால், முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் போவதோடு, மற்ற பிரச்சனைகளும் வராமல் இருக்கும்.

முக்கியமாக முகத்தை கழுவியப் பின், முகத்தில் அரிப்புகள் எதுவும் ஏற்படாமல் இருக்க கிளின்சரை வைத்து ஒருமுறை கழுவி விட வேண்டும். இதனால் முகமானது நன்கு பொலிவோடு, மிருதுவான சருமத்தோடு அழகாக இருக்கும்.

http://www.yarlminnal.com/?p=4292



--
*more articles click*
www.sahabudeen.com


No comments: