Sunday, September 29, 2013

வேலைதான் உலகமா?

வேலைதான் உலகமா?

முன்பு ஒரு டீமில் வேலை செய்து கொண்டிருந்தேன். முன்பு என்றால் இதற்கு முந்தைய நிறுவனத்தில். கடும் உழைப்பாளிகளால் நிரம்பிய டீம் அது. அவர்களின் கணக்குப்படி திங்கட்கிழமை காலையில் அலுவலகம் வந்து செவ்வாய்க்கிழமை இரவு வீட்டுக்குத் திரும்பினால் அது 'நார்மல்' டைம். அதுவே புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை வரைக்கும் இழுத்தால் 'ஓவர்'டைம். இந்த டீமில் கொஞ்ச நாட்கள்தான் வேலையில் இருந்தேன். அவ்வளவு நாட்கள்தான் இருக்க முடியும். பிறகு அலர்ஜியாகத் தொடங்கிவிட்டது. 

 

அப்பொழுது அலுவலகம் ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸில். மாலை நேரத்தில் வெளியே வந்து நின்றால் இரண்டு கண்கள் போதாது. அப்போதைக்கு எவனாவது தனது கண்களை இரவலாகக் கொடுத்தால் கூட தேவலாம் என்றிருக்கும். அத்தனை சிட்டுக்கள்.  ஆனால் திருந்தாத ஜென்மங்கள் - டீமில் இருந்தவர்கள்- அவர்களும் வெளியே வரமாட்டார்கள் என்னையும் விடமாட்டார்கள். எத்தனை காலம்தான் பொறுத்துக் கொள்வது? எப்படியாவது இந்த டீமை விட்டு வெளியேறி விட வேண்டும் என்று சமயம் பார்க்கத் தொடங்கியிருந்தது மனம். வேறு ப்ராஜக்ட் கொடுங்கள் என்று நச்சரிக்கத் துவங்கியிருந்தேன். இரண்டு மாதம் பொறுத்துக் கொள், மூன்று மாதம் பொறுத்துக் கொள் என்று இழுத்தடித்துக் கொண்டிருந்தார்கள். அழுந்தி கடித்துக் கொண்ட பற்களுக்கடியில் நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. நாட்கள்தான் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தனவே தவிர முடி தாறுமாறாகக் கொட்டத் தொடங்கியிருந்தது. தலைக்கு மேல் அத்தனை அழுத்தம்.

 

அந்த டீமின் மேனேஜரே அப்படித்தான். கல்லூரி முடித்தவுடன் நேரடியாக அந்த நிறுவனத்தில்தான் வேலைக்குச் சேர்ந்திருந்தார். புதுசுக்கு வண்ணான் கடுசுக்கு வெளுத்த கதையாக நாயாக பேயாக வேலை செய்யத் துவங்கியவர் பன்னிரெண்டு வருடங்களாக அப்படியே தொடர்ந்து கொண்டிருந்தார். ஒரே நிறுவனம். பன்னிரெண்டு வருட உழைப்பு. மடமடவென மேலே வந்துவிட்டார். மேலாளரும் ஆக்கிவிட்டார்கள். மேலே வந்துவிட்ட தலைக்கனம் எதுவும் இருக்காது. நல்ல மனிதர்தான். அடுத்தவனுக்கு எந்தத் தொந்தரவும் கொடுக்க மாட்டார். டீமில் யாராவது ஏமாற்றினால் கூட தானே இழுத்துப் போட்டு வேலை செய்யும் இனாவானாவாகவும் இருந்தார்.

 

இப்பேர்ப்பட்ட ஆளிடம் நான்கைந்து Freshers ஐ நிறுவனம் கொடுத்திருந்தது. தானும் கெட்டதுமில்லாமல் அவர்களையும் கெடுத்துவிட்டார். இருபத்தி நான்கு மணிநேரமும் ஆபிஸில் தவம் கிடப்பதே தாங்கள் செய்த முன்ஜென்ம புண்ணியம் என்ற நினைப்புக்கு வந்துவிட்டார்கள் அந்தப் பொடியன்கள். இந்த அக்கப்போரான படைக்குள்தான் நான் வந்து சிக்கிக் கொண்டேன். ஆப்பசைத்த குரங்கு தனது வாலைத்தான் சந்துக்குள் சிக்க வைத்தது- ஆனால் எனக்கு ஏதேதோ சிக்கிக் கிடந்தது. வெளியே வர முடியவில்லை.

 

ஆறு மாதத்திற்கு பிறகு 'ஒன்று டீம் மாற்றுங்கள்; இல்லையென்றால் நான் கம்பெனியை மாற்றுகிறேன்' என்று சொன்ன பிறகுதான் மெதுவாக தலையை அசைக்கத் துவங்கினார்கள். ஆனால் அதற்குள் ஒரு வழியாகியிருந்தேன். அலுவலகத்திலேயே தூங்கிக் கொள்வது, நாற்றம் பிடித்த ஷூக்காலுடனேயே இரவு முழுவதும் அலைவது, பல் விளக்காமல் அடுத்த நாளைத் தொடர்வது போன்ற சூட்சமங்களைக் கற்கத் துவங்கிய பருவம் அது. இரவு தங்க வேண்டிய அளவுக்கு வேலை இல்லாவிட்டாலும் கூட மற்றவர்களுக்காகத் தங்க வேண்டியிருந்தது. கூட இருப்பவன் பல் கூட துலக்காமல் அலுவலகத்தில் இருக்கும் போது நாம் மட்டும் வீட்டிற்கு போய் தினமும் குளித்துவிட்டு வருவது குற்றவுணர்ச்சியைத் தரத் தொடங்கிவிட்டது. அதுவும் இல்லாமல் அவர்களுக்கு மட்டும் ப்ரோமோஷனும், சம்பள உயர்வும் வந்துவிட்டால் என்ற வயிற்றெரிச்சல் வேறு. அலுவலகத்தில் பலியாகக் கிடந்து கொண்டிருந்தோம்.

 

இத்தனைக்கும் அப்பொழுது எனக்கு திருமணம் ஆகியிருக்கவில்லை. எனக்காக யாரும் காத்திருக்கமாட்டார்கள்தான் ஆனாலும் அலுவலகத்திலேயே தங்கிக் கொள்வது மன உளைச்சலை உருவாக்கத் துவங்கியிருந்தது. மாலை நேர வெயிலைப் பார்த்தே பல மாதங்கள் ஆகிவிட்டது என்பதை நினைத்த போது டார்ச்சராக இருந்தது.

 

ஆனால் அவர்களுக்கு இதெல்லாம் பெரிய பிரச்சினையாகவே தெரியவில்லையோ என்று தோன்றும். அவ்வளவு ஒன்றிக் கிடந்தார்கள். நடுச்சாமத்தில் சிப்ஸ் கொறிப்பார்கள், திடீரென்று நினைத்த நேரத்தில் பீட்ஸா ஆர்டர் செய்வார்கள். உட்கார்ந்த இடத்திலேயே தின்றுவிட்டு அப்படியே வேலையைத் தொடர்வார்கள். இடையிடையே சிகரெட் பிடிக்கப் போவார்கள். டீயைக் குடித்துக் கொண்டே சிகரெட்டை உறிஞ்சுவார்கள். தூக்கம் வரும் போது டேபிளில் தலை வைத்து தூங்கி எழுவார்கள். தலை கூட வாராத இந்த ஸ்டைல்தான் வாழ்க்கை முறை என்றாகியிருந்தது.

 

மேனேஜரின் மனைவியையும் குழந்தையையும் நினைத்தால் பாவமாக இருக்கும். அவர்கள் இவரை மறந்து தொலைத்துவிட்டால் என்ன செய்வார் என்று தோன்றும். ஆனால் அது அவருக்கு ஒன்றும் பெரிய பிரச்சினையாக இருக்காது. உண்மையில் அலுவலகம்தான் அவரது மனைவி. அதனால் இன்னும் வசதியாகப் போய்விடும். மொத்தமாக இங்கேயே கூடத் தங்கிக் கொள்வார்.

 

workholic என்பதை முழுமையாக உணரத் துவங்கியிருந்தேன். நல்ல சோறு கிடையாது, மனிதனின் வழக்கமான அன்றாட நடவடிக்கைகள் கிடையாது, வெளியுலகம் கிடையாது, வேறு எந்த நினைப்பும் கிடையாது, -  வேலை, வேலை, கம்ப்யூட்டர். அது மட்டும்தான். ஆனால் அதைத்தான் பெருமையாக நினைத்தார்கள். மேலிடத்திலிருந்து ஒற்றைவரி மின்னஞ்சல் வந்தால் கூட பெரிய கவுரவமாகக் கருதினார்கள். அலுவலகத்தில் வெல்வதுதான் வாழ்க்கையை வெல்வது என்பதான கருத்தாக்கம் அவர்களுடையது.

 

அந்த டீமில் மொத்தமாக ஏழெட்டு மாதங்கள்தான் இருந்தேன். அதுவும் பெரிய ஒட்டுதலில்லாமலேயே இருந்ததால் அந்த டீமில் நான் வேலை செய்த உணர்வே கிடையாது. அதனால்தான் அவர்களைப் பற்றி இதுவரைக்கும் யோசித்ததே இல்லை. இப்பொழுது நினைக்க வேண்டியதாகிவிட்டது. 

 

இந்த வார ஞாயிற்றுக்கிழமையில் தனசேகர் அழைத்திருந்தார். தமிழர். அவர் இன்னும் அதே நிறுவனத்தில்தான் இன்னும் இருக்கிறார். ஆனால் வேறு ப்ராஜக்டில் இருக்கிறார். பேச்சுவாக்கில் என் பழைய மேனேஜர் இறந்துவிட்டதாகச் சொன்னார். சற்று அதிர்ச்சியாக இருந்தாலும் முழு விவரம் கேட்பதற்கு மனம் விரும்பியது. 

 

அவர்களுக்கு கடந்த வார இறுதியில் ஏதோ ப்ராஜக்ட் deployment இருந்திருக்கிறது. வழக்கம் போல தூக்கம் கெட்ட இரவுகள். நேரம் கெட்ட நேரத்தில் உணவுகள். deploymentக்கு பிறகாக வந்த சில Production issues, எஸ்கலேஷன். வெறித்தனமாக தூக்கம் கெட்டு மூன்று நாட்களுக்கு பிறகு வீட்டிற்கு போய் படுத்திருக்கிறார். படுத்தவர்தான். எழுந்திருக்கவேயில்லையாம். ஹார்ட் அட்டாக். வயது நாற்பதைத் தொடுவதற்கு முன்பாகவே வாழ்க்கை வாரிக் கொண்டுவிட்டது. அலுவலக நண்பர்கள் மலர்மாலையோடு போயிருந்த போது தலைமேட்டில் குழந்தையும் மனைவியும் அழுது கொண்டிருந்தார்களாம். 

 

தகவலைக் கேட்ட பிறகு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. அந்த மனிதன் தன் வாழ்வில் அனுபவித்தது என்னவாக இருக்கும் என்று யோசித்தால் வெறும் பூச்சியம்தான் தெரிந்தது. ஆனால் அவருக்காக நம்மால் செய்ய முடிந்தது ஒன்றும் இல்லை. மற்றபடி என்னளவில் ஒன்றைச் செய்யலாம் என நினைக்கிறேன். நாளையிலிருந்து சூரியன் அடங்குவதற்கு முன்பாக வீடு திரும்பி விட வேண்டும். அவ்வளவுதான்.

http://www.nisaptham.com/2013/09/blog-post_25.html



--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

Fwd: {TamilTafseer} சுவர்க்கம் பூமியில் விற்க்கப்படும் (தொடர் -3) - ஹஸனீ



--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

மஸ்ஜிதினுள் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குமுறைகள்!

மஸ்ஜிதினுள் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குமுறைகள்!

மஸ்ஜிதினுள் செல்லும் போது ஆடையால் அழகு படுத்திக்கொள்வது அவசியம்! அரை நிர்வானமாக செல்வது கூடாது!
"ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள்" (7:31)
துர்வாடையுடன் மஸ்ஜிதுக்கு வரக்கூடாது!
"பூண்டு, வெங்காயம் ஆகியவற்றைச் சாப்பிடுகிறவர் நம்முடைய பள்ளியைவிட்டு விலகி அவரின் இல்லத்திலேயே அமர்ந்து கொள்ளட்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி), ஆதாரம்: புகாரி
(குறிப்பு: பீடி, சிகரெட்டின் துர்வாடையுடன் பள்ளிக்கு வருபவர்கள் மேற்கண்ட ஹதீஸை நினைவு படுத்திக்கொள்ளட்டும்)
பெண்கள் நறுமணம் பூசிக்கொண்டு பள்ளிக்கு வருவது கூடாது!
"அல்லாஹ்வின் அடிமைகளாகிய பெண்களை மஸ்ஜிதுகளுக்குச் செல்வதிலிருந்து தடுத்து வைக்காதீர்கள். அவர்கள் நறுமணம் பூசிக்கொள்ளாமல் செல்லவேண்டும்'. அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி), ஆதாரம்: அபூதாவுத், அஹ்மத்   'நறுமணம் பூசிய பெண்கள் நம்முடன் இரவுத் தொழுகையில் கலந்துக் கொள்ளக் கூடாது" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி), ஆதாரம்: முஸ்லிம், அபூதாவுத், நஸயீ.
மஸ்ஜிதினுள் நுழையும் போது ஓத வேண்டிய துஆ!
'அல்லாஹூம்ம ஃபதஹ் லீ அப்வாப ரஹ்மதிக' அறிவிப்பவர்: அபூஉஸைத் (ரலி): ஆதாரம்: முஸ்லிம்.
மஸ்ஜிதினுள் நுழைந்தவுடன் காணிக்கை தொழுகையை நிறைவேற்ற வேண்டும்!
'நீங்கள் பள்ளியினுள் நுழைந்தால் இரண்டு ரக்அத் தொழாமல் அமர வேண்டாம்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி); ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.
நபி (ஸல்) அவர்கள் ஜுமுஆ நாளில் உரையாற்றிக்கொண்டிருக்கையில் ஒரு மனிதர் (பள்ளிக்கு) உள்ளே வந்(து தொழாமல் அமர்ந்)தார். உடனே நபி (ஸல்) அவர்கள் (அவரிடம்), "நீர் தொழுதுவிட்டீரா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர், "இல்லை" என்றார். "(எழுந்து) இரண்டு ரக்அத்கள் தொழுவீராக!: என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி),  ஆதாரம்: புகாரி
அல்லாஹ்வின் சின்னங்களை கண்ணியப்படுத்துவது உள்ளச்சத்தின் வெளிப்பாடு ஆகும்!
"இதுதான் (இறைவன் வகுத்ததாகும்,) எவர் அல்லாஹ்வின் சின்னங்களை மேன்மை படுத்துகிறாரோ நிச்சயமாக அது உள்ளச்சத்தால் (ஏற்பட்டது) ஆகும்." (22:32)
மஸ்ஜிதினுள் எச்சில் / சளியை துப்புவது கூடாது!  
கிப்லாத் திசையில் (உள்ள சுவற்றில்) நபி(ஸல்) அவர்கள் சளியைக் கண்டார்கள். இது அவர்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியது. அதன் பிரதிபலிப்பு அவர்களின் முகத்திலும் காணப்பட்டது. அவர்கள் எழுந்து தம் கையால் அதைச் சுரண்டினார்கள். 'நிச்சயமாக உங்களில் ஒருவர் தொழுகையில் நிற்கும்போது அவர் தம் இறைவனிடம் அந்தரங்கமாக உரையாடுகிறார். அவருக்கும் கிப்லாவுக்கும் இடையே அவரின் இறைவன் இருக்கிறான். எனவே எவரும் கிப்லாத் திசை நோக்கி உமிழக் கூடாது! தங்களின் இடப்புறமோ, தம் பாதங்களுக்கு அடியிலோ அவர் உமிழ்ந்து கொள்ளட்டும்!" என்று நபி(ஸல்) கூறிவிட்டுத் தம் மேலங்கியின் ஒரு பகுதியைப் பிடித்து அதில் உமிழ்ந்து அதன் ஒரு பகுதியை மறுபகுதியுடன் கசக்கிவிட்டு 'அல்லது இவ்வாறு அவர் செய்து கொள்ளட்டும்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி), ஆதாரம்: புகாரி
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பள்ளிவாசலுக்குள் உமிழ்வது குற்றமாகும். அதை மண்ணுக்குள் புதைப்பது அதற்குரிய பரிகாரமாகும். அறிவிப்பவர்:  அனஸ் பின் மாலிக் (ரலி), ஆதாரம்: புகாரி
குறிப்பு: நபி (ஸல்) அவர்களின் காலத்தில் மஸ்ஜிதுகளின் தரை மண்ணால் இருந்ததால் பாதத்திற்கு கீழே உழிந்தால் மண்ணமால் மூடிவிடலாம். தற்போது அவ்வாறு இல்லையாதலால் மஸ்ஜிதினுள் எச்சிலைத் துப்புவது அதை அசுத்தப்படுத்துவதாகும் என்பதை உணரவேண்டும்.
மஸ்ஜிதில் அசுத்தத்தைக் கண்டால் சுத்தப்படுத்த வேண்டும்!
"நபி(ஸல்) அவர்கள் கிப்லாத் திசையில் உள்ள சுவற்றில் எச்சிலையோ சளியையோ கண்டுவிட்டு அதைச் சுரண்டி (அப்புறப்படுத்தி)னார்கள்." அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), ஆதாரம்: புகாரி
பள்ளிவாசலில் குர்ஆன் ஓதும் போது பிறருக்கு இடையூறு தரும் வகையில் ஓதுவது கூடாது!
நபியவர்கள் பள்ளிவாசலில் இஃதிகாப் இருந்தார்கள். (அப்போது) மக்கள் சப்தமிட்டு ஓதுவதை செவியுற்றார்கள். உடன் திரையை விலக்கி,  "உங்களில் ஒவ்வொருவரும் (தொழுகையில்) தமது இறைவனுடன் உரையாடிக் கொண்டிருக்கிறீர்கள் எனவே உங்களில் சிலர் மற்ற சிலருக்கு நோவினை தரவேண்டாம். சிலரை விட மற்ற சிலர் ஓதுவதில் (சப்தத்தை) உயர்த்த வேண்டாம்." எனக் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூசயீத் (ரலி), ஆதாரம்: அபுதாவூத்
மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வைத் தவிர வேறுயாரிடமும் பிரார்த்திக்க கூடாது!
"அன்றியும், நிச்சயமாக மஸ்ஜிதுகள் அல்லாஹ்வுக்காகவே இருக்கின்றன, எனவே, (அவற்றில்) அல்லாஹ்வுடன் (சேர்த்து வேறு) எவரையும் நீங்கள் பிரார்த்திக்காதீர்கள்" (72:18)
வெளியில் காணாமல் போன பொருள்களை பள்ளியில் அறிவித்து தேடுவது கூடாது!
"காணாமற்போன ஒரு பொருளைப் பள்ளிவாசலுக்குள் தேடிக்கொண்டிருப்பவரின் குரலைச் செவியுறுபவர் "அல்லாஹ் அதை உனக்குத் திரும்பக்கிடைக்காமல் செய்வானாக!" என்று கூறட்டும். ஏனெனில், பள்ளிவாசல்கள் இதற்காகக் கட்டப்படவில்லை. அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: முஸ்லிம்
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் ஒரு மனிதர் எழுந்து "(காணாமற் போன எனது) சிவப்பு ஒட்டகத்தி(னைக் கண்டுபிடித்து அதனி)டம் (என்னை) அழைத்துச் செல்பவர் யார்?" என்று கேட்டார்.  அப்போது  நபி (ஸல்) அவர்கள், "(உனது ஒட்டகம்) உனக்குக் கிடைக்காமற் போகட்டும். பள்ளிவாசல்கள் எதற்காகக் கட்டப்பட்டனவோ அதற்கு மட்டுமே உரியனவாகும்" என்று சொன்னார்கள். அறிவிப்பவர் : புரைதா (ரலி), ஆதாரம்: முஸ்லிம்
அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளில் வியாபாரம் செய்வது கூடாது!
"பள்ளிவாசலில் விற்பவரையோ, வாங்குபவரையோ கண்டால், "அல்லாஹ் உன்க்கு லாபத்தை தராமல் இருப்பானாக!" என்று கூறுங்கள். அறிவிப்பவர் : அபுஹூரைரா (ரலி), ஆதாரம்: திர்மிதி
பள்ளியிலிருந்து வெளியேறும் போது ஓத வேண்டி துஆ!
'அல்லாஹூம்ம இன்னீ அஸ்அலுக மின் ஃபழ்லிக' அறிவிப்பவர்: அபூஉஸைத் (ரலி): ஆதாரம்: முஸ்லிம்.
http://suvanathendral.com/portal/?p=4121

--
*more articles click*
www.sahabudeen.com


Saturday, September 28, 2013

ரெஸ்யூமே வேலை தரும் மந்திரச் சாவி!

ரெஸ்யூமே வேலை தரும் மந்திரச் சாவி!

வேலை கேட்டு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் எடுத்த எடுப்பிலேயே நிராகரிக்கப்பட  ஒரு காரணம், தன்னைப் பற்றிய விவரங்களைச் சொல்லும் ரெஸ்யூமே (Resume) எந்த வகையிலும் கவராமல் போவதே. எந்த நிறுவனமாக இருந்தாலும் நாம் தரும் ரெஸ்யூமே சரியாக இருந்தால் நிச்சயம் வேலை கிடைக்கும். அதனால்தான் வேலை தரும் மந்திரச் சாவி என்று அதனை சொல்கிறார்கள்.

இந்த ரெஸ்யூமே எப்படி இருக்க வேண்டும்? இதை எப்படி தயாரிப்பது? என்று சொல்கிறார் ஐசால்வ் நிறுவனத்தின் ஹெச்.ஆர். பிரிவின் உதவி மேலாளர் ந.பத்மலட்சுமி.
'
நம்மில் பலர் இதை ரெஸ்யூம் என்று உச்சரிக்கிறார்கள். இது தவறு. 'ரெஸ்யூமே' என்று  உச்சரிப்பதே சரி! தவிர, பயோ டேட்டா (Bio Data), கரிகுலம் விட்டே (Curriculum Vitae), ரெஸ்யூமே ஆகிய மூன்றும் ஒன்று என்று நினைக்கிறார்கள் பலர். பயோ டேட்டா என்பது ஒருவருடைய உயரம், எடை, முழுவிவரம் அடங்கிய திரட்டு. இதை காவலர் வேலைக்கு ஆள் எடுக்கும்போதும், திருமணம் சார்ந்த விஷயங்களுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். கரிகுலம் விட்டே என்பது உயர்பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் பயன்படுத்துவது. ஆனால், ரெஸ்யூமே என்பதுதான் வேலை தேடுபவர்கள் நிறுவனங்களுக்குச் சமர்ப்பிக்க பயன்படுத்துவது.

 

மூன்று வகைகள்!


ரெஸ்யூமேக்களில் மூன்று வகைகள் உள்ளன.

1. ரிவர்ஸ் குரோனாலாஜிக்கல் ரெஸ்யூமே (Reverse Chronological resume):
வேலைகளில் முன்அனுபவமுள்ளவர்கள் இது மாதிரியான ரெஸ்யூமேக்களை பயன்படுத்துவது நல்லது. இந்த ரெஸ்யூமேயில் தற்போது செய்யும் வேலை விவரங்களுடன் ஆரம்பித்து, மற்ற விவரங்களை அடுத்தடுத்து சொல்லலாம்.
2.
ஃபங்ஷனல் ரெஸ்யூமே (Functional resume):
முதலில் ஸ்கில் ஏரியாக்களை (கல்வி அனுபவங்களை) குறிப்பிட்டு, பின்னர் எந்தெந்த நிறுவனங்களில் எவ்வளவு ஆண்டுகள் வேலை செய்தீர்கள் மற்றும் அது சார்ந்த அனுபவங்களை அடுத்தடுத்து தெரியப்படுத்தலாம்.
3.
ஹைபிரிட் ரெஸ்யூமே (Hybrid resume):
மேலே சொன்ன இரண்டு வகையான ரெஸ்யூமேயின் கலவையாக இருப்பதுதான் ஹைபிரிட் ரெஸ்யூமே.

 

எப்படி இருக்க வேண்டும்?

ரெஸ்யூமேயின் மிக முக்கியமான நோக்கம், ஒருவருக்கு வேலை வாங்கித் தருவதுதான். ஒரு ரெஸ்யூமேயை ஈர்க்கும்படியாக தயார் செய்தாலே போதும், அது தன் கடமையை கச்சிதமாகச் செய்துவிடும்.

ரெஸ்யூமேயில் குறிப்பிட்டுள்ள அனைத்து விவரங்களும் உண்மையானதாக இருக்கவேண்டும். மற்றவர்களை கவர எந்த பொய்யும் சொல்லக்கூடாது. உங்களைப் பற்றிய முக்கியமான விஷயங்களை அடிக்கோடிட்டு காட்டலாம். வித்தியாசப்படுத்திக்காட்ட தடித்த (Bold) எழுத்துகளில் எழுதலாம். 

முதல்முறை வேலைக்கு விண்ணப்பிப்பவர் எனில், உங்கள் கல்வி சார்ந்த விவரங்களையும், ஏற்கெனவே வேலை செய்தவராக இருந்தால் ஏற்கெனவே பார்த்த வேலை விவரங்களையும் தெரியப்படுத்த வேண்டும். ஒரு வேலையிலிருந்து மற்றொரு வேலைக்கு மாறும்போது இடைப்பட்ட காலத்தில் எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்தால் அதையும் ரெஸ்யூமேயில் குறிப்பிட வேண்டியது அவசியம். நாம் குறிப்பிடாவிட்டால் ஹெச்.ஆர். அதுபற்றி கேட்டு, அதற்கு பதில் சொல்லவேண்டிய நிலை ஏற்படும்.
இப்போது சில நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் உண்மைத்தன்மையை அறிந்துகொள்ள, ஏற்கெனவே வேலை செய்த அலுவலகங்களுக்கு இ-மெயில் அல்லது தொலைபேசி மூலமாக விவரங்களை கேட்டு தெரிந்துகொள்கின்றன.

ஒரு நிறுவனம் ரெஸ்யூமேயை எந்த ஃபார்மெட் வழியாக (இ-மெயில், ஃபேக்ஸ், போஸ்ட் போன்றவை) அனுப்பவேண்டும் என்கிறதோ, அதன்படி அனுப்புவதே நல்லது. இல்லாவிட்டால் நீங்கள் அனுப்பிய ரெஸ்யூமே நிறுவனத்தின் பார்வைக்குச் செல்ல தாமதமாகலாம். www.sahabudeen.com

 

வேலைக்கு ஏற்ற மாதிரி..!

நாம் எந்த வேலைக்குச் செல்கிறோமோ, அந்த வேலைக்கு ஏற்ற மாதிரி நம் ரெஸ்யூமே இருப்பது அவசியம். ஒரே ஃபார்மெட் கொண்ட ரெஸ்யூமேயை அனைத்து வேலைக்கும் பயன்படுத்துவது நல்லதல்ல. உதாரணத்திற்கு, ஏற்கெனவே ஒரு நிறுவனத்தின் சேல்ஸ் பிரிவில் வேலை செய்த ஒருவர் மற்றொரு நிறுவனத்திற்கு வேலைக்காக தன் ரெஸ்யூமேயை அளிக்கிறார் எனில், அதில் ஏற்கெனவே வேலை செய்த விவரங்களை, அந்த நிறுவனம் உங்களால் அடைந்த லாபங்களை எண்களை கொண்டு குறிப்பிட்டிருக்க வேண்டும். அப்படி குறிப்பிடும்போது செய்வினை (Active) சொற்களை பயன்படுத்துவது நல்லது.

 

எத்தனை பக்கம்..?

ஒரு ரெஸ்யூமே அதிகபட்சமே இரண்டு பக்கம்தான் இருக்க வேண்டும். அதற்குள் அனைத்து விவரங்களையும் அப்டுடேட்டாக அடக்கிவிடுவது நல்லது. நம் ரெஸ்யூமேயைப் படிப்பவர் அதற்கு 20 - 30 வினாடிகள் மட்டுமே செலவழிப்பார். எனவே, இரண்டு பக்கத்திற்குள் அனைத்து தகவல்களையும் தெளிவாக அடக்குவது நல்லது.''
இனி ரெஸ்யூமேயை தயாரிக்கும்போது மேற்சொன்ன விஷயங்களை கவனியுங்கள்!

http://pettagum.blogspot.in/2012/09/blog-post_4920.html

--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

காய்கறிகளின் மருத்துவ பயன்கள் இதயத்திற்கு ஏற்றஆரோக்கியஉணவு

காய்கறிகளின் மருத்துவ பயன்கள் இதயத்திற்கு ஏற்றஆரோக்கியஉணவு

பச்சைப்பயறு சாப்பிடக் கூடாதவர்கள் 

பச்சைப் பயறை ஈரல் சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்கள் அதிகமாகச் சாப்பிடக் கூடாது.

பச்சைப் பயறின் தன்மை ஈரலின் ‌பிர‌ச்‌சினையை அ‌திகமா‌க்கு‌ம். 

எனவே ஈரலில் கல் இருப்பவர்களோ, பிரச்சினை உள்ளவர்களோ பச்சைப் பயறை குறைவாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

மேலும், பச்சைப் பயறை வேக வைத்து, அ‌ந்த நீரை வடித்துவிட்டுச் சாப்பிடுவது மிகவும் நல்லது.

ப‌ச்சை‌ப் பயறை அ‌திக‌ம் சா‌ப்‌பி‌ட்டா‌ல் உட‌ல் அ‌திக கு‌ளி‌ர்‌ந்த த‌ன்மையை அடை‌ந்து‌விடு‌ம்.

எனவே ஆ‌ஸ்துமா, சைன‌ஸ் போ‌ன்ற நோயு‌ள்ளவ‌ர்க‌ள் கவனமாக கையாள வே‌ண்டு‌ம்.

கர்ப்பிணிகளுக்கு பயறு ...

பச்சைப் பயறை பெரும்பாலும் கர்ப்பிணிகள் அதிகமாக சாப்பிடலாம். ஆனால் அதனுடன் சிறிது சீரகத்தையும் ஊற வைத்து சாப்பிடலாம்.

பயறு வகைகளை சாப்பிடுவதால் ஏற்படும் வாயுத் தொல்லையையும், அஜீரணக் கோளாறுகளையும் சீரகம் தவிர்க்கும்.

பயறு வகைகளை ப‌ச்சையாக சாப்பிடுவதற்கு முன்பு சுடு நீரில் முக்கி எடுத்துச் சாப்பிடுவது மிகவும் நல்லது. இதனா‌ல் பா‌க்டீ‌ரியா வ‌யி‌ற்று‌க்கு‌ள் செ‌‌ல்வதை‌த் த‌வி‌ர்‌க்கலா‌ம். 

பச்சைப் பயறை பச்சையாக சாப்பிட முடியாதவர்கள் வேகவைத்து அதனுடன் தேங்காய் துருவல், சர்க்கரை சேர்த்தும் சாப்பிடலாம்.

பாசிப்பயறு 

தோல் உரிக்காமல் பச்சை நிறத்தில் இருப்பது பச்சைப் பயறு என்றும், அதுவே தோல் உரித்து உடைத்த பருப்பை பாசிப் பருப்பு என்றும் கூறுகிறோம்.

பாசிப் பருப்பு பொதுவாக பொங்கல் வைக்கவும், கூட்டு செய்யவும் மட்டுமே நாம் பயன்படுத்துகிறோம்.

அதன் பயன்கள் ஏராளம் ஏராளம். பாசிப் பருப்பில் இருக்கும் சத்துக்களோ தாராளம் தாராளம்.

பயறு வகைகளில் ஏராளமான புரதச் சத்து நிறைந்துள்ளது. பாசிப் பருப்பில் புரதமும், கார்போஹைட்ரேட்டும், கலோரியும் சரிவிகிதத்தில் கலந்து உள்ளது.

இந்த பருப்பு வகைகளை நன்கு வேக வைத்து சாப்பிடுவது நல்லது என்பதால்தான், குழைந்து செய்யும் பொங்கல் மற்றும் கூட்டுக்களை இந்த பருப்பை வைத்து செய்துள்ளனர் நம் முன்னோர்கள். 

சாதம் 

புழுங்கலரிசி சாதம் அனைவருக்கும் ஏற்றது. புழுங்கலரிசி சாதத்தை சாப்பிடுபவர்களை வாத நோய் தாக்காது.

குழைந்த சாதத்தையே சாப்பிட்டு வந்தால் பசி குறைவு ஏற்படும். இடுப்பு வலியுடன் கூடிய வெள்ளப்போக்கு, இருமல் உண்டாகும்.

தினமும் அதிக சூடான சாதத்தைச் சாப்பிட்டால், ரத்த கொதிப்பு, அடங்காத தாகம், நாவறட்சி உண்டாகும்.

தினமும் ஆறிப்போன சாதத்தை உண்டு வந்தால், கீல்வாதம் எனப்படும் மூட்டுவலி ஏற்படும்.

மிதமான சூடுள்ள சாதத்தை உண்பதே சிறந்தது. அதனால் வாத, பித்த, கப நோய்களையும், சைனஸ் நோயையும் போக்கும்.

கீரை

காய்கறி வகைகளிலே கீரை வகைகளுக்கு முக்கிய இடம் உண்டு. மருந்துக் கடைகளுக்குச் சென்று அதிக விலை கொடுத்து சத்து மருந்துகளை வாங்கிச் சாப்பிடுவதற்கு பதிலாக கீரை சாப்பிட்டால் போதும். 

தேவையான சத்துக்கள் தானாகவே கிடைத்து விடும். விலையும் குறைவு. இதில் பக்க விளைவுக்கு இடமே இல்லை. அந்தளவுக்கு கீரைகளில் அற்புதமான மருத்துவ குணங்கள் பொக்கிஷமாக பொதிந்து கிடக்கின்றன.

கீரை உணவு அனைவருக்கும் ஏற்றது. ஆனால் பெரும் பாலான குழந்தைகள் கீரையை பார்த்தால் ஏதோ இலை, தழை என்று நினைத்து பயந்து ஓடி விடுகின்றன. குழந்தைகள் மட்டுமல்ல, இளம் சிறுவர்களும், சிறுமிகளும் கூட கீரை வைத்தால் தொட்டு கூட பார்ப்பதில்லை. இதை பெற்றோர்தான் மாற்ற வேண்டும். 

சின்ன வயதில் இருந்தே குழந்தை களுக்கு கீரை உணவுகளை கொடுத்து பழக்க வேண்டும்.
கீரை உணவு எந்தளவுக்கு சாப்பிடுகிறோமோ, அந்தளவுக்கு ஆரோக்கியம் அமையும்.


நார்ச்சத்து உ‌ள்ள உணவுகள் பெருங்குடலில் புற்று நோய் வராமல் தடுக்கும். கோதுமை, சோளம், கேழ்வரகு, கம்பு முதலியன நா‌ர்‌ச்ச‌த்து‌ள்ள உணவு‌ப் பொரு‌ட்க‌ளி‌ல் அடங்கும்.

கீரைகளில் கால்சியம், சோடியம், க்ளோரைன் எனப்படும் உலோகச்சத்து அதிகம் உண்டு. 

கீரையில் சக்கரை கிடையாது ஆகவே நீரிழவு நோயாளிகளுக்கும் இது உகந்தது. பூண்டும் மிகவும் நல்லது.

கூடிய வரையில் ஆரோக்கிய உணவுப்பழக்கம் மேற்கொள்ளுதல் வியாதிகளை வர விடாமல் தடுக்கும். ‌

‌வியா‌தி வ‌ந்த ‌பி‌ன் அத‌ற்கே‌ற்ற உணவுகளை க‌ட்டு‌ப்பா‌ட்டுட‌ன் சா‌ப்‌பிடுவதை‌க் கா‌ட்டிலு‌ம், வருவத‌ற்கு மு‌ன் ஆரோ‌க்‌கியமான உணவுகளை உ‌ண்பதே ‌சிற‌ந்தது.

அரைக் கீரையை வாரம் இருமுறை உணவில் சேர்த்து வர, உடல் வலிமை பெறும்; தலைமுடியும் நன்கு வளரும்.

அகத்திக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வர, குடல் புண்கள் குணமாகும். வாரம் ஒரு முறை உண்பதால், வயிற்றில் காணப்படும் புழுக்கள் அழியும்.

பசலை‌ ம‌ற்று‌ம் வ‌ெ‌ந்தய‌க் ‌கீரையை சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல் உட‌ல் உஷ‌்ண‌ம் குறையு‌ம்.

பு‌ளி‌ச்ச‌க் ‌கீரை‌யி‌ல் அ‌திக இரு‌ம்பு ச‌த்து இரு‌ப்பதா‌ல் உ‌ட‌ல் பல‌வீனமானவ‌ர்க‌ள் உ‌ண்டு வ‌ந்தா‌ல் உட‌ல் பல‌ம் பெறு‌ம்.

தூதுவளை‌க் ‌கீரை ச‌ளி‌க்கு மரு‌ந்தாக அமையு‌ம், அதனை துவைய‌ல் செ‌ய்து சா‌ப்‌பிடலா‌ம்

க‌றி‌வே‌ப்‌பிலை 

க‌றிவே‌ப்‌பிலையை உணவு பதா‌ர்‌த்‌த‌த்‌தி‌ல் இரு‌ந்தாலே தூ‌க்‌கி எ‌றியு‌ம் பழ‌க்க‌ம் கொ‌ண்டவ‌ர்க‌ள் இரு‌க்கு‌ம் போது, ப‌ச்சை க‌றிவே‌ப்‌பிலையை மெ‌ன்று ‌தி‌ண்ணலா‌ம் எ‌ன்‌கிறா‌‌ர்க‌ள் ஆரா‌ய்‌ச்‌சி ‌நிபுண‌ர்க‌ள்.க‌றிவே‌ப்‌பிலை ப‌ற்‌றி ஆரா‌ய்‌ச்‌சி செ‌ய்து பல ஆ‌ய்வுக‌ள் வெ‌ளியா‌கியு‌ள்ளன.

க‌றிவே‌ப்‌பிலையை மெ‌ன்று சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல் பரம்பரை நரை முடி ‌பிர‌ச்‌சினை ஏ‌ற்படாது.. கண்பார்வை குறைபாடு‌ம் ஏற்படாது. 

கறிவேப்பிலையை அரைத்து ‌விழுதாகவோ அ‌ல்லது சாறு எடு‌த்தோ உ‌ண்டு வ‌ந்தா‌ல் நுரையீரல், இதயம் ம‌ற்று‌ம் ர‌த்த‌ம் தொட‌ர்பான நோய்களே ந‌ம்மை அ‌ண்டாது. 

கறிவேப்பிலை ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும், அறிவை பெருக்கவும் உதவு‌ம்.

கறிவேப்பிலையை ப‌றி‌த்து பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும் என்கிறார்கள் மருத்துவ ‌நிபுண‌ர்க‌ள்.

பாகற்காய்! 

பாகற்காய் பெரும்பாலும் உடலுக்கு நல்லது என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதன் கசப்புச் சுவைக்காக பலர் அதனை விரும்புவதில்லை.

அவ்வாறு இல்லாமல், அறுசுவைகளில் நமது உடலுக்கு நல்லதைத் தரும் இந்த கசப்புச் சுவையிலான பாகற்காயை வாரத்தில் ஒரு முறையாவது உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

பொதுவாக பாகற்காய் உடலுக்கு உஷ்ணத்தைக் கொடுக்கும். பாகற்காயில் இரண்டு வகைகள் உண்டு. பொடியாக இருக்கும் பாகற்காயை மிதி பாகற்காய் என்றும், நன்கு பெரிதாக நீளமாக இருப்பதை கொம்பு பாகற்காய் என்றும் அழைக்கிறார்கள்.

பாகற்காயை நாம் எப்படி வேண்டுமானாலும் சமைத்து சாப்பிடலாம். புளியுடன் சேர்த்து பாகற்காயை சமைப்பது சிறந்தது என்று சொல்லப்படுகிறது.

நீரிழிவு வியாதி உள்ளவர்கள் பாகற்காய் சாப்பிட்டால் மிகவும் நல்லது. அவர்கள் மட்டுமல்லாமல் ஜூரம், இருமல், இரைப்பு, மூலம், வயிற்றில் பூச்சித் தொல்லை இருப்பவர்களும் பாகற்காயை உண்ணலாம்.

ம‌ஞ்ச‌ள் ஒரு ‌கிரு‌மி நா‌சி‌னி 

மஞ்சளையும் வேப்ப இலைகளையும் அரைத்து அம்மை நோய் வந்தவர்களுக்குத் தேய்த்து தலைக்கு நீராட்டப் பயன்படுத்துவார்கள்.

அம்மை நோய் வந்தவர்களைச் சுற்றி மஞ்சள் நீரைத் தெளிப்பதால் நோய் பரவாமல் தடுக்கலாம்.
மது வகைகள், பழச்சாறு போன்றவற்றிலும் மஞ்சள் சேர்க்கப்படுகிறது. இது பசியைத் தூண்டுவதோடு செரிமானத்திற்கும் உதவும் மருத்துவ குணம் கொண்டது.

மேலும் உடலுரம் தரும். ரத்தத்தை சுத்தப்படுத்தும், குடற்பூச்சிகளைக் கொல்லும். நீரிழிவு மற்றும் தொழுநோயைக் கட்டுப்படுத்திக் குறைத்திடும். சரும நோய்களைப் போக்கக்கூடிய சக்தி மஞ்சளுக்கு அதிகம் உண்டு.

மஞ்சள் கரிப்பொடியை பற்பொடியாய் உபயோகித்தால் பல் நோய்கள் குணமாகும்.
மஞ்சளின் சத்து எண்ணெய் உட்கொண்டால் கல்லீரலில் பித்தநீர் சுரப் பதையும் கட்டியாவதையும் குணப்படுத்திவிடும்.

கலப்படமில்லாமல் மஞ்சள் தூள் கடைகளில் கிடைப்பது அரிதுதான். சுத்தமான விரலி மஞ்சளை வாங்கி வீட்டிலோ, மெஷினிலோ அரைத்து வைத்துப் பயன்படுத்துங்கள்.

இ‌ஞ்‌சி 

இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் தடுப்பு திறன் கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும்.

இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும்.

இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு மூன்றையும் கலந்து ஒருவேளை அரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டுவர ஆரம்ப கால ஆஸ்துமா, இரைப்பு, இருமல் குணமாகும்.

இ‌ஞ்‌சியை, த‌ட்டி தே‌னீ‌ர் கொ‌தி‌க்க வ‌ை‌க்கு‌ம் போது அ‌தி‌ல் சே‌ர்‌த்து கொ‌தி‌க்க வை‌த்து தே‌‌னீ‌ர் பருகலா‌ம். சுவையு‌ம் ந‌ன்றாக இரு‌க்கு‌ம், உடலு‌க்கு‌ம் ந‌ல்லது. www.sahabudeen.com

‌சில சமைய‌ல் வகைக‌ளி‌ல் இ‌ஞ்‌சியை ம‌சி‌த்து‌ப் போ‌ட்டு செ‌ய்வா‌ர்க‌ள். அதுபோ‌ன்ற உணவு வகைக‌ள் வ‌யி‌ற்றை‌க் கெடு‌ப்ப‌‌தி‌ல்லை.

உலர்ந்த திராட்சை 

சளி பிடித்திருக்கும் போதும், காச நோய் உள்ளவர்களும், வாத நோய் உள்ளவர்களும் திராட்சை அல்லது உலர்ந்த திராட்சைக் கொண்டு செய்யப்படும் மருந்துகளை தவிர்ப்பது நல்லது.

உலர்ந்த திராட்சையை பதப்படுத்தும் போது ரசாயன அமிலங்கள் கொண்டுதான் பதப்படுத்துகின்றனர்.

எனவே உலர்ந்த திராட்சையை அப்படியே பயன்படுத்துவது மிகவும் தவறு.

அதனை நன்றாக கழுவிவிட்டு அல்லது தண்ணீரில் சிறிது நேரம் ஊறவிட்டு பின்னர் நன்கு கைகளால் பிசைந்து கழுவ வேண்டும்.

குழந்தைகளுக்கு உலர்ந்த திராட்சையைக் கொடுக்கும்போதும் நன்கு கவனமாக கழுவிய பின்னரேக் கொடுக்க வேண்டும். 

ப‌‌ற்களை‌ப் பாதுகா‌க்க 

புதினா இலையைக் காயவைத்து பொடி செய்து அதைக் கொண்டு பல்துலக்கி வந்தால் பற்கள் பளிச்சென மாறும். 

எலுமிச்சை சாற்றுடன் சமையல் உப்பை சேர்த்து பல் துலக்கி வந்தால் பற்களில் இருக்கும் மஞ்சள் கறை நீங்கி பற்கள் பளிச்சிடும்.

பச்சை நெல்லிக்காயை பற்களால் கடித்துத் தின்று வந்தால் பல்லில் உள்ள கறை நீங்கும். 

கேரட்டை சமைக்காமல் பச்சையாக உண்டு வந்தால் பற்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

நன்றிகள் வெப்துனியா

http://www.muthamilmantram.com/viewtopic.php?f=158&t=33331

--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com