வல்ல நாயனின் திருப்பபெயர் போற்றீ
இறைவனின் அருளால் நேற்று " சுவனம் பூமியில் விற்க்கப்படும்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டோம். அதில் நிறைவாக பூமியில்
சுவனத்தின் விலையாக எத்தனையோ செயல் இருந்தும் பெற்றோரிடம் கவனமாகவும் கண்ணியமாகவும் நடந்து கொள்வதே சுவனம் பெற
மிகப்பெரும் விலை என்ற அர்த்தத்தில் அக்கட்டுரை நிறைவுற்றிருந்தது. அதன் தொடராக.....
பெற்றோரிடம் கண்ணியமாகவும், கவனமாகவும் மட்டும் இருந்தால் போதாது நீங்கள் நன்றியோடும் நடக்க வேண்டும் என்றும் இறைவசனம்
கோடிட்டு காட்டுகிறது.
" எனக்கு நன்றி செலுத்துங்குகள், மேலும், உம் பெறோர்களுக்கும் நன்றி உரியவராக நடந்துகொள்ளுங்கள்" ( 31:14)
பெற்றோருடன் நன்றியுடையவராக இருங்கள்.
தம் மீது நன்மை செய்தவர்களுக்கு நன்றி செலுத்துவது கண்ணியமான மனிதர்களின் அடிப்படை குணமாகும்.
நன்மை செய்தவர்களுள் நமக்கு மிகவும் நெருக்கமாக இருக்கக்கூடியவர்கள் நம் பெற்றோரே.
அவர்கள் தான் நம்மை வளர்க்கிறார்கள்.
அவர்களின் அரவணைப்பில் தான் நாம் கல்வியையும், நல்லொழுக்க உணர்வுகளையும் பெறுகிறோம்.
நாம் வாழ்வின் உச்சத்தில் ஏறுவதற்கு படியாக இருந்தவர்களை திரும்பிப்பார்போம்.
இதை செய்யாவிட்டால் நன்றி கெட்டவர்களின் வரலாற்றில் நடுப்பக்கம் நமக்கு ஒதுக்கப்படும். (இறைவன் பாதுகாப்பானாக ஆமீன்)
அவர்கள் நமக்காக செய்யும் அர்ப்பணிப்பு ஈடு இணையற்றது.
அவர்கள் நமக்காக மேற்கொண்ட உழைப்பு ஈடு செய்ய முடியாதது.
அவர்களின் இந்த செயல்களுக்கு நாம் என்ன செய்யவேண்டும், இல்லை நான் என்னதான் செய்ய முடியும்.
அவர்கள் நம் மீது செய்த உபகாரத்திற்க்கு பதிலாக அவர்களின் கண்ணியம் நாம் உள்ளத்தில் ஆட்சிசெய்ய வேண்டும்,
அவர்களுக்கு எக்காலமும் நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் என்ற உன்னத உணர்வை நாம் மனதார ஒப்புக்கொள்ளவேண்டும்.
அவர்களின் அன்பை ஒவ்வொரு கணமும் எண்ணிப்பார்க்கவேண்டும்.
நமது ஒவ்வொரு ரோமக்கால்களும் அவர்களுக்கு நன்றி செலுத்துவதாக இருக்கவேண்டும்.
இவற்றை எல்லாம் உடபடுத்தியே இறைவன் தனக்கு நன்றி செலுத்த கட்டளை இடும்போது அதனுடன் பெற்றோர்களை சேர்க்கிறான்.
பெற்றோர்களில் ஒருவரோ இருவரோ முதுமை அடைந்து விட்ட நிலையில் உம்மிடம் இருந்தால் அவர்களை சீ என்று கூடக்கூறாதீர்கள். அவர்களை
மனம்நோகும் படி கடிந்து பேசாதீர்கள் ( குர் ஆன் 17:23)
பொற்றோரை எப்பொழுதும் மகிழ்ச்சியாக வைக்க முயற்சி செய்ய வேண்டும்.
அவர்களின் விருப்பத்திற்கு மாறாக அவர்களுக்கு அருவருப்பு மற்றும் எரிச்சல் ஊட்டும் எந்த பேச்சையும் பேசாதீர்.
குறிப்பாக, வயது முதிர்ந்த நிலையில் அவர்களுக்கு சிறு சிறு விஷயங்களுக்கும் கோபிக்கும் சுபாவம் ஏற்படும்.
நீங்கள் எதிர்பார்க்காத விஷயங்களை கேட்க முற்படுவார்கள்.
அப்பொழுது முழு மகிழ்ச்சியுடன் அவர்களின் பேச்சை கேட்க முற்படுங்கள்.
நீங்கள் அவர்களுக்கு செய்யும் உபகாரங்களில் எல்லாம் மேலானது அவர்கள் பேசும் போது காது கொடுத்து கேட்பது.
நீங்கள் அவர்களின் பேச்சை கேட்டாலே அவர்கள் அடையும் மகிழ்ச்சி எல்லை இல்லாதது.
அவர்களின் பேச்சு வெறுப்படைய வைக்கிறது என்று அவர்களின் உணர்வு புண்படக்கூடிய அளவில் பதிலை கூறாதீர்கள்.
உண்மை நிலை என்ன வெனில் , தன் முதுமைப்பருவத்தில் எதையும் சகித்துக்கொள்ளும் உணர்வு குறைந்து விடுகிறது.
பலகீனத்தின் காரணமாக தான் முக்கியமானவர் என்ற உணர்வு மேலோங்குகிறது.
இதனடிப்படையிலேயே வயதானவர்கள் சிறு சிறு விஷயங்களை கடினமாக உணர்கிறார்கள்.
ஆகையால், இந்த நிலையை கவனத்தில் கொண்டு எந்த ஒரு விஷயத்திலும் அவர்கள் கோபமடையும் படி செய்துவிடக்கூடாது.
பெருமானார் பேசிய செய்தியை இமாம் திர்மிதி இவ்வாறு பதிவு செய்கிறார்.
" இறைபொறுத்தம் பெற்றோரின் பொறுத்தத்திலும், இறைவெறுப்பு பெற்றோரின் வெறுப்பிலும் உள்ளது".
பெற்றோர்களுக்கு மனம் நிறைந்து சேவை செய்யுங்கள். இறைவன் இந்த வாய்பபை உங்களுக்கு அளித்திருக்கிறான்.
எனெனில், உங்களை சுவர்க்கவாதிகளின் பட்டியலில் சேர்ப்பதற்காக.
இன்னும் இறைபொருத்தத்தை பெறவும்,
பெற்றோருக்கு சேவை புரிவதில் தான் உலகம் மறுமையில் வெற்றியும், நன்மைகளும் கிடைக்கின்றன.
மேலும், மனிதன் ஈருலக ஆபத்துகளிலிருந்து பாதுகாப்பு பெறுகிறான்.
அத்தர்கீப் வத்தர்ஹீப் என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு நபி மொழியில் தமிழ் அர்த்தம் இதோ:
தம்முடைய வாழ்வு நீடித்திருக்கவேண்டும் இன்னும் தன் உலகியல் வாழ்வாதரம் அதிகமாக வேண்டும் என ஒரு மனிதன் விரும்பினால், அவன் தாய்
தந்தையருடன் நல்ல முடையில் நடந்து கொள்ளவும்.
இன்னும் ஒரு சந்தர்பத்தில் " பெற்றோருக்கு சேவைபுரிவது ஜிஹாதில் பங்குகொள்வது போன்ற மக்த்தான அமல்களை விட மேன்மையானது"
என்று பெருமானர் கூறினார்கள்
பெற்றோருக்கு சேவைபுரியும் படி கூறி ஒரு தோழரை ஜிஹாதில் கலந்துகொள்வதை விட்டும் தடுத்துவிட்டார்கள்.
முத்தபக் அலைஹி என்று சொல்லக்கூடிய புஹாரி மற்றும் முஸ்லிம் கிரந்தத்தில் பதிவான ஹதீஸ் நம் உணர்வுகளை கண்டிப்பாக உயிர்
பெறச்செய்யும்.
பெருமானரின் அவர்களிடன் வந்த ஒரு தோழர் ஜிஹாதில் கலந்துகொள்ள அனுமதி கேட்டார்
பெருமானார் அவர்கள் கேட்டார்கள் " உன் பெற்றோர் உயிருடன் இருக்கிறார்களா?
அதற்க்கு அவர் ஆம் என்று பதிலளித்தார்.
உடன் பெருமானார் கூறினார்கள் " திரும்பிச்செல்லுங்கள் அவர்களுக்கு சேவை புரியுங்கள் இதுவே ஜிஹாத் ஆகும்".
முஸ்லிம் நூலில் ஒரு ஹதீஸ் காணக்கிடைக்கிறது.
" பெருமானார்கல் கூறினார்கள் " ஒரு மனிதன் நாசம் அடைந்துவிட்டான். இதை மூன்று முறை திரும்பத்திரும்ப கூறினார்கள்
தோழர்கள் கேட்டார்கள் " அல்லாஹ்வின் தூதர் அவர்களே அது யார் ? என்று
பெருமானார் மறுமொழி பகர்ந்தார்கள் " எந்த மனிதன் தன் பெற்றோரை முதிய வயதில் பெற்றுக்கொண்டானோ - அவர்களில் இருவரையோ அல்லது
ஒருவரையோ - பிறகு அவர்களுக்கு சேவை புரிந்து சுவனத்தில் நுழையவில்லையோ அவன் தான் அந்த மனிதன் என்று கூறினார்கள்
அவர்களுக்கு நன்றியரிதலோடு நடந்துகொள்ளுங்கள் என்று கூறியதோடு முடித்துவிட வில்லை.
அவர்களோடு பேசுகிற, அவர்களோடு அளவளாவுகிற முறை குறித்து குர் ஆனில் இறைவன் எடுத்துறைகிறான்.
கடமையான செயல்கள் உ.தா. தொழுகை போன்றவற்றை குறித்து சில வரிகளில், சில பகுதிகளில் பேசிய இறைவன்.
பெற்றோரின் ஒவ்வொரு அணுகுமுறை குறித்தும் வகுப்பெடுத்திருப்பது, அதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
பெற்றோரிடம் நடந்து கொள்ளும் Attitude குறித்து குர் ஆன் ஹதீஸ் ஒளியில் இன்ஷா அல்லாஹ் அடுத்த சந்திப்பில்......... (தொடரும்)
சுவனம் செலவத்ற்கு எத்தணையோ வழிகள் இருந்தாலும் நம் கையில் கொடுக்கப்பட்டிருக்கும் பெற்றோரோடு கண்ணியமாக நடந்துகொள்ளும்
விலை மிக அற்புதமான ஒன்று பூமியில் சுவனத்தின் விலையை செலுத்துவமே. நாம் விலை கொடுக்கும் பொருட்களில் விலைமதிப்பில்லாதது
சுவனம் ஒன்றே. அதற்க்கு உள்ளே இறைப்பொருத்தத்தோடு நூழைய உதவிடும் வாயில்கள். பெற்றோரே... பெற்றோரே.
( நூல் : ஆதாபே ஜிந்தகீ)
- ஹஸனீ
--
No comments:
Post a Comment