Saturday, September 14, 2013

தன்னம்பிக்கை உடையவரா நீங்கள்? ஒரு சுயபரிசோதனை

தன்னம்பிக்கை உடையவரா நீங்கள்? ஒரு சுயபரிசோதனை

மனிதன் வாழ்வில் பெறும் வெற்றியும் தோல்வியும் அவனுடைய தன்னம்பிக்கையை பொறுத்தே அமைகின்றது.
ஆண், பெண் வேறுபாடு இல்லாமல், வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரும் தன்னம்பிக்கை பெற்றிருக்க வேண்டும். நீங்கள் யோசிக்கலாம். நமக்கு தன்னம்பிக்கை உள்ளதா? இல்லையா? என்று. நீங்களே உங்கள் தன்னம்பிக்கையின் அளவை தெரிந்து கொள்ளலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள தன்னம்பிக்கை இல்லாதவருக்கான விஷயங்களை கவனித்துப் பாருங்கள். அவற்றிலிருந்து நீங்கள் பெருமளவு நீங்கள் முரண்பட்டு நின்றால், நீங்கள் அதிக தன்னம்பிக்கை உள்ளவர் என்று அர்த்தம்.

 

·  எண்ணங்கள்:

தன்னம்பிக்கை இல்லாதவரின் எண்ணங்கள் கீழ்கண்டவாறு இருக்கும்.
*
என்னால் முடியாது
*
இது மிகவும் கஷ்டம்
*
இது எப்படி என்று எனக்கு தெரியாது
*
இதை என்னால் செய்ய முடியுமா என்று தெரியவில்லை
*
இதை நான் செய்வதை விட இவர் செய்வது சிறப்பாக இருக்கும்.
*
என்ன செய்ய வேண்டும் என்பதை என்னால் தீர்மானிக்க முடியவில்லை.

உணர்வுகள்:

தன்னம்பிக்கை இல்லாதவரின் உணர்வுகள் கீழ்கண்டவாறு இருக்கும்.

* சந்தேகம்
*
வரப்போவதை நினைத்து பயம்
*
எதிர்கொள்ளும் விஷயத்தைப் பற்றிய கவலை
*
தன்னைப்பற்றியே வெறுப்பு, கோபம்
*
புதிய சூழ்நிலையில் எதையோ நினைத்து பயம்
*
மனக்கசப்பு
*
குற்ற உணர்ச்சி மற்றும் ஊக்கமின்மை

நடத்தைகள்:

தன்னம்பிக்கை இல்லாதவரின் நடத்தைகள் கீழ்கண்டவாறு இருக்கும்.

* எதையாவது செய்து மாட்டிக் கொள்வதைவிட பேசாமல் இருந்துவிடலாம் என்ற போக்கு
*
பரிந்துரைகள் சொல்வதில் இடர்பாடு
*
யாராவது செய்யட்டும் பார்க்கலாம் என்று இருந்துவிடல் அல்லது எதையும் முந்தி செய்யாமலிருத்தல்
*
புதிய விஷயங்களை தவிர்த்தல் அல்லது மாற்றம் ஏற்படுவதை ஏற்றுக் கொள்ளாமலிருத்தல்.
*
தெரிந்த விஷயத்தைப் பற்றிக்கூட தொடர்ந்து அடுத்தவரிடம் ஆலோசனை மற்றும் உறுதிப்படுத்துவதற்கு கேட்பது.
*
எல்லாவற்றுக்கும் தயங்குவது. தொடர்ந்து ஊக்கமளித்துக் கொண்டிருக்க வேண்டிய நிலை.
*
கடைசி பெஞ்சில் அமர்வது
*
மீண்டும் மீண்டும் உறுதிபடுத்தல் www.sahabudeen.com

உடல்ரீதியான அறிகுறிகள்:

தன்னம்பிக்கை இல்லாதவரின் உடல் ரீதியான அறிகுறிகள் கீழ்கண்டவாறு இருக்கும்.

* தலைகுனிந்து நிற்பது.
*
கண்களைப் பார்த்து பேசாதது
*
அமைதியின்றி அங்கும் இங்கும் அலைவது
*
பதட்டத்துடனும் படபடப்புடனும் காணப்படுவது
*
சோம்பலாகவும் அக்கறையின்றியும் காணப்படுவது.
இவ்விஷயங்கள் அனைத்தும் தன்னம்பிக்கை இல்லாததை காட்டுகிறது. இதில் எது உங்கள் குணத்துடன் பொருந்திப் போகிறது என்பதை அறிந்து, அதை தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும். மேற்கூறியவை அனைத்தும் தகர்த்து உங்களை வெற்றியாளராக மாறுங்கள்.

நீடூரிக்காக
தொகுப்பு

- கோவை பஷீர், நைஜீரியாவிலிருந்து
Source : http://niduri.com/?p=803

http://seasonsnidur.wordpress.com



--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

No comments: