சிரியா மீது அமரிக்காவின் ராணுவ தலையீடு ஏன்? ஏதற்கு? களநிலவரம் பற்றிய ஒரு பார்வை
அமரிக்கா சிரியா மீது பிராமாண்டமான தாக்குதல் ஒன்றை நடாத்துவதற்கு அதிரடியாக முடிவெடுத்துள்ளது. அதற்கான சகல முன்னேற் பாடுகளையும் செய்துவருகின்றது. பாதுகாப்புச் சபையின் வரம்புகளை மீறியே இந்த எட்டு எடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக அமரிக்கா வெளியுலகில் தனித்து நின்று எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது இதே வழிமுறையைதான் கடைப்பிடித்து வந்துள்ளது.
இத்தாக்குதலின் பின்ணணியில் உள்ள இலக்கு மிகத் தௌவானது. தற்போதைய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு என்ற வகையில் மக்கள் புரட்சியை எந்த வெற்றியும் இன்றி இடைநிறுத்திவிட்டு, பஷ்ஷார் அல்-அஸதையும் அவனின் சில முன்ணணி தலைவர்களையும் வீழ்த்தி விடுவது இந்த நாடகத்தின் முதல் கட்டமாகும். அதன் பின்னர் மீதியுள்ள சிரியா அரச சர்வதிகார ஆழுமைகளையும் இதுவரை விடுதலைக்காக போராடும் எதிரணியினரையும் பேச்சுவார்த்தை மேடைக்கு கொண்டுவருவது அமரிக்காவின் எதிர்பார்ப்பு. அதைத் தொடர்ந்து வரையருக்கப்பட்ட அதிகாரங்களுடன் கூட்டரசாங்மொன்றை அமைத்து மீண்டும் சிரியாவின் பழைய அடக்குமுறை ஆட்சியை புதிய ஆடை அணிவித்து உலக அரங்கிக்கு கொண்டு வருவதே நாடகத்தின் இறுதிக் கட்டமாகும். இது அகன்ற இஸ்Nரிலின் கனவை பாதுகாக்கும் அமரிக்காவனின் தார்மமீக கடமையாகவே அது கருதுகிறத. இந்த அதிரடி தாக்குதலின் உண்மையான இலக்கு இதுதான்.
அமரிக்கா, எகிப்து புரட்சின் போது கையாண்ட அதே அணுகுமுறையை சிரியாவில் ஒரு போதும் பயன்படுத்தமாட்டாது. காரணம் அது அவர்கின் இலக்கை இலகுவாக அடைவதற்கு உத்தரவாதம் கொடுக்காத கசப்பான அணுபவமாக மாறியது. ஜனநாயக வழிமுறையில் செயற்பட இடம் கொடுத்தால் பின் ராணவ சதிப் புரட்சி செய்துதான் விருப்பத்தை அடைய வேண்டிவரும். அந்த பேராபத்தை ஏன் விலை கொடுத்து வாங்கவேண்டும். எனவே புதிய அரசு பிறக்கும் போதே மிகக் கவனமாக இருக்கவேண்டும் என அமரிக்கா களமிறங்கியுள்ளது.
எனவே தாக்குதல் நிச்சயமாக நடக்கும். ஆனால் அடக்குமுறை ஆட்சியமைப்பு அப்டியே இருக்கும். இந்த தாக்குதல் அமரிக்கா எதிர்பார்க்கும் புதிய சிரியா அரசாங்கத்தை கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைக்கு கதவை திறந்து கொடுக்கும். இதுதான் எதிரிகளின் தீர்வுத் திட்டம். ஆனால் இதற்கு முன்னால் இரண்டு சாவால்கள் உள்ளன.
ஒன்று அஸதின் அடக்குமுறை ஆட்சி. இரண்டு விடுதலைக்காக போராடிய புரட்சி போராளிகள்.
பஷ்ஷாரின் அடக்குமுறை ஆட்சி எல்லை கடந்து விட்டது. சுமார் 17 மாதங்களாக நாட்டை அழித்து விட்டது. கப்பல்கள் கொழுத்தப்பட்டன. பாலங்கள் உடைக்கப்பட்டன. நாட்டில் அரசியல் வாழ்வுக்கும் இடமில்லை. சொந்த இருப்புக்கும் ஆபத்து என்ற நிலை உருவாகியுள்ளது. பஷ்ஷார் எந்த அரசியில் தீர்வுக்ம் வருவதாக இல்லை. கடைசியாக செரின் என்ற பயங்கர ரசாயணத்தை பயன்படுத்தி அப்பாவிப் பொதுமக்களை கொன்று குவித்தள்ளது. எனவே அஸதையும் அவனது ஆட்களையும் அப்புறப்படுத்துவது முதல்கட்ட தேவையாக அமரிக்கா உணர்கிறது. ஆதனால் தான் இந்த தாக்குதல். இது முதலாவது சவாலை முறியடிக்கும். இனி பஷ்ஷாரின் யுகம் முடிந்து விட்டது. பேச்சுவார்த்தைக்கு செல்வதில் என்ன தவறிருக்கிறது என உலகமே கூறத் தொடங்கும்.
இரண்டாது சவால் 17 மாதங்களாக களத்தில் பல உயிர்களை கொடுத்து தியாகத்துடன் போராடும் விடுதலைப் போராளிகள்.
இங்கே சர்வதேச எதிரிகளின் கூலியாட்கள் சிரியா போராளிகளுடன் ஊடுறுவியுள்ளார்கள். அனைத்து தகவல்களையும் அமரிக்காவிற்கு வழங்கி வருகிறார்கள். இவர்கள் காசுக்கு வாங்கக்க கூடிய அடிவருடிகளாகவே உள்ளனர். அந்தப் புள்ளுருவிகள் சிறிய படைப்பிரிவுகளாக களத்தில் போராடுகிறார்கள். ஆனால் அவர்கள் சொற்பத் தொகையினர். இந்தக் கோடாரிக்காம்புகள் போரரிகளின் ஆயதக் காப்பகங்கள் மற்றும் பயிற்றுவிக்கும் முகாகங்களின் அமைவிடங்கள் பற்றிய தகவல்களை அமரிக்காவிக்கு வழங்கியுள்ளது. அவ்விடங்களை இலக்குவைத்து தாக்கியழிப்பது அமரிக்காவிற்கு இலகுவாக அமைந்துள்ளது.
சிரியா விடுதலைப் போராட்டத்தில் சுமார் ஒரு இலட்சம் போராளிகள் உறுதியாக விசுவாசத்தோடு சுதந்திர தாகத்தோடு போராடுகிறார்கள். அவர்கள் நிச்சயமாக காசு பணத்திற்கு விலை போகாதவர்கள். அவர்களின் போராட்டம் வெற்றியை நோக்கியே நகர்கின்றது. அது அக்கம் பக்கத்தில் உள்ள நாடுகளுக்கும் ஆபத்து என எதிரிகள் கருதுவதால் அடக்கி ஒடுக்கவேண்டும் என அமரிக்காவும் ரஷ்யாவும் விரும்புகின்றன. பஷ்ஷாரின் படைக்கு அடிக்கும் போது நிச்சயமாக இந்த போராகளின் முகாம்களுக்கும் பலத்த அடிகள் விழும். இலக்கு தவறியதாக செய்திகள் வெளிவரும். இதுதான் நடக்ககப் போகின்றது. ஆனால் இது போராளிகளின் பலத்தை குன்றச் செய்தாலும் அவர்களை முடக்கிவிட மாட்டாது. எனவே கடுமையான நீண்ட தரைவழிப் போர் தொடரலாம் என எதிர்ப்பார்க்க முடியம். அதன் பின்னர் பேச்சு வார்த்தைக்கு அழைப்புவரும். அப்போது அடிவருடிகள் முன்னடியடித்துக் கொண்டு முன்னுக்கு வரலாம்;. மாலிக் நூரிகள் இங்கேயும் இல்லமலா போவார்கள். அவர்கள் ஏற்கனவே உருவாக்கப்பட்டுத்தான் இருப்பார்கள். இது தான் அமரிக்காவின் திட்டம்.
சிரியா விடுதலை போராளிகள் இந்த உண்மைகளை மிகக் கவமாக கருத்திற் கொண்டு போராட்டத்தை நகர்த்தவேண்டும். சர்வதேச சதிவலையில் சிக்காமல் போராட்டம் வெற்றி பெற இறைவனை பிரார்த்திப்போம். எது வேண்டுமானாலும் நடக்கலாம். இறுதியில் வெற்றிபெறுவது சத்தியம் ஒன்றே. தூய்மையான உள்ளங்கள் தோற்றதாக சரித்திரமே இல்லை.
முஹம்மத் பகீஹுத்தீன்
--
No comments:
Post a Comment